பெங்களூருவில் இருப்பவர்கள் தமிழ் , ஆங்கிலம் , ஹிந்தி , தெலுங்கு , கன்னடா என பல மொழிப்படங்களை பார்க்க முடியும், ஆனால் சென்னையில் இருப்பவர்களுக்கு இந்த வாய்ப்பு இல்லை.
இங்கு தமிழ் படங்கள்தான் பெரும்பாலும் பார்க்க இயலும், பெரிய அளவில் ஹிட் ஆன ஒரு சில வேறு மொழி திரைப்படங்க்ளை மட்டுமே இங்கு பார்க்க முடிகிறது.
நான் பெங்களூருவில் இருந்த போதுதான் பல்வேறு மொழி மொழிப்படங்களை பார்க்கும் ஆர்வம் வந்தது. கன்னட படங்களை ரசிக்க ஆரம்பித்ததுதான் அப்போதுதான்.
பெங்களூரு செல்லும் நம் ஆட்கள் அங்கும் நம் ஊர் வாழ்க்கைதான் வாழ்வார்கள் . நானும் அங்கு சென்ற புதிதில் அப்படித்தான் இருந்தேன். ஆனால் நல்ல வேளையாக , கூட இருந்த தமிழ் நண்பர்களைவிட்டு பிரிந்த பின் , கன்னட கலாச்சாரம் , அவர்கள் வாழ்க்கை , கலை , உணவு முறை , சினிமா என பழகினேன்.
ஆனால் சென்னையில் கன்னட படங்கள் பார்க்கும் வாய்ப்பு குறைவாகவே இருந்தது. இந்த நிலையில் ஒரு நல் வாய்ப்பாக , கனவெனும் குதிரையில் ஏறி ( கனசெம்ப்போ குதிரெயனேறி )என்ற கவித்துவமான தலைப்பு கொண்ட அற்புதமான கன்னட படம் சென்னையில் திரையிடப்படுகிறது,,,அதுவும் இலவசமாக என்ற தகவல் கிடைத்தது.
இந்திய சினிமாவின் நூற்றாண்டை போற்றும் விதமாக தமிழ் ஸ்டுடியோவும் , பெரியார் சுயமரியாதை ஊடகத்துறையும் இணைந்து மாற்றம் தந்த இந்திய சினிமா என்ற தலைப்பில் திரையிடல் நிகழ்ச்சியை கடந்த ஒரு வருடமாக நடத்தின,
இந்த மாதத்துடன் இந்த நிகழ்வு நிறைவடைகிறது, இதில் முத்தாய்ப்பாக திரையிடப்படும் படம்தான் கனவெனும் குதிரையில் ஏறி.
மிக அற்புதமான பார்க்க வேண்டிய படம்.
பலர் சிடியில் பார்த்து இருக்க கூடும். ஆனால் கூட்டதினருடன் சேர்ந்து பார்க்கும்போது , அதுவும் தமிழ் மக்கள் கூட்டத்தில் அமர்ந்து பார்க்கும் அனுபவம் அருமையாக இருக்கும்
15.06.2013 மாலை 5.30க்கு பெரியார் திடலில் இந்த நிகழ்வு நடக்கிறது.
சென்னைவாசிகளுக்கு நன்கு தெரிந்த இடம்தான். வெளியூர் மக்களும் சுலபமாக வரலாம். ரயில் , பேருந்து என எதிலும் வரலாம்,
இந்த படம் கண்டிப்பாக ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்,. நம்பிக்கை, மூட நம்பிக்கை , மெய், மாயை , பொய் தோற்றம் , உண்மையில் இருக்கும் பொய், பொய்யில் இருக்கும் உண்மை என சில நாட்களாவது உங்களை யோசிக்க வைக்கு வைத்து விடும் இந்த படம்.
இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]