சொற்சிக்கனம் என்றால் நம் நினைவுக்கு வருபவர் எழுத்தாளர் சுஜாதா. தேவையில்லாத ஒரு வார்த்தைகூட அவர் எழுத்தில் இருக்காது.
ஆனால் தினத்தாள்கள் , சம கால எழுத்துகளை பார்த்தால் ஏமாற்றமே எஞ்சுகிறது. சொல்லப்படும் கருத்துகளில் உடன்பாடு இருக்கலாம் , இல்லாமல் போகலாம் .அது வேறு.
ஆனால் சொல்லப்படும் விதம் சுருக்கமாக நறுக் என இருக்க வேண்டும்.
கடந்த 17ம் தேதி என எழுதுகிறார்கள்.
ஏன் என்றால் வெறுமனே 17ந்தேதி என எழுதினால் , அடுத்த மாதம் வரப்போகும் 17 ஆ, சென்ற ஆண்டு ஜனவரி 17ஆ என்றெல்லாம் குழப்பம் ஏற்படும்.
ஆனால் கடந்த 2010ம் ஆண்டு பதவி ஏற்றார் என்பதில் ”கடந்த” தேவை இல்லை.
இன்னொரு 2010 வரப்போவதில்லை. சும்மா 2010 என எழுதினாலே போதும்.
இன்று ஜெயமோகனின் வலைத்தளத்தில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இலக்கிய சந்திப்பு நடத்துகிறாராம். ஓகே , வாழ்த்துகள்.
பெண் வாசகிகளுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படுமாம்.. நல்லதுதான்,.
வசதி செய்து தருவதில் பிரச்சினை இல்லை. ஆனால் பெண் வாசகி என்று சீனியர் எழுத்தாளர் ஒருவர் எழுதலாமா என்பதே என் வருத்தம்.
வாசகி என்றால் அவர் பெண் தான்..பிறகு என்ன பெண் வாசகி? ஆண் வாசகி என தமிழில் இருக்கிறதா. வாசகி என்றால் போதுமே.
சரி..இது மொழி சார்ந்த விஷ்யம்.
ஆணாதிக்க கோணத்திலும் இதை பார்க்க வேண்டும். பலரும் விஷ்யம் புரியாமல் தவறாகவே நடந்து கொள்கிறோம்.
வாசகன் ஆண் பால்.. வாசகி பெண் பால்.. சரியா?
வாசகர் என்பது பன்மை அல்லது மரியாதையாக சொல்ல பயன்படுத்தும் சொல்.
ஆனால் நடைமுறையில் , ஆண்களை வாசகர் என்றே மரியாதையாக சொல்கிறோம்.
என்னை சந்திக்க ஓர் ஆண் வாசகன் வந்தான் என யாரும் சொல்வதில்லை. வாசகர் வந்தார் என்றே சொல்கிறோம்.
பெண்களையும் வாசகர் என்றே சொல்ல வேண்டும். சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் பெண் என்பதை குறிப்பிட வேண்டுமானால் பெண் வாசகர் என்று சொல்லலாம்.
வாசகி , ஆசிரியை போன்றவை எல்லாம் மரியாதைக்குறைவான சொற்கள்.. பெண் வாசகி என்ற சொற் பிரயோகம் தவறு.
*************************************************
பதிவுலக வரலாற்றில் முதல் முறையாக புனித பைபிளில் மறைந்து போன சில சுவிசேஷங்களின் தமிழ் வடிவை வெளியிடலாமா என கேட்டு இருந்தேன். நண்பர்கள் கருத்து சொல்லி வருகிறார்கள்.
விளையாட்டாக கூட யார் மனதையும் புண்படுத்தக்கூடாது என வள்ளுவர் சொல்லி இருப்பார். எனவே இந்த சென்சிட்டிவ் விஷயத்தில் மற்றவர்கள் கருத்தின் அடிப்படையில் - குறிப்பாக கிறிஸ்தவ சகோதரர்களின் உணர்வுகளின் அடிப்படையிலே - முடிவு எடுக்க வேண்டும்.
இதில் கிறிஸ்துவ நண்பர்கள் ஒன்றை கவனித்து முடிவெடுக்க வேண்டும்.
மறைந்து போன சுவிசேஷங்கள் என்ற விஷ்யம் குறித்து ஆங்கிலத்தில் நிறைய எழுதி இருக்கிறார்கள்.
தமிழிலும் தருமி , சார்வாகன் போன்றோர் வலைப்பதிவுகளில் எழுதி இருப்பதாக நண்பர் இக்பால் செல்வன் சொல்லி இருந்தார்.
உண்மைதான்.
ஆனால் அவை சமூக அரசியல் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டவை. உதாரணமாக பெண் உரிமை, இயேசு வாழ்ந்த கால கட்டம் போன்றவற்றையெல்லாம் அலச முனைகிறார்கள்.
நான் விரும்புவது அதை அன்று. விமர்சனம் ஏதும் இன்றி, என் விருப்பு வெறுப்பு ஏதும் இன்றி , உள்ளதை உள்ளபடி அப்படியே மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என விரும்பிகிறேன். அதன் மூலம் இயேசு நாதரை இன்னும் அணுக்கமாக உணர முடியும் என நினைக்கிறேன்.
யோசித்து உங்கள் முடிவை சொல்லுங்கள். உங்கள் முடிவே இறுதியானது.
அதே போல தருமி போன்ற விஷ்யம் தெரிந்தவர்களுடன் ஆரோக்கிமான விவாதத்துக்கும் வழி வகுக்கும் என கருதுகிறேன்.
*****************************************
புனித குர் ஆன் குறித்து நிறைய எழுதலாமே . அது அள்ள அள்ள குறையாத செல்வமாயிற்றே என சகோதரர் அப்துல் ஜபார் சொல்லி இருந்தார்.
உண்மைதான். வெறும் வம்புக்கும் , பொழுது போக்குக்குமாக மட்டும் இணையம் பயன்படுவது தவறு. நல்ல விஷ்யங்களை பேசினால்தான் , விவாதித்தால்தான் ஓர் ஆரோக்கியமான சூழல் ஏற்படும்.
குர் ஆன் குறித்து பலர் எழுதுகிறார்கள். அதை எல்லாம் ஒரு மாணவன் போல ஆழ்ந்து படித்து வருகிறேன். சில இஸ்லாமிய இணைய குழுமங்களில் இதற்காக சேர்ந்து இருக்கிறேன்.
இணையம் மட்டும் அன்றி அனைத்து மீடியாக்கள் மீது எனக்கு ஓர் ஆதங்கம் உண்டு.
பல இஸ்லாமிய தலைவர்கள் , ஞானிகள் குறித்து போதிய தகவல்கள் பகிரப்படவில்லை.
இஸ்லாமிய ஞானிகளை ஒரு சிலர் கடவுள் போல போற்றுவதால் , அவர்களைப்பற்றி பேச இஸ்லாமியர்களும் விரும்புவதில்லை.பிறகு யார்தான் அவர்களைப் பற்றி பேசுவது , எழுதுவது.
ஓர் இஸ்லாமிய மகான் குறித்து அடுத்து எழுதுகிறேன். அவர் சொற்பொழிவுகள், கருத்துகளை பாருங்கள். கொஞ்சம் கூட இஸ்லாமிய கருத்துகளுக்கு விரோதமாக இருக்காது.
சிலர் அவரை கடவுளாக போற்றுவது , அவர்கள் மன நிலையே தவிர அந்த மகானின் நிலை அல்ல.
பொறுத்து இருந்து பாருங்கள்.
*****************************************************
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]