நெட்டில் இயங்கி வருபவர்களை இரு வகைகளாக பிரிக்கலாம். சாருவை ரசிப்பவர்கள் , சாருவை திட்டுபவர்கள். யாரை எடுத்துக்கொண்டாலும் இந்த இரு பிரிவில் ஒன்றிதான் இருந்தாக வேண்டும்.
சாருவுக்கு ஒரு புறம் பாராட்டு என்றால் ஒரு புறம் அவரை கடுமையாக எதிர்ப்பவர்களும் இருக்கிறார்கள் என்பதால் இரண்டையும் பேலன்ஸ் செய்துதான் அவர் செல்கிறார்.
அவர் ரசிகன் என்ற முறையில் என்னையும் பொருட்டாக மதித்து சிலர் அவ்வபோது திட்டி மெயில் அனுப்புவது வழக்கம். ஃபேஸ்புக்கில் திட்டி எழுதிவிட்டு , என் மேலான கவனத்துக்கு எனக்கும் லிங்க் அனுப்புவார்கள்.
தர்க்காவில் பிச்சை எடுக்கும் நாய் , ஜால்ரா அடிப்பவன் , அறிவு கெட்ட ஜென்மம் என்றெல்லாம் மெயில் வரும்.
இதில் என்ன வேடிக்கை என்றால் இவர்களில் சிலர் என் நண்பர்கள் ( எல்லோரும் அல்ல...சிலர் ) . என் கருத்து பிடிக்காவிட்டாலும் நண்பர்களாக இருக்கிறார்களே என்பதில் மகிழ்ச்சியே தவிர, அந்த நட்பை பயன்படுத்தி அவர்கள் கடுமையை குறைக்க வேண்டும் என நான் எண்ணியதில்லை. நட்பு வேறு, கொள்கைகள் விருப்பங்கள் வேறு என்பது என் கொள்கை.
ஃபேக் ஐடியில் அவர்கள் என்னை திட்டினாலும் தனிப்பட்ட முறையில் மிக அன்பாக பழக கூடிய நண்பர்களை பெற்றதை ஆச்சர்யமாகவே நினைக்கிறேன். எதிர் அணியில் இருப்பவனாயிற்றே என்ற தயக்கம் இன்றி , என் மேல் நம்பிக்கை வைத்து , ஃபேக் ஐடியை தவிர்த்து தம் உண்மையான விபரங்களை என்னுடன் பகிர்ந்து கொள்வதை நினைக்கும்போது , நானெல்லாம் அந்த அளவுக்கு வொர்த்தா என்ற தாழ்வு மனப்பான்மை ஏற்படும்.
சில விரும்பத்தகாத சக்திகள் இணையத்தில் உலாவுவதை மறுக்க முடியாது. மிரட்டும் நோக்கத்துடன் , அவதூறு நோக்கத்துடன் செயல்படுபவர்கள் இருக்கிறார்கள்..
ஆனால் எல்லோரையும் இப்படி நினைக்க இயலாது..
சாருவை தீவிரமாக விமர்சித்து வரும் ஒரு ஃபேக் ஐ டி நண்பருடம் பேசியதின் சில பகுதிகள் உங்களுக்காக... இவர் என்னையும் கடுமையாக திட்டக்கூடிய்வர். அவர் என்ன நினைத்து திட்டுகிறார்.அவர் மன ஓட்டம் என்ன என தெரிந்து கொள்ள இந்த உரையாடல்....
**********************************************************************
சாருவை பாராட்ட சொன்னால் , நீங்கள் அவரை எதற்காக பாராட்டுவீர்கள்?
அவருடைய கட்டுரைகளுக்காக, மற்றும் அவருடைய தன்னம்பிக்கை
அவர் எழுத்தில் உங்களுக்கு பிடித்த நாவல் அல்லது சிறுகதை எது?
அல்லது கட்டுரை..
இதுவரை அவருடைய நாவல்கள் படித்ததில்லை.
சிறுகதைகள் அப்படி ஒன்றும் ஞாபகம் இல்லை
நாவல்களை படிக்காமல் அவரை திட்டிவதை எப்படி நியாய்படுத்துகிறீர்கள்?
நான் அவரை திட்டுவது அவரது இரட்டை நிலைக்கு
hypocrisy
hypocrisy
Example. Coco-cola issue
Nithyananda
அவருக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயம்
பாமினி திட்டிய பொழுது அவருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. தமிழருவி மணியன் அவரை திட்டிய போது அது அவருக்கு தவறாக தெரிந்தது
நித்தியானந்தாவை இவரது வாசகர்கள் நம்பவேண்டும் என்பதற்காக இவரது வாழ்க்கையில் நடந்த அதிசயங்களை(?) சொன்னார்
சரி..அவர் தவ்றே செய்தாலும் , அவரை மட்டும் இந்த அளவுக்கு பலரும் டார்கெட் செய்வது ஓவராக தெரியவில்லையா...
அவரை மட்டும் டார்கட் செய்கிறோம் என்று சொல்வது சரியல்ல. ஒருவேளை நாங்கள் ஒவ்வொருவரும் வேறு இயக்கங்களிலும் இருக்கலாம். ஆனால் நீங்கள் எங்களை இங்கு மட்டுமே பார்ப்பதால் உங்களுக்கு அப்படி தெரிகிறது.
நாங்கள் அவருடையே வழியிலேயே அவரை விமர்சிக்கிறோம். இதை நாங்கள் பொழுதுபோக்காகவும் செய்கிறோம்.
நீங்கள் பொழுதுபோக்காக செய்யலாம் . ஆனால் சிலர் வெற்று விளம்பரத்துக்காக அவரை விமர்சிப்பதை நீங்களும் சேர்ந்து எதிர்க்க வேண்டுமல்லவா?
விளம்பரத்திற்காக என் நண்பர்கள் யாரும் எதிர்க்கவில்லை . பெரும்பாலோனோர் சொந்தப் பெயரில் இல்லை
சிலர் அப்படி செய்வது உண்மைதான் .அவர்கள் செய்வது சரி என்று சொல்லவில்லை
இதை நீங்கள் வெளியிடுவீர்கள் என்று சொன்னதால் ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன்.
சொல்லுங்கள்
அராத்துவின் தற்கொலைக் குறுங்கதைகள் என்னைப் பொருத்தவரை குப்பை.
.ஏன் அப்படி சொல்கிறீர்கள்?
படிப்பவர்கள் புரிந்துகொள்ள சிரமப்படவேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்படுபவை
அதாவது அதைப் புரியாமல் பலமுறை படிக்கவேண்டும். பிறகு நாமாகவே ஒரு முடிவுக்கு வரவேண்டும்
இரண்டு வரி ஜோக்கை ஒரு ட்விஸ்ட்டாக மாற்றி கதையாக எழுதுகிறார்
அப்படிப்பார்த்தால் , படிப்பவர்கள் எளிதாக புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதும் சாருவுக்கு நீங்கள் ரசிகராக இருந்திருக்க வேண்டுமே
சாருவின் கட்டுரைகள் எனக்குப் பிடிக்கும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை
ஆனால் அராத்துவின் கதையை ஆஹா ஓஹோ என்று ஒருவர் சொன்னால் அவர் எப்படி சிறந்த விமர்சகர் ஆகமுடியும்
வினோதினி. ஈழம் , டில்லி பாலியல் குற்றம் போன்றவை எல்லாம் அனைவரும் இணைந்து குரல் கொடுக்க வேண்டியவை.. ஆனால் உங்களது சாரு எதிர்ப்பால் , நாம் இணைந்து செயல்பட முடியாத நிலை ஏற்படுவது வருந்தத்தக்க்துதானே ..
அதற்கு என்ன செய்ய முடியும்.
இதில் ஈழத்திற்காக நான் குரல் கொடுத்ததில்லை. மற்ற அனைத்திலும் நான் என்னால் முடிந்த அளவிற்கு பங்கேற்றுள்ளேன்
ஈழத்தின் மீது வெறுப்பு இல்லை. எனக்கு அதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை
மற்ற விஷயங்களில் எனது நண்பர்களோடு சேர்ந்து நானும் பங்கேற்றுள்ளேன். உங்க்ளோடு இணைந்து செயல்பட முடியாதது வருந்தத்தக்கதுதான்.

****************************************************************************