Pages

Friday, December 6, 2013

மேதைகள் ஒன்றிணைந்த அபூர்வமான கமல்ஹாசன் திரைப்படம்

ஒரு ஊதாப்பூ கண்  சிமிட்டுகிறது - மேதைகளின் சங்கமம்
 
நடிப்பு - கமல் , சுஜாதா , விஜயகுமார், வீராசாமி
இசை  - வீ .தட்சிணாமூர்த்தி
கதை   - புஷ்பா தங்கதுரை
இயக்கம் - எஸ் பி முத்துராமன்
கதை - தன் காதலிக்காக கொலை செய்து ஜெயிலுக்க்கு போகும் இளைஞன் , விடுதலை ஆகும்போது அவள் வேறு ஆணை மணந்து விட்டாள்... ஒரு கட்டத்தில் கணவனை விட்டுவிட்டு பழைய காதலனுடன் செல்ல முடிவு செய்கிறாள்... கிளைமேக்சில் ”பண்பாடு ”

காக்கப்படுகிறது





*****************************************************************************
தமிழின் டாப் 100 படங்களை பட்டியல் இட்டால் இந்த படம் அதில் இடம்பெறாது...  ஆனாலும் எழுத்தில் தனக்கென ஒரு பாணி வைத்து இருந்த புஷ்பா தங்கத்துரை , இளையராஜாவே சாமி என மரியாதையுடன் அழைத்த மேதை வி தட்சிணாமூர்த்தி , இன்னும் தன் பாணியில் சமரசம் செய்யாமல் நடித்து வரும் கமல் , கவியரசர் கண்ணதாசன் என்ற  நான்கு மேதைகள் ஒன்றிணைந்த அபூர்வ படம் என்ற வகையில் இந்த படம் பற்றி லேசாக பேசலாம்.

வாரப்பத்திரிக்கைகள் , தொடர்கதைகள் கொடிகட்டிப்பறந்த அந்த நாட்களில் சுஜாதா தன்னிகரற்ற ஸ்டாராக விளங்கினார்.. வித்தியாசமான நடை , புதுமையான கரு என மக்களை ஈர்த்தார்...கூடுதல் அட்ராக்‌ஷனாக வார்த்தை விளையாட்டுகள்..

உதாரணமாக டைப் அடித்தேன் என எழுத மாட்டார்..டைப்பினேன் என்பார்..அன்பளித்தேன், டயலினேன் என்றெல்லாம் எழுதுவார்...

அவன் படியில் இருந்து



    ற

          ங்

                கி

                          னா

                                      ன்


என எழுதுவார்...

பழைய வார்த்தைகளை வேண்டுமென்றே பயன்படுத்துவார்... எனக்கு விருது வழங்கினார்கள்.. நான் தன்யனானேன் என்பார்.


இதை எல்லாம் விளையாட்டாக செய்தாரே தவிர இதுதான் தன் பலம் என நினைக்கவில்லை..

ஆனால் அப்போது இருந்த எழுத்தாளர்கள் பலர்., இதுபோலவே வார்த்தை விளையாட்டுகளில் ஈடுபட்டு சுஜாதா போல தாங்களும் எழுதுவதாக நினைத்துக் கொண்டனர்...

க்ளிஷேக்களை தவிர்க்க சுஜாதா முயன்றார்..ஆனால் இவர்களோ சுஜாதாவின் வார்த்தைகளையே க்ளிஷேக்கள் ஆக்கி விட்டார்கள்..கடைசிவரை இரண்டாம் தர எழுத்தாளர்க்ளாகவே இருந்தனர்...( இலக்கியம் சார்ந்து செயல்பட்டவர்க்ளை இங்கு சொல்லவில்லை.. நாம் பேசுபது வணிக / வெகு ஜன எழுத்தாளர்க்ளை ).

இதில் தமது அடையாளத்தை விட்டுக்கொடுக்காமல் எழுதியவர்களும் உண்டு,...உதாரணம் ராஜேஷ் குமார்...அதேபோல , புஷ்பா தங்கத்துரையும் , முற்றிலும் வேறுபட்ட தன் பாணியை என்றும் விட்டுக்கொடுக்கவில்லை...

கடைசிவரை (உண்மையான ) பிரம்மச்சாரியாக வாழ்ந்த அவர் , காமரச எழுத்தில் சிறந்து விளங்கினார்... அவரது முக்கியமான நாவல்களில் ஒன்றுதான் , ஒரு ஊதாப்பு கண் சிமிட்டுகிறது.. கதையில் கவர்ச்சிக்கான ஸ்கோப் அதிகம்.அப்போதைய கமலில் காதல் இளவரசன் இமேஜுக்கு பொருத்தமான கதை என்பதால் , இந்த கதையை படமாக்கி இருக்கிறார்கள்..

மர்ம நாவல்களுக்கே உரிய பரபரப்புடன் படம் ஆரம்பிக்கிறது... கமல் தான் சிறையில் இருந்து வருவதாக சொல்லி அதிர்ச்சி அளிக்கும்போது டைட்டில் ஓட ஆரம்பிக்கிறது...அவர் அப்பா உட்பட அனைவரும் அவரை வெறுக்கிறார்கள்... அவர் ஏன் சிறைக்கு சென்றார்..அவரை ஏன் வெறுக்கிறார்கள் என்ற ஃபிளாஷ்பேக் மெல்ல விரிகிறது..

ஊதாப்பூவாக கண் சிமிட்டி ஓர் இளைஞனின் வாழ்க்கையில் சூறாவளி ஏற்படுத்திய பெண்ணின் கதை...

”கற்புக்கு “ பங்கம் வராமல் முன்னாள் காதலனுடன் ஒரு நாள் மனைவியாக வாழ்வது, இன்னொரு பெண் கமலை மயக்க , புழுக்கத்தை காரணமாக சொல்லி , ஆடைகளை களைவது என அந்த கால கமல் ரசிகர்களுக்கு விருந்து படைத்து இருக்கிறார்கள்..

இப்படி எல்லாம் செய்து விட்டு மெசேஜ் சொல்லி பண்பாட்டை காப்பாற்றி விடுகிறார்கள்...

ஒரு கில்மா படத்தின் விளிம்பைத்தொட்டாலும் , இந்த படத்துக்கு ஒரு மரியாதையை தருவது தட்சிணாமூர்த்தியின் இசை...

கமலும் அவர் காதலியும் முதன் முதலாக பார்ப்பது , பார்வையால் காதலை வளர்ப்பது என ஒரு பத்து நிமிடத்துக்கு இசையாலேயே கதை சொல்லி இருப்பார்...அதுவும் கர்னாட்டிக் பாணியிலான இசையில்...சூப்பர்..

இவர் இளையராஜா உட்பட பலருக்கு குருவாக இருந்தவர்... ஜேசுதாஸ் இவரைப்பற்றி உயர்வாக பேசுவார்...கொஞ்ச நாள் சாமியாராக இருந்து விட்டு வந்தவராம்.. ப்லரும் இவரை சாமி என்றே அழைப்பார்கள்..

முறுக்கு  ,கை முறுக்கு என டீ கே கலாவின் அட்டகாசமான குரலில் ஒரு பாடல், ஆண்டவன் இல்லா உலகம் எது..ஆசைகள் இல்லா இதயம் எது என டீ எம் எஸ் குரலில் ஒரு பாடல்.. மேலும் கண்ணதாசன் வரிகளில் ஒரு எவர்க்ரீன் பாடல்

நல்ல மனம் வாழ்க 
நாடு போற்ற வாழ்க 
தேன் தமிழ் போல் வான் மழை போல் , 
சிறந்து என்றும் வாழ்க 

பூவுலக லட்சியங்கள்
பூப்போன்றே வாடும்
தெய்வசொர்க்க நிச்சயம்தான்
திருமணமாய் கூடும்.



பொருத்தமென்றால் புது பொருத்தம்
பொருந்திவிட்ட ஜோடி
நான் புலவன் என்றால் 
பாடிடுவேன் கவிதை ஒரு கோடி 


மண வாழ்க்கை அமைவ்தற்கோ 
மனைவி வாய்க்க வேண்டும் 
குலமகளாய்க் கிடைப்பதற்கோ 
கொடுத்து வைக்க வேண்டும் 

நல்ல மனம் வாழ்க 
நாடு போற்ற வாழ்க 

அருமைகளும் பெருமைகளும் 
நிறைவதுதான் இன்பம் -நீ
அத்தனையும் பெற்றுவிட்டாய் 
ஆனந்தமாய் வாழ்க 

நல்ல மனம் வாழ்க 
நாடு போற்ற வாழ்க


இதை சிறப்பான படம் என சொல்ல முடியாது..ஆனால் நினைவுகூரத்தக்க படம்
         

4 comments:





  1. ங்

    கி

    னா

    ன்

    உட்பட அனைத்தும் ரசனை...

    பாராட்டுக்கள்...

    ReplyDelete
  2. நண்பரே,
    சுஜாதாவைப் பற்றி நன்றாகவே சொல்லியிருக்கிறீர்கள். அவர் வார்த்தைகளில் இ

    ங்
    கி
    னா
    ன்
    ஏறினான் என்று விளையாட்டுக் காட்டும் யுக்தியை அமெரிக்க எழுத்தாளர் cummings என்பவரிடமிருந்து இறக்குமதி செய்தார். சுஜாதாவின் எழுத்துக்கள் எல்லாமே அவர் அதிகம் ஆங்கிலப் புத்தகங்கள் படித்ததினால் ஏற்பட்ட விளைவே. எனக்கும் சிறு வயதில் அவர் எழுத்துக்கள் மீது ஆர்வம் இருந்தது. பிற்பாடு உண்மை தெரிந்ததும் குறைந்துவிட்டது. ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது படம் பார்க்க நீண்ட நாள் ஆவலாக இருந்தேன். உங்களுக்கு அகப்படுவது எனக்கு சிக்கவில்லை. நல்ல பதிவு. தொடருங்கள்.

    ReplyDelete
  3. சுஜாதா செய்த அந்த கிம்மிக்ஸ் எல்லாம் ஆரம்பகாலத்தில் அவர்பால் கவனம் ஈர்க்க உதவியது அவருக்கு. பின்னாட்களில் அவரது எழுத்து நடையில் அவை இல்லை. புஷ்பா தங்கதுரை டயலாக்குகளுக்கு கமா கொட்டேஷன் இடாமல் ஒரு டாஷ் மட்டும் போடுவார். பிரெஞ்சு நாவல்களில் அப்படி வரும். அவை எனக்குப் பிடித்ததால் தமிழில் செய்தேன் என்றார் அவர் ஒருமுறை என்னிடம். இந்த ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது எனக்கு படிக்கையில் தந்த பிரசவ... ஸாரி, பரவச அனுபவத்தை படமாகப் பார்க்கையில் தரவில்லை. இசையையும் கமலையும் ரசித்தேன். அவ்வளவே!

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப ரொம்ப நன்றி சார்...அந்த கமா கொட்டேஷன் இடாமல் எழுதுவது எனக்கு மிகவும் பிடிக்கும்..இதன் பின்னணி என்ன என்பதை யாரிடமாவது கேட்க வேண்டும் என தவித்த காலம் உண்டு.. ஆனால் யாரிடமாவது கேட்டால் அவர்கள் அதை பெரிதாக நினைப்பதும் இல்லை...அதை கவனித்ததும் இல்லை....அதன் பின் காலப்போக்கில் யாரிடம் இது குறித்து விவாதிக்க வெட்கப்பட்டு விட்டுவிட்டேன்...இத்தனை நாட்கள் கழித்து உங்கள் மூலம் அறிந்து கொண்டேன்... நன்றி....

      Delete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]