Pages

Sunday, June 2, 2013

உழைப்பை, கருணையை போதித்த நபிகள் நாயகம்- அழகு தமிழில் அருமையான புத்தகம்


    இஸ்லாம் பற்றி அறிந்து கொள்ள பல நூல்கள் கிடைக்கின்றன. இணையத்திலும் தேவையான தகவல் தர பல நல்ல குழுமங்கள் செயல்பட்டு வருகின்றன.

குர் ஆன் வசனத்தை தினம் தோறும் ஒவ்வொன்றாக தரும் வலைத்தளங்கள் உள்ளன.

ஆனால் இவ்வளவு இருந்தும் என்னை போன்றவர்கள் நபிகள் நாயகத்தைப் பற்றி சரியாக தெரிந்து கொள்ளவில்லை என்பது வலம்புரி ஜானின் “ நாயகம் எங்கள் தாயகம் “ என்ற நூலைப்படிக்கையில் தெரிந்தது.

நபிகள் நாயகம் ஓர் இறைத்தூதர் என்பது போன்ற அடிப்படை விஷயங்கள் தெரியுமே தவிர அவர் இளமை பருவம் , இளமையில் சந்தித்த சோதனைகள். திருமணம் , அவரது தொழில் , போர்கள் , குர் ஆன் அருளப்பட்டது , அவர் குடும்பம், தியாகம் என எத்தனையோ பல விஷ்யங்களை இந்த நூலில் இருந்து தெரிந்து கொள்ள முடிந்தது.

    அதீதமாக உணர்ச்சி வசப்படுவது நம் இந்திய பண்பு, ஒரு கிரிக்கெட் பிளேயர் சென்சுரி அடித்தால் அவரை கிரிக்கெட் கடவுளாக்குவோம். நடிகனுக்கு கோயில் கட்டுவோம்.

நபிகள் மட்டும் உறுதியான வழிகாட்டுதல் காட்டாமல் போய் இருந்தால் , கண்டிப்பாக அவரையும் நம் ஆட்கள் கடவுளாக்கி அவரது அடிப்படை கொள்கைகளுக்கே ஊறு விளைவித்து இருப்பார்கள். அப்படி நடக்காமல் பார்த்து கொண்டது அவரது சிறப்புகளில் ஒன்றாகும்.

காரணம் அவர் வாழ்க்கையை படிக்க படிக்க அவர் மீது ஓர் இனம் புரியாத ஈர்ப்பு ஏற்படுகிறது. இந்திய மனப்பான்மை கொண்ட ஒருவர் மனதில் இந்த ஈர்ப்பு அவர் மீது பக்தியாக மாறும் வாய்ப்பு 100% உண்டு,

இஸ்லாமை பொருத்தவரை அல்லாவை மட்டுமே வணங்க வேண்டும். நபி ஓர் இறைத்தூதர். அவரை உயிரினும் மேலாக மதிக்கலாம். ஆனால் கடவுளாக்கி விடக்கூடாது.

இந்த நிலை இன்று வரை உறுதியாக கடைபிடிக்கபடுகிறது என்றால் அதற்கு காரணம் நபிகள் போட்டு சென்ற பாதைதான்,

இவரது வாழ்க்கை வரலாறு வெறும் ஆன்மீகம் என்பதாக மட்டும் இருக்காது. குடும்பம் , வியாபாரம் , பிரச்சினைகளை தீர்க்கும் சாதுர்யம் , கருணை, மன்னித்தல், சமூக நீதி ,பெண்ணுரிமை , உழைப்புக்கு மரியாதை என பல அம்சங்களும் கலந்த ஒரு விறு விறுப்ப்பான நாவல் போல இருக்கும்.

அதிலும் இந்த நூல் அழகு தமிழில் , கவிதை நடையில் இருப்பதால்  , எடுத்தால் கீழே வைக்க முடியாதபடி பரபர என செல்கிறது.

சில சாம்பிள்களை பாருங்கள்..

*********************************************\

ஹலீமா வந்த போது

மக்கா நகரத்துக்குள்

விரல்கள் இருந்தன.

வீணைகள் இல்லை

----------------------

பாலைவனக் கப்பல்கள்

ஈச்ச மரங்களை பிடுங்கி

மணல் வெளி முழுதும்

இரங்கற் கவிதை இழைத்தன
மறைந்தாள் ஆமினா

------------------------------------

சில இளைஞர்கள்

பனைமரங்களை விட உயரமாக வளர்ந்தார்கள். ஆனால்

தென்னை மரங்களை விட கோணலாகி விட்டார்கள்.

இவர்கள் மத்தியில்

நபிகள் நாயகம்

ஆல மரமாய் அணி வகுத்தார்கள்

-----------------------

அம்சா என்ற வாணிபர்
நபிகளிடம்
குறித்த இடத்துக்கு வருவதாக சொன்னார்.

சொன்னதை மறந்து போனார்

மூன்று நாள் கழித்து நினைவு வந்து

பதறி அடித்து ஓடினார்.

விழிப் புருவங்கள் வியப்பால் வளைந்தன.

மூன்று நாட்களாக அதே இடத்தில்

முகமது என்ற தேயாத நிலவு

தேங்கி கிடந்தது

--------------------------------------


கதீஜா-

கைகால் முளைத்த கனவு

மண்ணில் தெரிந்த

மதுர நிலவு ..


-------------------------


நாணல்கள் நடுவில் நாதஸ்வரம் போல

நிமிர்ந்து நின்றார் நபிகள் நாயக்ம்

----------------------

வேரினை தொடர்ந்து செல்லும்

நீரினை போல அண்ணல்

வானவர் ஓத ஓத

வண்ணமாய் ஓதினார்கள்

-----------------------------
தீபத்தை அணைக்க வந்த சூறாவளி

இஸ்லாத்தை

தீப்பந்தமாக ஆக்கியது

----------------------

ஒட்டகத்தில் பால் கறப்பது முதல்

ஒட்டடை அடிப்பது வரை

நபிகளே செய்தார்

**************************************

வல்லினமும்

மெல்லினமும்கூட தள்ளிவைத்த

இந்த இடையினத்தை

மெய்யெழுத்தாய்

உத்தம நபி மாற்றினார்

--------------------------

தீர்க்க தரிசிக்ளுக்கு

பன்னீர் மரங்களின்

பச்சை நிழலா பந்தல் அமைத்தது

கற்பூர நெருப்பல்லவா

களம் அமைத்தது

-------------------------

மைல்கல்லும்
கடவுளாகும் நாட்டில்கூட
நபிகள் இறைவனாக நகரவில்லை
இது நாயனின் ஏற்பாடா
இல்லை
நாயன்வழி நபிகள்
நட்டுவைத்த நோன்பா

*******************************************************************


இப்படி நபிகள் நாயகம் அவர்களின் உன்னதமான வாழ்க்கையை அழகு தமிழில் படிப்பது சுகமாக இருக்கிறது.

கதீஜா, பாத்திமா,. அபூபக்கர் என பலரைப்பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது


மத நம்பிக்கையே இல்லாதவர்கள் கூட நபிகள் நாயகத்தின் வரலாறை தெரிந்து கொள்வது அவசியம். மன்னிப்பு , கருணை போன்றவைதான் அவர் செய்தியாக இருந்தது என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டால் , பூமியே சொர்க்கம் ஆகிவிடும்...

--------------------------------------------------

நாயகம் எங்கள் தாயகம் - நழுவ விடக்கூடாத நூல்

******************************************

படைப்பு - வலம்புரி ஜான்

ஆசாத் பதிப்பகம்





8 comments:

  1. சகோதரா...

    நானும் அந்த புத்தகத்தை படித்து விட்டேன்.. மிக அருமையாக எழுதி இருப்பார். சில இடங்களில் வார்த்தைகள் சற்று மிகைப்படுத்தப்பட்டது போல் இருந்தாலும்... படிக்க, நபி ஸல் வாழ்வை எளிமையாக புரிந்து கொள்ள, இது ஒரு நல்ல புத்தகம்...

    பகிர்தலுக்கு நன்றி சகோதரா....

    ReplyDelete
  2. ஸலாம் சகோ.ஆனந்த்,
    அந்த புத்தகம் இன்னும் நான் படிக்கவில்லை. உங்கள் புத்தக அறிமுகவுரை படிக்கும் ஆவலை தூண்டுகிறது.

    //மைல்கல்லும்
    கடவுளாகும் நாட்டில்கூட
    நபிகள் இறைவனாக நகரவில்லை
    இது நாயனின் ஏற்பாடா
    இல்லை
    நாயன்வழி நபிகள்
    நட்டுவைத்த நோன்பா//

    இரண்டுமேதான்..!

    இன்று நாலு பேரு நல்லபடியா பாராட்டிவிட்டால்...
    முகம் மட்டுமின்றி முழு உருவத்தையும்
    விதவிதமாக பிளசிலும் முகநூலிலும்
    பற்பல போஸ்டாக போட்டு விளம்பரம் தேடுவோர் மத்தியில்...

    எவ்வளவோ போற்றுதலுக்கும் புகழ்தலுக்கும் உரியவராக இருந்தும்... அன்று நபியவர்கள் 'தன்னை எவரும் வரையக்கூடாது' என்று கடுமையாக தடுத்து விட்டதால்... அன்னாரின் உருவப்படம் ஒன்றுகூட இன்று இல்லாமல் போயிற்று.

    ஒருவேளை இருந்திருந்தால்...
    உள்ளம் திரிந்தோர் எவரேனும், அவரையும் ஃபிரேம் போட்ட ஃபோட்டோ கடவுளாக்கி ஊதுபத்தி கொளுத்தி மாலை போட்டு, சூடம் கொளுத்தி சிலை வைத்து பாலாபிஷேகத்துடன் பூஜை செய்து கடவுளுக்கு இணைவைத்து இஸ்லாத்தில் இருந்து வெளியேறி இருந்திருப்பார்கள்..!

    பகிர்வுக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  3. ஸலாம் சகோ.ஆனந்த்,
    அந்த புத்தகம் இன்னும் நான் படிக்கவில்லை. உங்கள் புத்தக அறிமுகவுரை படிக்கும் ஆவலை தூண்டுகிறது.

    //மைல்கல்லும்
    கடவுளாகும் நாட்டில்கூட
    நபிகள் இறைவனாக நகரவில்லை
    இது நாயனின் ஏற்பாடா
    இல்லை
    நாயன்வழி நபிகள்
    நட்டுவைத்த நோன்பா//

    இரண்டுமேதான்..!

    இன்று நாலு பேரு நல்லபடியா பாராட்டிவிட்டால்...
    முகம் மட்டுமின்றி முழு உருவத்தையும்
    விதவிதமாக பிளசிலும் முகநூலிலும்
    பற்பல போஸ்டாக போட்டு விளம்பரம் தேடுவோர் மத்தியில்...

    எவ்வளவோ போற்றுதலுக்கும் புகழ்தலுக்கும் உரியவராக இருந்தும்... அன்று நபியவர்கள் 'தன்னை எவரும் வரையக்கூடாது' என்று கடுமையாக தடுத்து விட்டதால்... அன்னாரின் உருவப்படம் ஒன்றுகூட இன்று இல்லாமல் போயிற்று.

    ஒருவேளை இருந்திருந்தால்...
    உள்ளம் திரிந்தோர் எவரேனும், அவரையும் ஃபிரேம் போட்ட ஃபோட்டோ கடவுளாக்கி ஊதுபத்தி கொளுத்தி மாலை போட்டு, சூடம் கொளுத்தி சிலை வைத்து பாலாபிஷேகத்துடன் பூஜை செய்து கடவுளுக்கு இணைவைத்து இஸ்லாத்தில் இருந்து வெளியேறி இருந்திருப்பார்கள்..!

    பகிர்வுக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  4. ஸலாம் சகோ.ஆனந்த்,

    அந்த புத்தகம் இன்னும் நான் படிக்கவில்லை. உங்கள் புத்தக அறிமுகவுரை படிக்கும் ஆவலை தூண்டுகிறது.

    //மைல்கல்லும்
    கடவுளாகும் நாட்டில்கூட
    நபிகள் இறைவனாக நகரவில்லை
    இது நாயனின் ஏற்பாடா
    இல்லை
    நாயன்வழி நபிகள்
    நட்டுவைத்த நோன்பா//

    இரண்டுமேதான்..!

    இன்று நாலு பேரு நல்லபடியா பாராட்டிவிட்டால்...
    முகம் மட்டுமின்றி முழு உருவத்தையும்
    விதவிதமாக பிளசிலும் முகநூலிலும்
    பற்பல போஸ்டாக போட்டு விளம்பரம் தேடுவோர் மத்தியில்...

    எவ்வளவோ போற்றுதலுக்கும் புகழ்தலுக்கும் உரியவராக இருந்தும்... அன்று நபியவர்கள் 'தன்னை எவரும் வரையக்கூடாது' என்று கடுமையாக தடுத்து விட்டதால்... அன்னாரின் உருவப்படம் ஒன்றுகூட இன்று இல்லாமல் போயிற்று.

    ஒருவேளை இருந்திருந்தால்...
    உள்ளம் திரிந்தோர் எவரேனும், அவரையும் ஃபிரேம் போட்ட ஃபோட்டோ கடவுளாக்கி ஊதுபத்தி கொளுத்தி மாலை போட்டு, சூடம் கொளுத்தி சிலை வைத்து பாலாபிஷேகத்துடன் பூஜை செய்து கடவுளுக்கு இணைவைத்து இஸ்லாத்தில் இருந்து வெளியேறி இருந்திருப்பார்கள்..!

    பகிர்வுக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  5. Dear friend,
    Am a Hindu, but I have so much respect on Islam. I have read this article and I felt happy, but your comment is hurting other religion, these things are making the core problem with Muslims and Hindus. Please respect everyone,...

    ReplyDelete
  6. Please let us know which of my comment hurts other religion..

    ReplyDelete
  7. Not yours... Your article is good... Am talking at the comment from Mr. Muhammad ashiq

    ReplyDelete
  8. அனானி நண்பரே... முகமது அஷீக் கமெண்ட்டில் யாரையும் புண்படுத்தும்படி இல்லையே!! மனித இனத்தின் பொதுவான குறைகளைத்தான் சுட்டி காட்டி இருக்கிறார்

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]