Pages

Sunday, December 23, 2012

தொடரும் பாலியல் வக்கிரங்கள் - இஸ்லாம்தான் இந்தியாவுக்கு இருக்கும் இறுதி வாய்ப்பா ?



 பெண்களுக்கு எதிரான இழி செயல்கள் இந்தியாவில்  நடப்பது ஒன்றும் புதிதல்ல.. பல இழி செயல்கள் கவனத்துக்கே வருவதில்லை.

   டில்லி நடந்த கேவலமான செயல்  நம்முடைய உண்மையான அவலட்சணமான  முகத்தை உலகுக்கு வெளிச்சமிட்டு காட்டியுள்ளது.

  பண்பாடு , ஆன்மீகம் , மனித உரிமை , பெண் உரிமை என என்னதான் பேசித்திருந்தாலும் , இந்தியா என்பது நாகரிக வளர்ச்சி அடையாத காட்டுமிராண்டி நாடு என்பதில் இனி யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்கப்போவதில்லை.

  சரி... நாம் காட்டுமிராண்டிகள் தான்...   இதற்கு விடிவே இல்லையா... உலகின் கேவலமான ஒரு நாடாகவே நாம் இருக்கப்போகிறோமோ..

   இது போன்ற நிகழ்வுகளில் மக்களின் எதிர் வினை என்பதை பார்த்தால் போதும்.,... அந்த நாட்டு மக்களின் அருகதை தெரிந்து விடும்.

     நம் மக்கள் கருத்து கீழ்கண்ட இருவகைகளில் அடங்கி விடுகிறது



  •         நடந்தது  பெரிய குற்றம்தான், ஆனால் குற்றவாளிகளை தண்டிப்பதன் மூலம் குற்றங்களை தடுக்க முடியாது.. அவர்கள் குற்றவாளிகள் , தவறு செய்கிறார்கள் ,, நீதித்துறை குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை  மேற்கொண்டால் , நீதித்துறைக்கும் குற்றவாளிகளுக்கும் வேறுபாடு தெரியாமல் போய் விடும். எனவே குற்றவாளிகளுக்கு கவுன்சலிங் கொடுத்து அவர்களை திருத்துவதே நாம் செய்ய வேண்டியது . 
  • பெண்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டும் என கவலைப்படுவது பெண்ணுரிமைக்கு எதிரானது. நள்ளிரவில் பெண்கள் நகை அணிந்து வெளியே சென்றாலும் , அவர்களுக்கு எதுவும் நேரக்கூடாது. எனவே சமூக விரோதிகளுக்கு அறிவுரை சொல்லி தவறு செய்வதை தடுக்க வேண்டுமே தவிர , பெண்களுக்கு அறிவுரை கூறுவது ஆணாதிக்கம்.....


பாம்பையும் கொல்லக்கூடாது.  குச்சியும் உடைந்து விடக்கூடாது , ஆனால் எல்லோரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நினைக்கும் கோமாளித்தனத்தை இந்த நேரத்தில் ரசிக்க முடியவில்லை.

 நான் ஒரு முறை நள்ளிரவில் கோயம்பேட்டில் இறங்கினேன்.  ரோகிணி திரையரங்கம் அருகே செல்ல வேண்டி இருந்தது.  பேருந்து எதுவும் இல்லை .  நடந்து செல்ல தீர்மானித்தேன். 

  பேருந்து செல்லும் சாலையில் சென்றால் நேரமாகும் என்பதால் , கோயம்பேடு மார்க்கெட்டை ஒட்டியிருக்கும் குறுக்கு வழியாக செல்ல தீர்மானித்து , நடக்க தொடங்கினேன்.

 ஒரு முதியவர் என்னை தடுத்து நிறுத்தினார்.  “ இந்த நேரத்தில் இந்த வழியாக போக வேண்டாம் . ஆபத்தான் பகுதி. நேற்றுக் கூட வழிப்பறி நடந்தது  “ என உரிமையுடன் அறிவுரை சொன்னார்.

 என்னிடம் வழிப்பறி செய்ய எதுவும் இல்லை என்றாலும், அந்த முதியவரின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து , அந்த வழியை தவிர்த்தேன்.

 என் வீரத்துக்கு வேலை இல்லாமல் செய்து விட்டாரே என அவர் மீது கோபம் ஏதும் இல்லை. யாரென்றே தெரியாத ஒருவர் , இனி ஒருபோதும் சந்திக்க வாய்ப்பற்ற ஒருவர் காட்டிய அக்கறை மகிழ்ச்சியையே ஏற்படுத்தியது.

ஆனால் மாடர்ன் பெண்கள் அப்படி இருப்பதில்லை.  பெண்கள்களுக்கு முழு சுதந்திரம் வேண்டும், என்ன ஆடை அணிவது , அந்த நேரத்தில் வெளியே செல்வது என்பதை எல்லாம் உரிமை செய்யும் உரிமை அவர்களுக்கு கண்டிப்பாக உண்டு.

ஆனால்  நம்முடைய கேவலமான இந்த நாடு இந்த லட்சிய நிலைக்கு தயாராக இல்லை. மன நோயாளிகள் நிரம்பிய இந்த நாட்டில் பெண்கள் மிக மிக கவனமாக நடந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.  பாலியல் கல்வி அளித்தோ ,  நீதி போதனை கொடுத்தோ நம் ஊரை திருத்த இன்னும் பல ஆண்டுகள் ஆகும்.

அதுவரை அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க நம் கையாலாகாத  அமைப்பால் முடியாது என்பது நிதர்சனமான உண்மை. எனவே அவர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

 அப்படி ஒரு லட்சிய நாடாக உருவாகும் வரை கடும் தண்டனைகள் அவசியம் . அப்போதுதான் கொஞ்சமாவது குற்றங்களை குறைக்க முடியும்.  

தண்டனை கொடுப்பது மனித உரிமைக்கு எதிரானது.  எச்சரிக்கையாக இருக்க சொல்வது பெண் உரிமைக்கு எதிரானது.

எனவே இப்போது இருக்கும் நிலை மாறுவதற்கு வாய்ப்பே இல்லை. ஏதாவது சம்பவங்கள் நடக்கையில் ஆவேசமாக கருத்து சொல்லி விட்டு , பின் மறப்பது தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

இது மாறவே மாறாது. கடைசி வரை நாம் கேவலமான நாடாகவே இருக்க போகிறோமா..

இந்த நிலை மாற , ஒரே ஒரு வாய்ப்பு இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது. 

என்றாவது ஒரு நாள் இந்தியா இஸ்லாமிய பாதையில் நடக்க தொடங்கினால் , அன்று இந்த நிலை மாறக்கூடும்.

 இஸ்லாமிய நாடாக மாற வேண்டும் என்பதல்ல நான் சொல்வது. இஸ்லாமிய வழிமுறைகள் , ம்தங்களை கடந்த வழிமுறையாக ஏற்கப்பட வேண்டும்.

 நம் ஆட்கள் இஸ்லாமிய முறைகள் என்றால் பிற்போக்கு என்றே நினைப்பார்கள்.  இந்தியா என்னவோ, நாகரிக வளர்ச்சி அடைந்த நாடு போலவும் , மத நூல் அடிப்படையில் ஒரு நாடு செயல்படுவது பிற்போக்கு என்றும் நினைப்பார்கள்.

உண்மையில் , இப்போதுதான் நாம் பிற்போக்குவாதிகளாக , காட்டுமிராண்டிகளாக இருக்கிறோம்.

இஸ்லாம் சொல்லும்  கருத்துகளை பாருங்கள்.  

  • நபியே நீர் முஃமினான ஆண்களுக்குக் கூறு வீராக, அவர்கள் தமது பார்வைகளை தாழ்த்திக் கொள்ளட்டும். தமது மர்மஸ் தானங்களைப் பாதுகாத்துக் கொள்ளட்டும். அது அவர்களுக்கு மிகவும் சிறந்த தாகும். நிச்சயமாக அல்லாஹுத்த ஆலா அவர்கள் செய்பவற்றை நன்கறிந்த வனாக இருக்கின்றான்.
  • நீங்கள் விபசாரத்தை நெருங்கவும் வேண்டாம். அது மானக்கேடானதாகவும், மோசமான வழிமுறையாகவும் இருக்கின்றது
  • அலியே! ஒரு பார்வையைத் தொடர்ந்து அடுத்த பார்வையைச் செலுத்தாதீர். முதலாம் பார்வை உமக்குரியது. அடுத்தது உமக்குரியதல்ல

ஆண்களும் பெண்களும் கட்டுபாடுடன் வாழும் ஒரு நெறியை இஸ்லாம் சொல்கிறது. இதை அறிவுரையாக இல்லாமல் , மத கோட்பாடாக இல்லாமல் , ஒரு நாட்டின் வழிமுறையாக  மாற்றினால் ,  இதை மீறுபவர்களுக்கு கடும் தண்டனை என்ற நிலையை கொண்டு வந்தால் , குறைந்தது இன்னும் நூறு ஆண்டுகளிலாவது நாமும் மற்றவர்களை போல நாகரிகம் அடைந்த மக்களாக மாற முடியும் என்றே தோன்றுகிறது.

    
   

 



36 comments:

  1. மண் சார்ந்ததே மதங்களும்.அரேபிய நாடுகளில் பாலியல் வன்முறை நிகழ்வதில்லையென எந்த புத்தன் உங்களுக்கு பாடம் எடுத்தான்?வெளிச்சத்துக்கு வரும் சாத்தியங்கள் குறைவு என்று வேண்டுமென்றால் சொல்லலாம்.

    ReplyDelete
  2. இது இஸ்லாமியர்களால் மட்டுமே முடியும்...எப்படி பெண்ணின் நிலையை வைத்து கூட மதம் பரப்புகிறான்...
    இஸ்லாமிய வழி என்றால் இந்த பெண்ணுக்கு நடந்ததது வெளியேயே தெரிந்திருக்காது..
    நாதாரிகள்..

    ReplyDelete
  3. நாய்க்கு பயந்து ஓடி சொறி நாயிடம் கடி வாங்குவதா?

    ReplyDelete
  4. நல்லதொரு காமெடி சகோ. மதங்கள் ஒரு போதும் தீர்வு தராது .. அரேபியாவில் திருமணம் என்ற போர்வையில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப் படுகின்றார்கள், அங்கே பணிக்கு போகும் இந்திய, சிங்கள, பிலிப்பைன்ஸ் பணிப் பெண்கள் ... அனுபவிக்கும் கொடுமைகள் கொடுமை. அதிலும் ரத்தப் பணம் கட்டிவிட்டால் குற்றவாளி தப்பித்து விடலாம், அத்தோடு பெண் வன்புணரப் பட்டால் வழக்குகளில் நேரில் கண்ட இரு சாட்சியங்கள் ஒப்புதல் தரவேண்டும் ( ரத்த, விந்தணு பரிசோதனை எல்லாம் செல்லாது செல்லாதுங்கோ ) இதெல்லாம் நடக்கின்ற காரியமா .. !

    ஆகவே இக்கரை மாட்டுக்கு அக்கரைப் பச்சை என்பது போல, இங்கிருந்து அங்கே பார்த்தால் அப்படித் தான் தெரியும். தண்டனைகள், பாலியல் கல்விகள் மற்றும் பெண்கள் வெளிப்படையாக சுதந்திரமாக குற்றவாளிகளைத் தண்டிக்க முன்வருதல் போன்றவையே சமூகத்தை மாற்றும். நாத்திகர்கள் பெரும்பான்மையாக வாழும் பல நாடுகளில் பாலியல் வன்முறை குறைவாக உள்ளதே என்பதை சற்று சிந்திக்கலாம் ... !

    ReplyDelete
  5. அனைவரின் மீதும் அமைதி நிலவட்டுமாக !

    //ஆண்களும் பெண்களும் கட்டுபாடுடன் வாழும் ஒரு நெறியை இஸ்லாம் சொல்கிறது.//

    சரியாக சொன்னீர்கள் சகோ.இன்று பல பேரு மரணதண்டனை தீர்வு ஆகுமா ? என்று கேட்கின்றனர்.பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் தெரியும் வலியின் தன்மை..நியுஸ் பேப்பரிலோ,டிவியிலோ பார்த்து விட்டு உச்சுக்கொட்டி நீதி சொல்ல வந்து விடுகின்றனர்..இன்று மரணதண்டனை வேண்டும் என்று வீதியில் வந்து போராடுவோர் ஒரு நேரத்தில் அதை வேருத்தவர்கலாகவே இருந்திருப்பார்..தனக்கு வந்த சூழல் அவர்களை இவ்வாறு மாற்றி இருக்கிறது..நீதி என்பது மனிதர்களை போல் மாற்றி மாற்றி பேசுவதாக இருக்க முடியாது..நபி அவர்கள் தன்னுடைய மகள் பாத்திமாவே திருடினால் கூட கையை வெட்டுவேன் என்றார்கள்.இதுதான் நீதியின் தன்மை...

    இஸ்லாம் மக்களுக்கு வேண்டுமா வேண்டாமா அது மக்களின் சுதந்திரம்..ஆனால் இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள் நாட்டிற்கு இன்றியமையாதது...

    நன்றி !!!

    ReplyDelete
  6. @இக்பால் செல்வன்

    //அதிலும் ரத்தப் பணம் கட்டிவிட்டால் குற்றவாளி தப்பித்து விடலாம்//

    உங்கள் காமெடியும் அருமை சகோ. முதலில் ரத்த பணம் என்பது என்ன என்று அறிந்து கொள்வது நலம்..தண்டனையை இல்லாமல் ரத்த பணம் கொடுப்பது பாதிக்கப்பட்டவர்களின் முழு சம்மதத்தின் பேரிலேயே நடைபெறும் ஒன்று..அவர்களுக்கு பணம் கொடுத்து மன்னிப்பு கடிதம் வாங்கி நீதிமன்றத்தில் சமர்பித்தால் மட்டுமே செல்லுபடியாகும்..நீங்கள் திரிப்பது போல் மைனர் பஞ்சாயத்து மாதிரி ரெண்டாயிரம் அபராதம் கட்டுவது அல்ல..

    //அத்தோடு பெண் வன்புணரப் பட்டால் வழக்குகளில் நேரில் கண்ட இரு சாட்சியங்கள் ஒப்புதல் தரவேண்டும் ( ரத்த, விந்தணு பரிசோதனை எல்லாம் செல்லாது செல்லாதுங்கோ ) இதெல்லாம் நடக்கின்ற காரியமா .. !//

    நீர் மணிக்கு ஒருமுறை காட்டி கொண்டே இருப்பீர் போலும்...!!! இஸ்லாம் பெண்களுக்கு ஹிஜாப் இல்லாமல் வெளி இடங்களுக்கு செல்லக்கூடாது ...அந்நிய ஆண்களுடன் தனித்து இருக்க கூடாது...போன்ற விபச்சாரம் மற்றும் கற்பழிப்பு சம்பவம் நடைபெறாமல் இருக்க அணைத்து வழிகளையும் சொல்லிவிட்டு அதை கடைபிடித்து வாழும் பெண்ணிற்கு அதையும் மீறி கற்பழிப்பு நடந்தால் சாட்சிகளை கொண்டுவருவது அவ்வளவு சிரமம் அல்லவே..!!! நிற்க , இங்கு இஸ்லாமிய அறிவுரையை புறக்கணித்து யாருக்கும் தெரியாமல் தான்தோன்றி தனமாக செயல் படும் பெண்களுக்கு தான் சாட்சி கொண்டுவருவது சிரமம்..பெண் என்பவள் எப்போதும் சுற்றத்தார் பாதுகாப்பில் இருக்கும் படியே இஸ்லாம் அமைத்திருக்கிறது ...இஸ்லாமிய சட்டத்தை புறக்கணிக்கும் பெண்களுக்கு பங்கம் வந்தால் இஸ்லாம் எப்படி பொறுப்பு ஆகும்..சிந்திக்க மாட்டீர்களா...!!!!

    //பெண்கள் வெளிப்படையாக சுதந்திரமாக குற்றவாளிகளைத் தண்டிக்க முன்வருதல் போன்றவையே சமூகத்தை மாற்றும்//

    இதற்க்கு அர்த்தம் என்னவோ..!!!

    //நாத்திகர்கள் பெரும்பான்மையாக வாழும் பல நாடுகளில் பாலியல் வன்முறை குறைவாக உள்ளதே என்பதை சற்று சிந்திக்கலாம் ... !//

    அதானே..! முஸ்லிம் பெயருடைய ஒருவர் ஒரு கருத்து சொன்னால் சந்தர்ப்பம் பார்த்து மதம் வளர்கிறார் என்கிறீர்..இப்போது சந்தர்ப்பம் பார்த்து நாத்திகம் வளர்கிரீரே..!

    இறைவன் தண்டிப்பான் என்ற நம்பிக்கை இல்லாதவர்களே நாத்திகன்..ஒரு பத்து பேரு நாத்திகன் என்றும் ஒரு பத்து பேரு ஆத்திகன் என்றும் கொள்வோம்..ஆத்திகனில் ஒருவன் தப்பு செய்தால் மற்ற ஒன்பது பேரும் இறைவன் தண்டிப்பான் என்று எடுத்து கூறி திருத்த வாய்ப்பு உண்டு.. ஆனால் நாத்திகனில் ஒருவன் தப்பு செய்தால் அந்த தவறின் சுவையை மற்ற ஒன்பது பேருக்கும் சுவைக்க செய்துவிடுவான்..ஏன் என்றால் தவறு செய்ய கூடாது என்பதற்கு சரியானக் காரணம் கிடையாது நாத்திகத்தில். பிறந்தோம் இறந்தோம் என்பவர்களுக்கு கிடைத்தவரையில் லாபம் தான் என்ற சிந்தனையே மேலோங்கும் ..இந்த சிந்தனைதான் சமுதாயத்துக்கு கேடானது..சிந்திக்க மாட்டீர்களா...!!!!

    ReplyDelete
  7. தர்காவாதி & சாருவின் அல்லககை பிச்சைக் காரன்,
    குரான் வசனத்தை முழுமையாக போடும். முழுதும் பார்த்தாலே இஸ்லாமின் யோகியத்தை புரியும்

    இது கொஞ்சம் பரவாயில்லை

    24:30. (நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.

    இது கொஞ்சம் காமெடி முஸ்லிமாக்கள் யாருக்கு முன்னாடி தொறந்து போடலாம் என அல்லாஹ் கூறுகிறார். லூசுப்பய

    24:31. இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.

    அடிமைப் பெண்ணை வைத்து விபசாரம் செய்தால் அல்லாஹ் மன்னிப்பார். சூப்பரு அல்லாஹ் மாமா!!

    24:33. விவாகம் செய்வதற்கு (உரிய வசதிகளைப்) பெற்றுக் கொள்ளாதவர்கள் - அவர்களை அல்லாஹ் தம் நல்லருளினால் சீமான்களாக்கும் வரை - அவர்கள் ஒழுக்கம் பேணட்டும். இன்னும் உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களில் (அடிமைகளில் உரிய தொகையைக் கொடுத்தோ அல்லது முறையாக சம்பாதித்துத் தருவதாக வாக்குக் கொடுத்தோ) எவரேனும் (சுதந்திரமாவதற்கான) உரிமைப் பத்திரம் விரும்பினால் - அதற்குரிய நன்மையான தகுதியை நீங்கள் அவ்வடிமையிடம் (இருப்பது பற்றி) அறிவீர்களாயின், அவர்களுக்குத் உரிமை பத்திரம் எழுதிக் கொடுங்கள்; இன்னும் (அதற்கான பொருளை) அல்லாஹ் உங்களுக்குத் தந்திருக்கும் பொருளிலிருந்து அவர்களுக்குக் கொடுப்பீர்களாக; மேலும், தங்கள் கற்பைப் பேணிக் கொள்ள விரும்பும் உங்கள் அடிமைப் பெண்களை - அற்பமான உலக வாழ்க்கை வசதிகளைத் தேடியவர்களாக - விபசாரத்திற்கு (அவர்களை) நிர்ப்பந்திக்காதீர்கள்; அப்படி எவனேனும் அந்தப் பெண்களை நிர்ப்பந்தித்தால் அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட பின் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கிறான்.

    சாரு எழுத்தை விட கேவலம இருக்கு குரான் தூத்தெறி!இத்ல இந்தியாவுக்கு வழிகாட்டுகிரானாம்!!

    ReplyDelete
  8. அண்ணே ,
    நீங்க பெரிய ஆள்ணே ..

    ReplyDelete
  9. Periya comedy ithan pa.. Muslim kolkai konda oru nattil muslim mathathai muluvathumaga aetru kondavarkalae penkal karpalikka padukirarkal.. Enna India pontra democratic naadukalil athu veliye therikirathu.. Ithuve Muslim nadaka irunthaal theriyathu.. Ivaalavukkum anke penkal udal paksnkal therivathu mathiri dress pannuvathillai.. Mulukka moodikkondu than irukkirarkal.. Panippenkalum kooda muslim veetil velai parthal udalai muluvathumaka moodavittalum kuda thalai matrum kathu pakuthikalai moodikkondu than pani seikirarkal.. Especially Filipinos abd Srilankan And some Indian womens are fetting raped and used to see atleast one case in UAE Newspaper.. Dont make fool everyone that in Muslim countries are following strict rules and there is no sexual crimes.. Ithu mathiri Muslims koottathil pesa than layakku.. But real life unka sinthanaukkum nadaimuraikkum sammanthame illatha onnu.. Better luck next time...

    ReplyDelete
  10. Mr. Iqbal selvan dont bluff without giving any proof. If you hang the bitchers and telecast then see who is doing rape in delhi - shall u give me any stastics which show rape is more in saudi arabia than the so called athiest countries or where athiest people live more

    ReplyDelete
  11. இக்பால் செல்வன்..

    நீங்கள் சொன்ன எல்லாம் அரபு நாட்டில் நடக்கலாம்...
    ஆனால் அவை வீட்டுக்குள் நடக்கும்.. ஆனால் பொது இடத்தில் எந்த பெண்ணையும் கைய பிடிச்சு இழுக்க முடியாது.. கழுவுல ஏத்திடுவானுக..

    இந்த வித்தியாசம் உங்களுக்கு என்னைக்கும் புரியாது.. ஏன்னா உங்க மனதில் இஸ்லாமோபோஃபியா இருக்கு...

    விகிதாச்சார அடிப்படையில் சவுதியில் குற்றங்கள் குறைவு என்பதையாவது ஏற்றுக்கொள்வீர்களா?? இல்லை அதுக்கும் சப்பை கட்டு கட்டுவீர்களா???

    ReplyDelete
  12. அருமையான ஆக்கம். வாழ்த்துக்கள் சகோதரரே...

    //அரேபியாவில் திருமணம் என்ற போர்வையில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப் படுகின்றார்கள்.//

    ஹி..ஹி...தனது துணையை போஃபேக்களில் இன்று வரை தேடிவருகிறாராம். எவனும் எவளோடும் காதல் என்ற பெயரில் ஊர் சுற்றி விட்டு பிறகு அந்த பெண்ணை நிர்கதியாக்கி விட்டு போகும் கலாசாரத்தை பின் பற்றும் ஒரு அதிமேதாவி திருமணத்தை குறை சொல்லலாமோ...

    பல வருடங்களாக குடும்பத்தோடு நம் தமிழர்கள் அதுவும் இந்துக்கள் சவுதியில் பணி புரிந்து வருகின்றனர். அவர்களில் எவருக்காவது இன்று வரை பாலியல் தொந்தரவு வலுக்கட்டாயமாக தரப்பட்டுள்ளதா என்று சொல்லச் சொல்லுங்களேன்.

    வீட்டு வேலைக்கு பணிப்பெண்ணாக ஆண் துணையின்றி வருவதே முதலில் தவறு. எங்கேனும் தவறுகள் நடந்தால் அரசு தண்டனையும் தருகிறது. இதே போன்று நம் நாட்டிலும் வீட்டு வேலை செய்யும் பெண்களிடம் சில்மிசம் பண்ணும் பெருசுகளின் பட்டியலும் உள்ளதே...அதற்கு இந்த அதி மேததாவி என்ன பதில் வைத்துள்ளார்.?

    ReplyDelete
  13. இக்பால் செல்வன்,

    உங்களுடைய இஸ்லாமிய வெறுப்பு முழுவதும் ததும்பத் ததும்ப நுரைக்கும் விதமாக நீங்கள் எழுதியிருந்தாலும், அரேபியாவிலும் பாலியல் குற்றங்கள் நடந்தாலும் ஒப்பீடுகள் அளவில் இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் நாடுகளில் இக்குற்றங்கள் குறைவு என்பது தான் உண்மை. நமக்குப் பிடிக்கவில்லை என்பதற்காகவே ஒன்றை மறுப்பது நியாயமில்லை

    ReplyDelete
  14. @ ராஜநடராஜன், மனிதர்கள் இருக்கும் எல்லா இடங்களிலும் பாலியல் குற்றங்கள் நடக்கவே செய்யும். ஆனால் நாம் பார்க்க வேண்டியது குற்றங்களை எப்படி குறைப்பது என்பதையும், சமூக விரோதிகளை கட்டுக்குள் வைப்பதையும் தான். அதற்கு இஸ்லாமிய சட்டங்கள் உதவுகின்றன என்பது உண்மையாகும்

    ReplyDelete
  15. நண்பர்கள் குழுவாக இருக்கும்போது அதீத உற்சாகமும், அளவுக்கு மீறிய துணிவும் தாமாய் வந்துவிடுகிறது. அதுவும் போதையில் இருந்தால் சொல்லவே தேவையில்லை. இஸ்லாமியப் முறைப்படி மாறியபின், நம் நாட்டில் பர்தா முழுக்க அணிந்த ஒரு பெண், அந்த பஸ்ஸில் இருந்த கயவர்களைப் போன்றொரு கும்பலில் சிக்கினால் இதேதான் நடக்குமே ஒழிய, அந்தப் பெண் தப்பியெல்லாம் விட முடியாது. அதற்கு அடிப்படையில் ஓர் ஆண் மனது, விரும்பாத ஒரு பெண்ணை தொடுவதே பாவம் என்று பக்குவப்பட்டிருக்க வேண்டும். காதலியோ, மனைவியோ அவளையேக் கூட, அவள் விருப்பமில்லாமல் தொட முயல்வதே அநாகரீகம் என்றளவு பாலியல் கல்வியை இளம்வயது முதல் சொல்லிக் கொடுக்கவேண்டும். இஸ்லாமியப் முறைப்படி ஆடையானாலும் சரி, கட்டுப்பாடானாலும் சரி, தண்டனைகள் ஆனாலும் சரி, அது இந்திய ஜனநாயகத்துக்கு பின்னடைவே. சிந்தனைகளை முற்போக்குத் தனமாக விதையுங்கள். ஓர் ஆண், சகோதரி இல்லாமல் இருக்கலாம், காதலி/மனைவி/தோழி இல்லாமல் இருக்கலாம், அம்மா இல்லாமல் இருக்க முடியாதே ? விரும்பாத ஒரு பெண்ணைத் தீண்டுமுன் அவனவனுக்கு அவன் அம்மா கண்முன்னால் வந்தால் கூடப் போதும். குழந்தைப் பருவத்தில் இருந்தே ஓர் ஆண் குழந்தைக்கு பெண்ணை மதிக்க வேண்டிய அவசியத்தையும், பெண் குழந்தைக்கு பண்பாடு காக்க வேண்டிய அவசியத்தையும் சிறுக, சிறுக விதைக்க வேண்டும். கற்பழிப்பு வேண்டாம் என்ற உங்கள் ஆசை போற்றக்கூடியது, ஆனால் அதற்காக இஸ்லாம் எனும் இரும்புச்சங்கிலியை புனையுங்கள் என்ற உங்கள் கருத்து முழுமுழுக்க பிற்போக்குத்தனமானது :(

    ReplyDelete
  16. இஸ்லாம்தான் சரியான தீர்வு என்று சரியாக சொன்னீர்கள். சகோதரரே. உண்மையை சொன்னால் நண்பர் நடராஜ் முதல் சகோதரர் இக்பால் வரை விதண்டாவாதையே விதைப்பார்கள். தூங்குபவனை எழுப்பிவிடலாம். ஆனால் தூங்குவதுபோல் நடிப்பவன் எப்போதும் உண்மையை ஒத்துக்கொள்ள மாட்டான். இவர்மட்டுமல்ல பெயர் சொல்ல விரும்பாத சகோதரர்கள் கூட ஒரு நாயிக்கு இருக்கும் தைரியம் இல்லாமல் என்ன சொல்கிறோம் என தெரியாமல் பிதட்டுகிறார்கள். உண்மை எப்போதும் உறங்குவது இல்லை. உங்களைபோன்ற சகோதரர்களால் வெளிக்கொணரப்படுகிறது.

    ReplyDelete
  17. @ ராஜா...

    பர்தா அணிந்த பெண்ணாக இருந்தாலும் , அந்த மிருகங்கங்களிடம் இருந்து தப்ப முடியாது என்பது , இந்தியாவை பொறுத்த்வரை உண்மைதான்.. ஆனால் , தவறாக நடந்தால் , அடுத்த நாள் நடு ரோட்டில் கல்லெறிந்து கொல்லப்படுவோம் என்ற எண்ணம் அவர்கள் ஆழ் மனதில் பதிந்தால் , காம உணர்வு தோன்றாது... பய உணர்வே தோன்றும் .. இத்தைய தண்டனைகள் பிற்போக்கு என சொல்வீர்கள் .. ஆனால் நடைமுறையில் காட்டுமிராண்டி தேசத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம் என்பதை மறந்து விடுகிறோம்

    ReplyDelete
  18. @இக்பால் செல்வன்... இஸ்லாம் நாடுகளிலோ , நாகரீக வளர்ச்சி அடைந்த மற்ற நாடுகளிலோ தவறுகள் அறவே இல்லை என்பது இல்லை.. அங்கும் உள்ளன.. ஆனால் நம் காட்டுமிராண்டி தேசத்தை விட அங்கெல்லாம் குறைவுதான். மேலும், அங்கு தவறு செய்தால் தண்டனைகளில் இருந்து தப்புவது எளிதல்ல.. அதையும் மீறியும் தவறுகள் நடக்க கூடும். ஆனால் அப்படி தவறுகள் செய்து தப்ப
    கடும் முயற்சி தேவை.. நம் நாட்டில் சரியாக வாழ்வதற்க்குத்தான் முயற்சிகள் தேவை.. குற்றங்கள் செய்து தப்புவது மிக எளிது..

    ReplyDelete
  19. May peace be on to you !!

    Wonderful brother !!

    Salutes to you as you had the guts to come out openly and admit what's practically possible rather than rattling intellectually void points. Kudos to you !!!

    ReplyDelete
  20. ISLAM provide safety for women?hahahahaahhahahaha..Don't be kidding. ahahahahahahhahahahhahahhaha

    ReplyDelete
  21. Let everybody become a fan of Rajini kanth like pichaikaran. Then India will be a country without rapes.

    Good luck spreading religion!!

    ReplyDelete
  22. அப்படியே இதையும் சேர்த்துகொள்ளுங்கள்... இஸ்லாமிய முறைப்படி எல்லாருக்கும் 4 பெண்களை மணம் முடித்தால், ஆண்கள் வன்புணர்ச்சி என்ற வார்த்தையை மறந்து விடுவார்கள் என்று. அடக்கு முறைகளும், சட்டங்களும் குற்றங்களை குறைக்குமே ஒழிய அதை தவிர்க்காது. இல்லை என்றால் அரபு நாடுகள் போல வீடு வேளைக்கு வரும் பெண்களை நாசம் செய்வார்கள். வயற்றுபாட்டுக்காக வேலைக்கு செல்லும் பெண்கள் வீட்டில் உள்ள ஆண்களை உடன் அழைத்து தான் செல்ல வேண்டும் என்றால் யாரும் வேலைக்கே போக முடியாது. சரி, உங்கள் வாதம் படியே பார்த்தாலும் கணவனை இழந்த ஆதரவற்ற கைம்பெண்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் பட்டினி கிடந்து தான் சாக வேண்டும். இதெல்லாம் இக்கரைக்கு அக்கரை பச்சை கதை தான். முறையான பாலியல் கல்வியும், பெற்றோரின் வழிகாட்டுதலும் தான் இப்பிரச்சனைக்கு ஒரே தீர்வு. அன்புள்ள சகோஸ்... எங்கள் இந்தியா போன்ற காட்டுமிராண்டி தேசத்தில் உங்கள் புனிதமான ஷரியத் சட்டங்களை வீணாக்க வேண்டாம். அதற்கு தான் ஆப்கன் போன்ற வளர்ந்த நாடுகள் உள்ளனவே!!!

    ReplyDelete
  23. நாத்திகவாதிகளால் (இக்குபாலு செல்வன் உட்பட) மத உணர்வுகளை புண்படுத்தாமல் நாத்திகத்தை அறிவுபூர்வமாக எடுத்து சொல்ல திறமையில்லை அல்லது சரக்கில்லை.

    நாத்திகர்களிடம் கடவுள் குறித்த அச்சமின்மை காரணமாக அவர்கள் மனம் போன போக்கில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வரம்பை கூடுதலாகவும் குறைவாகவும் நிர்ணயித்துக் கொண்டு வக்கிரங்களை மனதில் கொண்டு நாத்திகம் பேசுவது வேடிக்கையானது.

    ReplyDelete
  24. மதங்களால் மட்டுமே தண்டனைகளால் மட்டுமே உலகத்தை இந்தியாவை மாற்றி விட முடியுமா?வாய்ப்பே இல்லை...இத்தனை வருட வாழ்க்கையில் அரபு நாட்டுக்கும் இந்தியாக்கும் ஒப்பிடு அளவில் குற்றங்கள் குறைய நிறைய என்றாலும் மக்கள் தொகையை கணக்கிட வேண்டும்.இன்னும் இஸ்லாமிய மதத்தால் மார்க்கத்தால் முழுமையாக திருத்திட முடியலையே....அப்புறம் என்ன?தேவை புரிதலும்,தனிமனித ஒழுக்கமும் பாலியல் விழிப்புணர்வும்தான்.

    ReplyDelete
  25. உ.பி,யில் 9 அமைச்சர்கள் மீது கற்பழிப்பு வழக்குகள்!

    48 பேரில் 26 அமைச்சர்கள் கிரிமினல்கள்!!


    Posted by: Mathi Updated: Monday, December 24, 2012, 14:06 [IST]

    லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவோம் என்று அறைகூவல் விட்டு முதல்வர் பொறுப்பேற்ற அகிலேஷ் யாதவ் தலைமையிலான அமைச்சரவையில் 54% பேர் கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்களாம்!

    இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் அதிகம் நடைபெறக்கூடிய ஒரு மாநிலமாக இருப்பது உத்தரப்பிரதேசம்தான்!

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சட்டம் -ஒழுங்கு என்பது பொதுவாக அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது இல்லை.

    சில தாதாக்கள் வசம்தான் இருக்கும்.

    ஆனால் தற்போது அந்த தாதாக்களே அமைச்சர்களாகவும் வலம் வருவதால் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கும் என்பதை சொல்லத்தான் வேண்டியதில்லை.

    ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் ஆகிய இரு அமைப்புகளும் இணைந்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைச்சர்களாக இருப்பவர்கள் தேர்தலின் போது தாக்கல் செய்தபோது ஆவணங்களை ஆய்வு செய்து ஒரு அறிக்கையை நேற்று வெளியிட்டிருக்கிறது.

    இதில் உத்தரப்பிரதேசத்தின் 48 கேபினட் அமைச்சர்களில் 26 பேர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது.

    Read more at: http://tamil.oneindia.in/news/2012/12/24/india-26-of-48-up-cabinet-ministers-have-criminal-past-166779.html

    ReplyDelete
  26. ஹிந்துத்துவா சக்திகளின் தலையீடே டெல்லி வன்முறைக்கு காரணம்!

    24 Dec 2012 புதுடெல்லி:டெல்லியில் ஓடும் பேருந்தில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட கொடிய செயலைக் கண்டித்தும்,

    குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கக் கோரியும் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது.

    இதற்கு காரணம், ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க மற்றும் பாபா ராம்தேவின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட ஹிந்துத்துவா வகுப்புவாத சக்திகளின் தலையீடே காரணம் என கூறப்படுகிறது.

    காவி ரிப்பன் தலையில் கட்டிய ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள் போலீஸ் தடுப்புகளுக்கு மேலே ஏறி நின்று போலீஸார் மீது தாக்குதலை நடத்தினர்.

    தீவிர ஹிந்துத்துவா இயக்கமான பகத்சிங் க்ராந்தி சேனாவும், உணர்ச்சியை தூண்டும் கோஷங்களுடன் போராட்டக்காரர்கள் மத்தியில் நுழைந்தது.

    இந்தியா கேட்டில் மாலையில் பாபா ராம்தேவ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் கெஜ்ரிவாலும் போராட்டத்தில் பங்கேற்றனர். மாலையிலேயே போராட்டம் தீவிரமடைந்தது.

    ஐஸா, டி.ஒய்.எஃப்.ஐ அமைப்புகளைச் சார்ந்தவர்களும் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
    எந்த இயக்கத்தையும் சாராத இளைஞர்கள் தாம் போராட்டத்தில் பெரும் திரளாக கலந்துகொண்டனர்.

    இந்நிலையில் சங்க்பரிவாரின் தலையீடே அமைதியான போராட்டத்தை வன்முறையாக மாற்றியது.

    மாணவர்களை உபயோகித்து போலீஸாரை தாக்கியதோடு, பொதுச் சொத்துக்களுக்கும் இவர்கள் சேதத்தை ஏற்படுத்தினர்.

    நேற்று முன் தினம் நடந்த போராட்டம், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக இணையதளங்கள் மூலமாக விடுக்கப்பட்ட மெஸேஜ்களின் அடிப்படையில் மக்கள் திரண்டனர்.

    ஆனால், உள்துறை அமைச்சருடன் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையை தொடர்ந்து பெரும்பாலோர் கலைந்து சென்று விட்டனர்.

    ஆனால், ஒரு கூட்டத்தினர் கலைந்து செல்லவில்லை.

    நேற்று விடுமுறை தினம் என்பதால் மீண்டும் போராட்டம் நடத்த மாணவர்கள் திரண்டனர்.
    ஆனால், நேற்று முன் தினம் கூடிய அளவுக்கு மக்கள் கூட்டம் இல்லை.

    எனினும், ஹிந்துத்துவா வகுப்புவாத சக்திகளின் தலையீடே போராட்டத்தை வன்முறையாக மாற்றியது.

    மாணவர்களிடையே வெளி சக்திகள் ஊடுருவி வன்முறையை ஏற்படுத்தியதாக போலீசாரும் தெரிவித்துள்ளனர்.

    SOURCE:http://www.thoothuonline.com

    டெல்லி பலாத்கார எதிர்ப்புப் போராட்டத்தில் காயமடைந்த போலீஸ்காரர் மரணம்

    Posted by: Sudha Published: Tuesday, December 25, 2012, 8:53 [IST]

    டெல்லி: டெல்லியில் பாலியல் பலாத்காரத்திற்கு எதிரான போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் தாக்கியதில் காயமடைந்ததாக கூறப்படும் காவலர் சுபாஷ் தோமர் மரணமடைந்தார்.

    இன்று காலை டெல்லி ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்தது.

    இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டத்தின்போது தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்தார்.

    இந்தியா கேட் பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. இதையடுத்து பலத்த காயத்துடன் அவரை மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர்.

    தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் இன்றுகாலை உயிரிழந்தார். போராட்டக்காரர்கள் இவரை சரமாரியாக சூழ்ந்து கொண்டு கற்களை வீசியும், தாக்கியும் காயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    ஆனால் போராட்டக்காரர்கள் இதை மறுத்துள்ளனர். இதுதொடர்பாக ஏற்கனவே ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    SOURCE: http://tamil.oneindia.in/news/2012/12/25/india-gangrape-protests-constable-subhash-tomar-injured-166829.html

    ReplyDelete
  27. 5 வயது சிறுமி மீதான பாலியல் வன் கொடுமை :

    டெல்லி நீதிமன்றம் தூக்குத்தண்டனை அறிவிப்பு


    Tuesday, 25 December 2012 01:46

    உத்தர பிரதேசத்தில் 5வயது சிறுமியை வன்புணர்வு செய்து படுகொலை செய்த வழக்கில் குற்றவாளி சுரேந்தர் கோலிக்கு

    தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2006ம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சுரேந்தர் கோலி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டது.

    வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த தனது ஐந்து வயது மகளை காணவில்லை என தந்தை காவல்துறையில் புகார்கொடுத்ததை அடுத்து, மொகிந்தர் சிங்கையும், அவரது வீட்டில் வேலை செய்த சுரேந்தர் கோலியையும், 2006ம் ஆண்டு காவல்துறையினர் கைது செய்து விசாரித்தனர்.

    பின்னர் அவர்களது வீட்டு கழிவு தொட்டியிலிருந்து எலும்புக்கூடுகளும் கைப்பற்றப்பட்டன.

    இது போன்று பல சிறுமிகளை வன்கொடுமை செய்து கொலை செய்ததோடு, கொலையானவர்களின் எலும்புகளை சுவைத்து சாப்பிட்டதாக சுரேந்தர் கோலி தன் குற்றத்தை ஒப்புக்கொண்டான்.

    இதையடுத்து நான்கு வழக்குகளில் நீதிமன்றம் ஏற்கனவே அவருக்கு தூக்கு தண்டனை வழங்கியிருந்தது.

    தற்போது ஐந்தாவது வழக்கிலும் இவ்வாறு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    டெல்லி காசியாபாத் சிபிஐ நீதிமன்றம் இத்தண்டனையை அறிவித்துள்ளது.

    கடந்த வாரம் டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கல்லூரி மாணவிக்கு நீதிகோரி டெல்லியில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் போராட்டக்காரர்களின் பிரதிநிதிகள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த போது பெண்களை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு அதிகபட்சமாக மரணதண்டனை விதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

    இதனை பரிசீலிப்பதாக அவரும் தெரிவித்துள்ளார். இந்நிலையிலேயே டெல்லி நீதிமன்றில் இத்தூக்குத்தண்டனை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    SOURCE:http://www.4tamilmedia.com/

    ReplyDelete
  28. சேலத்தில் பல மாதங்களாக 2 சிறுமிகளை பலாத்காரம் செய்த 2 கொடியவர்கள் கைது

    Posted by: Mayura Akilan Published: Tuesday, December 25, 2012, 12:21 [IST]

    சேலம்: சேலத்தில் ஆதரவற்ற இரண்டு சிறுமிகளை அதே ஊரைச் சேர்ந்த இரண்டு பேர் தொடர்ந்து பல மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    சேலம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் சரண்யா, லாவண்யா ,(பெயர் மாற்றப்பட்டுள்ளது).

    இதில் ஒரு சிறுமியின் வயது 12 என்றும் மற்றொரு சிறுமியின் வயது 16 என்றும் தெரியவந்துள்ளது.

    தாய் தந்தையரின் ஆதரவை இழந்த, இந்த இரு சிறுமிகளும், தங்களது பாட்டியுடன் அம்மாபேட்டையில் வசித்து வந்துள்ளனர். பாட்டி இறந்துவிடவே தனித்துவிடப்பட்ட சிறுமிகள் இருவரும், சேலம் பேருந்து நிலைய பகுதிகளில் சுற்றித் திரிந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த நாகசாமி என்பவர், தனது வீட்டில், வீட்டு வேலை செய்யுமாறும், தேவையான உதவிகளை செய்வதாகவும் கூறி அவர்கள் இருவரையும், அழைத்துச் சென்றுள்ளார்.

    அங்கு அவர்களை நாகசாமி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    அவருடன், அவரது உறவினரான சந்திரன் என்பவரும் இந்த தகாத செயலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

    இது குறித்த தகவல் அறிந்த சமூக ஆர்வலர் ஒருவர் சிறுமிகளை காப்பாற்றியதோடு, காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதனையடுத்து நாகசாமியையும், சந்திரனையும் சேலம் போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

    சிறுமிகள் இருவரும் காப்பகம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    Read more at: http://tamil.oneindia.in/news/2012/12/25/tamilnadu-two-arrested-raping-minor-girl-166851.html

    ReplyDelete
  29. திரிபுராவில் இளம்பெண்ணை கற்பழித்து,

    நிர்வாணமாக்கி தாக்கி,

    மரத்தில் கட்டி வைத்த கும்பல்


    Posted by: Siva Published: Monday, December 24, 2012, 10:20

    அகர்தலா: திரிபுராவில் 37 வயது குடும்பத் தலைவி ஒருவரை ஒரு கும்பல் கற்பழித்து அவரை நிர்வாணமாக்கி அனைவர் முன்பும் அடித்து, மரத்தில் கட்டி வைத்துள்ளது.

    டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ படிப்பு மாணவி கற்பழிக்கப்பட்டதற்கு நியாயம் கேட்டு தலைநகரில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது.

    இந்நிலையில் திரிபுராவில் 5 வயது குழந்தையின் தாயை ஒரு கும்பல் கற்பழித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மேற்கு திரிபுராவில் உள்ள பிஷால்கரைச் சேர்ந்த 37 வயது குடும்பத் தலைவியை ஒரு கும்பல் கற்பழித்தது.

    மேலும் அவரை நிர்வாணமாக்கி ஊர் மக்கள் முன்பு அடித்து நொறுக்கியது.

    அதோடு மட்டுமல்லாமல் அந்த பெண்ணை நிர்வாண கோலத்தில் மரத்தில் கட்டி வைத்துள்ளது.

    அவர் அதே நிலையில் பல மணி நேரம் இருந்தும் அவரை யாரும் காப்பாற்ற வரவில்லை.

    பின்னர் அந்த பெண் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் 7 பேரைக் கைது செய்தனர், 3 பேரை தேடி வருகின்றனர்.

    மேலும் அப்பெண்ணின் கணவர் அந்நேரத்தில் எங்கே சென்றார் என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இது குறித்து போலீசார் கூறுகையில், அந்த கும்பல் அப்பெண்ணை வீட்டில் இருந்து வெளியே இழுத்து வந்து பெண்கள் உள்பட பலர் முன்பு கற்பழித்துள்ளனர்.

    ஆனால் ஒருவர் கூட அவரைக் காப்பாற்றவில்லை என்றனர்.

    இந்த சம்பவத்தைக் கண்டித்து பிஷால்கரில் கண்டனப் பேரணி நடந்தது.

    Read more at: http://tamil.oneindia.in/news/2012/12/24/india-tripura-woman-stripped-raped-beate-166776.html

    ReplyDelete
  30. அன்பு சகோதரர் சதீஷ் செல்லத்துரை அவர்களுக்கு,

    உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

    இங்கு உண்மை அறிந்தும் பலர் எதிர்மறையாக எழுதுவதற்கு நான் பதில் சொல்ல முயன்றதில்லை. உண்மையை அவர்கள் நன்கு அறிந்தே வைத்துள்ளனர். ஆனால் உங்களுக்கு பதில் அளிப்பது கடமையாக நினைக்கின்றேன்.

    //இத்தனை வருட வாழ்க்கையில் அரபு நாட்டுக்கும் இந்தியாக்கும் ஒப்பிடு அளவில் குற்றங்கள் குறைய நிறைய என்றாலும் மக்கள் தொகையை கணக்கிட வேண்டும்.//

    வன்புணர்ச்சி எண்ணிக்கைகள் ஒரு நாட்டின் மக்கட்தொகையை பார்த்து கணக்கிடபடுவதில்லை. 1000 பேருக்கு இத்தனை என்ற கணக்கில் நெருக்கத்தை வைத்தே கணக்கிடப்படுகின்றன. மக்கள் தொகை அதிகமோ குறைவோ அது பிரச்சனை இல்லை. அந்த வகையில் நீங்கள் குறிப்பிடும் சவூதி உலகில் வன்புணர்ச்சி அதிகம் உள்ள நாடுகளின் கீழ் வரவில்லை. பார்க்க புள்ளி விவரங்கள்: http://www.nationmaster.com/graph/cri_rap_percap-crime-rapes-per-capita

    அதுபோல, உலகில் குற்றங்கள் அதிகம் நடைபெறும் நாடுகளின் வரிசையிலும் நீங்கள் குறிப்பிடும் நாடு இல்லை. அந்த நாட்டை போல மக்கட்தொகை உள்ள நாடுகளே முன்னணியில் உள்ளன. பார்க்க: http://www.nationmaster.com/graph/cri_tot_cri-crime#

    இந்த பதிவில் சகோதரர் ஆனந்த் சொல்வது, தண்டனைகள் இஸ்லாம் வலியுறுத்தும்படியாக இருந்தால் குற்றங்கள் குறையும் என்பது தான். எந்தவொரு கொள்கையும் குற்றங்களை முடிந்த வரை குறைக்க தான் வழி சொல்ல முடியும். இஸ்லாமும் அதை தான் செய்கின்றது. இறைவன் மீதான அச்சத்தை கடுமையாக ஒருவனின் மனதில் இஸ்லாம் விதைக்க முயற்சிப்பதும் இந்த காரணத்திற்காக தான்.

    கற்பழித்த ஒருவனை நாடறிய போட்டு தள்ளினால் அதே போன்ற குற்றங்கள் குறையுமா இல்லையா என்பதே கேள்வி. ப்ராக்டிகலாக குறையும் என்பதே நாம் அறிந்த உண்மை. குற்றங்களை குறைக்க இஸ்லாம் கூறும் வழிமுறைகள் நேரடியாவை, நேர்மையானவை, பலன் தரக்கூடியவை..

    நன்றி.

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  31. இஸ்லாமிய பிச்சைக்காரனுக்கு மற்ற மதத்தைப் பற்றி எதுவுமே தெரியாது.

    உலகில் எந்த மதத்திலும் பெண்களை கற்பழிக்கலாம் என்ற கருத்து கிடையாது. ஆனால் இஸ்லாம், பிராமண மதங்களில் அது நடக்கும்.

    சும்மா கூவாமல் சாருவிற்கு எத்தனை பொண்டாட்டி...எத்தனை வப்பாட்டி என்று எழுதவும்.

    ReplyDelete
  32. இக்பால் செல்வன்
    //அத்தோடு பெண் வன்புணரப் பட்டால் வழக்குகளில் நேரில் கண்ட இரு சாட்சியங்கள் ஒப்புதல் தரவேண்டும் ( ரத்த, விந்தணு பரிசோதனை எல்லாம் செல்லாது செல்லாதுங்கோ ) இதெல்லாம் நடக்கின்ற காரியமா .. ! //

    இது ஒரு மிகப்பெரும் இட்டுகட்டப்பட்ட பொய் ... இஸ்லாத்தில் இப்படி ஒரு சட்டமே இல்லை . நீங்கள் கூறுவது போல மெடிக்கல் ரிப்போர்ட் ஒன்றே போதும் குற்றவாளியை தண்டிக்க ..... உண்மையில் விபச்சாரத்தை நிரூபிப்பதர்க்கே நீங்கள் கூறும் சாட்சிகல் குற்றம் சுமதுபவரால் கொண்டு வரப்பட வேண்டும் ,

    ReplyDelete
  33. கற்பழிப்பை, அதனை மற்றவர்கள் மீது திணிப்பவர்களை , மனிதநேயம் என்ற பெயரில் அந்தக் காமக் கொடூரங்களைத் தூக்கில் போடுவதை எதிர்ப்பதன் மூலம் நாத்திகம் தனது இஸ்லாமிய வெறியை நன்கு பல்லிளித்து காட்டுகிறது !!!

    தவறுக்கு தண்டனை தரச்சொன்னால் இஸ்லாம் கெட்ட மதமா? Well done my dear Atheists :)

    ReplyDelete
  34. நண்பரே அருமையாக சொல்லியுள்ளீர்கள்...

    நம் நாட்டில் இப்ப இருக்கிற நிலையை பார்த்தால் கற்பழிக்க சம்பவங்கள் வருங்காலத்தில் அமெரிக்கவின் சதவிதத்தை மிஞ்சிவிடும் போல் இருக்கிறது. அந்தளவுக்கு கலச்சார சிராழிவுகள் ஆபசாபம் நிறைந்து உடைகள். இனி வருக்கூடிய ஜெனரேசன் நிலையை நினைத்தால் கவலை அளிக்கிறது.

    ReplyDelete
  35. இக்பால் செல்வன் நல்ல இருக்கிறீர்களா ரொம்பாநாட்கள் ஆகிவிட்டது உங்கள் பிதிவு கருத்துக்களை பார்த்து


    இக்பால் செல்வன் said...

    //அரேபியாவில் திருமணம் என்ற போர்வையில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப் படுகின்றார்கள்,// இன்னும் நீங்கள் அப்படியே இருக்கிறீர்கள்....ஹா ஹா ஹா.
    உங்கள் சித்தப்படி திருமணம் செய்து விட்டு கணவன், மனைவி இணைவது வன்புணர்வா

    //அங்கே பணிக்கு போகும் இந்திய, சிங்கள, பிலிப்பைன்ஸ் பணிப் பெண்கள் ... அனுபவிக்கும் கொடுமைகள் கொடுமை.//
    பாதிக்கப்பட்டால் வெளியே தெரிந்தால் தான் நீதி வழங்கமுடியும். பிலிப்பைன்ஸ் பெண் பாதிக்கப்பட்டு அதற்கு அரபிகளுக்கு தண்டனை தராக்ககூடியா வீடியோ youtube இருக்கிறது பார்வையிடுங்கள்

    //அதிலும் ரத்தப் பணம் கட்டிவிட்டால் குற்றவாளி தப்பித்து விடலாம்,//
    மன்னிப்பு or நஷ்டயிடு or தண்டனை இதில் எதாவது ஒன்று தேர்வு செய்வது பாதிக்கப்பட்டவார்கள் முடிவெடுக்ககூடியாது. அரசாங்கம் இல்லை.

    //நேரில் கண்ட இரு சாட்சியங்கள் ஒப்புதல் தரவேண்டும்.//
    இது விபச்சாரத்திற்கு. சாட்சிகள் இல்ல விடினின் திரித்து பொய் சொல்ல கூடியா நிலை இருக்கிறது

    ReplyDelete
  36. I feel that In india ,we should have strong punishments and those should be thought from childhood in lessons and we have so much of population so death penalty is best for doing any kind of crimes....

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]