மிகவும் எதிர்பார்த்து எடுக்கப்படும் பல படங்கள் தோல்வி அடைவதுண்டு. எதிர்பாராமல் சில படங்கள் மாபெரும் வெற்றி பெறுவதும் உண்டு.
இது எல்லா நடிகர்களுக்குமே பொருந்தும். ரஜினியின் பாபா ,மணிரத்தினத்தின் ராவணன் என பல படங்களை சொல்லலாம். ஒவ்வொருவருக்கும் , ஏமாற்றம் அளித்த படங்கள் என சில இருக்கும்.
அந்த வகையில் , கமல் ஹாசன் படங்களில் , அதிக ஹைப் செய்யப்பட்டு மண்ணை கவ்விய சில படங்களை இப்போது பார்க்கலாம். அவரது பல படங்கள் வெளியாகும்போதே தோல்வி என தெரிந்து விடும் ,..அதை இந்த பட்டியலில் சேர்க்கவில்லை...
************************************************************
5. ஜப்பானில் கல்யாணராமன்....
கல்யாண ராமன் என்று ஒரு படம் , கமல் நடிப்பில் வெளிவந்தது. கமலுக்கு இரட்டை வேடங்கள். சில நடிகர்கள் , நடிப்பிலேயே இரண்டு வேடங்களுக்கும் வேறுபாடு காட்டுவார்கள். ஆனால் கமல் அப்படி செய்வதில்லை. ஏதாவது ஒரு எக்ஸ்ரார்டினரி மேக் அப் போட சொல்லி வேறு பாடு காட்டுவார். அப்படி வந்த படம்தான் இது.
இளையராஜாவின் அட்டகாசமான இசை , ஜி என் ரங்கராஜனின் நேர்த்தியான இயக்கம் போன்றவற்றால் படம் சூப்பர் ஹிட் ஆனது..
தனது மேக் அப்பினால்தான் படம் ஓடியது என நினைத்த கமல் , அதன் இரண்டாம் பாகம் எடுக்க நினைத்தார். உள்ளூரில் எடுத்தே அப்படி ஓடியதே, வெளி நாட்டில் எடுத்தால் , என யோசித்தார். ஜப்பான் சென்று , அதே இரட்டை வேட கதையை எடுத்தார்கள்.
மாபெரும் வெற்றி அடையும் என எதிர்பார்ப்பு ஏற்படுத்தினார்கள்... வழ்க்கம்போல, மேக் அப் போட தான் எடுத்துக்கொண்ட சவால்களை கமல் பேட்டியளிக்க, பத்திரிக்கைகளும் ஒத்து ஊதின.
ஆனால் படம் மோசமான தோல்வி அடைந்தது ..
4 விக்ரம்
யாருக்கும் படம் எடுக்க தெரியவில்லை... எனக்குத்தான் படம் எடுக்க தெரியுமாக்கும் என எழுத்தாளர் சுஜாதா , கமலை உசுப்பேத்தி விட்டு எடுக்க வைத்ததுதான் விக்ரம். குமுதத்தில் அந்த கதையை தொடராக எழுதினார். ராக்கெட், கம்யூட்டர் , ஏவுக்ணை என பிரமிப்பாக இருந்தது. ஹிந்தி நடிகர்களையெல்லாம் கொண்டு வந்து நடிக்க வைத்தார்,
வித்தியாசமான கெடப்பில் சத்யராஜ் ஸ்டில்கள் அசத்தின. படம் வரலாறு படைக்கும் என பில்ட் அப் கொடுத்தார்.
ஆனால் படம் வந்ததும் தெரியவில்லை. போனதும் தெரியவில்லை. மாபெரும் ஃப்ளாப்பாக அமைந்தது.
தம்பிக்கு எந்த ஊரு, படிக்காதவன் என வெற்றி படங்கள் கொடுத்து , வளர்ந்து வந்த இயக்குனர் ராஜசேகர் , தேவையில்லாமல் இந்த படத்தில் சிக்கியது தனிக்கதை... இந்த படத்தின் தோல்வியுடன் அவர் கேரியர் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தது.. ( அதன் பின் சில வருடங்கள் கழித்து , ரஜினியுடன் இணைந்து தர்மதுரை என்ற வெற்றி படம் கொடுத்து , இழந்த பெருமையை மீட்டார் )
3 ஆள வந்தான்
அண்ணாமலை, பாட்ஷா , வீரா என வெற்றிப்படங்கள் கொடுத்த சுரேஷ் கிருஷ்ணாவுடன் கமல் இணைந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.
வழ்க்கம்போல மேக் அப், கிராபிக்ஸ் என கமல் இறங்க , சுரேஷ் கிருஷ்ணாவுக்கு அது செட் ஆகவில்லை.
விளைவாக படம் மண்ணைக்கவ்வியது.
தான் கஷ்டப்பட்டு சேர்த்த சொத்துகள் , இந்த ஒரு படத்தால் பறிபோனதாகவும் , ஆள வந்தான் என்னை அழிக்க வந்தான் என்றும் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கதறினார்.
2. மும்பை எக்ஸ்பிரஸ்
பாபா தோல்வி அடைந்த நிலையில், ரஜினியின் சந்திரமுகி பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாக இருந்தது. அதுவும் தோல்வி அடைந்தால் , ரஜினிக்கு பெரிய நெருக்கடி ஏற்படும் என்ற நிலையில், கமல் செக் வைக்க நினைத்து எடுத்த படம்தான் மும்பை எக்ஸ்பிரஸ். தன் ஆஸ்தான இயக்குனர் சிங்கிதம் சீனிவாசராவ் துணையுடன் களம் இறங்கினார் .
பல ஆண்டுகள் கழித்து ரஜினி கமல் பட மோதல் என்பது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் ரசிகர்களை இந்த படம் கவரவில்லை.. ஆனால் ஆனந்த விகடன் மட்டும் , இந்த தோல்வி படத்துக்கு மிக அதிக மார்க் கொடுத்து , இன பாசத்தை காட்டியது
1 ஹே ராம்
இந்த படத்துக்கு எல் . சுப்ரமணியம்தான் முதலில் இசை அமைத்தார். கமலின் போக்கு பிடிக்காமல் பாதியிலேயே வெளியேறினார். அதன் பின் இளையராஜா இசை அமைத்தார் . சுப்ரமணியம் இசையில் பாடல்கள் படமாக்கப்பட்டு இருந்தன.. அதே காட்சியமைப்புக்கு , நடன் அசைவுகளுக்கு ஏற்ப இளையராஜா இசை அமைத்து தன் மேதமையை காட்டினார்.
பழைய இசை அமைப்பாளர் பாடலையும் , ராஜாவின் பாடலையும் ஒப்பிட்டு, ராஜா பாடல்தான் சிறப்பாக உள்ளது என விமர்சகர்கள் சொன்னதாக , இளையராஜாவை சொல்ல சொன்னாராம் கமல்.. இளையராஜா மறுத்து விட்டாராம். வெட்ட வெளியில் கொட்டி கிடக்குது என்ற நூலில் இதை பதிவு செய்து இருக்கிறார் அவர்.
படத்தின் ப்ரிவியூ பார்த்த நடிக நடிகைகள் , படத்தை ஆஹா ஓஹோ என புகழ்ந்தனர். ஆஸ்கார் கிடைக்கும் என்றனர். தமிழுக்கே பெருமை என்றனர்.
ஆனால் மிக மோசமாக மண்ணை கவ்வியது படம்..
very very useful article for our World & for our Indian public too. Keep it up !
ReplyDeleteNaan appavae sollala... Thambi nallaa ezhuthuvaarunnu... Nee ezhuthu thambi...
ReplyDeleteJing jakka, charu jing chakka
ReplyDeleteநீங்க எதையுமே அரைகுறையா தான் எழுதுவிங்களா? டாப் ஐந்து தோல்விகள்னா எழுதறது. டாப் ஐம்பது தோல்விகள்னுல எழுதணும்.
ReplyDeleteகமல் பல சமயங்களில் "நடிக்க மட்டும் செய்தால் என்ன!" என்று நினைக்க வைப்பவர். ஆனந்த விகடன் சச்சின் படத்திற்க்கு அதிக மதிப்பெண்ணும், அதற்கு அடுத்து மும்பை எக்ஸ்பிரஸ் படத்திற்கு இரண்டாம் இடமும், கடைசியாக சந்திரமுகி படத்திற்கு மதிப்பெண் போட்டது. விஜயின் வளர்ச்சியில் ஆனந்த விகடன், குங்குமம், குமுதம், பத்திரிகைகள் பங்கு பெரிய அளவில் உண்டு . அந்த கால கட்டத்தில் விஜயின் முழு அளவு படத்தோடு வார பத்திரிகை போஸ்டர் தமிழ்நாடு முழுவதும் ஓட்டபடும் அதன் ரகசியம் என்ன விஜய்க்குதான் தெரியும்.
ReplyDeleteவெற்றி தோல்வி சகஜம் தானே..
ReplyDeleteமிஸ்டர் பிச்சைக்காரன்
ReplyDeleteஉங்களுக்கு கமல் வெறுப்பு மேனியா படு பயங்கரமாக பீடித்திருக்கிறது.
நீங்கள் எழுதும் பதிவுகளில் 90 விழுக்காடு கமல் எதிர்ப்பு என்பதையே
தொடர்ந்து எழுதுவது நிச்சயமாக ஏதோ கோளாறான பார்வைதான்..
கமலையும் அவர் பட்ங்களையும் விரும்பும் என்னைப் போன்றவர்கள்கூட
அவர் படம் வந்தால்தான் அவரை நினைக்கிறோம்
ஆனால் நீரோ சதா சர்வகாலமும் ராமபக்தன் போல கமல்எதிர்ப்பு பக்தனாக
இருப்பதை நினைத்து வருத்தம்தான் ஏற்படுகிறது.. எத்தனையோ பேர் படம்
எடுக்கிறார்கள் படு த்ராபையாக எடுக்கிறார் அதில் சற்று வித்தியாசமான பார்வை
கொண்டராகத்தான் அவர் இருக்கிறார் அவ்வளவே.. அதற்கு மேல்
ஒன்றும் இல்லை.... ஆனால் ஏதோ வன்மம் கொண்டு
அவரை ஏதாவது குத்திக் கொண்டேயிருபபது கீழ்வரும் சில காரணங்கள் மட்டுமே
(1) அவர் உம்மை ஏதோ ஒரு விதத்தில் பாதித்திருக்கலாம்
(2) அல்லது நீரே சுயகற்பிதம் செய்து கொண்ட சில அரசியல் காரணம் இருக்கலாம்
(3) கமலை பற்றி எழுதினால்தான் பலர் ஹிட்கள் வரும் என்ற காரணம்
.. ஆனால் அத்தனையும் தவறானது என்பது என் கருத்து..
உலகில் எத்தனையோ விசயங்கள் கொட்டிக் கிடக்கின்றன.
நீர் கமல் எதிர்ப்புக் கொள்கை என்ற ஒரே விசயத்தை பிடித்துத் தொங்க வேண்டாம்
என்று கேட்டுக் கொள்கிறேன். ஹே ராமை கமலின் எதிரி மதிமாறனே பாராட்டியிருக்கிறார்
ஆனால் உம்மால் முடியவில்லை.. என் சொல்வது சரி.. நீர் என்ன சொன்னாலும
ஏற்கப் போவதில்லை என்பது தெரியும் இருந்தும் இறுதியாக உம்முடைய
பிளாக்கின் முதல் எழுத்தான தேடலில் பிச்சைக்காரன் பார்வையாளன் என்பதை எடுத்துவிட்டு
எப்போதும் கமலின் வன்மம் கொள் என்று மாற்றி வைத்துக் கொள்ளுமாறு வேண்டிக் கேட்டுக்
கொள்கிறேன்
ஆர் சந்திரசேகரன்