Friday, October 4, 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்- ரசிகர்களிடம் தோல்வி , பத்திரிக்கைகளிடம் வெற்றி..ஏன்? ஓர் அலசல்

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் தமிழ் நாட்டின் ஓர் இடத்தில்கூட ஓடவில்லை. ஆனால் , பத்திர்க்கைகள் எல்லாம் பாராட்டுகின்றன என்றால் பத்திரிக்கைகளுக்கு இந்த  எல்லாம் உள் நோக்கம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. வெகுஜன ரசனைக்கும் இவர்களுக்கும் ஏன் இந்த இடைவெளி என்பது எளிதான உளவியல்தான்.

இந்த இடைவெளி ஆய்வுக்கு உரியது

ரஜினி , எம் ஜி ஆர் போன்ற ஹீரோக்கள் நடிக்கும் படத்தை எடுத்துக்கொள்ளுங்கள்... அவர்கள் பாத்திரத்தின் தன்மை தெரியாவிட்டாலும் கூட  , அந்த பாத்திரத்துடன் ஆரம்பம் முதலே நம் ஆட்கள் ஒன்றி விடுவார்கள்.. அந்த ஹீரோ கொலைகாரன்  என்றால் , போலீசிடம் மாட்டக்கூடாதே என பரிதவிப்பான். ஹீரோ போலீஸ் என்றால் கொலைகாரர்களை பிடிக்க வேண்டுமே என ஆசைப்படுவான்..

ஏன் கொலை செய்கின்றான் என்பதெல்லாம் எஸ்டாபிளிஷ் செய்ய வேண்டிய அவசியமே இராது.

ஆனால் இந்த படத்தில் முக்கால்வாசிப்படம் வரை சாதாரண ரசிகனால் படத்தில் ஒன்றவே முடியவில்லை.. அடுத்த முறை செல்லும்போது ரசிகர்களை கவனியுங்கள்... முகத்தில் எரிச்சலுடனும் வேதனையுடனும் பார்த்து கொண்டு இருப்பதை கவனிக்கலாம்.
ப்ளஷர் ஆஃப் டெக்ஸ்ட் என்பார்க்ளே... இந்த படத்தை பொருத்தவரை முதல் ஒன்றரை மணி நேரம் - PAIN PAIN PAIN  தான். யாரோ யாரையோ கொல்கிறார்கள்... யார் நல்லவர்..யார் கெட்டவர் , அந்த மாணவன் செத்து ஓனாய் பிழைக்க வேண்டுமா. அல்லது அந்த ஓ நாய் செத்து மாணவன் பிழைக்க வேண்டுமா... அல்லது அவனை விரட்டுபவர்கள் சாக வேண்டுமா.அல்லது படம் பார்க்க வந்த நாம் சாக வேண்டுமா.. ஒன்றுமே புரியாமல் பார்வையாளர்கள் மலங்க மலங்க விழிப்பதை பார்த்து பாவமாக இருந்தது.

அதற்குபிறகு பழைய பட பாணியில் கதை சொல்லி தன்னை நியாயபடுத்தும் காட்சியில் எல்லாம் கேலிக்குரல்கள்தான் தியேட்டரில் கேட்கின்றன.. ஆப்பரேஷன் செய்யப்பட்டு உடனடியாக கொலை செய்ய கிளம்புவது... ஆள் அரவமற்ற சென்னை ...  அந்த கால அசோகன் பாணியிலான மிகை நடிப்பு வில்லன் , நேரம் கெட்ட நேரத்தில் கதை கேட்பது என படு செயற்கையாக இருப்பதால் மக்கள் மனதில் ஒட்டவே இல்லை.

சரி...இந்த குறைகள் ஏன் பத்திரிக்கைகளுக்கு தெரியவில்லை என்றால் எளிதான காரணம்தான்.

ஒரு ரஜினி ரசிகன் , ரஜினி பறந்து பறந்து சண்டை போடுவதை பெரிய லாஜிக் மீறலாக கருத மாட்டான். கேரக்டர் ஆரம்பத்தில் எஸ்டாபிலிஷ் செய்யப்படாவிட்டாலும் , அந்த பாத்திரத்துடன் ஒன்றி விடுவான்.

அது போல , நகர வாசிகளான இவர்கள் பெரும்பாலும் மிஷ்கின் ரசிகர்களாக இருப்பதால் , இந்த குறைகள் இருந்தாலும், படம் விறு விறுப்பாக செல்வதாக தோன்றுகிறது..ஆரம்பம் முதலே , அந்த கைவீசம்மா கைவீசு வசனத்துக்கு முன்பு இருந்தே, ஓனாய் கேரக்டருடன் ஒன்றி விடுவதால் , படம் அருமையாக இருப்பதாக தோன்றுகிறது.

மிஷ்கினுக்கு பதிலாக விஜய் நடித்து இருந்தால் , கண்டிப்பாக என் கண்களுக்கும் இந்த குறைகள் தெரிந்து இருக்காது. எவ்வளவோ மசாலா படங்கள் பார்க்கிறோம். அதில் எல்லாம் இதை விட பெரிய குறைகள் இருப்பது சகஜம்தானே..

எனவே இதில் பத்திரிக்களை குறை சொல்லி பயன் இல்லை.

ஆனால் படம் எடுப்பவர்கள் , வெகுஜன ரசிகர்கள் என்ன நினைக்கிறார்கள் என அவர்கள் பார்வையை அறிந்து கொள்ள முனைந்தால்தான் , இது போன்ற தோல்விகளில் இருந்து தப்ப முடியும்.

அல்லது வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் , நல்ல படம் தர முயலவேண்டும்.

இதற்கு முதல் கட்டமாக பத்திரிக்கைகள் படிப்பதை நிறுத்த வேண்டும்.




4 comments:

  1. நல்ல படத்திற்கும் ஓடுகிற படத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன நண்பரே. 5 வருடங்களுக்கு முன்பு வந்து ஓடாத கற்றது தமிழை இன்னும் நினைவில் வைத்திருப்போம்... அதே வருடத்தில் வந்து மிகப்பெரும் வெற்றி பெற்ற படங்களை நினைவில் வைத்திருப்போமா என்றால் அதுதான் இல்லை...

    படம் முழுக்க டாஸ்மாக்கை காட்டிக் கொண்டே இருக்கிறார்கள்... அந்த படம் வசூலில் மிகப்பெரிய வெற்றி பெறுகிறது என்பதற்காக அந்த படத்தை பாராட்டிக் கொண்டிருக்க முடியுமா?

    தினமும் கூட்டம் கூட்டமாக டாஸ்மாக்குக்கு போய் குடிக்கிறார்கள் என்பதற்காக எல்லாரும் குடிக்கிறாங்க... குடிக்கிறது நல்லது என்று மீடியாக்கள் எழுதுவார்களா என்ன...? அது போலத்தான் இதுவும். கூட்டம் கூடுற படம் எல்லாவற்றையும் நல்ல படம்ன்னு மீடியாக்கள் சொல்லுறதில்ல... சொல்லவும் மாட்டாங்க...!
    ///

    ReplyDelete
  2. அமாம்.....உண்மைதான்
    ஏன் இவர்கள் கலைப்படம் எடுக்கவேண்டும்
    அப்புறம் வடை போச்சு கதையாக.....
    கண்ணீர் விட்டு அழவேண்டும்
    இங்கே சினிமாவும் அதன் ரசிகர்களும் (நாம்தான்) பொழுது போக்கவே.........படம் போகிறோம்

    ReplyDelete
  3. I dont think this sort of analytical writings come from you. Being qulitatively gone through ur writing skill, I doubt abt you. Seem some one behind this. I am sure you dont have such kind of intellect to write than pulp works.

    ReplyDelete
  4. அவர் தொப்புளா இல்லையானு நாங்க படம் பார்த்து கண்டுபிடிக்கணுமா ? #என்னடா வெளம்பரம்

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா