நான் என நம்மைப் பற்றி நினைத்து கொள்கிறோம் அல்லவா? இந்த நான் என்பது என்ன என்று பார்த்தால் , அது நம் உடல் மற்றும் மனம்தான். ( ஆன்மா என்ற சந்தேக கேசை இதில் சேர்க்க வேண்டாம் )
நாம் படிப்பது , கேட்பது , கற்பது , அனுபவங்கள் போன்றவை மனமாக மாறுகிறது. நாம் உண்பது உடலாக மாறுகிறது.
நல்லவற்றை படிப்பது , கேட்பது கொஞ்சம் சிந்தனை பயிற்சி என இருந்தால் மனம் செம்மையாக இருக்கும். நல்லவற்றை உண்டு , கொஞ்சம் உடற்பயிற்சி என இருந்தால் உடல் நன்றாக இருக்கும். இந்த இரண்டும் நன்றாக இருந்தால் , வாழ்க்கை சுமுகமாக போகும்.
இவ்வளவு எளிதானது.. ஆனால் நாம் இதை செய்வதில்லை என்பதுதான் வேடிக்கை.
நான் சாருவை விரும்புவதற்கு காரணம் இதுதான்.
அவர் இலக்கியம் , சிந்தனை , புத்தகங்கள் , கவிதை என எந்த அளவுக்கு பேசுகிறாரோ அதே அளவுக்கு உணவு பழக்கங்கள் குறித்தும் பேசுவார் .ஏகப்பட்ட குறிப்புகள் கொடுப்பார்.
அவர் சொல்லும் புத்தகங்களை பெரும்பாலும் படித்து விடுவேன். அதேபோல அவர் சொல்லும் உணவுக் குறிப்புகளையும் முடிந்த அளவு பின்பற்றி வருகிறேன்.
அவர் சொல்லும் இயற்கை உணவு ஆரம்பத்தில் கஷ்டமாக இருக்கும். ஆனால் ரெண்டு நாள் சாப்பிட்டால் போதும். பழகி விடுவது மட்டும் அல்ல. அதற்கு அடிக்ட்டாகவே ஆகி விடுவோம்.
தனிப்பட்ட முறையில் பேசுகையில் ஒரு மூலிகை சாறு பற்றி சொன்னார். அதன் மகத்துவமும் பலனும் கேட்பதற்கு பிரமிப்பாக இருந்தது. அதைப்பற்றி கட்டுரை எழுதுவதாக சொன்னார். இன்னும் ஏன் எழுதவில்லை என தெரியவில்லை.
அவர் சொன்னதை தொகுத்து எழுதி , அவருக்கு மெயில் அனுப்பினேன். ஆனால் இன்னும் அவர் எழுதவில்லை..அதை அவர் வெளியிட்டால் , பெரிய பரபரப்பு ஏற்படும். அதைப்பற்றி நான் சொல்வது எதிக்ஸ் அல்ல என்பதால் நான் அதைப்பற்றி சொல்ல முடியவில்லை.
மூலிகை சாறு , காய்கறி சூப் என சாப்பிட பழகி விட்டால் , டீ சாப்பிடுவது எல்லாம் இயல்பாகவே குறைந்து விடும்.
எஸ் ரா பரிந்துரைந்த தேனீர் கலை என்ற புத்தகம் படித்து , தேனீர் மீது ஒரு மயக்கம் ஏற்பட்டது. விளைவாக வித விதமான ஒருஜினல் தேயிலை தூள்களை வாங்கி வைக்கலானேன்.
டீ சாப்பிடுவது குறைந்ததால் , எப்போதாவது ஒரு நாள் மட்டும் , தேனீருக்கு என அந்த நாளை ஒதுக்கி ரசித்து சாப்பிடுவேன். மற்றபடி தேனீர் சாப்பிடுவது இயல்பாகவே குறைந்து விட்டது.
ஆனாலும் எனக்கு தேவைப்பட்ட சில இயற்கை உணவு பொருட்கள் எனக்கு கிடைக்கவில்லை, இந்த நிலையில்தான் விதை இயற்கை அங்காடியைப்பற்றி கேள்விப்பட்டு அங்கே சென்றேன்.
உண்மையிலேயே அசந்து விட்டேன். விதவிதமான இயற்கை சார்ந்த உணவு வகைகள், சிறு தானியங்கள் , சப்பாத்தி தோசை செய்வதற்கான மாவுகள் , தேன் , இயற்கை ஸ்னாக்ஸ் என க்ரியேட்டிவாக பல பொருட்கள் இருந்தன.
சிலவற்றை வாங்கி வந்தேன்.
அதில் நான் முதலில் டெஸ்ட் செய்தது சாமை என்ற தானியத்தை,.பலர் சாமையை ஆமையுடன் குழப்பி கொள்கிறார்கள்.. சாமை என்றால் அசைவமா என சந்தேகமாக கேடடார் ஒருவர்.
வரகு, தினை, சாமை போன்றவை எல்லாம் நம் பாரம்பரிய தானியங்கள். நம் ஊர் தட்ப வெப்ப நிலைக்கு இவைதான் சரியாக இருக்கும்.
இவற்றை மறந்து இயற்கைக்கு மாறான உணவுகளை உட்கொள்வதால்தான் , மருத்துவ மனைக்கு என தனியாக செலவு செய்ய வேண்டி வருகிறது.
மெரினா பீச்சில் காலையில் பலர் வாக்கிங் செல்வதை பார்க்கலாம். ஆரோகியத்துக்காகவோ, காலை அமைதியை ரசிப்பதற்காகவோ வாக்கிங் செல்பவர்கள் குறைவு.
கொழுப்பை கரைக்க, உடல் எடையை குறைக்க என எதிர்மறை செயலுக்காக வாக்கிங் வருபவர்களே அதிகம்.
உணவு விஷ்யத்தில் நான் பல தவறுகள் செய்து இருக்கிறேன். சில கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறேன்.
ஆனால் இனி தவறு செய்வதாக இல்லை,
இயற்கை உணவு என்பதை ஏன் மறந்தோம் என்பது தெரியவில்லை. சாமையை சமைத்து சாப்பிட்டேன், அவ்வளவு அருமையாக இருந்தது.
நான் சமைத்ததே அவ்வளவு சூப்பராக இருந்தால் , உண்மையிலேயே நன்கு சமைக்க தெரிந்தவர்கள் செய்தால் , எப்படி இருக்கும்..ம்ம்.. வாவ்.
விதை அங்காடி அடையாறு காந்தி நகர் பேருந்து நிலையத்தை தாண்டி ஒரு சிக்னல் வருமே , அங்கே மேம்பாலத்தில் ஏறாமல் சென்றால் ஒரு பிள்ளையார் கோயில் வரும், அதன் அருகில் உள்ளது..பயன்படுத்தி கொள்ளுங்கள்
"அவருக்கு மெயில் அனுப்பினேன். ஆனால் இன்னும் அவர் எழுதவில்லை..அதை அவர் வெளியிட்டால் , பெரிய பரபரப்பு ஏற்படும். "
ReplyDeleteROFL