தலைவியை பார்க்க தலைவன் குதிரை வண்டியில் விரைந்து வருகிறான். வண்டியில் கட்டப்பட்டு இருக்கும் மணியோசை கலகலவென ஒலிக்கிறது. அந்த சப்தம் சாலையோர மரங்களில் ஜாலியாக இருக்கும் வண்டுகளுக்கு இடையூறாக இருக்குமே என நினைத்த தலைவன் மணி யோசையை நிறுத்திய பின் பயணத்தை தொடர்ந்தானாம்..
இது ஒரு காட்சி.
ஆண் மானும் பெண் மானும் தாகத்தால் தவித்தன. ஓர் இடத்தில் கொஞ்சம் நீர் தேங்கி இருந்தது. கொஞ்சூண்டு தண்ணீர்தான் . சரி ஷேர் செய்து சாப்பிடலாம் என இரண்டும் தண்ணீரில் வாய் வைத்து குடிக்க ஆரம்பித்தன.
வெகு நேரம் ஆகியும் தண்ணீர் குறையவில்லை.
பிறகுதான் தெரிகிறது. தான் குடித்தால் , தன் இணைக்கு தண்ணீர் இல்லாமல் போய் விடுமோ என நினைத்து , இரண்டுமே தண்ணீரை குடிக்கவில்லை. குடிப்பது போல சும்மா பாவனை செய்து கொண்டு இருந்தன.
காதல் என்பது விட்டு கொடுத்தல், எந்த நிபந்தனையும் இன்றி. நேசித்தல் நேசிச்த்தல், அன்பு மயமாதல் என அன்றைய தமிழன் காதலை கொண்டாடி இருக்கிறான்.
ஆனால் சிக்மண்ட் ஃபிராய்ட் போன்றவர்கள் பாதிப்பால் , காதல என்று ஏதும் இல்லை., இனக்கவர்ச்சிதான் இருக்கிறது. காமம்தான் மனித பிறவியின் ஆரம்பமும் அர்த்தமும் ஆகும்., இந்த காமத்தின் பொருட்டே காதல் என்ற உணர்வு என்ற கருது கோள் பிரபலமாகி , நம் சினிமாக்களிலும் இனக்கவர்ச்சியையே காதல் என காட்டி வருகிறார்கள்.
காதல், அதற்கு உதவும் நண்பர்கள், காமடி லெக்சரர், பேராசிரியர்கள், கொடுமைக்கார பெற்றோர், நண்பர்கள் உதவியுடன் தூக்கி செல்லுதல் என்ற அலுத்து போன ஃபார்முலாவில் ஆயிரம் படங்கள் வெளி வந்து விட்டன, இனியும் வரும்.
சமீபத்தில் உதயம் படம் பார்த்து நொந்து நூலாகி இருந்தேன். இந்த நிலையில் நண்பர் ஜெயசீலன் ஆறுமுகம் ஒரு படத்தை பரிந்துரைத்தார். short film about love பாருங்கள் அருமையாக இருக்கும் என்றார்.
நான் நம்பவில்லை. வெளி நாட்டு படத்தில் காட்டப்படும் காதல் , நமக்கு செட் ஆகுமா என்ற சம்சயம் ஒரு புறம். இயக்குனர் கிறிஸ்டோவ் கிசலோவ்ஸ்கி கொலையை பற்றி அற்புதமாக படம் எடுத்தவர். காதலைப்பற்றி அவரால் சொல்ல முடியுமா என்ற சந்தேகமும் இருந்தது.
ஆனால் ஷார்ட் ஃபில்ம் அபவுட் கில்லிங் பிடித்து இருந்தது, நண்பர் பரிந்துரை வேறு ..சரி பார்க்கலாம் என முடிவு செய்து பார்த்தேன்.
பார்த்து முடித்து பிரமித்து போனேன். இதெல்லாம் நாம் எடுத்து இருக்க வேண்டிய படம். குறுந்தொகை, சங்கப்பாடல்கள் என காதலை கொண்டாடிய நாம் எடுத்து இருக்க வேண்டிய படம் இது.
நிலவா , அவள் முகமா என குழம்பிய விண்மீன்கள் என நச் கவிதை பாடிய திருவள்ளுவர் வழியில் வந்த நாம் எப்படி காதலை போற்றுகிறோமோ அதே மாதிரி காதலை போற்றி இருக்கிறார் இயக்குனர்.
19 வயது இளைஞன். டாமெக், யாரும் அற்றவன். நண்பனின் தாயாரோடு நண்பன் வீட்டில் தங்கி இருக்கிறான். பொழுது போக்காக எதிர்வீட்டு பெண்ணை தொலை நோக்கி வழியே கவனித்து வருகிறான்.
அந்த பெண் மத்திய வயதில் இருப்பவள். தனித்து வாழ்பவள். பல ஆண்களோடு தொடர்பு வைத்து இருப்பவள். காதல் என்றெல்லாம் ஏதும் இல்லை . காமம்தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை என நினைப்பவள்.
ஒரு கட்டத்தில் தன் காதலை டாமெக் சொல்ல , அவள் சிரிக்கிறாள். காதலிக்கிறாய் . சரி..எதற்கு காதலிக்கிறாய். முத்தம் கொடுக்கவா.. புணர்வதற்காக. ஊர் சுற்றவா.. எதற்கு என்கிறாள்.
பெரும்பாலும் காதல் என்பது இதற்காகத்தான் இருக்கும் ,அல்லது இதை தாண்டி திருமணத்துக்காக இருக்கும்.
காதல் என்பது காதலுக்காக மட்டுமே..காதல் மூலம் வேறு எதையும் அடைய விரும்பவில்லை என்ற அவனது கள்ளம் கபடம் இல்லாத உணர்வு அவளுக்க்கு புரியவில்லை.
காமம்தான் காதல் , உனக்கு என் உடம்புதான் வேண்டும். அதற்காகவே காதல் என்றெல்லாம் சொல்கிறாய் என அவனுக்கு உடல் ரீதியாக புரிய வைக்க முயல்கிறாள்..
உடல் ரீதியாக நெருங்குகிறாள். அவனும் ஒத்துழைக்கிறான். ஆனால் இது அவன் எதிர்பார்த்த காதல் அல்ல. கோபித்து கொண்டு செல்கிறான்.
தற்கொலைக்கு முயல்கிறான்.
காமத்தை மீறி ஏதோ ஒன்று இருக்கிறது போல என அவள் உணர்கிறாள்.
கடைசி காட்சியில் அவன் வீட்டுக்கு வருகிறாள். அவனுடன் பேச முடியவில்லை.
அவன் தொலை நோக்கி வழியே அவன் கண்களால் உலகை பார்க்கிறாள்.
காதல் என்ற உன்னத உணர்வுடன் , அவன் கண்களால் உலகை பார்க்கையில் உலகம் வேறு விதத்தில் தெரிகிறது.
காதலை அவள் உணர்ந்து கொண்டாள் என்பதுடன் படம் நச் என முடிகிறது.
அவளை பார்க்க , பேச அவன் செய்யும் பல்வேறு முயற்சிகள் , பால் தவறி போய் சிந்தும் முக்கியமான குறியீட்டு காட்சி, சிறிய வலியை மறக்க பெரிய வலியை உருவாக்கு என போதிக்கும் பழைய தலைமுறை என ஏராளமான விஷ்யங்கள் கொட்டி கிடக்கின்றன.
அவன் ஓர் அப்பாவி.ஆனால் தன்னை கெட்டவனாக , பெரிய மனிதனாக காட்டி கொள்ள விரும்புகிறான்.
தொலை நோக்கி வழியே அவளை நண்பனுடன் பார்த்து கமெண்ட் அடித்ததாக சொல்கிறான்.
ஆனால் அந்த தொலைனோக்கிக்கும் நண்பனுக்கும் சம்பந்தம் இல்லை என பிறகு தெரிய வருகிறது.
\அவள் மற்ற ஆண்களுடன் ஜாலியாக இருப்பதை அவன் பார்க்க விரும்பவில்லை.. பார்த்ததும் இல்லை.. ஆனால் பார்த்ததாக் சொல்கிறான்.
அவளோ தன்னை காம வெறி பிடித்த பெண்ணாக காட்டி கொள்ள விரும்புகிறாள். அன்புக்கான ஏக்கம் , தன் துக்கம் , அழுகை இவற்றைத்தான் மறைக்க விரும்புகிறாள்.
இந்த இரு முக மூடிகளும் தாமாகவே உதிர்ந்து போய் , காதல்தான் மனிதனின் அடிப்ப்படை உணர்வு என கடைசியில் சொல்கிறது படம்.
தாஸ்தயேவ்ஸ்கி கதையை படித்த உணர்வு.
ஷார்ட் ஃபில்ம் அபவுட் லவ் - காதலுக்கு உச்சகட்ட மரியாதை
No comments
ReplyDeletesubbu thatha.