Pages

Tuesday, November 26, 2013

ரஜினியின் காசை மறுத்த ஸ்ரீதரின் மாஸ்டர் பீஸ்- கவனிக்கப்படாத அற்புதம்

 
 நான் பார்த்த முதல் ஸ்ரீதர் படம் துடிக்கும் கரங்கள். ரஜினி ரசிகன் என்ற முறையில் பழைய படங்களை  தேடி தேடி பார்ப்பேன். அந்த வகையில் இந்த படத்தை பார்த்த எனக்கு பெரிய  ஏமாற்றம் ஏற்பட்டது..
எனக்கு பிடிக்காத ரஜினி படம் என்றால் அது இதுதான். இயக்குனர் யார் என்று கேட்டேன், ஸ்ரீதர் என்றார்கள்..

ஸ்ரீதர் என்றால் யாரோ கத்துகுட்டி இயக்குனர் போல என அப்போது நினைத்துக்கொண்டேன்.

அதன் பிறகுதான் காதலிக்க நேரமில்லை , நெஞ்சில் ஓர் ஆலயம் எல்லாம் அறிமுகமாகின. ரசித்து பார்த்தேன். இது ஒரு கால கட்டம்.

அதன் பின் ஹிட் படங்களை கொடுத்ததால் மட்டும் அவர் பெரிய இயக்குனரா என்ற கேள்வி எழுந்த கால கட்டம். மீண்டும் அவரை இளக்காரமாக பார்க்க ஆரம்பித்தேன்.
அதன் பின் லேசாக சினிமா பற்றி கொஞ்சம் தெரிந்த கால கட்டத்தில் , கிட்டத்தட்ட அனைத்து சினிமா வல்லுனர்களுமே ஸ்ரீதர் படத்தை பார்க்க சொன்னார்கள். அவர்க்ள் வழிகாட்டுதலில் ஸ்ரீதர் படங்களை பார்க்கையில் , புதிய ஜன்னல் திறந்து கொண்டது போல இருந்தது.

சிவாஜி , எம் ஜி ஆர் காலத்தில் இருந்து , ரஜினி கமல் என தொடர்ந்து விக்ரம் காலம்வரை சினிமா மீது ஆர்வம் கொண்ட அவரது மேன்மை இன்னொரு சந்தர்ப்பத்தில் புரிந்தது.

அவரது மேதமை புரிந்தது. அவரது கம்பீரம் இன்னொரு சந்தர்ப்பத்தில் புரிந்தது,


அருணாச்சலம் என்ற படத்தை ரஜினி பழைய மேதைகளுக்கு உதவும்வண்ணம் எடுத்தார்..பலரை  தயாரிப்பாளர் ஆக்கினார்.

இது குறித்து அருணாச்சலம் தயாரிப்பாளர்களில் ஒருவரான விகேராமசாமி சொல்லி இருக்கிறார்.

வழக்கமாக ஒரு படம் தயாரிப்பது என்றால் , நாம் காசு போட்டு எடுக்க வேண்டும். அதை விற்று லாபம் பார்க்க வேண்டும். ரஜினி படங்கள் அப்படி அல்ல.. பூஜை போடும்போதே வியாபாரம் ஆகி விடும், அந்த காசில் படம் எடுக்கலாம்.  எங்களை பெயரளவுக்கு தயாரிப்பாளர் ஆக்கினாரே தவிர , நாங்கள் காசு போடவில்லை.. லாபத்தை மட்டும் எங்களுக்கு கொடுத்தார். மட்டுமல்ல, என்னை அதில் நடிக்க வைத்து அதற்கு தனியாக ஊதியம் கொடுத்தார்..( எனது கலைப்பயணம் - விகே ராமசாமி)

மேதைகளுக்கு இந்த கவுரவமும் உதவியும் செய்யப்பட வேண்டியதுதான்..

ஆனால் ஸ்ரீதர் இந்த உதவியை ஏற்க மறுத்து விட்டார்.

தன்னால் உருவாக்கப்பட்ட ரஜினியிடம் உதவி பெற விரும்பவில்லை “ எனக்கு உதவி என்றால் வேண்டாம்.. இலவசமாக காசும் வேண்டாம்.. எனக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றால் எனக்கு உன் படம் எதையாவது இயக்கும் வாய்ப்பளித்து அதற்கு சம்பளமாக காசு கொடு.. சும்மா எதுவும் வேண்டாம் “ என்றாராம்.
ரஜினியிடமே இப்படி பேசிய தில், காசை மதிக்காத உழைப்பை நம்பிய அந்த மனம் போன்றவற்றை மிகவும் ரசித்தேன்.

இந்த அளவுக்கு அவர் தன்னை நம்பி இருக்கிறார் என்றால் அது சும்மா இல்லை.. அவரிடம் சரக்கு இருந்து இருக்கிறது..
கல்யாணப்பரிசு, நெஞ்சில் ஓர் ஆலயம்,  நெஞ்சம் மறப்பதில்லை, காதலிக்க நேரமில்லை என பெரிய லிஸ்ட்டே இருக்கிறது.

ஆனால் இவற்றில் இருந்தெல்லாம் மாறுபட்டு , ஒரு வித்தியாசமான மாஸ்டர் பீசை அவர் கொடுத்து இருக்கிறார். அது போதிய கவனம் பெறவில்லை.. எங்கும் குறிப்பிடப்படுவதும் இல்லை.

படத்தின் பெயர் அலைகள் . வெளியான ஆண்டு 1973.

கன்னட சூப்பர் ஸ்டார் விஷ்ணுவர்த்தன் தமிழில் அறிமுகமான படம். கதானாயகி சந்திரகலா.

அவர் படங்களில் மட்டும் அன்று,,,தமிழ் சினிமாவிலேயே ஒரு வித்தியாசமான படம் என அதை சொல்வேன்.

அம்மா , செண்டிமெண்ட் , ஒருதலைக்காதல், அரசியல் , நகைச்சுவை என சென்று கொண்டு இருந்த காலகட்டத்தில் ( பிறகு ஸ்ரீதரும் இதில் கலந்தது வேறு விஷ்யம் ) , இது போன்ற கதைகளுக்கு முக்கிய்த்துவம் கொடுக்காமல், ஓர் ஆண் , ஒரு பெண் - இருவரின் உணர்வுகளை மட்டும் ஒரு கேஸ் ஸ்டடியாக பார்ப்பதே படம். எதிர்பாராத திருப்பம். , தியாகம் என்றெல்லாம் எதுவும் இல்லை//

தற்செயலாக ஓர் இன்ஸ்பெகடரும் , ஓர் அனாதைப்பெண்ணும் சந்திக்க நேர்கிறது... இருவரும் ஒருவரை ஒருவர் எப்படி பாதிக்கிறார்கள்... எப்படி பரிணாம வளர்ச்சி அடைகிறார்கள் என்பதே படம்.

ஆணும் பெண்ணும் ஒரே மாதிரியான பரிணாம வளர்ச்சி அடைவதில்லை.. ஆண் மையம் சார்ந்து இயங்குபவன்.. பெண் அலைத்தன்மை வாய்ந்தவள்... மையமற்றவள் ஆண் பார்ட்டிக்கிள் என்றால் பெண் வேவ் எனலாம்..அவனுடைய வளர்ச்சி  நேர்க்கோட்டில் வள்ர்ந்து ஓர் இடத்தில் முடியும். பெண்ணின் வளர்ச்சி அலையலையாக செல்லக்க்க்கூடியது. சுழற்சித்தன்மை வாய்ந்தது...

 நான் அலுவலகம் செல்கையில் தினமும் என் கண்களில் பட்டுவிடுவாள் அந்த பெண். எங்க்ள் தெருவில் வச்ப்பவள். மான் விழி என படித்து இருப்பீர்கள்..உண்மையிலேயே பார்க்க வேண்டும் அவளிடம்தான் பார்க்க வேண்டும். அப்படி ஒரு நளினம். சில சந்தர்ப்பங்களில் என்னுடன் பேச வேண்டி வரும் , உதடுகளுக்கு வலித்து விடக்கூடாது என்பது போல அவ்வளவு மென்மையாக பேசுவாள்.


ஒரு நாள் தற்செயலாக அவளும் அவள் தோழியும் பேசிக்கொண்டு போவதை பார்த்தேன். செம மெட்ராஸ்பாஷை... யாரைப்பற்றியோ பேசிக்கொண்டு போனார்கள்... “ விடுடீ...என்னிக்காச்சும் என் கையால சிக்காமயா போய்டுவான்.. குடலை உருகிடுறேன்,” இதை மெட்ராஸ் பாஷையில் பேசியபடி, இருவரும் ரவுடி போல போய்க்கொண்டு இருந்தார்கள்..அவளா இவள் என நினைத்துக்கொண்டேன்.

இதே பெண்ணை அவள் குடும்பத்துடம் பார்த்திருக்கிறேன். அடக்க ஒடுக்கமாக,. யாரையும் கவனிக்காமல் பவ்யமாக இருப்பாள்..

ஓர் ஆணால் நடிக்க முடியும்..ஆனால் ஒரே நேரத்தில் இத்தனைவிதமாக இருப்பது ஆணால் முடியாது...அதுதான் அலைப்பண்பு.

கொஞ்சம் அறிவியல்

அருகருகே இரு துவாரங்கள் இடப்பட்ட சுவர் உங்கள் முன் இருக்கிறது.. ஒளியின் ஒரு துகளை பிரித்து எடுத்து , அதை நோக்கி செலுத்துகிறீர்கள்... அந்த துகள் எந்த துவாரத்தில் நுழையும்? இடதா வலதா?

இரண்டிலுமே செல்லும் ...அலைப்பண்பு காரணமாக..

படத்தின் நாயகி ஒரே கால கட்டத்தில் அபலையாக, புரட்சி வீராங்கனையாக , காதலியாக , முட்டாளாக , புத்திசாலியாக இருப்பதை அருமையாக சித்தரித்து இருப்பார் இயக்குனர். நாயகனோ இந்த எல்லா கட்டத்தையும் ஒன்று ஒன்றாக கடந்து கடசியில் தன் உச்சதை அடைகிறான்.

வெகு வெகு இயல்பான காட்சிகள்.. துவக்க காட்சியில் தொடர்வண்டியில் அவர்களுக்கிடையே அறிமுகம் நிகழ்வது வெகு அழகு,, வெகு இயல்பு..

அவள் ஓர் அனாதை..  தற்செயலாக அவளை ரயில் வண்டியில் காண்கிறான். முதல் காட்சியிலேயே அவள் துணிச்சல் . அவள் கேரக்டர் எஸ்டாபிளிஷ் செய்யப்பட்டு விடுகிறது...

அதனால் இம்ப்ர்ஸ் ஆகும் நாயகன் அவளுக்கு சிறிய உதவி ஒன்றை செய்கிறான். அவளுக்கு முழுமையாக உதவும் துணிச்சல் அவனுக்கு இல்லை.
ரயிலை விட்டு இறங்கி சென்னை வரும் அவளுக்கு யாரையும் தெரியாது... ஒரு மேல்தட்டு  பெண் அவளுக்க்கு உதவுவதாக சொல்லி , தவ்றான வழியை காட்டுகிறாள். அங்கிருந்து , அந்த மேல்தட்டு பெண்ணின் தம்பியிடம் இருந்து தப்பும் அந்த பெண்ணுக்கு மீண்டும் இன்ஸ்பெக்டர் உதவும் நிலை...

ஆனால் மீண்டும் அவனால் முழு அடைக்க்கலம் கொடுக்க முடியவில்லை...மீண்டும் அவளுக்கு சிக்கல்...

கடல் அலைக்ள் மீண்டும் மீண்டும் கரையை நாடி வருவது போல , அவள் அவனையே மீண்டும் மீண்டும் தேடி வர வேண்டி இருக்கிறது.

அவன் கொஞ்சம் துணிச்ச்லால முடிவு எடுத்து இருந்தால் , இருவருமே மகிழ்ச்சியாக இருந்து இருப்பார்கள்..ஆனால் அவனோ அற்ப காரணங்களுக்கெல்லாம் அவளை புறக்கணிக்கிறான்,’

கிளைமேக்சில் அவன் எடுக்கும் முடிவு, எந்த சந்தர்ப்பத்தில் அந்த முடிவை எடுக்கிறான் என்பதே படத்தின் உச்சம்..அந்த நாயகன் முழுமை பெறுகிறான்...

போலீஸ் ஸ்டேஷனில் , பாலியல் தொழிலாளிகளில் ஒருவளாக அவ்ள் நிறுத்தப்படுகிறாள்... நீயா என அதிர்கிறார் இன்ஸ்பெக்டர்.. அவளை ஏற்கனவே தெரிந்தவள் என்பது அந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் என கருதும் நாயகி , அவரை தெரியாதது போல காட்டிக்கொள்கிறாள்...

அத்தகைய மதி நுட்பம் கொண்டவள் , டூத் பேஸ்ட்டை தின்பண்டம்  என நினைப்பவள்..பல அறியாமைகள் நிறைந்தவள்..

தனக்கு யாரும் இல்லை என கையறு நிலையில் கலங்கும் அவள், வீரப்பெண்ணாக உருவெடுத்து இன்ஸ்பெக்டரை தவ்றாக பேசும் ஆளின் சைக்கிளை உடைத்து எறிகிறாள்..

தனக்கு ஆதரவாக இன்ஸ்பெக்டர் இருக்கிறான்,,,தன்னை காதலிக்க ஒருவன் இருக்கிறான் என்ற நிலையில் அவள் பாடி லேங்குவேஜ் , மூக்கை உறிஞ்சும் மேனரிசம் , கம்பீரம்,இன்ஸ்பெகடரையே மிரட்டும் உரிமை என வேறு மனுஷியாக இருக்கிறாள்...யாரும் இல்லை என தெரிய வரும்போது இதெல்லாம் காணாமல் போகிறது...சிறந்த பாத்திரப்படைப்பு..

 நம் சமகாலத்தில் வந்து சூப்பர் ஹிட் ஆன ஆப்தமித்ரா ( சந்திரமுகியின் கன்னட வடிவம் ) படம் தந்த கன்னட சூப்பர் ஸ்டார் விஷ்ணுவர்த்தன் , அந்த காலத்திலேயே தமிழ் படத்தில் நடித்து இருப்பது வியப்பாக இருந்தது...

கர்னாடகத்தில் ராஜ்குமார் கோஷ்டியினர் அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமல் செய்தனர்..  தமிழில் இப்படி ஒரு நல்ல படத்தில் நடித்த அவருக்கு அந்த அங்கீகாரம் கிடைக்காமலேயே போய் விட்டது சோகம்தான்.

ஸ்ரீதர் படம் என்றாலே ஒளிப்பதிவு கலக்கலாக இருக்கும்... இதிலும் ஒவ்வொரு ஷாட்டும் அவ்வளவு அழகாக இருக்கிறது..

இசை எம் எஸ் வி... இரண்டு பாடல்களில் கலக்கி இருக்கிறார்.. டிரெய்னில் பார்த்த சுருளி வரும் காட்சியின்போது மட்டும் பின்னணி இசை க்ரியேட்டிவாக இருந்தது.. மற்ற இடங்களில் ஓக்கே ரகம்தான்... ஆனால் பாடல்கள் சூப்பர்..

கண்ணதாசனுக்கும் ஸ்ரீதருக்கும் என்ன உடன்பாடோ...இருவர் காம்பினேஷன் எப்போதுமே அட்டகாசமாக இருக்கும்..
கண்ணாதாசனின் குரலில் ஒலிக்கும் கவிதை ஒன்றும் படத்தில் இருக்கிறது....

பொன் என்ன பூவென்ன கண்ணே என ஒரு பாடல்... தயவு செய்து கேளுங்கள் என பாதம் தொட்டு கேட்டு கொள்கிறேன்...இதை கேட்காவிட்டால் , முக்கியமான ஒன்றை இழக்கிறீர்கள் என்று பொருள்..







 செவ்வான மேகங்கள் குழலாகுமா
செந்தூரம் விளையாடும் முகமாகுமா
நடை போடுமா இசை பாடுமா
நடந்தாலும் அவை யாவும் நீயாகுமா



மொத்தத்தில் அலைகள் கண்டிப்பாக பார்த்து ரசிக்க வேண்டிய படம் 







16 comments:

  1. friend,
    can u visit my website?
    www.pimbam.com

    ReplyDelete
  2. Excellent write up! I really love that Metaphor, Wave-Particle duality = Male-Female protagonists' characteristics. Quite an unusual thinking. Thanks for writing ! Keep the ball rollin'
    -Srini

    ReplyDelete
  3. உங்கள் எழுத்துக்கள் அற்புதமாக இருக்கிறது.அந்த படம் வெளியான காலத்தில் கூட இந்த அளவுக்கு அற்புதமான விமர்சனம் கிடைத்து இருக்குமா என்று தெரியவில்லை!!!!!

    ஸ்ரீதர்சார் பணம் வேண்டாம் என்று சொன்னது அவரின் மேன்மையான பண்பு

    ReplyDelete
    Replies
    1. உண்மை...மேன்மக்கள் மேன்மக்களே

      Delete
  4. எதுக்கு சார் இப்படி எங்க ஆவலை தூண்டறீங்க??
    ஹ்ம்ம்.... எப்படியும் நீங்க டவுன்லோட் லிங்க் கொடுக்க போறதில்ல...
    :-(

    ReplyDelete
    Replies
    1. கண்ணதாசன் குரலில் வரும் க்விதை பற்றி சொல்லி இருக்கிறேனே...அதன் லிங்க் கேட்பீர்கள் என எதிர்பார்தேன் :(

      Delete
    2. மனசு இறங்கி நீங்களும் லிங்க் கொடுப்பீங்கனு நானும் எதிர்பார்த்தேன் :-)

      சொக்கா... கொஞ்சம் மனசு வை!!!

      Delete
  5. அலைப்பண்பு - வித்தியாசமான விளக்கம்...

    "பொன் என்ன பூவென்ன" என்றும் ரசிக்கும் பாடல்...

    ரசனைக்கு பாராட்டுக்கள்...

    ReplyDelete
  6. can you send me the torrent file for this movie?

    ReplyDelete
  7. படம் சரியாக போகவில்லை என்று தெரியும். ஆனால் நல்ல படம் என்பதை உங்கள் பதிவு படித்த பிறகே அறிந்தேன்.பொன்னென்ன பூவென்ன கண்ணே என்ற பாடல் மிக அருமை. இளையராஜாவின் ஆரம்பகால பாடல்களிலும் இந்த மாதிரியான எம் எஸ் வி யின் சாயல் தென்படுவதை உணரலாம்.பாராட்டுக்கள்.

    ReplyDelete
  8. வேட்டைக்காரன்November 29, 2013 at 7:38 PM

    காரிகன்,

    மோசமான இன்டர்லூட் அமைப்பதை ராஜா எம் எஸ் வியிடம் கற்றிருப்பாரோ?

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]