பைன்டிங் செய்யப்பட்ட வரலாற்று நாவல் ஒன்று படித்தேன். 80களில் வெளிவந்த நாவல். ஒரு பத்திரிக்கையில் வந்த நாவலை பைண்ட் செய்து இருந்தார்கள்.
அதில் அந்த கால சினிமா விமர்சனங்கள் சில படிக்க சுவையாக இருந்தது. இப்போது நாம் கேட்டிராத பல பட விமர்சனங்களை படித்தேன். எப்போதாவது டிவியில் பார்க்க நேரும் சில பட விமர்சனங்களையும் படித்தேன்.
இப்போது அந்த படங்களை பார்த்தால் , நம் விமர்சகர்கள் கிழி கிழி என கிழித்து விடுவார்கள்..ஆனால் அந்த கால கட்டத்தில் அந்த படங்களை பாராட்டித்தான் எழுதி இருந்தார்கள்.
காரணம் அன்றைய ஸ்டாண்டர்ட் அது.
அன்று பாராட்டப்பட்டது என்று கேலிக்குரியதாகி விட்டது,
ஆனால் இது பொது விதி அன்று... அன்று பாராட்டப்பட்ட பல படங்கள் , பல பாடல்கள் இன்றும் ரசிக்கப்படுகின்றன.
இப்படி காலத்தை மீறி நிற்பவை சில படங்களே...
உலகளவில் பார்த்தால் ஹாலிவுட் படங்களின் நிரந்தர கதானாயகன் என இயேசுவை சொல்லலாம், அவ்வப்போது அவரைப்பற்றி படங்கள் வந்து கொண்டு இருக்கின்றன.
ஆனால் இவற்றில் பல , தற்காலிக பரபரப்பை காசாக்கும் எண்ணத்தோடு எடுக்கப்பட்டவை, சில ஆண்டுகளில் மறக்கப்பட்டு விடும்.
சில படங்கள் மட்டுமே காலத்தை மீறி செவ்வியல் படைப்புகளாக நிற்கின்றன,
உதாரணமாக , டாவின்சி கோட்.. விறுவிறுப்பான படம்தான், ஆனால் அதில் மன எழுச்சி ஏற்படவில்லை.பொழுது போகிறது. அவ்வளவே..கிறிஸ்துவத்தை புரிந்து கொள்ள உதவவில்லை. வரலாற்றையும் சரியாக சித்திரிக்கவில்லை.
இது போன்ற படங்களை விட்டு விட்டு , மனதை பாதித்த இரண்டு படங்களைப்பற்றி பேச விரும்புகிறேன்.
PASSION OF CHRIST , LAST TEMPTATION OF CHRIST ஆகிய இரண்டு படங்கள் முக்கியமானவை.
இரண்டுமே சவாலான சூழலில் எடுக்கப்பட்டு சர்ச்சைகளுகளுக்கிடையே வெளியானவை.
இதில் லாஸ்ட் டெம்ப்ட், படம் பல நாடுகளில் ரிலீஸ் ஆகவே முடியவில்லை. பேஷன் படம் மெகா ஹிட் ஆனது, ஆங்கிலமல்லாத படங்களின் வரலாற்றில் அதிக பட்ச வசூல் செய்த சாதனை செய்தது.
படத்தை தயாரிக்க பலர் பின் வாங்கிய நிலையில் , இயக்குனர் மெல் கிப்சன் தானே தயாரிப்பிலும் இறங்க வேண்டியதாயிற்று. இதை அவர் சினிமாவாக நினைக்காமல் தான் சொல்ல விரும்பிய ஒன்றை சொல்லியாக வேண்டும் என்ற லட்சியக் கனவாக நினைத்ததால் , இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்தார்.
அதே போல லாஸ்ட் டெம்ப்ட். படமும் பல பிரச்சினைகளுக்கிடையேதான் தயாரானது., பட தயாரிப்பு நிறுவனம் பாதியில் கழண்டு கொள்ள , புதிய தயாரிப்பளரை தேடி பிடித்து படம் எடுத்தார்கள். இது வெளி வருவதில் பிரச்சினை இருந்தது. ஆனால் உலகில் எடுக்கப்பட்ட தலை சிறந்த ஆன்மீக படமாக இது கருதப்படுகிறது. தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
இரண்டு படங்களுமே நல்ல படங்கள் என்றாலும் இரண்டில் சிறந்த படம் எது என்பதில் ஒத்த கருத்து இல்லை.
பேஷன் ஆஃப் , படத்தின் அட்வாண்டேஜ் என்னவென்றால் அது பாரம்பரியமான கிறிஸ்துவ வரலாற்றுக்கு நெருக்கமானது. யூதாஸ் காட்டி கொடுப்பது, பிலாத்து கை கழுவுதல் , குற்றவாளியை மன்னித்தாலும் பரவாயில்லை -இயேசுவை கொல்ல வேண்டும் என்ற யூதர்களின் ஆவேசம் என நமக்கு தெரிந்த எல்லாம் அப்படியே வரும் என்பதால் இதை ஒரு வகையில் ஆவணமாக கொள்ளலாம். கிறிஸ்துவத்தை அறிய ஓர் ஆரம்பமாக கொள்ளலாம்.
அதே போல இதில் வரும் இயேசு, பொதுவாக நம் மனதில் பதிந்து இருக்கும் இயேசுவின் தோற்றத்தில் இருப்பார்.
லாஸ்ட் டெம்ப்ட் படத்தில் ஆரம்பத்திலேயே சொல்லி விடுவார்கள்.அது ஒரு கற்பனை கதை . எனவே இதை அதிகார[பூர்வ கிறிஸ்துவ ஆவணமாக கொள்ள முடியாது. அதே போல இதில் வரும் இயேசு, யூதாஸ் போன்றவர்கள் நாம் இது வரை அறிந்தவர்களில் இருந்து முற்றிலும் வேறு பட்டு இருப்பார்கள்.
பேஷன் ஆஃப் க்றிஸ்ட் படம் உண்மைக்கு முடிந்த வரை நெருக்கமாக இருக்க முயன்று இருக்கும். வசனங்கள் ஆங்கிலத்தில் இருக்காது. லத்தீன் போன்ற அந்த காலத்து மொழிகளையே பாத்திரங்கள் பேசும் ,ஆங்கில சப் டைட்டிலுடன்
அதே போல சினிமாவுக்கு தேவையான செண்டிமெண்ட் போன்ற அம்சங்கள் இந்த படத்தில் இருக்கும்.
இயேசு சிலுவையில் இருந்து கீழே விழும்போது , அவர் சின்ன வயதில் விளையாடுகையில் கீழே விழும் காட்சியும் , அவர் தாயார் பதறுவதும் பொருத்துமாக இருக்கும்,
இயேசு ரத்தம் சிந்தும்போது லாஸ்ட் சப்பர் காட்சிகள் விரிவது உருக்கமாக இருக்கும்.
இந்த படத்தின் மைனசாக பலர் கருதுவது , இதன் அதீத வன்முறைதான். சிலுவையில் ஆணியை வைத்து அறைதல் , சித்திரவ்தை கருவிகள் , இயேசுவின் சதை துண்டு பிய்ந்து கொண்டு வருதல் , என கொடூரத்தின் உச்சமாக இருக்கும் .
ஆனால் அந்த கொடூரத்தை அனுபவிக்கும்போதும் இயேசு சக தண்டனையாளனுக்கு அருளும் கருணை மனம் கொண்டவராக இருக்கிறார் என்பதை இயக்குனர் சொல்ல விரும்பி இருக்கிறார். எனவே அந்த காட்சிகள் தேவைப் படுகின்றன.
இன்னொன்று,. இயேசுவை கடவுளாக நாம் நினைப்பதால் , அந்த சித்திரவதையெல்லாம் நம் மனதில் அவ்வளவு ஆழமாக பதியவில்லை. கடவுளை எப்படி சித்திரவதை செய்ய முடியும் என நம் ஆழ் மனம் நினைப்பதால் , அந்த சித்திரவதை எல்லாம் ஒரு பாவனைதான் என நினைக்கிறோம்..
ஆனால் அவர் சித்திரவதையை காட்சியாக காணும்போது அதன் தீவிரம் நெஞ்சை தொடுகிறது.
பிதாவே என்னை ஏன் கை விட்டீர் என்ற அவர் கையறு நிலை தெரிகிறது. இந்த சித்திரவதையை எதன் பொருட்டு அவர் ஏற்கிறார் என யோசிக்க முடிகிறது..அப்படி என்றால் அவரால் பலன் பெற்றவர்கள் எவ்வளவு நன்றியுடன் இருக்க வேண்டும்..அப்படி இருக்கிறோமோ என கவலைப்பட வைக்கிறது.
ஆனால் மைனஸ் பாயிண்ட் என பார்த்தால் , இயேசுவின் சித்திரவதையை டிராமடைஸ் செய்வதில் இயக்குனர் காட்டும் ஆர்வத்தை , அவர் வாழ்வை காட்டுவதில் செலுத்தவில்லையோ என தோன்றுகிறது.
அதே போல யூதாஸ் ஏன் அவரை காட்டி கொடுக்கிறான், மற்ற சீடர்கள் ஏன் அன்பாக இருக்கிறார்கள், மரியா மக்தேலானா என்பவள் யார் என ஒன்றும் புரியவில்லை. ஏற்கனவே தெரிந்தவர்களுக்குதான் புரியுமே தவிர படம் விளக்கவில்லை.
ஆனால் சில நுண் அரசியலை பேசுகிறது. இயேசுவை கொல்ல கிரேக்கர்கள் விரும்பினார்கள்.யூதர்களையும் அழிக்க விரும்பினார்கள் என்பது வரலாறு.
இந்த படத்தில் யூதர்கள் வற்புறுத்தலால்தான் பிலாத்து மன்னன் இயேசுவை கொல்ல ஒப்புக்கொண்டான் என்பது மீண்டும் மிண்டும் வலியுறுத்தப்படுகிறது. யூதர்களும் அக்கிரமங்கள் செய்வதவர்கள்தான். ஆனால் அவர்கள்மேல் மட்டுமே தவறு என்ற பார்வை , சர்ச்சைகளுக்கு உள்ளானது.
லாஸ்ட் டெம்ப்ட் படம் கற்பனை கதை. ஆனாலும் இயேசு ஏன் இவ்வளவு பெரிய தியாகத்துக்கு தயாரானார், யூதாஸ் ஏன் காட்டி கொடுத்தான், மரியா மக்தெலேனாவின் முக்கியத்துவம் என்ன என ஒவ்வொரு பாத்திரமும் செதுக்கப்பட்டுள்ளது.
இயேசுவின் ஆன்மீக தேடல் மட்டும் அன்றி அவரது சீர்திருத்த பார்வை, தலைமை பண்பு , வாழ்க்கையை கொண்டாடும் மனோபாவம் என எல்லாவற்றையும் செதுக்கி உள்ளனர்.
அந்த பாத்திரத்தில் ஒயின் இருக்கிறது பாருங்கள் என்பார், இல்லை நான் அதில் தண்ணீர்தான் வைத்தேன் என உரிமையாளன் அடம் பிடிப்பான். எதற்கும் இன்னொரு முறை பார் என்பார். அவன் பார்ப்பான், பார்த்தால் அதில் ஒயின்.. சியர்ஸ் சொல்லியபடி இயேசுவும் புன்னகையுடன் ஒயின் அருந்துவார்.
இப்படி சுவையான காட்சிகள் ஏராளம்.
கிறிஸ்துவத்தில் லூசிபர் முக்கியமான பாத்திரம்., நல்லது செய்வது போல தோற்றம் காட்டி , தவறான பாதைக்கு அழைத்து செல்லுதல்.
நம் ஊரில் மாயை என்கிறோமே ..அது போல... சாத்தான் என்பது தீமை என உடனே தெரிந்து விடும்..எனவே தப்பிக்க வாய்ப்பு அதிகம். ஆனால் மாயை என்பது நன்மை போன்ற தோற்றத்தில் இருக்கும் . இதை வெல்வது கடினம். க்ளைமேக்சில் ஒரு தேவதை வடிவில் வந்து இயேசுவை தடுமாற செய்யும் கடைசி முயற்சி படத்தின் உச்சம்.
இது போன்ற நுணுக்கங்கள் பேஷன் படத்தில் இல்லை.
அதை தவறு என சொல்ல மாட்டேன். நம்பிக்கை இன்மை காரிருளில் , அன்பு என்பது ஒளிக்கீற்றாக வெளிப்படும் என்பதை சொல்ல , இருளை மிகைப்படுத்த வேண்டிய கட்டாயம். முதலில் இந்த படத்துக்கு the passion என்றுதான் பெயரிடப்பட்டு இருந்தது. அந்த பெயர் இன்னும் பொருத்தமாக இருந்து இருக்கும்.
ஒரு செயல் மீது இருக்கும் passion என்றால் அது பொதுவானது, கொள்கைக்காக உயிரை விடும் போராளிகள் , சொந்த காசில் புத்தகம் வெளியிட்டு இலக்கியம் வளர்த்த எழுத்தாளர்கள் என பலரை பார்க்கலாம். ஆனால் அந்த பெயரை இன்னொருவர் வாங்கி விட்டதால் , பேஷன் ஆஃப் கிறிஸ்ட் என பெயரிடப்பட்டத்ய்,
\\அன்பு என்பதே கிறிஸ்துவம் என சொல்வதில் இயக்குனர் வென்று விட்டார் என்றாலும் , படம் என பார்த்தால் எனக்கு பிடித்தது லாஸ்ட் டெம்ப்டேஷன் தான்.
அன்பு மட்டுமே கடவுளின் வழியா,,அப்படி என்றால் சாவுக்கடலில் ஏன் இரு நகரங்களை அழித்தார் , ஆயுதம்தான் வழியா என பல்வேறு கோணங்களில் ஆராய்வது ,, நம் ஆன்மீக தேடல் இன்னொருவருக்கு கஷ்டம் கொடுத்தால் அது ஆன்மீகமா என்ற அல்சல் , மீட்பு என்றால் என்ன, புத்துயிர்ப்பு என்றால் என்ன என்ற சிந்தனை என முழுமையாக இருப்பது லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆஃப் கிறிஸ்தான்.
எனவே என் ஓட்டு the last temptation of christ
_______________________________________________________________
இந்த படங்கள் குறித்து நண்பர் நிர்மலுடன் ஓர் உரையாடல்
பிச்சை : passion of christ பார்த்திட்டீங்களா? பிடித்து இருந்துச்சா?
நிர்மல் : எனக்கு இயேசு பற்றிய எல்லா படமும் பிடிக்கும்
எல்லா படமும் பிடிக்கும் என்பது வேறு விஷ்யம்... நல்லவை எது என அலச வேண்டும்..உதாரணமாக என்னை பொருத்தவரை டாவ்ன்சி கோடு படம் நல்ல படம் அல்ல.... ஆனால் சுவாரஸ்யமா இருக்கும்
ஆமாம் சரி
அந்த படத்தில் உண்மையும் இல்லை... நம்மை சிந்திக்க வைக்கவும் இல்ல
ஏன்
அது வெறும் ஃபிக்ஷன்... த்ரில்லர்
ஆமாம், இதில் இருப்பது உன்னதம்
இது க்ளாசிக்
ம்ம்ம்ம்...அந்த வகையில் இயேசுவின் கடசி சபல்ம் மற்றும் பாஷன் ஒஃப் க்ர்ஸ்ட் இரண்டும் காலத்தை வென்று நிற்கும் என நினைக்கிறேன்
டாவின்சி கோட் எல்லாம் நிற்காது
யெஸ்
டாவின்ஸி கோட் - ஜிம்கா நிறந்தது
அதை எடுத்தருக்கு கிறிஸ்தவ ஞானம் குறித்து அக்கறை இல்லை...வெறும் சம்பவங்களை மட்டுமே யூகிக்க முயன்று இருக்கிறார்
you can not compare last temptation with da vinci code
yes yes
பேஷன் ஆஃப் கிறிஸ்ட் படம் கிளாசிக் வரிசையில் வ்ருமா
வரும் ஆனால் சிலருக்கு அது பிடிக்கவில்லை
லாஸ்ட் டெம்ப்டேஷனை விட அது கமர்சியல் ஹிட்...
அதீத வன்முறை என ஒதிக்கிவிட்டனர், மேலும் அது யூத எதிர்ப்புக்கு சார்பாக இருக்கீறது எனவும் ஒரு குற்றசாற்று உண்டு
வசூல் சாதனை செய்த படம்.அந்த வன்முறை படத்துக்கு தேவைப்பட்டது
இதுவரை எழுத்தில்தான் அதை வாசித்திருக்கீறார்கள், சினிமாவில் முத்ல் முதலில் பார்த்த அதிர்ச்சிநம் மனதில் இயேசு என்பவர் கடவுள் என்ற பிம்பம் இருப்பதால் , அவரது தியாகம் நம் மனதில் பதியவில்லை... நம் மனதில் பதிய வைக்க , இந்த அதீத வன்முறை தேவை என இயக்குனர் நினைத்து இருப்பார்....அதை நான் ஏற்கிறேன்
ம்ம்ம்ம்ம்....ஆமா.எழுத்தில் அந்த வலி மனதில் பதியவில்லை
ஆமாம். அடித்தார்கள் என இருக்கும் ஆனால் எதை வைத்து, அந்த கருவி எப்ப்டி இருக்கும் போன்ற வர்ண்னை விவிலியத்தில் கிடையாது, அது வாசகர் அரிவுக்கு விடப்பட்டுள்ளது.
அப்புறம் முக்கியமான் இன்னோன்று மீட்ப்பு என்பது இந்து மதத்தில் கிடையாது.
மீட்ப்பு என்ப்படுதல் யாதலில் - பிறப்பிலிருந்த நிலையிலிருந்து மாற்றம். அதாவது தன்னைதானே ஒருவன் கர்ம வீதிகளிலிருந்து மாற்றி கொள்ள இந்த பிறவியிலேயே முடியும் எனும் நம்பிக்கை.
க்ரெக்ட்
கல்லாக உருவான வஸ்து கல்லாகவே இருந்தால் பிரச்சினை இல்லை... சிற்பமாக்க உருமாற்றம் அடையும் ப்ரோசஸ் வலி மிகுந்தது
இதனால்தான் வலியை அந்த அளவுக்கு காட்டி இருக்கிறார்களோ
பிறந்த நிலையில் இருந்து மீட்பு சாத்தியம்...ஆனால் அது ரோஜாவால் அமைந்த பாதை அல்ல...தியாகம் தேவைப்படும் பாதை
இதுதான் படத்தின் மெசேஜா
இருக்கலாம். மேலும் ”வலி” எனப்து எப்போதும் தோல்வியின் சின்னமாகவே இருக்குது. சில நேரங்களில் அது அச் சூழலுக்கு உட்ப்பட்ட உண்மையாகவே இருக்கும். கால சூழச்சியில் பார்க்கும்போது அதுவும் வெற்றியின் சின்னமாக கூடஇருக்கலாம். சாத்தான் ( கரு உருவம்) அடிபடும் இயேவை பார்த்து வெற்றி என சிரிக்கிறது ஆனால் அந்த வலியை அவமானத்தை கூட நான் தியாகம் எனும் செயலால் உன்னதம் அடைய செய்துவிடலாம்
இயேசு மேல் பரிதாபப்படும், ஆனால் ஏதும் செய்ய இயலாத அந்த கவர்னர் கேரக்டர் எதை சுட்டுகிறது..இந்த கேரக்கட்ர் பேஷன் ஆஃப் படத்தில்தான் முழுமையாக இருக்கு
ஆமாம் அதுதான் முக்கியமான அரசியல் திரிப்பு என யூதர்கள் வாதிடுவர்கள்.
இயேசுவை சிலுவையில் அறைந்தது கிறேக்கர்கள் ஆனால் யூதர்களின் விருப்பத்திற்முற்றீலுமுன்மையில்லைக்காக என சொல்கிறது அந்த படம்,
யூதர்களுக்கும் எப்படி யேசுவின் மரனம் தேவைப்பட்டதோ அதைப்ப்போல கிரேக்கர்களுக்கும் தேவைப்பட்டது என்பதுதான் உண்மை. கை கழுவுதல் எல்லாம் பிறகு சேர்த்த இடைச்செறுகல் எனும் வாத்மும் உண்டு
லாஸ்ட் டெம்ப்டேஷனில் அந்த காட்சி இல்லை
ஆமாம் - எனென்றால் கசான்ஸ்கி எந்த மதத்தையும் சாராதவர். மெல் கிப்ஸன் மதவாதி -கத்தோலிக்கர்’
என்வே எனது மதிப்பு last temptation க்கு
last tempation நேர்மையாக சொல்லி விட்டது..இது வரலாற்று படம் இல்லை என
இன்றைய புதிய இறை சிந்தனை என்ன சொல்கிறது எனரால், யார் கொன்றார்கள் என்பது முக்கிய்மே இல்லை. அவர்க கொல்லப்படுவதே இறை திட்டம். அவரது மரணத்திற்க்கு யாரும் ஒரு குழு பொறுப்புபில்லை, எல்லாரும் பொறுப்பு. மனிதரை மீடக அவர் மறித்தார். என்பதுதான்
அதைத்தான் லாஸ்ர் டெம்ட்.சொல்லுது,,, புதிய இறை சிந்தனை
,,,இந்த ரெண்டு படத்தில் உங்களுக்கு பிடிதத படம்?
\
last temptation.என் ஓட்டு லாஸ்ட் டெம்ப்ட்
yes
ம்ம்ம்...எனக்கும்
ஆனால் வரலாற்றுக்கு நெருக்கமானது என்ற வகையில் பாஷன் ஸ்கோர் செய்யுது
இயேசுவை தத்துவ ரீதியா ஒரு படமும் , உணர்வு ரீதியா ஒரு படமும் அணுகுதுனு சொல்லலாமா
ம்ம்ம், passion Of christ உணர்வுகளுக்கு அதிகமாக முக்கியத்டுவம் கொடுத்ததில் பின்புலத்திலிருக்கும் அந்த தத்துவம் மறைக்கபடுகிறது என சொல்லுவேன்.
அந்த படத்தை ஒரு முறை பார்ப்பர்களுக்கு அந்த க்றிய உருவம் புரியாது புலப்படாது யேசுவின் இரத்த்மே முன் வந்து நிக்கும்
தத்துவத்தை விட , அன்பு விட்டு கொடுத்தல் தியாகம் போன்றவைதான் முக்கியம் என அந்த படம் சொல்வதும் நியாயம்தானே
ஒரே ஒரு விசியம் பாஸ் - மீட்ப்பர் - என்றால் என்ன எனும் அர்த்தை நமக்கு சொல்லிவிட்டால். அது ஏற்றம்.
ஆமாம் அதுதான் மேட்டர்.மற்றவர்கள் பாவத்துக்காக ரத்தம் சிந்துதல் என்பதை ரெண்டு படங்களுமே சொல்கிறனவே
, இயேசு கேரக்டருக்கு பொருத்தமான நடிகர் தேர்வு எந்த படத்தில்?
நம் மனதில் பதிந்து இருக்கும் இயேசு, பேஷன் பட இயேசுவின் தோற்றத்துக்குத்தானே நெருக்கமா இருக்கார்?>
எனக்கு ரெண்டும் பிடித்திருக்கிறது. பேஸன் அஃப் க்றைஸ்ட் - போதுவான கிறுஸ்து
வசனங்கள் தீயாக இருந்தன
நாவல் இல்லியா- கசான்ஸி, ஞான குரு அல்லவா.
சாருவுக்கே ஞான குரு அவர்
அவர் காலில் விழணும்போல இருந்துச்சு
ஆமாம்
வாழ்க்கையின் பார்வையை மாற்றி போட்டது ஜோர்பா
messiah need not do miracles.... he is miracle....mmm..wat a dialoge
யெஸ், இதுல்லாம் நிறுவன கிறுஸ்துவ மதத்தின் மீது அடிக்கும் சாட்டை அடி.
யூதர்களுக்கு இந்த பதில் பொறுந்தும்
என் இடத்தில் நீங்கள் இருந்து இருந்தால் , உங்கள் குருவை காட்டி கொடுக்க சம்மதித்து இருப்பீர்களா என யூதாஸ் கேட்பதும் , இயெசு பதிலும்ம்,ம்..அப்பப்பா...அழுது விட்டேன்
சரியா நினைவில்லை சொல்லுங்க
என்னை காட்டி கொடு என ஜீசஸ் சொல்வார்
முடியாது,,,என் இடத்தில் நீங்கள் இருந்தால் இபப்டி செய்வீர்க்ளா என யூதாஸ் மறுப்பான்
.என்னால் செய்து இருக்க முடியாது.....அதனால்தான் இந்த கடினமான பணி உனக்கும் , சிலுவையில் தொங்கும் பணி எனக்கும் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்பார் இயெசு
யெஸ், அட்டகசாம்
சிலுவையையில் தொங்கியதை காட்டிலும் குருவை காட்டி கொடுத்தல் கடினம். இங்கே யூதாஸ் ஹிரோ ஸ்தானத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.
mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm
சிலர் அடிக்கடி சொலவர் -யூதாஸ்க்குள் பாதி கிறுஸ்துவும், கிறுஸ்துவுக்குள் பாதி யூதாசும் இருக்கு. அதை பிரிக்க முடியாது என.
yessssssssssssssssss
குருவுக்காக சீடன் யோசிப்பதும் , சீடனை உயர்த்த குரு யோசிப்பதும் என அந்த காட்சி நெகிழ வைக்கும்...பேஷன் படத்துல் இப்படி எல்லாம் இல்லாமல் ஒற்றை பரிமாணத்தில் இருப்பதாக நினைக்கிறேன்
எங்க பாட்டிக்கு தெரிந்த கிறுஸ்து, எனக்கு தெரிந்தது, எங்க சாமியாருக்கு தெரிந்தது என மர்மபாக இருக்கு
மீட்பு - என்பது சாத்தியம், பாவம் எனப்படுவத்இலிருந்து மீட்பு சாத்தியம்.
அதைதான் மீட்ப்பர் என சொல்கிறோம்
அதைதான் பாலியல் தொழிலாளி மக்தேலானா யேசு திருமனம் காட்டுது
ஆமா
பாவத்தை மன்னிப்பு கொண்டு மீட்கலாம்
அதைதான் யேசுவின் வாழ்க்கை சொல்கிறது
யேசு குறியிடு மட்டுமே. அவர்து வாழ்க்கை கதை அதிலிருக்கும் மீட்பு முக்கியம்.
ஆமா
யூதர்களுக்கு மட்டுமென இருந்ததை உலக்த்தின் எல்லா சாதிய்னருக்கும் கொண்டு சென்றது யேசு
யேசிவின் ம்ரண்மும் உயிர்த்ழுதலும்தான்
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]