தமிழ் சினிமாவின் திசையை மாற்றி அமைத்த பிதாமகர்களில் முக்கியமான ஒருவர் இயக்குனர் மகேந்திரன். இவர் படங்கள் மட்டும் அல்ல , இவர் எழுத்துகளும் எனக்கு நிரம்ப பிடிக்கும்.
சிலர் நடிப்புக்காக மெலிதல் , குண்டாகுதல் , வித விதமாக மேக் போட்டு அசத்துதல் என்றொரு பாணியை கையாளுவார்கள்.
இன்னும் சிலர் ரஜினி மாதிரி. கெட் அப், தோற்றம் எல்லாம் , மேக் அப் என்றெல்லாம் மெனக்கெட மாட்டார்கள். நடிப்பாற்றல் துணையை மட்டுமே கொண்டு அந்தந்த கேரக்டர்களுக்கு உயிர் கொடுப்பார்கள்.
இந்த இரு பாணிகளில் இயக்குனர் மகேந்திரன் எதை ஆதரிக்கிறார் என்பதற்கு விடை அளிக்கிறது , “ நடிப்பு என்பது “ என்ற அவரது புத்தகம்.
சிறிய புத்தகம். ஒரே சிட்டிங்கில் படித்து முடித்து விடலாம். சிறிய சிறிய அத்தியாயங்களாக பிரித்து கொண்டு , ஒவ்வொரு விஷயமாக அலசி இருக்கிறார்.
சில அத்தியாயங்களில் சில வரிகளே இருக்கின்றன. அந்த சில வரிகளில் சொல்ல வந்ததை நச் என சொல்லி விடுகிறார்.
அவரது படங்களில் வசனங்கள் அதிகம் இருக்காது. காட்சிகளிலேயே படத்தை நகர்த்தி செல்வார். அது போல புத்தகம் அமைந்துள்ளது.
ஒரு நடிகர் உயரமாக தோன்ற வேண்டும் என்பதற்காக காலை சற்று உயர்த்தி கொண்டு நடித்ததை கிண்டல் செய்கிறார். ஷூ போட்டு கொண்டு உயரமாக தோன்ற முயல்வதையும் கிண்டல் செய்கிறார்.
இப்படி செய்வதில் நடிப்பு எங்கே இருக்கிறது என கேட்கிறார்.
பட்டினியால் வாடுவது போன்ற சீன் என்றால் , தன் நடிப்பால் அந்த பரிதாபத்தை கொண்டு வர வேண்டும். உண்மையிலேயே பட்டினி கிடந்து மெலிந்து போய் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவது அப்படி ஒன்றும் பெருமைக்குரிய விஷயமல்ல்ல என சில “ நடிகர்களை” மறைமுகமாக நக்கல் அடிக்கிறார்.
இது போன்ற பல விஷயங்கள்.
“ பார்க்கலாம் “ என்ற ஒரு வரியை , அதை சொல்லும் விதத்தில், எப்படியெல்லாம் வேறுபடுத்தி சொல்லலாம் என சொல்லி இருப்பது அட்டகாசம்.
அதே போல ஒரு வெளி நாட்டு படத்தில் இருந்து காட்டி இருக்கும் உதாரணமும் அற்புதம்.
கணவன் மேல் பொசசிவ்னெஸ் கொண்ட மனைவி. அவனது தம்பியை அவளுக்கு பிடிக்கவில்லை. அந்த தம்பி உடல் நலிவுற்றவன். ஒரு கட்டத்தில் , அவள் பொறுப்பில் அந்த தம்பியை விட்டு செல்கிறான் கணவன். அப்போது அந்த தம்பி இறந்து விடுகிறான். அதுதான் கதையின் முடிச்சு. அந்த காட்சியை அடிப்படையாக வைத்து கதை நகர்கிறது.
அந்த குறிப்பிட்ட காட்சியின்படப்பிடிப்பின் போது கதா நாயகி இயக்குனரை ஒரு கேள்வி கேட்டாளாம். அட. இதை மறந்து விட்டோமே என திகைத்த இயக்குனர் , படப்பிடிப்பையே ரத்து செய்து விட்டாராம்.
ஆறு மாதம் கழித்து, அவள் கேள்விக்கு தகுந்த பதிலுடன் படப்பிடிப்பு நடந்தது. படம் பெரிய வெற்றி.
இப்படி பல சுவையான விஷயங்களுடன் சுவையாக செல்கிறது புத்தகம்.
சினிமா துறையில் ஆர்வமுள்ளவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும். மற்றவர்களும் சுவாரஸ்யத்துக்காக படிக்கலாம்.
கனவுப்ப்பட்டறை வெளியீடு - விலை ரூ.70
வெர்டிக்ட் "நடிப்பு என்பது" - படிக்க வேண்டியது
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]