மே தினத்துக்கு உங்களுக்கு ஏன் விடுமுறை விடுகிறார்கள்... என என்னை ஒரு மென் பொருள் நிபுணர் கேட்டார்.
லீவு கொடுத்தால் நல்லதுதானே ..இதில் என்ன கேள்வி வேண்டி இருக்கிறது என எரிச்சலானேன்.
அவர் விளக்கினார்.
தொழிலாளர், உபரி மதிப்பு, மூலதனம் போன்றவை எல்லாம் இப்போது அர்த்தம் இழந்து விட்டன என்றார்.
எனக்கு தலை சுற்றியது,,
அவர் விளக்கலானார்.
முதலில் இப்போது தொழிலாளி வர்க்கம் என்பதே குறைந்து வருகிறது. எல்லோரும் சாஃப்ட்வேர் , கால் செண்டர் என மாறி வருகின்றனர்.
ஒரு தொழிலாளி உருவாக்கும் பொருளின் மதிப்பை விட அவன் ஊதியம் வெகு குறைவு.. இந்த வித்தியாசம்தான் உபரி மதிப்பு என்கிறார்கள்...இந்த கருதுகோள் இன்றைய சூழலில் பொருந்தாது.
ஒரு தொழிலாளி பொருளுக்கு மதிப்பை உருவாக்குவதில்லை. டிமாண்டுக்கு தகுந்தாற்போலத்தான் மதிப்பு உருவாகிறது. உதாரணமாக இன்று டிரான்சிஸ்டர் ரேடியோவுக்கு டிமாண்ட் இல்லை...ஒரு தொழிலாளி என்னதான் தொழில் நேர்த்தியுடன் ஒரு ரேடியோ செய்தாலும் , அதற்கு மதிப்பு உருவாக்க முடியாது.
இரு தொழிற் சாலைல்கள்... இரண்டிலும் ஒரே எண்ணிகையில் , ஒரே திறமையுடன் தொழிலாளர்க்ள் பணி புரிகின்றனர்,.. ஆனால் இரண்டு தொழிற்சாலையும் ஒரே அளவு லாபத்தோடு இயங்காது.. ஆக , தொழிலாளியை தவிர வேறு அம்சங்களும் உள்ளன.அதாவது முதலாளிதான் மதிப்பை உருவாக்குகிறான்.
பல நிறுவனங்கள் ஆட்களை குறைத்து விட்டு , இயந்திரமயமாக ஆரம்பித்துள்ளன. ஆட்கள் குறைந்தால் லாபம் குறைய வேண்டும் என்பதற்கு மாறாக , லாபம் அதிகரிக்கிறது.பிறகு ஏன் உபரி மதிப்பு என்ற பம்மாத்து..
இப்படி எல்லாம் பேசி சென்றார்.
எனக்கு கண்ணை கட்டி காட்டில் விட்டது போல இருந்தது.. அவர் சொல்வது சரி போலவும் தோன்றியது.தவறு போலவும் தோன்றியது.
நமக்கு கம்யூனிசமும் தெரியாது. காப்பிடலிசமும் தெரியாது. மேற்கண்ட வாதங்கள் பற்றி நாம் என்ன சொல்வது.
வேறு யாரிடமாவது கேட்போம் என கேட்டு பார்த்தேன்.
அவர் அளித்த பதிலும் லாஜிக்கலாகவே இருந்தது. அவர் சொன்னதை அப்படியே தர முடியவில்லை. அவர் சொன்னதில் எனக்கு புரிந்ததை தருகிறேன்.
1. தொழிலாளியின் உழைப்பை சுரண்டுவது இன்று கொஞ்சம் சோஃபிஸ்டிக்கேட்டடாக நடந்து வருகிறது. ஏசி ரூம் , கணினி என இருந்தாலும் , மெத்த படித்து இருந்தாலும் , நாள் ஒன்றுக்கு எட்டு மணி நேர வேலை என இருந்தாலும், அவர்களை தொழிலாளியாகவே முதலாளித்துவம் நடத்துகிறது. அவர்கள் உழைப்பை சுரண்டி வருகிறது.
இப்படி சுரண்டப்படுவதை வேறு எந்த நாட்டிலும் ஏற்க மாட்டார்கள்.. ஆனால் நம் ஆட்கள் இதை பெருமையாக நினைத்து இந்த சுரண்டலுக்கு ஒத்து போகிறார்கள்.
காலப்போக்கில் போட்டி அதிகரித்து , இதற்கு மேல் சுரண்ட முடியாது என்ற நிலை வருகையில் ஒட்டு மொத்த அமைப்பும் கவிழ்ந்து விடும்.
2 இயந்திர மயமாதல் மூலம் லாபம் அதிகமாகிறது என்பது மாயத்தோற்றம். அந்த இயந்திரங்களை உருவாக்குவதில் உழைப்பு சுரண்டப்படுகிறது.
3. டிரான்சிஸ்டர் ரேடியோவுக்கு இன்று தேவை இல்லை. ஒரு முதலாளி நினைத்தால் மேனெஜ்மெண்ட் திறன் மூலமோ, சந்தைப்படுத்தும் ஆற்றல் மூலமோ தேவையை உருவாக்க முடியுமா. முடியாது. எனவே முதலாளித்துவ திறனை தொழில் முனைவோர் திறமை என ஸ்டைலாக சொன்னாலும் , அந்த திறன் மூலம்தான் மதிப்பு உருவாகிறது என்பது அபத்தம்.
4. முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் கட்டுப்பாடு இல்லாத போட்டி என்பது இயல்பு. இதில் winners get all என்பதே முடிவில் நடக்கும். ஆரம்ப அட்வாண்டேஜ் என்பதும் இயல்பாக இருக்கும். பரம்பரை பணக்காரனுடன் , புதிதாக வருபவன் போட்டியிட இயலாது.
ஒரே மாதிரியான இரு நிறுவனங்கள் ஒரே மாதிரியான லாபம் பெற முடியாமைக்கு காரணம் இதுதான்.
சிறிய சிறிய வெற்றிகள் பெரும்போது முதலாளிகள் சந்தோஷமாக இருப்பார்கள். ஆனால் எப்படியும் ஒரு நாள் ஒரு முதலாளி இவர்களை தோற்கடிப்பான். அப்போது இவர்களும் பாட்டாளிகளாவார்கள்.
இதுதான் இன்று அன்றாடம் நடந்து வருகிறது. நாள்தோறும் பாட்டாளிகள் அதிகமாகித்தான் வருகிறார்கள்.குறையவில்லை.
ஒரு கட்டத்தில் பாட்டாளிகள் எண்ணிக்கை மிக அதிகமாக உயரும்போது , சமூக மாற்றம் நடந்தே தீரும்..
இந்த திசையில்தான் உலகம் சென்று கொண்டு இருக்கிறது..
இந்த இரு கருத்துகளையும் கேட்டபடி மே தினம் கொண்டாட ஆயத்தமானேன். மே தின விடுமுறையில் இது விஷ்யமாக மேலும் படித்தோ , விவாதித்தோ ஏதேனும் தெரிந்து கொண்டால் பகிர்ந்து கொள்வேன்.
காலவதி ஆகவில்லை விரைவில் தூசுதட்டப்படும் போலதான் உலக நடப்பும் உள்ளது
ReplyDelete// ஒரு தொழிலாளி பொருளுக்கு மதிப்பை உருவாக்குவதில்லை. டிமாண்டுக்கு தகுந்தாற்போலத்தான் மதிப்பு உருவாகிறது// this what Marx told as Fetish. அதாவது ஒரு பொருளின் பயன்பாடு செயல் திறனை தாண்டிய இல்லாத மதிப்பை அப்பொருளுக்கு கொடுத்தல் - உதாரணம் இத வாங்கினா லக்கி, இத வாங்கினா ஸ்டேடஸ், இதுதான் இன்னிக்கி ட்ரெண்ட் இப்படியானவைகள். இந்த ஃபெட்டிஸ்தனத்தை அப்படியே விட்டுவிட முடியுமா என்றால் கஸ்டம்தான். தேவை இல்லையென்றாலும் ஒரு மதிப்புக்காக வாங்கத்தானே செய்கிறோம்.
ReplyDeleteநான் ஒரு முதலாளியாக இருந்து ஒரு முதலாளியாகவே இறக்கவே ஆசைப்படுகிறேன் ..
ReplyDelete