அனைவரும் எதிர்பார்த்ததுதான். படத்தின் விளம்பரத்துக்காக ரிலீசுக்கு முன்பே டி டி எச் ஒளிபரப்பு என்று படம் காட்டிய கமல் ஹாசன் , இப்போது பிப்ரவரி இரண்டாம் தேதிதான் டி டி எச் ஒளிபரப்பு என அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறார்.
போலி வாக்குறுதி அளித்ததற்காக மன்னிப்பும் கேட்டுள்ளார்.
ரிலீசுக்கு பின்புதான் டி டி எச் என்பதால் , கட்டணத்தை குறைப்பதாகவும் , படம் பார்க்க விரும்பாதவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுப்பதாகவும் அறிவித்துள்ளார்.
தவறுக்கு வருத்தம் தெரிவித்த பின் , அவரை விமர்சிப்பது நாகரிகம் இல்லை.
ஆனால் அவர் என்னவோ புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தி விட்டதாக , விபரங்கள் ஒன்றும் தெரியாமல் சில பத்திரிக்கைகள் உருகி உருகி எழுதின.. அவர்கள் அறியாமை இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
டி டி எச் என்பதை கமல் கண்டு பிடிக்கவில்லை.. டி டி எச் மூலம் புதுப்படங்களை ஒளிபரப்புவது என்பதும் கமல் கான்சப்ட் அல்ல...
தேவையில்லாமல் இவர் புகுந்து குழப்பி , ஒரு புதிய தமிழ் சினிமாவில் வருவதை கசப்பான அனுபவமாக ஆக்கியதுதான் இவர் சாதனை என்கிறார்கள் நடு நிலையாளர்கள்.
அவருக்கு பொருளாதார நெருக்கடிகள் இருந்து இருக்கலாம். அதை சமாளிக்க இப்படி ஒரு ஸ்டண்ட் அடித்து இருக்கலாம். அதைக்கூட மன்னித்து விடலாம்.
ஆனால் ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசிகள் போல அவர் ஆதரவு பத்திரிக்கைகள் ஆடிய ஆட்டம் மறக்க கூடியதா?
கண்டிப்பாக கமல் சொன்னதை செய்து விடுவார் என்றும் , தியேட்டர்கள் பணிந்து விட்டன என்றும் எந்த தரவுகளும் இல்லாமல் , தெரிந்தே பொய் செய்திகள் வெளியிட்டார்களே !!
சில பத்திரிக்கைகள் அறியாமை காரணமாக , அவற்றை உண்மை என்று நம்பி வெளியிட்டன என்பதும் உண்மைதான்.
பத்தாம் தேதி டி டி எச் என ந்மபி பணம் கட்டியவர்கள் முறையிட்ட போது ஏளனம் செய்தன சில பத்திரிக்கைகள்.
அதையும் நேரடியாக செய்யாமல் வாசகர் கடிதம் என்ற பெயரில் செய்தன.
அவர் என்ன கோடி கோடியாகவா ஏமாற்றி விட்டார்... சீட்டுக்கடை மோசடி, ஈமூ மோசடி போல இது என்ன அவ்வளவு பெரிதா,,, என்பது போல ”கடிதங்கள் “ வெளியிட்டன.
தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக பொய் செய்திகள் வெளியிடலாமா? இப்படி செய்யும் இவர்கள் , அரசியல்வாதிகளை குற்றம் சாட்ட என்ன தகுதி இருக்கிறது ?
ஒரே நாளில் ஆயிரம் கோடி வசூல் , கமலுக்கு ஆதரவாக தியேட்டர்கள் அணி வகுப்பு என்றெல்லாம் பொய் செய்திகள் வெளியிட்டு , கமலுக்கு நெருக்கடி ஏற்படுத்திய்து இந்த ஊடகங்கள்தான்.
இனியாவது இப்படிப்பட்டவர்களை நம்பி கமல் எந்த முடிவும் எடுக்க கூடாது என்பதே நடு நிலையாளர்கள் விருப்பம் மட்டுமல்ல.. அவர் நலம் விரும்பிகளும் விருப்பமும் கூட.
கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல இது சம்பந்தமான செய்திகள் வெளியிட்டு வரும் ஊடகங்கள் , இனி மேலாவது நடு நிலையுடனும் செய்திகள் வெளியிட வேண்டும் என்பதே நடு நிலையாளர்கள் எதிர்பார்ப்பு.
//ஒரே நாளில் ஆயிரம் கோடி வசூல் //
ReplyDeleteஅடேங்கப்பா, அப்படி நடந்தால் ?
was it differed or deferred.
ReplyDelete-surya
இன்னைக்கு பிச்சை எடுத்தாச்சு போல ?
ReplyDeleteஎன்னோட கமெண்ட அப்ரூவ் பண்ணவே இல்லை ?
ReplyDeleteஓவரா பிச்சை எடுத்து சாப்பிட்டதனால வாந்தி வந்துருச்சா ?
புத்தர் ஒரு ஊர் வழியாக போய்க்கொண்டிருந்தார். அந்த ஊர் மக்களுக்கு அவரையும் அவரின் எண்ணங்களையும் பிடிக்காது. அதனால் எல்லோரும் சேர்ந்து அவரை வாய்க்கு வந்தபடி திட்டினர். வந்தவன் போனவன் எல்லாம் திட்டி தீர்த்துகொண்டிருக்க அவரது சீடரில் ஒருவரான ஆனந்தனுக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தது.
ReplyDeleteபுத்தரிடம் சென்று வேறு ஊருக்கு செல்லலாம் இங்கே ஒரு நிமிடம் கூட இருக்க வேண்டாம் என்றான்.
அதற்குள் மாலை நேரம் ஆக புத்தர் மக்களிடம் வேறு ஊருக்கு வருவதாக சொல்லிவிட்டேன். அங்கே சென்று பிச்சை எடுத்துவிட்டு பிறகு வருகிறேன். அதற்குப்பின் நீங்கள் பேச வேண்டியதை பேசுங்கள் என்றார்.
சீடனோ ஏன் இவ்வளவு பேசுயும் அமைதியாக இருக்கிறீர்கள் என்று கேட்க அதற்கு புத்தர் சொன்னது.
"மக்களுக்கு திட்டுவது மிகவும் பிடித்திருக்கிறது. அவர்கள் வேலையை செய்கிறார்கள். அப்படி திட்டுவதால் சந்தோசமாக இருப்பதாக எண்ணுகிறார்கள். பேசிவிட்டு போகட்டும்.
இவர்கள் பேசுவதால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதனால் என் வேலையே நான் செய்கிறேன்" என்றார்.
வெகு ஜன ஊடகங்கள் நாடு நிலை கருத்தை வெளியிட்டாலும் கமலின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக அவை வெளியிடும் செய்திகள் ஒருதலை பட்சமானவை என்று தொடர்ந்து எழுதி varum தங்களின் கமல் பழிப்பு செய்திகள் இனியாவது நிறுத்தப் பட வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் எதிர்பார்ப்பு.
ReplyDeleteகமல் ஒழுக்கமில்லாதவர். அவருக்கு பத்ம விருது பெற தகுதியில்லை. அவர் கோடி கோடியாக பணம் சம்பாதிக்க முஸ்லீம் சமுதாயத்தையே கேவலமாக சித்தரித்து படம் எடுப்பது அயோக்கியத்தனம்.
ReplyDeleteஉங்களுக்கு தைரியம் இருந்தால் இந்து பாசிச வெறியர்களான மோடி, பால் தாக்கரே, அத்வானி, வாஜ்பாயீ போன்றவர்களை விமர்சனம் செய்து படம் எடு. குரங்கையும் கல்லையும் வணங்குவதால் மூளை இப்படி தான் மழுங்கி விட்டது.
Abdul Kader