ஒரு விஷயத்தைப் பற்றி எவ்வளவு தூரம் தெரிந்து கொள்ள ஆரம்பிக்கிறோமோ அந்த அளவுக்க்கு , அந்த துறை பற்றிய அறியாமை நமக்கு தெரிய ஆரம்பிக்கும்.
நாமெல்லாம் சினிமா பார்த்து வளர்ந்தவர்கள்..கடந்த சில ஆண்டுகளாக சினிமாத்துறையை சேர்ந்தவர்கள்தான் முதல்வராக இருக்கிறார்கள்.. ஆனால் சினிமாவைப்பற்றிய சில அடிப்படை தகவல்கள்கூட தெரியாத நிலையில்தான் பெரும்பாலும் இருக்கிறோம்.
இந்திய சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் தமிழ் ஸ்டுடியோ அமைப்பு , சிறப்பு புகைப்பட கண்காட்சி நடத்தி வருகிறது. இதன் திடக்க விழா 12.10.2013 அன்று நடந்தது..
அதில் ட்ராட்ஸ்கி மருதி, ஒளிப்பதிவாளர் நல்லுசாமி , ஃபில்ம் ந்யூஸ் ஆனந்தன் ஆகியோர் மிகச்சிறப்பான உரை வழங்கினார்கள்.. ஃபார்மலான உரையாக இல்லாமல் , ப்ரொஃபசனல் உரையாக இருந்தது. அதில் , இந்தியாவில் இது வரை 70 எம் எம் படம் எடுக்கப்பட்டதே இல்லை என்ற செய்தி என்னை ஆச்சர்யப்படுத்தியது.. இது போல பல புதிய செய்திகள் கிடைத்தன. அபூர்வமான புகைப்படங்களை பார்க்க முடிந்தது..
வரவேற்று பேசிய அருண், இந்த கண்காட்சி தேடலுக்கான விடை அல்ல...தேடலுக்கான ஆரம்பம் என்றார். ஒவ்வொரு படத்துக்கு பின் இருக்கும் கதைகளை , வரலாற்றை தேடிப்பாருங்கள் என்றார்.
மருது பேசுகையில், தமிழகமும் தென்னிந்தியாவும் இந்திய சினிமாவில் முக்கியப்பங்காற்றி இருக்கின்றன.. ஆனால் அதை எல்லாம் மறந்து விட்டனர் என்றார்.
நல்லுசாமி பேசுகையில் தொழில் நுட்பத்தின் பரிணாம வளர்ச்சியைப்பற்றி விரிவாக சொன்னார்.
கறுப்பு வெள்ளை, டெக்னிக் கலர் , ஈஸ்ட்மென் கலர் என்று ஒவ்வொன்றையும் விரிவாக சொன்னார்.
35 எம் எம் படம் , சினிமாஸ்கோப் , 70 எம் எம் இவை எல்லாம் எப்படி எடுக்கபடுகின்றன என்று சொன்ன அவர் , தமிழில் இதுவரை 70 எம் எம் படங்கள் எடுக்கப்பட்டதே இல்லை என்று சொன்னபோது பார்வையாளர்கள் திகைத்தனர்... எத்தனையோ 70 எம் எம் படங்கள் வந்து இருக்கின்றனவே என நினைத்தபோது அவர் விளக்கினார்.
அஸ்பக்ட் ரேஷியோ குறித்து விளக்கிய அவர் , நம் ஊரில் சினிமாஸ்கோப் முறையில் எடுத்து அதை 70 எம் எம் ஆக மாற்றுகிறார்களே தவிர நேரடியாக 70 எம் எம் எடுத்ததில்லை என்றார்.
காந்தி படத்தை இந்திய படமாக கருதினால் , அது மட்டும்தான் 70 எம் எம்மில் எடுக்கப்பட்ட ஒரே இந்திய படம் என்றார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது..
தொழில் நுட்பம் வளர்ந்த அளவுக்கு கலை வளரவில்லை.. அழகியல் வளரவில்லை.. ஆவாரா, கான் வித் விண்ட் போன்ற படங்களுக்கு நிகரான ஒளிப்பதிவு இன்று இல்லை...100 கோடி 200 கோடி செலவழித்து என்ன பயன்?
மொழிக்கு ஓர் இலக்கணம் இருக்கிறது.. நேற்று வந்தான் என சொல்ல வேண்டும். நேற்று வருவேன் என சொல்ல கூடாது. அது போல சினிமாவுக்கும் இலக்கணம் இருக்கிறது.
180 டிகிரி கான்சப்ட் என்று இருக்கிறது.. சில காட்சிகளில் வேண்டுமென்றே அதை மீறலாம்.. ஆனால் அப்படி ஒன்று இருப்பதே தெரியாமல் , அதை மீறி படம் எடுக்கிறார்கள்.. இரண்டு கேரக்டர் பேசினால் ., யாரை ஃபோக்கஸ் செய்ய வேண்டும் என காட்சியின் அடிப்படையில் இயக்குனர் சொல்ல வேண்டும். அப்படி சொல்லாவிட்டால் , இருவரையும் ஃபோக்கஸ் செய்து எடுக்க வேண்டும். ஆனால் இயக்குனர்களுக்கு ஒளிப்பதிவு குறித்த அறிவு இல்லாததால் அவர்கள் சும்மா சீனை மட்டும் சொல்லி விடுகிறார்கள்..கேமரா மேன் தன் விருப்பத்துக்கு ஏற்ப எடுக்கிறார்.
இதனால் படத்தின் தரம் குறைகிறது , முதலில் இரு படங்கள் நடிப்பு , பாடல்கள் என சில காரணங்களுக்காக ஓடலாம்..ஆனால் இந்த வெற்றி நீடிக்காது.
எனவே முதலில் தொழிலை கற்றுக்கொண்டு அதன் பின் இறங்குங்கள்..இது சினிமாவுக்கு மட்டும் அல்ல..அனைத்து துறைக்கும் பொருந்தும்.
பீம்சிங் படங்கள். ஸ்ரீதர்- வின்சண்ட் காம்பினேஷனில் வந்த படங்களை பாருங்கள்.. ஒளிப்பதிவின் நேர்த்தி புரியும்.
என்றோ வந்த அவள் அப்படித்தான் படத்தின் ஒளிப்பதிவை நினைவில் வைத்து இன்றும் என்னை அழைக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் அதில் இருக்கும் உயிர்.
பீம்சிங் ஒரு தொழில் நுட்ப வல்லுனர்...எனவேதான் அவர் படங்கள் சிறப்பாக உள்ளன..இன்றோ தயாரிப்பளரிடம் நன்றாக கதை சொல்பவர்தான் இயக்குனர் என்றாகி விட்டது..
யார் வேண்டுமானாலும் இயக்குனர் ஆகலாம்..ஆனால் முதலில் கற்றுக்கொண்டு பிறகு களம் இறங்குங்கள் என்றார்.
ஃபில்ம் ந்யூஸ் ஆனந்தன் மிக உருக்கமாக பேசினார்.
தமிழின் முதல் படம் எடுத்த நடராஜ முதலியாரை நான் பார்த்து இருக்கிறேன். அந்த காலம் முதல் இன்று வரையிலான அரிய தகவல்கள் , நூல்கள், ப்டங்கள் சேர்த்து வைத்து இருக்கிறேன்.
இதை எல்லாம் வைத்து கண்காட்சி நடத்த பல வருடங்களாக முயன்றேன். யாரும் உதவவில்லை.. முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு கடிதம் எழுதி , அத்தனை தகவல்களையும் புத்தக வடிவில் வெளியிட உதவி கேட்டேன். இரண்டே நாட்களில் பதில் போட்டார். அவர் ஆதரவால் புத்தகம் வெளியானது.
நிரந்தர கண்காட்சியில் வைப்பதாக சொல்லி என் சேகரிப்புகளை ஒரு பஸ்சில் வைத்து அதிகாரிகள் எடுத்து சென்றனர்..அப்படி எடுத்து சென்றபோது , என் குழந்தைகளை எடுத்து செல்வது போல வேதனைப்பட்டேன். ஒரு மாதம் அழுது கொண்டே இருந்தேன்.
ஆனால் சொன்னபடி கண்காட்சி நடத்தவில்லை//அந்த நூல்களை எங்கோ போட்டு வைத்து விட்டனர்... முதல்வருக்கு இதை கவனிக்க நேரம் இல்லாமல் இருக்கலாம்.. ஆனால் நடிகர் சங்கம் என்ன செய்கிறது... நடிகர்கள் என்ன செய்கிறார்கள்?
ஆந்திரா, கேரளா விழாக்களுக்கு என்னை அழைத்து மரியாதை செய்கிறார்கள்...தமிழ் சினிமாத்துறையினர் என்னை மதிப்பதில்லை... நூற்றாண்டு விழாவில் என்னை கண்டு கொள்ளவில்லை..
நான் எனக்காக எதுவும் கேட்கவில்லை... நான் எத்தனை நாட்கள் இருப்பேன் என தெரியவில்லை.. நான் இருக்கும்போதே நம் சினிமா வரலாற்றை ஆவணப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே என் ஆசை என சொல்லி கண்கலங்கினார்..
விடைபெறும்போது, அருணின் கைகளைப்பிடித்து கண்ணீருடன் சொன்னார்...
“ என் குழந்தைகளை பத்திரமா பார்த்துக்கப்பா”
அத்தகைய அரிய புகைப்படங்களின் கண்காட்சி இன்றுவரை( திங்கட்கிழமை- 14.10.2013) நடக்கிறது...
கண்டிப்பாக சென்று பாருங்கள்..அந்த பெரிய மனிதருக்கு நாம் செய்யகூடிய குறைந்த பட்ச மரியாதை அதுதான்...
70 எம்.எம் கேமரா ‘பேனாவிஷன்’ என்ற க்ம்பெனி மட்டுமே வைத்து இருந்தது.
ReplyDeleteஅக்கம்பெனி தனது கேமராவை விற்பதில்லை.
வாடகைக்கு மட்டுமே விடும்.
வாட்கையும் அதிகம்.
ஷோலே படத்தில் மட்டும் இக்கேமரா பயன்படுத்தப்பட்டது எனக்கேள்விப்பட்டு இருக்கிறேன்.
கேமராவை விற்றால் தொழில் நுட்பத்தை காப்பி அடித்து விடுவார்கள் என்ற பயம்...கரக்டா சார்?
Delete'தமிழ் ஸ்டுடியோ' திரு.அருண் போன்ற தேடல் மிக்க இளைஞர்களால்தான் மாற்று திரைப்பட முயற்சிகள் தற்போது வெகு வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தனது வலைத்தளத்தை குறும்படங்களுக்கான அரிய காலப் பெட்டகமாக உருவாக்கி வைத்திருப்பது மிகுந்த பாராட்டிற்குரியது.
ReplyDeleteதமிழ் திரைப்பட உலகத்தின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தைப் பெற்றுள்ள திரு.கருணாநிதியைவே வந்துபார் என்றவர்கள் ஃபிலிம்ஸ் நியூஸ் திரு.ஆனந்தன் போன்ற கலைஞர்களையா கண்டு கொள்ளப் போகிறார்கள்?
காலத்தையும், கலையையும் தற்போதைய தலைமுறையினர்க்கு உணர்த்தும் அற்புதமான கண்காட்சி இஃது. வாய்ப்பிருந்தால் எல்லா மாவட்டத் தலைநகரத்திலும் நடத்துவதற்கு திட்டமிடக் கோருகிறேன்.
நன்றியும்... வாழ்த்தும்..!
அன்புடன்
இரா.சிவக்குமார்
மதுரை
'தமிழ் ஸ்டுடியோ' திரு.அருண் போன்ற தேடல் மிக்க இளைஞர்களால்தான் மாற்று திரைப்பட முயற்சிகள் தற்போது வெகு வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தனது வலைத்தளத்தை குறும்படங்களுக்கான அரிய காலப் பெட்டகமாக உருவாக்கி வைத்திருப்பது மிகுந்த பாராட்டிற்குரியது.
ReplyDeleteதமிழ் திரைப்பட உலகத்தின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தைப் பெற்றுள்ள திரு.கருணாநிதியைவே வந்துபார் என்றவர்கள் ஃபிலிம்ஸ் நியூஸ் திரு.ஆனந்தன் போன்ற கலைஞர்களையா கண்டு கொள்ளப் போகிறார்கள்?
காலத்தையும், கலையையும் தற்போதைய தலைமுறையினர்க்கு உணர்த்தும் அற்புதமான கண்காட்சி இஃது. வாய்ப்பிருந்தால் எல்லா மாவட்டத் தலைநகரத்திலும் நடத்துவதற்கு திட்டமிடக் கோருகிறேன்.
நன்றியும்... வாழ்த்தும்..!
அன்புடன்
இரா.சிவக்குமார்
மதுரை
அறிய தகவலுக்கு நன்றி. திரு ஆனந்தன் அவர்கள் நீண்ட காலம் வாழ்ந்திட இறைவனை வேண்டுகிறேன்.
ReplyDelete