இயேசு கிறிஸ்துவைப்பற்றி நான் அவ்வப்போது எழுதுவதை கவனித்து ஒரு நண்பர் ஒருவர் , இதையும் படித்து பாருங்கள் என சிலவற்றை அனுப்பி இருந்தார்.
சில அபூர்வமான தகவல்கள் , வரலாற்று ஆச்சர்யங்கள் என நிறைய இருந்தன.
இயேசு கடவுளின் தூதர் , அவரை அவ்வளவு சுலபமாக சிலுவையில் அறைந்து இருக்க முடியாது. அறையப்படும் முன்பே அவர் காப்பாற்றப்பட்டு விட்டார் என சில ஆதாரங்கள் இருந்தன.
அவருக்கு பதிலாக அவரைப்ப்போலவே இருந்த இன்னொருவர் தியாகம் செய்தார் என்றொரு பார்வையும் இருந்தது.
இதெல்லாம் லாஜிக்கலாக இருந்தாலும் , கிறிஸ்துவ நம்பிக்கைகளுக்கு எதிரானது.
நாம் வில்லனாக கருதும் யூதாஸ் குறித்தும் சில தகவல்கள் கிடைத்தன. இதில் யூதாஸ் பார்வையில் அவர் இயேசுவின் வாழ்க்கையை எழுதி இருந்தது புதிதாக இருந்தது.
யூதாஸ் எழுதிய சுவிசேஷம் என்ற இந்த பகுதி காணாமல் போய் மிக கஷ்டங்களுக்கிடயே மீட்டனர். அதிலும் முழுமையாக கிடைக்கவில்லை.
எனவே இதன் நம்பகத்தன்மை கேள்விக்குரியானது.எனவே இதை எந்த திருச்சபையும் அங்கீகரிக்கவில்லை.
ஆனாலும் அந்த சுவிஷேசம் என்னை பொருத்தவரை நன்றாகத்தான் இருந்தது.
எனவே அனைவருடனும் பகிர விரும்பினேன்.
ஆனால் , பெரும்பாலோனோர் அப்படி செய்ய வேண்டாம். தேவையற்ற சர்ச்சைகள் தவிர அதனால் வேறு எந்த பலனும் இல்லை என சொல்லி விட்டனர்.
எனவே அவர்கள் தீர்ப்புக்கு தலை வணங்கி வெளியிடும் முடிவை கை விடுகிறேன்.
ஆனாலும் ஒரு சில பகுதிகளை மட்டும் ஒரு சாம்பிள் போல பகிர்ந்து கொள்கிறேன்.
**********************************************************
யூதாஸ் எழுதிய சுவிசேஷம் ( சில பகுதிகள் )
1.1 சீடர்கள் திருப்பலி அளித்து வழிபாடு நடத்தி கொண்டு இருந்தார்கள். அங்கே வந்த இயேசு அதை பார்த்து சிரித்தார்.
1.2 நாங்கள் சரியானதைத்தானே செய்கிறோம். ஏன் சிரிக்கிறீர் என்றார்கள்
1.3.உங்களை பார்த்து சிரிக்கவில்லை.உங்கள் காரியங்களை கண்டு சிரிக்கிறேன். நீங்கள் உங்கள் விசுவாசத்தினால் இதை செய்யவில்லை. இப்படி செய்வதன் மூலம் கடவுளுக்கு உதவுவதாக நினைத்து செய்கிறீர்கள்.
1.4 நீங்கள் தேவை மைந்தன் அல்லவா? இன்னது செய்ய வேண்டுமென்று எங்களுக்கு சொல்லுங்கள் என சீடர்கள் கேட்டனர்.
1.5 இயேசு சொன்னார் :என்னை நீங்கள் எப்படி அறிவீர்கள். மெய்யாகவே உங்களுக்கு சொல்கிறேன். உங்கள் தலை முறையினர் யாரும் என்னை அறிந்து கொள்ள முடியாது.
1.6 இதைக்கேட்ட சீடர்கள் ஆத்திரமடைந்து தங்களுக்குள் முணுமுணுக்க தொடங்கினர்.
1.7 அவர்களை பார்த்து பரிதாபப்பட்ட இயேசு சொன்னார் :
***************************************************
3.3 யாராலும் புரிந்து கொள்ள முடியாத, எவராலும் அடைய முடியாத ஒன்றை உனக்கு என்னால் தர முடியும். ஆனால் அதற்காக நீ செய்ய இருக்கும் செயலால் என்றென்றும் நீ நிந்திக்கப்படுவாய்.
3.4 பரலோக சாம்ராஜ்யத்துக்கான பாதை மிகவும் கடினமானது என மெய்யாகவே உனக்கு சொல்கிறேன்
**********************************************************
இன்னும் நிறைய இருக்கிறது. ஆனால் இவை மத ரீதியாக பார்த்தால் அதிகாரபூர்வமற்றவை.
வார்த்தை பிரயோகம் , மொழி நடை போன்றவற்றை வைத்து இவை உண்மையாக இருக்க கூடும் என அறிவியல் நிபுணர்கள் சொன்னாலும் , அறிவியல் வேறு மத நம்பிக்கைகள் வேறு என்ற அடிப்படையில் இவற்றை கொஞ்சம் சந்தேகத்துடன் பார்ப்பதே நல்லது.
1.1 யூத மரபுபடி இயேசுவின் சீடர்களால் திருப்பலியை நிறைவேற்றமுடியாது. தற்கால திருப்பலி முறைகள் இயேசுவிற்கு பிறகான கத்தோலிக்கர்களால் உருவாக்கப்பட்ட சடங்கு.
ReplyDelete1.2 யூதாஸ் ஸ்காரியோத்தின் செயலால் நிந்திக்கப்பட்டாலும் அவரது எழுத்துக்கள் இன்றளவும் மறைக்கப்பட்டிருக்கவில்லை.
1.3 யூதாஸ் ஸ்காரியோத்தின் எழுத்துக்கள் மொழிபெயர்க்கப்பட்டு வால்நட்சத்திரத்தில் ((http://vaalnatchathiram.blogspot.in/))தொடராக விரைவில் வரும்.
பிச்சை நமக்கு யூதாஸ் கண்டென்ட் இமெயில் பண்ணுங்க.
ReplyDeletetnswamynathan@gmail.com
ReplyDelete