நமக்கு தமிழ் ஆளுமை இல்லாமை போனதற்கு தெரிந்தோ தெரியாமலோ சுஜாதா காரணமாகி விட்டார்... உதாரணமாக இந்த பாடலை பாருங்கள்
"வாரார் ஆயினும் வரினும் அவர் நமக்கு
யார் ஆகியரோ? தோழி! நீர
நீரப் பைம்போது உளரி, புதல
பீலி ஒண்பொறிக் கருவிளை ஆட்டி
நுண்முள் ஈங்கைச் செவ்வரும்பு ஊழ்த்த
வண்ணத்துய்ம்மலர் உதிர, தண்ணென்று
இன்னாது எளிதரும் வாடையொடு
என் ஆயினாள் கொல் என்னா தோரே?"
இதற்கு அவர் பாணி விளக்க உரை இப்படி இருக்கும் - தாமதமான காதல் , இல்லாத காதலுக்கு சமம்.
அட அஞ்சு வார்த்தையில் சொல்லி விட்டாரே என நாம் மகிழ்ந்து கொள்வோம்... அதன் பின் தூய தமிழ் விளக்க உரைகளை படித்தால் எரிச்ச்சலாக இருப்பதாக தோன்றும்..ஆக நம் தமிழ் சொற்கள் ஆளுமை இல்லாமலேயே போய் விடும்.. யோசித்தால் கஷ்டமாக இருக்கிறது
எளிமையே சிறப்பு ( அதாவது குறைந்த சொற்களை வைத்து சமாளிப்பதே சிறப்பு ) என்ற மன நிலை நமக்குள் பரவி விட்டது... இங்ஙனம் , ஐயன்மீர் , கூறானின்றான், இஃதிங்ஙனம் என்றெல்லாம் எழுதுவதில்லைகொடுத்தான் என சொல்லுங்கள்.. நல்கினான்..ஈந்தான் வேண்டாம் என அவர் சொல்லியதால் , வேறு யார் இப்படி எழுதினால் கிண்டல் செய்ய ஆரம்பித்து விட்டோம்... ஆகவே இந்த சொற்கள் எல்லாம் அழிந்தே விட்டன.. கிட்டத்தட்ட 100 சொற்களை வைத்தே தமிழை எழுதி வருகிறோம்... ஆங்கிலத்தில் இந்த நிலை இல்லை...
ஆங்கில நாளிதழ் இண்டர்வியூவுக்கு போகிறீர்கள்..உங்களை ஒரு கட்டுரை எழுதி காட்ட சொல்கிறார்கள்..Go , come, give போன்ற நூறு அடிப்படை வார்த்தைகளை வைத்து மட்டும் கட்டுரை எழுதினால் நீங்கள் ரிஜக்டட்... தமிழ் நாளிதழுக்கு போகிறீர்கள்.... இங்ஙனம். இவ்வாறே , அஃது , வேட்டற்பொருட்டு என அன்றாட நூறு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டு எழுதினால் நீங்கள் ரிஜக்டட்
தமிழ் ஆளுமை தமிழர்களிடம் குறைந்து விட்டதென்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால், அதற்கு சுஜாதாவே காரணம் என்பதை நான் மறுக்கிறேன். பத்தாவது படிக்கும் பையன், ஐந்தாம் வகுப்புப் பாடப் புத்தகத்தை மட்டும் படித்து விட்டு, நான் தேர்வில் தோல்வியுற்றதற்குக் காரணம் ஐந்தாம் வகுப்புப் புத்தகமே என்பது போல் உள்ளது இது. தமிழறிவு குறைந்தவர்களும் சங்க இலக்கியங்களை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் (என்பது என் கருத்து) எழுதப்பட்டவற்றை மட்டும் படித்து விட்டு, என் (அல்லது, மற்றவர்களின்) தமிழறிவு இந்த எழுத்தால் குறைவு பட்டு விட்டது என்பது பொருந்தாது,
ReplyDeleteமற்றபடி, உமது கட்டுரையில், இண்டர்வியூ,,, இன்ன பிற எல்லாம் எனக்குச் சம்மதமே.
மிக்க அன்புடன்,
சங்கரகிருஷ்ணன்