Thursday, October 3, 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்- தமிழ் சினிமாவின் அவமானச் சின்னம்


என் பொது வாழ்க்கையில் , ஒரு சினிமாவுக்கு கிளம்பிச்சென்று , படம் பார்க்காமல் வந்ததாக வரலாறு இல்லை. பிளாக்கில் டிக்கட்  வாங்கியாவது படம் பார்த்து விட்டுத்தான் வருவேன்.

ஆனால் மிஷ்கின் படம் பார்க்க , கஷ்டப்பட்டு கிளம்பி அவ்வளவு தூரம் சென்று விட்டு படம் பார்க்காமல் வர வேண்டியதாயிற்று.    அலுவலக நண்பர்கள் சேர்ந்து  செல்வதாக திட்டம். சிலரால் வர முடியாமல் போகவே , எங்களுடன் ஒரே ஒரு பெண் மட்டும் வர வேண்டிய நிலை.. ஆனாலும் எங்களுக்குள் பக்குவமான நட்பு இருப்பதால் , அதில் பிரச்சனை இல்லை. ஆனால் தியேட்டரை அடைந்ததும் பயங்கர அதிர்ச்சி. எங்களையும் சேர்த்து தியேட்டருக்கு 11 ஆட்கள் மட்டுமே வந்து இருந்தனர். அதில் சில காதல் ஜோடிகள். அவர்கள் படம் பார்க்க வந்தது போல தெரியவில்லை.

இந்த சூழ் நிலையில் அந்த பெண் தோழருடன் படம் பார்ப்பது சரியல்ல என தோன்றியதால் , படம் பார்க்காமல் திரும்பினோம். நண்பர்களுடன் சேர்ந்து படம்பார்ப்பதே , கூட்டத்தோடு கூட்டமாக ரசிப்பதற்குதான்..ஆக எரிச்சலுடன் திரும்ப நேரிட்டது.

ஆனால் முந்தைய மிஷ்கின் படங்களை ரசித்தவன் என்ற முறையில் , இந்த படத்தையும் பார்க்கலாம் என்று நினைத்து நான் மட்டும் போனேன்.

அப்போது ஓரளவு கூட்டம் ( சுமார் 30 பேர் )  இருந்தது .

படம் பார்ப்பதுடன் ரசிகர்கள் பல்ஸையும் கவனிப்பது என் இயல்பு என்பதால் , அந்த கூட்டம் ஓரளவு திருப்தி படுத்தியது.

படத்தின் ஆரம்பமே ஏமாற்றம் அளித்தது.  படம் எதோ ஒரு கற்பனையூரில் நடப்பது போல இருந்தது.  ஒருவர் உயிருக்கு தன்னந்தனியாக போராடிக்கொண்டு இருக்கிறானாம். சுற்றிலும் ஆளே இல்லையாம். இப்படி சென்னையில் நிகழ வாய்ப்பில்லை.
உதவுகிறார்களோ இல்லையோ..அது வேறு பிரச்சனை. ஆனால் கூட்டம் கூடி வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விடுவது சென்னை இயல்பு.

ஒரு மாணவன் காப்பாற்றுகிறான் . அதனால் ஏற்படும் விளைவுகள் என படம் செல்கிறது. அதை எவ்வளவு விறுவிறுப்பாக எடுத்து இருக்கலாம். மாறாக படு மொண்ணையாக எடுத்து இருக்க்கிறார் இயக்குனர்.

இனிமே தமிழ் படத்தை தியேட்டரில் வந்து பார்ப்பியா.. பார்ப்பியா என செருப்பால் அடிப்பது போல திரைக்கதையை அமைத்துள்ளார்கள்.

ஏன் போரடிக்கிறது என்றால் , நம்மால் முதல் ஒரு மணி நேரம் வரை படத்தில் ஒன்றவே முடியவில்லை.

ஏதாவது நல்ல படம் ஒன்றை யோசித்து பாருங்கள்.

ஷேடோ ஆஃப் டவுட் என்ற ஹிட்ச்காக் படத்தை யோசித்து பாருங்கள்.

ஒரு கொலைகாரன் , தன்னை பாதுகாத்து கொள்ளும் பொருட்டு , தன் உறவினர் வீட்டுக்கு வருகிறான் என படம் ஆரம்பிக்கிறது.

அவன் பிடிபட்டு விடக்கூடாதே என அவன் கோணத்தில் படம் நகராது. கொஞ்ச நேரத்திலேயே அவனால் , அந்த வீட்டில் இருக்கும் உறவுப்பெண்ணுக்கு ஆபத்து வந்து விடக்கூடாதே என அந்த ஹீரோயின் கோணத்தில் அவள் உணர்வுகளுடம் ஒன்ற ஆரம்பித்து விடுவோம்.அதன்பின் அவளுக்கு வரும் பிரச்ச்னைகள் , அவள் எப்படி சமாளிக்கிறாள் என படம் பரபர என நகரும். காரணம் அவள் கேரக்டர் கொஞ்ச நேரத்திலேயே எஸ்டாபிளிஷ் ஆகி விடுகிறது.

இப்போது வந்த பார்க்கர் படத்தை எடுத்து கொண்டால் , அதை சிறந்த படம் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனாலும் ஒருவாட்டி பார்த்து ரசிக்கத்தக்க படம். அதிலும் கதானாயகன் தேவையின்றி யாரையும் கொல்ல மாட்டான் என்பது போல அவன் கேரக்டர் நம் மனதில் பதிவதால் , படத்துடன் ஒன்ற முடிகிறது.

ஓ. ஆட்டுக்குட்டியும் படத்தில் அந்த ஓநாய் கேரக்டர் பற்றி நமக்கு எதுவும் தெரியாததால் , அவன் மீது நமக்கு எந்த ஆர்வமும் இருப்பதில்லை. எனவே எந்த பதைபதைப்பும் நிகழ்வதில்லை. அந்த மாணவன் கேரக்டர் மீது வேண்டுமானால் கொஞ்சம் ஈடுபாடு ஏற்படுகிறது. அதிலும் ஆழமில்லை. முக்காலவாசி படம் வரை படத்துடன் ஒன்றாமலேயே பார்க்கிறோம். இதுவே படத்தின் பெரிய தோல்வி என கருதுகிறேன்.

ஆனாலும் அந்த கேரக்டர் பற்றி காட்சி ரீதியாக ஏதாவது சொல்லி , ஒட்டு மொத்த படத்துக்கும் வேறோர் அர்த்தம் கொடுப்பார் என எதிர்பார்த்தேன். எனக்கு கிடைத்ததோ பெரிய அதிர்ச்சி.

\பாசமலர் படத்தில் கை வீசம்மா கை வீசு என சிவாஜி ஒரு வசனம் பேசுவாரே..அது போல ஒரு வசனம் பேசுவார் பாருங்கள்/ . எனக்கு சத்தியமாக கண்ணீரே வந்து விட்டது. பாஸ் ..இது 2013.... இந்த சீனைத்தான் படத்தின் முதுகெலும்பாக நினைத்து இருக்கிறார் என்றால் , சினிமாவே அவருக்கு தெரியவில்லை என்றே பொருள்.

நாம் சிவாஜியின் வசனத்தை குறை சொல்லவில்லை. அந்த காலத்துக்கு வசனம் தேவைப்பட்டது. ஆனால் , இன்றைய நிலையில் வசனத்தை நம்பி அந்த காட்சியை வைத்தது பெரிய பிழை என்பேன்.

an occurrence at owl creek bridge என்று படம் வந்தது.   அதில் தூக்குத்தண்டனை கைதி தன் மனைவியை தன் மனதில் காண்பது , நீரில் மிதக்கும் மரத்துண்டு என சில காட்சிகள் நம் மனதில் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தும். நிமிடக்க்கணக்கில் பேசும் வசனங்கள் இதை ஒரு போதும் சாதிக்காது.

படம் இரவில் நடக்கிறது என்கிறார்கள்.. ஆனால் சென்னையின் இரவு பற்றிய காட்சிப்படிமங்களோ , ஒலிக்குறிப்புகளோ சற்றும் இல்லை.

ஒரு முறை சாவியை அலுவலகத்திலேயே வைத்து வந்து விட்டேன். மீண்டும் அலுவலகம் செல்ல முடியாது.. சாவியும் இல்லை. என்ன செய்வது... இரவு முழுக்க சென்னையை இலக்கின்றி சுற்றி வந்தேன். பகல் நேர சென்னையில் இருந்து மிக மிக மாறுபட்ட காட்சி , மாறுபட்ட மனிதர்கள் என புதிய உலகத்தை பார்த்தது போல இருந்தது.. ஆனால் படத்தில் அது இரவு போலவே இல்லை. இரவுக்கே உரிய சப்தங்களை இளையராஜா இசை விழுங்கி இருக்கிறது.

புத்திசாலித்தனமான , சுவையான காட்சிகளை தேட வேண்டி இருக்கிறது. சும்மா வீடியோ கேம் போல சுட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

கொலைகாரன் கில்லாடியாக இருப்பான் என நினைக்கிறோம். அவனோ இரவில் தப்பிப்பது ரிஸ்க் என்ற பொது அறிவு இல்லாமல் இருக்கிறான். போலீசார் அதை விட முட்டாளாக இருக்கிறார்கள்.

அதிலும் வில்லனை செக் போஸ்ட்டில் பார்த்துவிட்டு , கொஞ்சம் கூட அதிர்ச்சி அடையாமல், ஊரில் இருந்து வந்து இருக்கும் சித்தப்பாவை குசலம் விசாரிப்பது போல விசாரித்து , சுடப்படுவது உலகத்தரம்.

அந்த காலத்தில் மொட்டை பாஸ் கிளைமேக்ஸ் சண்டைக்கு வருவது போல , பொறுப்பாக யூனிஃபார்ம் அணிந்து கிளைமேக்ஸ் சண்டைக்கு வருவது,  வீட்டில் அமர்ந்து கதை கேட்பது போல , அந்த அபாயகரமான சூழலில் குழந்தை கதை கேட்பது , அதற்கு பொறுமையாக விளக்கமாக கதை சொல்வது, கிளைமேக்சில் போலிஸ் வந்து போஸ் கொடுப்பது... முடியலடா சாமி....

நல்ல அம்சங்களே இல்லையா என்றால் இருக்கின்றன.. ஆனால் , தோல்வி உறுதி என தெரிந்த பின் , ஜிம்பாப்வே போன்ற அணிகளின் பேட்ஸ்மேன்கள் இலக்கு ஏதும் இன்றி அவ்வப்போது அடிக்கும் அருமையான ஷாட்கள் போல பலனின்றி போய் விட்டன.. இளையராஜாவின் இசை சில இடங்களில் , மிஷ்கினின் நடிப்பு சில இடங்களில் , பிச்சைக்காரன் கேரக்டர் என இருளில் சில நட்சத்திரங்கள் மின்னுவதை மறுக்க முடியாது.. ஆனால் அத்தனையும் வீணாகி விட்டது..

சரி...எத்தனையோ குப்பைகள் வருகின்றன.. அதுபோல இதுவும் இருக்கட்டுமே என நீங்கள் நினைக்கலாம். இது ஏன் அவமானச்சின்னமாகிறது என நினைக்கலாம்.

ஒரு சாமியார் விசிடி பரபரப்பாக பேசப்பட்டது. அலைந்து திரிந்து வாங்கினேன். வாங்கும்போதே ப்ரிண்ட் நன்றாக இருக்காது என தெரியும் என்பதால் , எனக்கு ஏமாற்றம் இல்லை.

ஆனால் ** நடிகை விசிடி வாங்கி பார்த்த போது , செம கோபம் வந்தது.. காரணம் அதில் இருந்தது அந்த நடிகையே அல்ல... நம்பி ஏமாந்தால் வருத்தம் இருக்கத்தான் செய்யும்.

அது போல , மிஷ்கின் , இளையராஜா என நம்பி ஏமாந்த வலி அவ்வளவு சீக்கிரம் ஆறாது.

இந்த படத்தை மக்கள் புறக்கணித்து விட்டாலும் , சினிமா ரசிகர்கள் கண்டிப்பாக இந்த படத்தை பார்க்க வேண்டும். ஒரு படத்தை எப்படி எடுக்கக்கூடாது என தெரிந்து கொள்ள...

வெர்டிக்ட் - ஓ நாயும் ஆட்டுக்குட்டியும் - ஒப்பேறாது







35 comments:

  1. இந்த விமர்சனத்தை சினிமா இரசிகர்கள் புறந்தள்ளினாலும் விமர்சகர்கள் படிக்க வேண்டும்.. ஒரு விமர்சனம் எப்படி இருக்கக் கூடாது என அறிந்துக் கொள்ள.. அவ்வளவும் காழ்ப்பு.

    ReplyDelete
  2. உங்களை பார்த்தால் வருத்தமாக இருக்கிறது. நாளை உங்கள் தலைவர் சாரு இந்த படத்தை பாராட்டி விமர்சனம் எழுதிய பிறகு என்ன செய்யப்போகிறீர்களோ!

    ReplyDelete
  3. I think you are blogging from an mentally retarded asylum.. If u have time google the meaning of the word Masochist

    ReplyDelete
  4. endaa ethavathu eluthanum nu eluthuraya unakke koncham overa theriyala. inime vimarsanam perula ipdi eluthatha vithiyasama eluthuranu ninappo. ithula ponnu kuda padathuku poitu nalla uravu irukkunu oru pechu pichakaarapaya pulla.

    ReplyDelete
  5. Fully biased...just because charu dont like myskin..you have reviwed it this way.. i value karundhel's review.. you are a Jingchak...

    ReplyDelete
  6. முட்டாளிடம் இருந்து முட்டாள்தனமான விமர்சனம்.

    ReplyDelete
  7. லூசாடா நீ அரக்கிறுக்க

    ReplyDelete
  8. மிஷ்கின் சாருவை ஒரு விழாவில் காய்ச்சு காய்ச்சதை பிச்சை நினைவில் கொண்டு சமயம் பார்த்து வாங்கிவிட்டார்.. பலே

    ReplyDelete
  9. நான் நடுனிலையாகத்தான் எழுதி இருக்கிறேன்.. ஒரு பேச்சுக்கு உள் நோக்கம் இருப்பதாக வைத்துக்கொண்டாலும், தமிழ் நாடு முழுக்க படத்தை ரசிகரகள் புறக்கணித்து விட்டார்களே...அவர்களுக்கு என்ன உள் நோக்கம் இருக்க முடியும்

    ReplyDelete
  10. பிச்சைக்காரனுக்கு செக்குருட்டி பிச்சைக்காரனேவா?
    யுனிபார்ம் பிரமாதம்...!!

    ReplyDelete
  11. // தமிழ் நாடு முழுக்க படத்தை ரசிகரகள் புறக்கணித்து விட்டார்களே...அவர்களுக்கு என்ன உள் நோக்கம் இருக்க முடியும்//
    ராஜாராணி படத்தை ஏற்று கொண்டார்களே அப்படின்னா அது நொல்ல படமா ???

    ReplyDelete
  12. @pichaikaaran ::: Nee yenna tamilnadu full'ah poi padatha paarthutu vanthiyaa... ?? Unna'lam yevan padam paaarka sonnathu ... Apadiyae paaarthalum unna'lam yevan review yelutha sonnathu ... ?

    Oruvellai nee POSTER'la padatha paarthutu BLOG yeluthuriyo ??

    ReplyDelete
  13. @pichaikaaran,
    உங்க கணிப்புப்படி, புறக்கணிக்கப்பட்ட படங்கள எல்லாம் மோசமான படங்களா?
    ஆரண்யகாண்டம் கூடத்தான் புறக்கணிக்கப்பட்டது.

    கொண்டை வெளியே தெரிந்த பிறகும் சப்பைக்கட்டுவது உங்களுக்கும், உங்கதலைவருக்கும் கைவந்த கலை போல :)

    ReplyDelete
  14. Please stop writing any more reviews. You are not ardant and sincere reader. I may not belittle you and It's ur right to worship the person who you likes and me too admire him but not bluntly. But one thing I remind you, dont be cause of spoiling the art than be as straight forward reviewer. If you dont like be abstained silently. That's the sign of good and sincere literary follower. . Be voracious but dont dont bark with your block head.

    ReplyDelete
  15. //ஒரு சாமியார் விசிடி பரபரப்பாக பேசப்பட்டது. அலைந்து திரிந்து வாங்கினேன். வாங்கும்போதே ப்ரிண்ட் நன்றாக இருக்காது என தெரியும் என்பதால் , எனக்கு ஏமாற்றம் இல்லை.

    ஆனால் ** நடிகை விசிடி வாங்கி பார்த்த போது , செம கோபம் வந்தது.. காரணம் அதில் இருந்தது அந்த நடிகையே அல்ல... நம்பி ஏமாந்தால் வருத்தம் இருக்கத்தான் செய்யும்.//

    Your taste is only to this level....You fir only for reviewing the above CD's..try to be genuine to some extent atleast..do be over biased

    ReplyDelete
  16. இவ்வளவு நகைச்சுவையாக கூட நீங்கள் எழுதுவீர்களா? பலே...பலே...

    ReplyDelete
  17. unmaiyelay nee pichaikaaran mathiri than vimarsam ezhuthi irugga.

    ReplyDelete
  18. nee nadunilaiyalan nu neeyey solra athai nanga sollanum da pichaikara.

    ReplyDelete
  19. //நாம் சிவாஜியின் வசனத்தை குறை சொல்லவில்லை.//அந்த பயம் இருக்கட்டும் :)

    ReplyDelete
  20. அரும்ம்மையான கருத்து,,,,,,,,,,,,,,,,, பலே,,,,,,,,,,,, பலே ,,,,,,,,,,,,,,,,,,,,,சூப்பரு ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, நீங்க உலக சினிமாலாம் பார்ப்பிங்க போல.....................................................தொடர்ந்து நீங்க விமர்சனம் எழுதணும் ..........அரும்மை................அரும்மை.........

    ReplyDelete
  21. படம் படுத்துக் கொண்டுவிட்டதை மிஷ்கின் ஒப்புக்கொண்டு விட்டாரே, அப்புறம் ப்ளாக்கரைஏன் bias என அவதானிக்கிறீர்கள்?

    ReplyDelete
  22. இந்த விமர்சனத்தை சினிமா இரசிகர்கள் புறந்தள்ளினாலும் விமர்சகர்கள் படிக்க வேண்டும்.. ஒரு விமர்சனம் எப்படி இருக்கக் கூடாது என அறிந்துக் கொள்ள.. அவ்வளவும் காழ்ப்பு......

    vetti paya nee itha vare yuva refer pantrar ..

    ReplyDelete
  23. "PICHAIKARAN VANDHI EDUTHADHU MADHIRI NU" oru pazhamozhi soluvanga adhuku ena meaning nu ipadhan puriyudhu

    ReplyDelete
  24. //nee nadunilaiyalan nu neeyey solra athai nanga sollanum da pichaikara.//

    Pls Don't insult original beggars against this low life

    ReplyDelete
  25. விரலை நாக்குக்குள் ஓட்டி ஒங்காளித்து தானும் வாந்தி எடுத்துவிட்டதாய் யாருக்கோ காட்ட துடித்துக்கொண்டு இருக்கின்றார் 'பிச்சைக்காரன்'

    ReplyDelete
  26. விரலை நாக்குக்குள் ஓட்டி ஒங்காளித்து தானும் வாந்தி எடுத்துவிட்டதாய் யாருக்கோ காட்ட துடித்துக்கொண்டு இருக்கின்றார் 'பிச்சைக்காரன்'

    ReplyDelete
  27. இப்படி எல்லாம் விமர்சனம் செய்துதான்... சாருவை குளிர்விற்கும் அளவிற்கா சாரு இருக்கிறார். இன்னும் லிங் கொடுக்கவில்லையா அவரின் தளத்தில். ஒரு வேளை இன்னும் சாரு மிஷ்கின் நண்பர்களாகவே இருந்திருந்தால் இந்த விமர்சனம் எப்படி இருந்திருக்கும்.

    ReplyDelete
  28. ஆமா நீ ஏன் ராஜா ராணிக்கு விமர்சனம் எழுதக்கூடாது?. அது சூப்பர் டூப்பர் ஹிட்டுயா. இனிமே மக்கள் ஆதரிக்கிற படங்கள பத்தி எழுது. சரியா.

    ReplyDelete
  29. அடேய் அதி மேதாவி அரை கிறுக்கா.. தமிழ் பட விமர்சனத்துக்கு ஏண்டா இங்க்லீஸ் பட கதையா சொல்லிட்டு இருக்க.. அவ்ளோ பெரிய புத்திசாலி பு--- வா நீ.. நாதரி நாயே கைல மட்டும் கிடைச்சினா கைமா பண்ணிருவேன் பரதேசி..

    ReplyDelete
  30. சிவாஜி மட்டுமா, சிவாஜி ராவும் பாடிட்டார்யா,
    http://www.youtube.com/watch?v=4wBtFnNpeoM
    பழைய மான்குட்டி பிரியாணி, இப்போ ஆட்டுகுட்டி பிரியாணி.
    குத்துபாட்டு, சந்தானம் வகையறா இல்லாமா படம் எடுத்தாலே பெரிய விஷயம், அந்தவகையில போஸ்டர் ஓட்டி சந்தோஷப்பட வேண்டியதுதான்

    ReplyDelete
  31. nee pichaikaaran illa paithiyakaaran

    ReplyDelete
  32. dai ne matum en kaila matu unaku iruku.... ne cinemala enada vetti muruchi iruka... padatha vimarsanam seiratha soli nala cinema & public kum sethu kedukathada...

    ReplyDelete
  33. மெண்டல் தனமான பதிவு. நீ எல்லாம் இன்னும் பல காலம் இருந்து சாரு பிச்சை எடுத்து சாப்பிடுவதை பார்த்து மகிழ வேண்டும்.

    ReplyDelete
  34. விமர்சனம் கூட ஓக்கே அது உங்களோட கோணம்,ஆனா படத்தை திட்டணும்னு உங்களுக்கு இருக்கிற நிர்பந்தத்த நினைச்சா தான் பரிதாபமா இருக்கு.

    ReplyDelete
  35. விமர்சனம் என்னும் பெயரில் வாந்தி எடுக்கலாமா பிச்சை?

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா