தெரிந்தோ , தெரியாமலோ குறிப்பிட்ட மதத்தினரை புண்படுத்துவது போல துப்பாக்கி படம் எடுத்து விட்டார்கள். ஆனால் தவறை உணர்ந்து பிறகு திருத்தி கொண்டது பாராட்டத்தக்கது.
இந்த நிலையில், விஸ்வரூபம் படம் ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிரானதா என்ற கவலை ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடந்தால் , புண்படுதலுக்கு உள்ளாகும் சகோதர மதத்தினர் , சினிமாக்காரர்கள் மீது மட்டுமல்லாது , அனைவர் மீதும் வருத்தப்படுவார்கள் என்பது யதார்த்தம்.
இதை தவிர்க்க , படம் வெளிவருவதற்கு முன்பே, அவர்கள் சார்பாக நியமிக்கப்படும் பிரதிநிதிகளுக்கு போட்டு காட்டி , ஆட்சேபிக்க காட்சிகளை நீக்குவதே நல்லது என நடு நிலையாளர்கள் கருதினார்கள். ஆனால் சிலர் இதை ஏற்கவில்லை.
இது கருத்துரிமையை பாதிக்கும் என்றும் , படம் வெளிவந்த பின் ஆட்சேபிக்க காட்சிகளை நீக்கலாமே என்றும் சொல்கிறார்கள்.
ஆனால் படம் வந்த பின் போராடுவது , படத்துக்கு விளம்பரமாகத்தான் அமையும் என்பதால் , தும்பை விட்டு வாலை பிடிப்பது வீண் வேலை என்கிறார்கள் சிலர்.
இந்திய தேசிய லீக் கட்சியின் தமிழக பொதுச்செயலாளர் திரு. அப்துல் ரஹீம் உள்ளிட்ட பலர் , மத அடையாளங்களுக்கு அப்பாற்பட்டு , சமூக நல்லிணக்க அடிப்படையில் , இந்த கோரிக்கையை எழுப்புகின்றனர்.
அதுதான் சென்சார் போர்ட் ஓகே சொல்லி விட்டதே என சிலர் புரியாமல் கேட்கலாம்.
சென்சார் போர்ட் ஓகே சொன்ன பின்னும் , பம்பாய் திரைப்படம் வந்தபோது , பால்தாக்கரேக்கு போட்டு காட்டி , அவர் ஓகே சொன்னபின் தான் படம் வெளியானது. முன் தணிக்கைக்கு இப்படி பல உதாரணங்கள் உள்ளன.
முன் தணிக்கை செய்யப்படுவதால் படத்துக்கு இழப்பு ஏதும் ஏற்படபோவதில்லை. ஆட்சேபிக்க காட்சி ஏதும் இல்லாவிட்டால் , பிரதி நிதிகள் எதுவும் சொல்லாமல் ஓகே சொல்லப்போகிறார்கள். ஆட்சேபிக்கத்தக்க காட்சிகள் இருந்தால் , அதை முன்பே நீக்கி விடுவது அனைவருக்கும் நல்லதுதானே..
கமலுக்கு புண்படுத்தும் நோக்கம் இல்லாவிட்டாலும் , அவரை அறியாமல் சில காட்சிகள் இடம் பெற்று விட்டால் , அவர் பெயர்தானே கெடும் .
எனவே சட்ட நிபுணர்கள் , அறிவி ஜீவிகள் சொல்வதை கணக்கில் கொள்ளாமல் , தானே முன் வந்து முன் தணிக்கைக்கு உட்படுத்துவதே நல்லது என்றே நடு நிலையாளர்கள் கருதுகிறார்கள்.
**கமலுக்கு புண்படுத்தும் நோக்கம் இல்லாவிட்டாலும்**
ReplyDeleteநகைச்சுவை உணர்வு உங்களுக்கு அதிகம்
why all this so called "Nadunilayaalargal" are starting with இந்திய தேசிய லீக் கட்சியின் தமிழக பொதுச்செயலாளர் திரு. அப்துல் ரஹீம்.
ReplyDeletewhen he is having a party like 'இந்திய தேசிய லீக்' and working for his community also many people "manadhu pun padugiradhu' so he should conduct a survey whether to run this party or not.