அலுவலகம் அருகே அலைகடல் |
தமிழ் ஸ்டுடியோ அமைப்பின் புதிய அலுவலக திறப்பு விழா சென்றேன்...சமீப காலத்தில் நான் கலந்து கொண்ட இனிய நிகழ்வுகளில் ஒன்று...
ரசனையாக இடத்தை தேர்ந்து செய்து இருக்கிறார் அருண்... வாகன இரைச்சலுக்கு பதில் அலைகளின் இரைச்சல் , புகை மூட்டத்துக்கு பதில் பறவைகள் இன்னிசை என அற்புதமான இடம்..
அருண் வழக்கமாக வழி சொல்வதில் சொதப்பி எங்காவது சுற்ற வைப்பார்.. ஆனால் இந்த முறை சரியாக சொல்லி விட்டார்.
உள்ளே போனதும் , ஒரு படம் திரையிடப்பட்டது...பர்மா ராணி என்ற யுத்த கால படம்.. யுத்த கால பட பிரதிகள் ஏதும் இப்போது நம்மிடம் இல்லை.. இந்த படம் மட்டும் எப்படியோ யாராலோ எங்கோ காக்கப்பட்டு வந்து இருக்கிறது...இந்த அபூர்வமான படத்தை அரங்கில் பார்த்தது மகிழ்ச்சி..
அதன் பின் செவிக்கு உணவு பரிமாறப்பட்டது...கவிஞர் ரவி சுப்ரமண்யம் அவர்களின் இசை நிகழ்ச்சி.. வித்தியாசமான பாடல்களை தேர்ந்தெடுத்து பாடினார்..பாரதியார் பாரதிதாசன் என பயணித்து சில கவிதைகளுக்கும் இசை அமைத்து பாடியது க்ரியேட்டிவாக இருந்தது...
லீனா மணிமேகலை , அம்ஷன்குமார், ஆர் ஆர் சீனிவாசன் , அறந்தை மணியன் உட்பட பலர் பேசினர்... ஃபார்மலாக பேசாமல் பல்வேறு தளங்களில் அறிவு பூர்வமாக பேசினார்கள்... பிரபல பதிவர்கள் , எழுத்தாளர்கள் , இயக்குனர்கள் கலந்து கொண்டாலும் பேசவில்லை...
சினிமா என்பது பொழுது போக்கு சாதனமோ , பணம் சம்பாதிக்கும் மெஷினோ அன்று..அது ஒரு கலை... நாம் நம்மை பார்த்துக்கொள்ளும் ஒரு கண்ணாடி ,,வாழ்க்கையின் பிரதிபலிப்பு என்பதை சொல்ல சிலராவது இருப்பது மகிழ்ச்சி அளித்தது
செவிக்கு உணவு முடிந்ததும் வயிற்றுக்கு உணவு ஈயப்பட்டது...எல்லாம் இயற்கை உணவில் விளைவிக்கப்பட்ட பொருட்களால் சமைக்கப்பட்டது...அவ்வளவு சுவையாக இருந்தது.... ஃபினிஷிங் டச்சாக பாயாசம் ( சேமியா பாயாசம் அன்று )..
ஜில்லென்ற சூழல் , இயற்கை கொஞ்சும் சூழல்..அதை விட்டு வர மனமே இல்லை... தொடர்ந்து பிரமுகர்கள் வந்து கொண்டு இருந்தனர்... நானும் ஓரிருவரும் கடற்கரைக்கு சென்று பேசிக்கொண்டு இருந்தோம்... கூட்டத்தோடு கூட்டமாக மாலை வேளைகளில் செல்வது வேறு... இரவின் அமைதியில் , கடற்கரையில் அமர்வது வேறு..
அவ்வளவு பெரிய கடல்...மேலே அவ்வளவு பெரிய வானம்... அதில் நாம் மட்டும் என்பது உன்னத உணர்வு..
அடுத்த நிகழ்ச்சிக்கு கண்டிப்பாக போக வேண்டும் என நினைத்தவாறு கிளம்பினேன்..
super
ReplyDelete