தமிழ் சினிமாவை அழிக்கும் நோக்கில் கமல் செயல்படுவதாலும், அதை தட்டிக்கேட்க வேண்டிய ஊடகங்கள் பூணூல் பாசத்தால் அமைதி காப்பதாலும், கமலை கண்டித்து எழுத வேண்டிய அவசியம் மாற்று ஊடகமான வலைப்பூக்களுக்கு ஏற்ப்பட்டது.
டி டி எச் முறைப்படி தயாரிப்பாளருக்கு உறுதியான லாபம் - வினியோகஸ்தர்களுக்கு படத்தின் தரத்தை பொறுத்து லாபம் என்ற நியாயமற்ற வியாபாரத்தை கண்டித்து எழுதியதை வைத்து , சிலர் கமலை நான் கண் மூடித்தனமாக எதிர்ப்பதாக நினைக்கிறார்கள்.
அதுதான் இல்லை. நான் சினிமாவுக்கு செல்ல ஆரம்பித்த பள்ளி நாட்களிலிருந்து , இன்று வரை வெளியான அனைத்து கமல் படங்களையும் நான் மிஸ் செய்யாமல் பார்த்து வருகிறேன்.
சாரு சொன்னதுபோல , கமல் ஒரு நிகழ மறுக்கும் அற்புதம் என்றே நினைக்கிறேன். அப்படி ஒரு அற்புதம் என்றேனும் ஒரு நாள் நிகழும் என உறுதியாக நினைக்கிறேன்.
அற்புதம் என்று சொல்ல முடியாவிட்டாலும் , ஒரு சராசரி ரசிகனாக என்னை கவர்ந்த டாப் ஃபைவ் கமல் படங்களை பட்டியிலிட விரும்புகிறேன்.
5 கல்யாண ராமன்
இப்போது வழக்கொழிந்து விட்ட ஒரு பழக்கம் முன்பெல்லாம் இருந்தது. அதுதான் சினிமா கதை சொல்வது. டைட்டில் முதல் எண்ட் கார்ட் வரை , வரிசையாக காட்சி வாரியாக சினிமா கதை சொல்லும் கில்லாடிகள் அன்று இருப்பார்கள்.
கேபிள் டிவி , சிடி இல்லாத அன்றைய காலத்தில் இந்த கில்லாடிகளுக்கு பெரிய மதிப்பு. கல்யாணராமன் வெளிவந்த போது நான் சின்னப்பையனாக இருந்திருப்பேன் என நினைக்கிறேன். பெரிய பையன்கள் கதை சொல்லும்போது கேட்டு இருக்கிறேன். பேய் கமல் காட்சிக்ளை சுவையாக சொல்வார்கள் , இப்படி கதை கேட்டு கேட்டே , அந்த படம் மீது ஈர்ப்பு வந்தது. பிறகு படம் பார்க்கும்போதும் சுவையாகவே இருந்தது. பாடல்கள் அபாரம்.
4 மகா நதி
பொழுதுபோக்குக்காக சினிமா பார்ப்போம். ஆனால் ஒரு படத்தை பார்த்து , மனம் கமக்க வெளியே வரும் படங்கள் வெகு குறைவே. அந்த வகையில், ரசிகர்களால் மறக்க முடியாத படம் மகா நதி.
இதில் வரும் எந்த ஒரு கேரக்டரையும் நம்மால் மறக்க முடியாது. தேவையற்ற காட்சிகளோ , கேரக்டர்களோ படத்தில் இருக்காது என்பது சிறப்பம்சங்கள்
நீண்ட நாட்களாக பிரிந்த மகளை , கமல் மீட்பார். தூக்கத்தில் அவள் உளறுவதை கேட்டு , கமல் அடையும் வேதனை, அனைவர் மனதையும் கனக்க செய்யும்.
3 இந்தியன்
வழக்கமாக ஷங்கர் படங்களில் காமெடி அவ்வளவாக சோபிக்காது. ஆனால் இந்த படத்தில் , சீரியசான கதை என்றாலும் , படம் முழுக்க காமெடிக்கு குறைவிருக்காது. எல்லா காட்சிகளையும் கமலே டாமினேட் செய்யாமல் , கவுண்டமணி- செந்திலுக்கும் ஸ்கோப் இருக்கும். கமல் படங்களில் இது அபூர்வம்.
இரு கமல்களுக்கும் ஏற்படும் மோதல்கள், மகன் கமல் தந்தையை தகாத வார்த்தையில் திட்டும்போது , தந்தையின் அதிர்ச்சி , வயதானவர்களின் மேனரிசத்தை சரியாக செய்திருப்பது என பல காட்சிகளை ரசிக்கலாம்.
2 மூன்றாம் பிறை
கவியரசு கண்ணதாசன் கடைசியாக இந்த படத்துக்குத்தான் பாடல் எழுதினார் என்ற சிறப்பு இந்த படத்துக்கு உண்டு. பிரிவை இதை விட சோகமான சொன்ன படம் ஏதும் இல்லை. அந்த அளவுக்கு இயல்பாக , இரக்கம் இல்லாமல் பிரிவு நிகழும்.
பிரிதல் என்பது முடிவாகிவிட்டால் , அதற்கு முன் இருந்த உறவு எந்த விதத்திலும் அந்த பிரிவை தடுக்க இயலாது. அந்த வகையில், அந்த உறவுக்கு அர்த்தமே இல்லை. ஆனால் அந்த உறவு , சம்பந்தப்பட்ட ஒருவர் பார்வையில் உன்னதமானது.
கிளைமேக்ஸ் காட்சியை , யாராலும் மறக்க முடியாது.
1. நாயகன்
எழுத்து சித்தரின் அபார வசனம் முத்திரை பதித்த படம் இது. பல வசனங்கள் , பலமுறை பலரால் பயன்படுத்தப்பட்டு விட்டன. ( உதாரணம் - நல்லவனா கெட்டவனா, நாலு பேரு நல்லா இருக்கணும்னா, நான் அடிச்சா செத்துடுவ )
இசை ஞானியும் பட்டையை கிளப்பி இருந்தார். ஆனால் , சமீபத்திய பேட்டியில் நாயகன் குறித்து பேசுகையில் , இளையராஜா பெயரை ஏனோ தவிர்த்து விட்டார்.
இந்த படம் வரும்போது , போட்டியாக ரிலீஸ் ஆன படம் ரஜினியின் மனிதன், அது ஒரு சாதாரண மசாலா படம் என்றாலும் , நாயகனை விட அதுதான் நன்றாக ஓடியது.
அதுவரை ரஜினிக்கு போட்டியாக மசாலா படங்களில் நடித்து வந்த கமலுக்கு , இந்த படம் மூலம் வேறோர் பாதையை காட்டினார் மணிரத்தினம். அந்த வகையில், கமலுக்கு திருப்பு முனையாக அமைந்த படம்தான் நாயகன்.
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]