Pages

Wednesday, August 28, 2013

சாருவின் இமயமலை பயணமும் ஜெயமோகனின் பரங்கிமலை பயணமும்- நிர்மலுடன் ஓர் உரையாடல்


உயிரை பணயம் வைத்து சாரு நிவேதிதாவும் அவர் அணியினரும் இமயமலை பயணம் முடித்து வந்தது பரபரப்பாக பேசப்பட்டது. காரணம் இப்போதுதான் ஒரு பேரழிவை உத்தர்கண்ட்  சந்தித்த நிலையில் , இந்த பயணம் ரத்து ஆகி விடும் என்றே பலர் நினைத்தார்கள்.

ஆனால் பயணம் திட்டமிட்டபடி சிறப்பாக நடந்தது.

எழுத்தாளர் ஜெயமோகன் பரங்கிமலைக்கு ஒரு நாள் பிக்னிக் போனாலே அது குறித்து ஒன்பது நாள் கட்டுரை எழுதுவார். மலைகளின் வழியே ஆன்மீக தரிசனம் என்பது போல எழுதிக் குவிப்பார். ஆனால் இத்தனை பெரிய பயணம் மேற்கொண்டும் சாரு ஸ்பாட் ரிப்போர்ட் ஏன் கொடுக்கவில்லை என சிலர் கேட்டவண்ணம் இருந்தனர்.

சாரு எது செய்தாலும் தானும் செய்து பார்க்க முனையும் ஜெமோ தானும் இமயமலை போவதாக அறிவித்துள்ளார். கண்டிப்பாக பக்கம் பக்கமாக எழுதுவார்.

இது குறித்து நண்பர் நிர்மலிடம் உரையாடியதில் இருந்து...


*********************************************************8

 நிர்மல் :  அகப்பாடுனு தொடர் எழுதறீகளே...
அது என்ன அகப்பாடு
புரியலியே


பிச்சை:

உங்க தலைவர் ( ஹா ஹா ) புறப்பாடுனு அர்த்தம் இல்லாம ஒரு தொடர் எழுதிக்கிட்டு இருக்கார்..அவரை விட கேவலமா , ஆபாசமா  எழுதலாம்னு டிரை பண்றேன்..முடியல அகதரிசனம் எனும் அக்கப்போர்



ஒ, ஒகே
அது சரி
புறப்பாடு என்றால் இமய மலை புறப்பாடா



ஆமா,,,அவர் அங்கேயே செட்டில் ஆனா நல்லது



ம்ம்ம்


ஜெ மோ ஒரு நாள் டூர் போனா ஒம்பது நாள் எழுதுவார்


சாருவின் ப்யணம் & ஜெமோ பயணம். பின் நவீனத்துவம் & நவீனத்துவம்.
இந்த ப்யணம் எனபதை பிரதி ( Text) என வைத்தால். எப்படியிருக்கும்


பிரதியை ரசிப்பவனுக்கும், பிரதியை நோட்ஸ் எடுக்கும் மேடைப்பேச்சாளருக்கும் இருக்கும் வித்தியாசம்தான்


யெஸ்
author and writer


‘இமயமலை போய் அதன் வாழ்க்கையை வாழ்பவன் ஒரு விதம்,,அங்கும் போய் நோட்ஸ் எடுத்து ஸ்டேட்டஸ் போடுபவன் ஒரு விதம்’


yes

அதாவது சாரு இமயமலை போனால் , அங்கு சாரு மறைந்து இமயமலையாகவே ஆகி விடுகிறார். ஜெமோ போனால் , அங்கு மலை இருப்பதில்லை...ஜெமோதான் இருப்பார்


யெஸ்
Author is dead, in case of charu



எக்சாக்ட்லி
உதாரணமாக நீங்கள் சென்னை வந்தால் , சென்னை டிராபிக் சென்னை உணவகம் என சென்ன்னை உங்களுக்குள் நிகழவ்தை நீங்கள் அனுமதிக்க வேண்டும்.... உங்க ஊர் வாழ்வையே இங்கு வாழ முனைந்தால் , சென்னை பய்ணமே தேவை இல்லையே


யெஸ்
இங்குள்ள சிலர் ஐரோப்போ சுற்றூலா செல்லுவார்கள். 10 நாட்களில் 12 நாடுகள் செல்வார்கள்
எப்படி அது முடிகிறது என தெரியவில்லை




சென்னை டிராபிக் கஷ்டம்தான் ..இல்லை என சொல்லவில்லை..அதற்காக ஒரு ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டு, ஸ்டேட்டஸ் போடுவது , சென்னை வந்ததாகவே கருதப்படாது


யெஸ்
கரெக்ட்


ஒரு விமானம் பிடித்து இமயமலையின் ஒரு பாதுகாப்பான இடதுக்கு போய் அமர்ந்து , இமயத்தின் வழியே என தான் படித்ததை எழுதுவார்
ஆனால் சாரு , இமயமலை வாழ்வை வாழ்ந்து விட்டு வந்து இருக்கிறார்


யெஸ்


என்றாவது ஒரு நாவலில் அது வீரியத்துடன் வெளிவரும்.. அதாவது அவர் பயணம் , நம் ஒவ்வொருவரின் அனுபவம் ஆகி விடும்..ஆனால் ஜெமோவை பொருத்தவரை , மற்றவர்களின் அனுபவங்கள்தான் அவர் பயணமாக இருக்கும்


இல்லை அனுமானங்கள்

ஆமா
ஒரு உணவை சாப்பிடும்போதே அதை ரசித்து செய்தால்தான் முழுமையாக ரசிக்க முடியும்... பயணத்தின்போது நோட்ஸ் எடுத்து ஸ்பாட் ரிப்போர்ட் கொடுப்பதெல்லாம் இலக்கியவாதி செய்யும் வேலை அல்ல
பயணத்தை ரசித்து உள்வாங்கி , அந்த அனுபவத்தை வாசகனுக்கு கடத்த வேண்டும் என்றால் பயணத்தை முழுமையாக செய்ய வேண்டும்’

இந்த கவிதையை பாருங்கள்..இந்த அளவு உணர்வுகளை வார்த்தைகளால் வெளிப்படுத்த எந்த அளவுக்கு தவம் செய்து இருக்க வேண்டும் என யோசியுங்கள்..அறிவு ஜீவித்தனம் ஒருக்காலும் இந்த உணர்வை அனுபவிக்க முடியாது//
எத்தனை நாட்கள் கடந்திருக்கும் என்ற
கணக்கு தப்பிவிட்டது
மறிமான் கூட்டங்கள் அலை அலையாய் நிழல் 
ரூபமென பாய்ந்து சென்று கொண்டு இருக்கின்றன
பனிச்சிகரங்களில் லயமாகி நிற்கிறேன்
நிசப்தம்
வார்த்தைகள் அற்றுப்போன ஏதுமற்ற
சூன்யம்
கருந்துளைக் கணம்
புறச்சூழலின் மிதக்கும் நுரைத்தன்மையிலிருந்து
விலகிவிடத் துடிக்கிறேன்
இந்த வாழ்வின் அத்தனை வார்த்தைகளையும்
தள்ளிவிட்டு இதோ இங்கே மண்டியிட்டு
நிற்கிறேன் உன்னை நேசித்தபடி
இந்த கணத்தில் சுவாசமும் உறைந்து’
போகுமோ
‘சொல்
- சீரோ டிகிரி





9 comments:

  1. ஒருவரின் சிறப்பை சரியாகச் சொல்ல
    இன்னொருவரை தாக்கினால்தான் ஆகும் எனில்
    பழைய எம்.ஜிஆர் சிவாஜி ரசிகர்கள்
    போலத்தான் ஆகிவிடுகிறோம் நாமும்

    ReplyDelete
  2. இவ்வளவு மோசமாக எழுதிரீங்களே. உங்களுக்கு மன நோய் இருப்பதாக தெரிகிறது. ஏதாவது ஆஸ்பத்திரியில் சென்று மருத்து மாத்திரை சாப்பிடவும்.

    ReplyDelete
    Replies
    1. இவர் ரொம்ப ஒன்னும் மோசமா எழுதிடல. இத விட பல மடங்கு மோசமா எழுதறவங்க இருக்காங்க.

      இத படிக்கும்போது இவர் ஜெயமோகன் எழுதுன எதையுமே படிச்சதில்லனு நினைக்குறேன்.

      குறிப்பு: நான் எந்த கோஷ்டீயும் இல்ல எனக்கு யாரும் தலைவனூம் இல்ல.

      Delete
  3. //எழுத்தாளர் ஜெயமோகன் பரங்கிமலைக்கு ஒரு நாள் பிக்னிக் போனாலே அது குறித்து ஒன்பது நாள் கட்டுரை எழுதுவார். மலைகளின் வழியே ஆன்மீக தரிசனம் என்பது போல எழுதிக் குவிப்பார்.

    ஏன்பா பிச்ச,
    அப்புறம் எழுத்தாளன்னா யாரு? சும்மா தாய்லாந்து போய் புட்டி, குட்டிகளோட ஜாலியா இருந்திட்டு வர்ரவனா? பயணம் போய் கவனிச்சத எல்லாம் எழுத்தில கொண்டு வர்ரவந்தான் எழுத்தாளன்..

    //ஆனால் இத்தனை பெரிய பயணம் மேற்கொண்டும் சாரு ஸ்பாட் ரிப்போர்ட் ஏன் கொடுக்கவில்லை என சிலர் கேட்டவண்ணம் இருந்தனர்.

    இந்த செத்த கிளிக்கு எவ்ளோ நாலு மேக்கப் போட்டு ஓட்டுரீங்கன்னு நானும் பாக்குறேன் ...

    ஒன்ன மாதிரி பிச்சக்காரப்பயலுகள வச்சு இணையத்துல இது மாதிரி கேவலமான விளம்பரக் கட்டுரைய எழுதிக்குறான் அந்தத் சாரு தாத்தா..

    சீரியஸா கேக்குறேன் ..ஒனக்கெல்லாம் கூச்சமாவே இல்லையா மிஸ்டர் பிச்ச??

    ReplyDelete
  4. சாருவுக்கு பயணக்கட்டுரை எழுத வக்கில்லை!... அது உங்களுக்கே உறுத்துகிறது போலிருக்கிறது. சப்பைக்கட்டுகட்ட ஏதோ உளறியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  5. நான் ஜெ அபிமானி அல்ல. ஆனாலும் நீங்கள் சொல்வது எனக்கே அபத்தமாகப் படுகிறது. அப்படிப் பார்த்தால் சாரு போன பின்தான் நமீபியா போனாரா? சாரு போன பின்தான் அருகர்களின் பாதையில் போனாரா? என்ன பேசுகிறீர்கள்?
    சரவணன்

    ReplyDelete
  6. பிச்ச,
    http://www.jeyamohan.in/?p=38934
    இத படிச்சு பாரு...இத மாதிரி ஓராயிரம் எழுதியிருக்காரு ஜெமொ...

    சாவுறதுக்குள்ள இது மாதிரி ஒன்னே ஒன்னு ஒன் 'பீரு நிவேதிதா' எழுதிட்டான்னா அவன் எழுத்தாளன்னு ஒத்துக்கிறேன்...

    ReplyDelete
  7. Please keep writing such articles.. they are so funny.. you seem to be funnier than your favorite writer Charu.. Charu can not even come close to be called a writer, let alone his being compared with J..

    Charu is luckier to have you guys as fans.. his serious attempt at comedy will reach millions of people through you all.. good luck for more and more comedy episodes.

    ReplyDelete
  8. புறப்பாடு என்பது அர்த்தமில்லாத வார்த்தைனு எப்படி முடிவுக்கு வந்திங்க. நிஜமா சொன்னீங்களோ பகடியோ தெரியல. "வேலைபாடு" என்ற பிரயோகம் தூத்துக்குடி பகுதியில் சாதாரனம். எந்த அகராதி துணையில்லாமல் departure என்று புரிகிறது.

    உங்கள் கவனத்திற்கு https://ta.m.wiktionary.org/wiki/புறப்பாடு

    பயணம் போற விஷயத்துல அந்த ஆளோட ஒப்பிட முடியுமா ?

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]