Pages

Sunday, December 30, 2012

மின் தடையும் , டிடிஎச்சும் - கமல் மீது மோசடி வழக்கு பாயுமா ? சட்ட நிபுணர்கள் கருத்து

மர்ம யோகி படத்துக்காக நான்கு கோடி ரூபாய் அட்வான்ஸ் வாங்கி ஏமாற்றி விட்டதாக கமல் மேல் புகார் செய்யப்பட்டதை அடுத்து விஸ்வரூபம் படம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது..

2008ம் ஆண்டு சாய் மீரா நிறுவனத்திடம் இருந்து கமல் நான்கு கோடி ரூபாய் அட்வான்ஸ் பெற்றாராம் , மர்ம யோகி என்ற படத்தை எடுத்து தருவதாக ஒப்பந்தமாம்.

ஆனால் அவர்களை ஏமாற்றி , அந்த காசை வேறு வகையில் செலவிட்டு விட்டாராம்.  சினிமாவில் சம்பாதித்த காசை சினிமாவிலேயே செலவிடுகிறேன் என்று செய்திகளைப் பரப்புபவர் , ம்ற்றவர்கள் சம்பாதித்த காசை இப்படி செல்விட்டது கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியதாம்..

கமலாகப் பார்த்து காசை திருப்பி கொடுப்பார் என்று காத்து இருந்த பார்த்த அந்த நிறுவனம் வேறு வழியின்றி வழக்கு தொடர்ந்து இருக்கிறது,

 இதை தொடர்ந்து கமலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

 இது ஒரு புறம் இருக்க , இன்னொரு சிக்கலிலும் கமல் சிக்கியுள்ளதாக சட்ட நிபுணர்கள் கருதுகிறார்கள்.

 விஸ்வரூபம் படம்  எதிர்பார்த்தபடி வரவில்லை என்பதால் வியாபாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.  இதனால் , அவசர அவசரமாக டி டிஎச்சில் வெளியிட்டு , படத்தைப்பற்றிய கருத்து பரவும் முன்பே சம்பாதிக்க கமல் திட்டமிட்டார் என பேசப்படுகிறது..

    இது தமிழ் சினிமாவை அழிக்கும் என்றாலும் , சட்டப்படி தவறல்ல..

ஆனால் பிரச்சினை வேறொரு வகையில் கிளம்பியுள்ளது.  லட்சக்கணக்கானோர் ஆயிரம் ரூபாய் செலுத்தி விஸ்வரூபம் படம் பார்க்க பதிவு செய்துள்ளனர் என ஏர் டெல் அறிவித்துள்ளது.

இதில் கணிசமானோர் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் .  இதில் சென்னையை சேர்ந்தவர்கள் குறைவுதான்.  சென்னையைத்தவிர்த்த ஏனையை பகுதிகளில்தான் அதிகமாக புக்கிங் ஆகி இருக்கிறதாம்.

     சென்னையை தவிர்த்த ஏனைய பகுதிகளில் எப்போது மின்சாரம் வரும் , எப்போது வரும் என யாருக்கும் தெரியாது.. சென்னையிலும் கூட அவ்வபோது மின்சார தடை ஏற்படுகிறது..

  மின்சார தடையால் படம் பார்க்க முடியாமல் போனால் , ஆயிரம் ரூபாய் கட்டி ஏமாந்தவர்கள் நீதி மன்றம்  செல்ல வாய்ப்பு இருப்பதால சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 எதிர்பாராத இடையூறு ஏற்பட்டால் விற்பனையாளருக்கு பொறுப்பு ஏதும் இல்லை என்பது சட்டம். ஆனால் , மின்சார தடை என்ற இடையூறு ஏற்படும் என்பது தெரிந்த ஒன்று..எனவே இது எதிர்பாராத இடையூறு என்பதில் வராது.

   வாடிக்கையாளர்கள் தெரிந்துதானே வாங்கினார்கள் என்று சொல்லி தப்ப முடியாது... வாடிக்கையாளர்கள் விளம்பரம் போன்றவற்றால் மயங்கினாலும் ,  நிறைவேற்ற முடியாத வாக்குறுதியை அளிப்பது மோசடியாக கருதப்படும்.

கோடிக்கணக்கான ரூபாய் சம்பந்தப்பட்டு இருப்பதால்,  கமல் மேல் மோசடி மற்றும் நம்பிக்கை துரோக வழக்கு  ( இந்திய தண்டனை சட்டம் பிரிவு 405 409  மற்றும் பிரிவு 421 424பாயக்கூடும் என சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

          சீனியர் நடிகரான கமல் , இப்படி மோசடி வழக்குக்ளில் சிக்குவது நடு நிலை சினிமா ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது .



6 comments:

  1. Wots ur problem!!!
    1. Wanna cheap publicity
    2. Miss guidance
    3. Else wanna become a clone of karundhel

    Small Tamil Proverb to u

    Sooriyana parthu na............

    ReplyDelete

  2. அனானி நண்பரே , ,மேற்கண்ட எதுவும் காரணமன்று... உண்மையை நான் ஒருவனாவது சொல்லி விட்டு , உங்களைப் போன்றோரின் திட்டுகளை வாங்கி கொள்கிறேன்.. அவ்வளவே..

    உங்கள் பழமோழி உண்மைதான்,,, நான் ஒரு நாய்தான். .. சமூகத்துக்கு நன்றியாக இருக்கும் ஒரு நாய்.. ஆனால் சூரியன் என யாரை சொல்கிறீர்கள் என புரியவில்லை

    ReplyDelete
  3. சமீப காலமாக பொய்யையும் புரட்டையுமே உங்கள் பதிவில் பார்க்க முடிகிறது. படத்தை கரண்ட் போனாலும் ஆறுமணி நேரம் வரை பார்க்கலாம்.

    ReplyDelete
  4. கமலை பிடிக்க வில்லை என்கிற ஒரே காரணத்துக்காக அவரின் ஒவ்வொரு அசைவுக்கும் புதியதொரு அர்த்தத்தை கற்பித்து உங்களின் சுய அரிப்பை தீர்த்துக் கொள்வது உங்கள் உரிமை. ஆனால் அதில் எள்ளளவும் உண்மை இல்லை என்பதால் உங்கள் பதிவை படிக்கிறவர்கள் யாரும் இந்த மாதிரியான கட்டுரைகளை பெரிதாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை என்று உங்களுக்கு தெரியப்படுத்துவது எங்கள் கடமை. இனியும் கமல் தும்மினாலும் அதற்கு சட்டம் பாயுமா? சரியான நேரத்தில் தும்மாத கமல் ஒரு சந்தர்ப்பவாதி என்று பதிவை நீங்கள் வெளியிட்டால் அது மடமை. என்னுடைய இந்த பின்னூட்டத்தை நீங்கள் வெளியிடுவீர்களா என்று எனக்கு தெரியாது. வெளியிடாவிட்டால் அது தங்களின் சிறுமை.

    ReplyDelete
  5. 300 கோடி ரூபாய்கள் - 3 மணி நேரத்தில் - என்னா காமெடி என்பவர்களுக்கு இப்போது புரிந்திருக்கு இதன் சூத்திரம். ஆம் இது தான் உலக சினிமாக்களின் முதன் ஃபார்முலா - None other by - நம்ம வசூல்ராஜாவின் சாதனை.

    நேற்று ஏர்டெல் மட்டும் அறிவித்திருந்தது 30 லட்சம் பேர் முன் பதிவு என்று முப்பது லட்சம் X 1000 ரூபாயை பெருக்கினால் 300 கோடி ரூபாய்கள் இது ஒரு டி டி ஹெச் தான் இது மாதிரி இன்னும் 6 ஜாம்பவான்களின் புக்கிங்கை சேர்த்து கூட்டி கழிச்சி பாருங்கள் 300 கோடி நான் குறிபிட்டது கொசுறு தான். இந்தியாவின் 10% சதவிகத மக்கள் டி டி ஹெச்சுக்கு மாறியாச்சுனு இந்த புள்ளி விவரம் நன்கு வெந்த குழாய் புட்டு போல புட்டு புட்டு வச்சிருக்கேன். இது தான் உண்மை.

    1000 ருபாயான்னு கேக்குறவங்களுக்கு - எந்த புது படம் வந்தாலும் தியேட்டர் காரர்கள் செய்யும் முதல் வேலை " 300 காம்போ பேக்கஜ் தான் 7 நாளைக்கு" அதாவது 120 டிக்கட் மிச்சம் 180க்கு காஞ்சு போன பாப்கானும்ம் கருப்பு கலர் பாண டின் தான் காம்போ பாக்கேஜ். இதில் 120 மட்டும் தான் வினியோகஸ்தர் மட்டும் த்யாரிப்பாளர்களின் கணக்கு. மூச்சுன்டை ஒரு முன்னுரு ரூவா. பார்க்கிங் ஒரு 120 ரூபாய். மூனு லிட்டர் பெட்ரோல் 210. மூனு பேர் படம் பார்த்தா கூட 1500 ரூபாய் பனால். இதை விட குடும்ப மொத்தமும் பார்த்தான் மொத்தம 1000 ரூபாய் செய்கூலி இல்லை சேதாரமும் இல்லை - வீட்டில் இருக்கும் சீனியர் சிட்டிசனுக்கு கவுரவம் செய்யும் உண்மையான ப்ரீமியர் ஷோ. தனிக்காட்டு ராஜாக்கள் ஒன்றாக சேர்ந்தால் நல்ல ஆர் ஓ ஐ(ROI) . இல்லைனா மறு நாள் தியேட்டர் காம்போ பாக்குடன் தான் பாக்கியம்.

    நேற்று வரை கமலுக்கு காசு தேறாதுனு சொன்னவங்க 30 லட்சம் புக்கிங்னு அஃபிஷியல் தகவல் வந்த உடன் என் மீசையில் மண் ஒட்டலை ஆனாலும் ஆவான்னாலும்னு முகாரி ராகம் பாட ஆரம்பிச்சுட்டாங்க. என்னை பொறுத்த வரை 50 லட்சன் பேர் பார்த்தா கூட 500 கோடி ரூபாய் 3 மணி நேரத்தில். 2000 பிரின்ட் பந்தா இல்லை, பர பர சொறி சொறி வெற்றினு பில்டப் இல்லை, பீராபிஷேகம் இல்லை, பீத்தல் இன்டர்வியு உங்கள் அபிமான தொல்லைக்காட்சியில் இல்லை ஆனா அத்தனை வீடுகளிலும் விஸ்வரூபம் ....... கரென்ட் மேட்டர்(EB) தான் ஒன்னும் சொல்ல முடியாத விஷயம்.........

    ReplyDelete
  6. முகமது பிஸ்மில்லாDecember 31, 2012 at 8:57 PM

    சகோதரரே இவ்வளவு பணம் கொடுத்து பார்பவர்கள் வீட்டில் கண்டிப்பாக UPS கனெக்ஷன் இருக்கும். அதனால் தாராளமாக அப்படத்தை காணலாம்.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]