அலுவலக நிமித்தம் நமக்கு எத்தனையோ ஈ மெயில் வருகின்றன. அதை படித்து , சரியாக ரிப்ளை கொடுக்காவிட்டால் பிரச்சினை. இந்த நிலையில் நம் சொந்த மெயிலை படிப்பதற்கோ , யாருக்காவது மெயில் அனுப்பவதற்கோ கொஞ்சம் சோம்பலாக இருக்கிறது.
சமீபத்தில் நான் ஆரம்ப காலத்தில் வைத்திருந்த ஈ மெயில் அக்கவுண்ட் நினைவு வந்தது. அதை இப்போது அவ்வளவாக பயன்படுத்துவதில்லை. யாரேனும் பழைய நண்பர்கள் அனுப்பிய மெயிலை பார்க்கலாம் என அதில் நுழைய எத்தனித்தேன். அங்கு இருந்த அறிவிப்பு என்னை கொஞ்சம் யோசிக்க வைத்தது.
விரைவில் ஈ மெயில் சேவை நிறுத்தப்பட இருக்கிறது. இனி புதிதாக யாரையும் சேர்க்க மாட்டோம். என கூறியது அறிவிப்பு.
அவ்வப்போது வலைத்தள சேவைகள் நிறுத்தப்படுவது , கட்டண சேவைகளாக மாறுவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும் , நான் முதல் முதலில் பயன்படுத்த ஆரம்பித்த ஒரு ஈ மெயில் மறைவது பழைய நினைவுகளை கிளறியது.
ஈ மெயில் அறிமுகமான கொஞ்ச காலத்திலேயே நானும் அதை பயன்படுத்த ஆரம்பித்தேன். பணி ரீதியாக அல்ல, ஓர் ஆர்வத்தின் காரணமாக . அதற்காக சொந்தமாக கம்யூட்டர் வைத்து இருந்தேன் என நினைக்காதீர்கள்.அப்போதும் நான் பிச்சைக்காரன் தான். இண்டர்னெட் செண்டருக்கு சென்று , பிரவுஸ் செய்வது அப்போதெல்லாம் பெருமையாக இருக்கும். பிஸினஸ் , வேலை தேடுவது , இலக்கியம் வளர்ப்பது , நாட்டுக்கு கருத்து கூறுவது என்ற எந்த குறிப்பிட்ட இலக்கும் இல்லாமல் சும்மா பிரவுஸ் செய்வதே உற்சாகமாக இருக்கும்.
நமக்கு மெயில் அனுப்ப ஆள் இருக்காது. யாருக்கு அனுப்புவது என நமக்கும் தெரியாது. யாராவது ஒரு சில நண்பர்களுக்குத்தான் ஈ மெயில் என்றால் என்னவென்றே தெரியும். அவர்களுக்கு மெயில் அனுப்பிவிட்டு , போனில் சொன்னால் சில நாட்கள் கழித்து பார்ப்பார்கள் !!! சிலரிடம் போன் இருக்காது , அவர்களுக்கு மெயில் அனுப்பிவிட்டு , லெட்டர் மூலம் தகவல் சொன்னால் , ஒரு வாரம் கழித்து மெயிலை பார்ப்பார்கள்.
க்ரீட்டிங் மெயில் அனுப்பவுவது கொஞ்ச நாள் பிரபலமாக இருந்தது. ஜீ மெயில் எல்லாம் அப்போது கிடையாது.
ஈ மெயிலில் வேலை தேடுவது , இலக்கியம் பேசுவது , பிசினஸ் செய்வது எல்லாம் எனக்கு கலாச்சார அதிர்ச்சியாகவே இருந்தது , அதை ஏதோ விளையாட்டு கண்டுபிடிப்பாகவே நினைத்து அப்படியே பயன்படுத்தி வந்தேன்.
எனக்கு தெரிந்து , ஒரு மணி நேரத்துக்கு எண்பது ரூபாய் என்றெல்லாம் இண்டர்னெட் செண்டர்கள் இருந்து இருக்கின்றன.
அதன் பின் புற்றீசல்கள்போல பல செண்டர்கள் புறப்பட்டு , ஒரு மணி நேரத்துக்கு பத்து ரூபாய்க்கு கூட இண்டர்னெட் பயன்படுத்த முடிந்தது.
ஆரம்ப கால விளையாட்டுகளுக்கு பின் , இண்டர்னெட்தான் முதன்மையான தகவல் தொடர்பு சாதனம் என இன்று ஏற்கப்பட்டுள்ளது.ஆனால் இண்டர் நெட் செண்டர்கள் , தமது முக்கியத்துவத்தை ஓரளவு இழந்து விட்டன.
ஆயினும் அவற்றுக்கான தேவைகள் இன்றும் உள்ளன.
அர்த்தமற்ற மெயில்கள் , ஃபார்வார்ட் வாழ்த்துகள் , தப்பு தப்பான ஆங்கிலம் , தமிங்லீஷ் நிரம்பிய , அந்த ஆரம்ப கால மெயிலில் மதிப்பு வாய்ந்த எதுவும் இல்லை என்ற போதிலும் , அது தன் இயக்கத்தை நிறுத்துவது கொஞ்சம் வருத்தமாகத்தான் உள்ளது.
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]