சாரு எழுத்து ஆங்கிலத்தில் kindle லில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . இதைத்தவிர தோப்பில் முகமது மீரானின் கூனன் தோப்பு, ஜெயமோகனின் இரவு நாவல் , டால்ஸ்டாயின் போரும் அமைதியும் , சுஃபியிச நூல்கள், இஸ்லாமிய நூல்கள் , ட்ராட்ஸ்ட்கியைப்பற்றிய என் பார்வை என பலவற்றை பகிர்ந்து கொள்ள வேண்டி இருக்கிறது.
ஆனால் , கமல் குறித்த சிலர் தவறான பிம்பங்களை ஏற்படுத்தி வருவதற்கு எதிர்வினை ஆற்றுவதற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் , அவர் எப்படி போனால் என்ன என சிலர் பின்னூட்டம் இட்டு இருந்தார்கள் , அவர்கள் நல்லெண்ணத்துக்கு நன்றி.
ஊடகங்கள் பெரும்பாலும் அவாள் கையில் இருப்பதால் , கமல் ஆதரவாகவே அவர்கள் இருப்பார்கள் என்பது தெரிந்தது ஒன்றுதான் , அதை நான் பெரிதாக நினைப்பதில்லை. ஆனால் மாற்று ஊடகமான பதிவுலகிலும் சிலர் கமல் ஆதரவு செய்திகளை வெளியிடுவதால்தான் , எதிர்வினை ஆற்ற வேண்டி இருக்கிறது.
நானும் நண்பர் நிர்மலும் உரையாடிக்கொண்டு இருந்தோம். அது பின் வருமாறு,.,..
இரண்டு உதாரணங்கள் - நண்பர் நிர்மல்
**********************************************************************************
நிர்மலின் உதாரணங்களை மிகவும் ரசித்தேன். தொடர்ந்து அவர் பேசிய ஆழமான விஷ்யங்களைப் பற்றி பதிவிட எண்ணியிருந்தேன்.
அப்போதுதான் நண்பரும் , பிரபல பதிவரும் , பத்திரிக்கையாளருமான லக்கிலுக் யுவகிருஷ்ணாவின் கட்டுரையை படிக்க நேர்ந்தது. கமல் தன் சொத்துகளை எல்லாம் படம் எடுத்து கலைசேவை செய்வது போலவும் , அவர் முற்போக்கு கருத்துகளை , நாம்தான் புரிந்து கொள்ளவில்லை என்பது போலவும் எழுதி இருந்தார்.
படித்தவரும், விபரம் தெரிந்தவருமான லக்கிலுக்கியே இந்த ஊடகங்கள் எந்த அளவுக்கு பாதித்து வைத்து இருக்கின்றன என ஆச்சர்யமான இருந்தது.
கமல் சினிமாவில் சம்பாதித்ததை , சினிமாவில்யே செலவிடுகிறார் என்பது திட்டமிட்டு பரப்பப்படும் தவறான செய்தி.
சி சு செல்லப்பா என்றொருவர் இருந்தார் என்பது சிலருக்கு தெரியாமல் இருக்கலாம். தன்னையே மெழுகு வர்ர்த்துயாக்கி இலக்கியம் எனும் ஒளி தந்தவர். புத்தகங்களை அலைந்து திருந்து விற்று , அந்த காசையும் புத்தகங்களுக்காவே செலவிட்டார். ‘’
சி சு செல்லப்பா |
இவர் மற்றும் க நா சு போன்றோர் கைக்காசையும் செலவிட்டு இலக்கியம் வளர்த்தனர். அவர்கள் எழுத்தில் எதுவும் சம்பாதிக்கவில்லை. அப்படியே சம்பாதித்தாலும் , அதையும் இலக்கியத்துக்காவே செலவிட்டார்கள். .
ஆனால் கமல் நிலை வேறு....
காஷ்மீரில் பல லட்சங்கள் செலவில் ஷூட் செய்யுமாறு அடம் பிடித்து , அதன் பின் எடுக்கப்பட்ட காட்சிகளை கமல் தூக்கி எறிந்தார் அன ஆள வந்தான் தயாரிப்பாளர் புலம்பினார். இதற்கான செலவை கமல் செய்யவில்லை. அந்த தயாரிப்பாளரே பலி கடா ஆனார்.
அவர் செய்யும் செலவும் ஆக்க பூர்வமாக இருக்காது.
ஒருவரை நம்பி ஒரு தொழிற்சாலையை ஒப்படைக்கிறீர்கள். உங்களுக்கு லாபம் சம்பாதித்து கொடுப்பது அவர் கடமை. ஆனால் ,அவரோ சாதாரண லேத் வைத்து செய்யக்கூடிய வேலைக்கு , பல லட்சம் செலவில் சி என் சி மெஷின் வாங்கி வந்து விட்டு, உங்கள் காசில் மெஷின் வாங்கியதை , தன் சாதனையாக சொன்னால் ஏற்பீர்களா ? இப்படி முறையற்ற செலவு செய்வதை தன் சாதனையாக நினைக்கிறார் கமல்..
ஒரு தனியார் நிறுவனத்தில் ஒரு பணியாள் இப்படி செய்தால் , கடும் நடவடிக்கைக்கு உள்ளாவார்.
இப்போது பத்து ரூபாய்க்கெல்லாம் புதுப்படங்களின் குறுந்தகடுகள் கிடைக்கின்றன. ஆனாலும் படங்கள் நன்றாக இருக்கும் பட்சத்தில் ஓடத்தான் செய்யும்.
காரணம் , சிடியில் படம் பார்ப்பவர்கள் கூட , படம் நன்றாக இருக்கும் பட்சத்தில், அதை திரையிலும் பார்க்க ஆசைப்படுவார்கள்.
எனவே படம் வெளிவரும்போதே , அதிகாரபூர்வ சிடியையும் வெளியிடுவது நல்லதுதான் .
ஆனால் இது நல்ல படங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
பெரிய முதலீட்டில் எடுக்கப்படும் படங்கள் , படம் நன்றாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் , முதல் சில தினங்கள் ஹவுஸ் ஃபுல்லாகவே ஓடும்.
எனவே படம் சரியில்லாவிட்டாலும் , சமாளிக்க கொஞ்சம் வாய்ப்பு உண்டு.
ஆனால் , ஆரம்பத்திலேயே நெகடிவ் ரிசல்ட் வந்து விட்டால் , துவக்கத்திலேயே தியேட்டர்களில் கூட்டம் குறைந்து விடும். ஆள வந்தான் படத்தில் இதுதான் நடந்ததது.
இந்த நிலையில்தான் , விஸ்வரூபம் படம் திரைக்கு வரும் முன்பே டிடீஎச் மூலம் திரையிட கமல் முயற்சிப்பதாக செய்தி வந்தது.
திரையரங்க உரிமையாளர்களும் , வினியோகஸ்தர்களும் கதி கலங்கி போனார்கள்.
இந்த முறையால் கமலுக்கு லாபம் கிடைக்கும். ஆனால் , படம் நன்றாக இல்லாவிட்டால் , ஆரம்பத்திலேயே நெகட்டிவ் பப்ளிசிட்டி ஆகி , அனைவரும் பயங்கர நஷ்டம் அடைவார்கள்.
டிடிஎச் மூலம் ஒரு குடும்பம்தான் பார்க்க வேண்டும் , பொதுவாக திரையிடக்கூடாது என சட்டம் போட்டாலும் , நம் ஊரில் அதையெல்லாம் நடைமுறை படுத்த இயலாது.
எனவே கிட்டத்தட்ட இலவசமாக , முதல் நாளே பலர் பார்த்து விடுவார்கள் . அதன் பின் தியேட்டர் போய் பார்க்கும் சுத்தமாக போய் விடும் . ஒரு வேளை மிக மிக சிறப்பான படமாக இருந்தால் , தியேட்டர் சென்றும் பார்ப்பார்கள் என்பது உண்மையே...
ஆக இது ஒரு சூதாட்டம் என்றே சொல்ல வேண்டும். ஆனால் ரிஸ்க் மற்றவர்களுக்குத்தான், கமலுக்கு உறுதியான லாபம்.
இதனால்தான் பலரும் கொதித்து எழுகிறார்கள்.
***********************************************************************
இதுதொடர்பாக, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:–
சந்தேகங்கள்
‘‘கமல்ஹாசன் தன் ‘விஸ்வரூபம்’ படத்தை டி.டி.எச். மூலம் திரையிடுவது பற்றி திரையரங்க உரிமையாளர்களுக்கு பல சந்தேகங்கள் இருந்தன. இதுபற்றி மதுரையில் இருந்த கமல்ஹாசனுடன், ‘டெலி கான்பரன்சிங்’ மூலம் பல சந்தேகங்கள் கேட்டார்கள். அப்போது அவர் கொடுத்த விளக்கங்கள் வருமாறு:–
விஸ்வரூபம் படம் டி.டி.எச். முறையில், ஒரே ஒரு முறைதான் திரையிடப்படும். அப்படி திரையிடும்போது, திரையரங்குகள் திரையிடுவதற்கு ஒருநாள் முன்பு இரவு 9 மணிக்கு மேல் திரையிடப்படும். ஒரு டி.டி.எச். கருவி மூலம் பார்ப்பதற்கு ரூ.1,000 வசூல் செய்யப்படும். இது, படத்துக்கு டிரைலர் போல் இருக்கும். இதை பார்ப்பதற்கு திரளாக மக்கள் வருவார்கள் என்று கூறினார்.
விஸ்வரூபம் படம் டி.டி.எச். முறையில், ஒரே ஒரு முறைதான் திரையிடப்படும். அப்படி திரையிடும்போது, திரையரங்குகள் திரையிடுவதற்கு ஒருநாள் முன்பு இரவு 9 மணிக்கு மேல் திரையிடப்படும். ஒரு டி.டி.எச். கருவி மூலம் பார்ப்பதற்கு ரூ.1,000 வசூல் செய்யப்படும். இது, படத்துக்கு டிரைலர் போல் இருக்கும். இதை பார்ப்பதற்கு திரளாக மக்கள் வருவார்கள் என்று கூறினார்.
வேண்டுகோள்
என்றாலும், ஒரு டி.டி.எச். கருவிக்கு ஒரு குடும்பம்தான் பார்ப்பார்கள் என்பது உறுதி கிடையாது. ஓட்டல்கள் மற்றும் கிளப்புகளில் படத்தை காண்பித்து விட்டால், நாடு முழுவதும் பல கோடி பேர் படம் பார்த்து விடுவார்கள்.எனவே கமல்ஹானை எங்கள் நிர்வாகத்தினர் சந்தித்து, இந்த முயற்சியை கைவிடுமாறு கேட்டுக்கொள்ள இருக்கிறோம். அப்படி அவர் கைவிடாவிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி யோசித்து முடிவு எடுப்போம்.திரைத்துறை நன்றாக வாழ வேண்டும் என்று அக்கறையுடன் இருக்கும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா, இந்த பிரச்சினையில் தலையிட்டு ஒரு சுமுகமான தீர்வை காண வேண்டும். எங்களை காப்பாற்ற வேண்டும்.’’இவ்வாறு அந்த அறிக்கையில் அபிராமி ராமநாதன் கூறியிருக்கிறார்.
Mudiyala.... Aaana padam release aana udane first aala paakaporathu neenga thaaan. Vimarsanam yelutha I mean nolla notta solla (illakiya varthai). Common manukkum nadunilaiargal avargalukkum mattume therimdha visayam neenga kaasu kuduthu padam parthiteenga... Kamal initiatives ku aadharavu kuduthuteenga!!!!
ReplyDeleteBtw Luckya comment panna ungalukku arugathaye illa... For example he is vasagar of Charu rasigar of Kamal/Ilayaraja. Aaana neenga ponga boss sirippu sirippa varuthu...
Neenga oru kinatruthavalai... Charu(Tamil) Nandu...
ReplyDeleteசென்னை தவிர தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இரவு 7-8 , 9-10 , 11-12 மின்வெட்டு உள்ளது. UPS உள்ளவங்க தான் பாக்க முடியும்.
ReplyDeleteloosu pyalae, neenga vimarsanam enra peyaril muthal naalae munthirikotta pola padankalai pattri pizhayaana karuthtu eluthireengalae, athu yaara paathikkum. The approach of kamal is good and definitely its going to be a breaking point in tamil cinema.How can u determine the film is good or bad before its release? If the prodcuer thinks that it will attract people in to cinema halls by this DTH thing, then that should be appreciated. This can be a mean of good revenue for some small budget films which dont have money for huge publicity.
ReplyDeleteசார்,
ReplyDeleteகமலுக்கு சொந்தமாக ஒரு கல்யாண மண்டபம் உண்டா? தியேட்டர் உண்டா? நிலபுலன்கள் உண்டா? இதையெல்லாம் ஏதாவது விசாரிச்சி விவரம் தெரிஞ்சுக்கிட்டீங்களா?
ஆழ்வார்ப்பேட்டை வீட்டையே விஸ்வரூபத்துக்காக அடகு வெச்சிருக்காருன்னு கேள்வி. அப்படியிருக்கிறப்போ அவர் மத்தவங்க காசுலேதான் ரிஸ்க் எடுப்பாருன்னு திரும்பத் திரும்ப பேசுறது அயோக்கியத்தனம் :-(
கழக, கமலோத்பவ கருத்துக்களில் லக்கியிடம் எனக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இந்த வாதங்களில் நான் அவருடன் நான் ஒத்துப்போகிறேன். திருட்டு வீசிடி க்கு எதிராக 1992 'ல் மொத்த திரை உலகுமே, கொதித்தெழுந்த பொழுது கமல் சொன்ன விளக்கம், நாம் எல்லா தொழில்நுட்ட்பத்தினுடவும் ஒத்துப் போகவேண்டுமென.Technology யை முன்னெடுத்தும், தொடர்ந்தும் செல்வதில் கமலை யாரும் அடித்துக்கொள்ள முடியாது. ஹி இஸ் எ கிரேட் மேன் இன் தட் சென்ஸ். - shanky.
ReplyDeleteகொடைக்கானலிலே ஒரு மலையே உண்டு. எதுவுமே இல்லைன்னு முழு மலையை பூசணிக்காயில் மறைக்க வழக்கம் போல அல்லக்கை துள்ளி ஓடி வந்திருக்கிறதே!
ReplyDeleteலக்கி யுவாவின் தவறான புரிதலுக்கு பிச்சைக்காரனின் தெளிவான விளக்கத்தை கண்ணுறும் வாய்ப்பு கிடைத்தது. இவ்வளவு தெளிவான விளக்கத்தை தர பிச்சைக்காரனை தவிர வேறு யாராலும் முடியாது.
ReplyDelete--- பணக்காரன்