Friday, December 20, 2013

அன்று பெய்த மழையில்- நண்பர் நிர்மல் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம்

கீழ்கண்ட சம்பவம் நண்பர் வாழ்க்கையில் உண்மையாக நடந்ததாம்... அவருக்கே உரிய பின் நவீனத்துவ சிந்தனையை பயன்படுத்தி அதை எளிய வடிவில் நமக்கு தருகிறார்.

*********************************************************


டுபாக்கூர் ஃபில்ம்ஸ் வழங்கும்

நிர்மலின்   ......


அன்று பெய்த மழையில்


காட்சி1   மதிய வேளை / க்ளினிக் உட்புறம்


ஒட்டடை அடிக்கப்படாத ஓர் அறை . நாமே தண்டம்.. நமக்கு ஏன் இன்னொரு முண்டம் என்ற குடும்ப கட்டுப்பாடு பஞ்ச் டயலாக் அடங்கிய போஸ்டர் கிழிந்து தொங்குகிறது... க்ளினிக் என்பதை  நிரூபிக்க ஆங்காங்கு இது போன்ற படிக்க முடியாத கேவலமான பழைய சுவரொட்டிகள்

டாக்டர் பலவேஷம் எம் பி பி எஸ் என்று எழுதப்பட்ட பெயர் பலகை , சாயம்போய் மேஜையில் இருக்கிறது. நாற்காலியில் குண்டான வடிவில் ஒரு டாக்டர் தூங்கி கொண்டு இருக்கிறார் ( வயது 60 ).பக்கத்தில் அவர் அசிஸ்டெண்ட் வயது 25. அவனும் தூக்கம்
இருவர் உள்ளே நுழைகிறார்கள்.( வயது 30, 32) .. டீ ஷர்ட் பேண்ட்...இன்னொருவர் இன் செய்யப்பட்ட நேவி ப்ளூ ஷர்ட்


 நிர்மல் : சார் சார்..
டாக்டர் திடுக்கிட்டு கண் விழிக்கிறார்

டாக்டர் : யெஸ்?

நிர்மல் : டாக்டரை பார்க்கணும்..

டாக்டர் : அப்படியா? அப்படி யாரும் இங்கே இல்ல...நேரா போயி லெஃப்ட்ல கட் செஞ்சீங்கனா, ஒரு டாஸ்மாக் வரும் ...அப்படியே இயற்கை கழிவுகளை மிதிக்காம கொஞ்ச தூரம் போனீங்கனா


அசிஸ்டண்ட் கண் விழித்து பதறிப்போகிறான்..
( மெதுவான குரலில் ) சார்... நீங்களும் டாக்டர்தான்... வேற யாருக்கோ வழி சொல்றீங்க? யாரு பெத்த பிள்ளையோ..உங்களைத்தான் நம்பி வந்து இருக்காங்க

டாக்டர் சுதாரித்து கொள்கிறார் : யெஸ்..ஐ ஆம் டாக்டர் ஹியர்... என்ன பிரச்சனை... சொல்லுங்க..தீர்த்துடலாம்

 நிர்மல் : இவர் பேரு ஒரு நண்பர்.. ரெண்டு நாளா கண் வலி . எதையும் சரியா பார்க்க முடியலயாம்

டாக்டர் : அதுக்கு ஏன் இங்க வந்தீங்க.. பக்கத்து தெருல ஒரு லேடி டாக்டர் இருக்காங்க... அவங்கதான் கண் மருத்துவர்... அவங்கள போய் பாருங்க
ஒரு நண்பர் : போய் பார்க்க டிரை பண்ணினேன் டாக்டர்... ஆனா அவங்களையும் சரியா பார்க்க முடியல...கண் வலி

 நிர்மல் : என்னது லேடி டாக்டரா? சரி.. நீங்க பேசிக்கிட்டு இருங்க.. நான் போய் பார்த்துட்டு வந்திடுறேன்.

ஒரு நண்பர் : ங்கொய்யால... சவட்டிபுடுவேன்ல... பேசாம உட்காரு

டாக்டர் : வாட் நான்சென்ஸ் நிர்மல்..ஏன் இப்படி அலையிறீங்க..பொறுப்பு வேண்டாம்? ச்சே.. ஸ்டுபிட்ஸ்... சரி... நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருங்க ... நான் போய் அவங்களை பார்த்துட்டு வரேன்.. லேசா கண் வலிக்கிற மாதிரி இருக்கு

 நிர்மல் : கண் வலிக்குதா...உடம்பு வலிக்கிற மாதிரி செஞ்சுடுவோம்..மொத நண்பனுக்கு மருந்து கொடுங்க.. ரொம்ப கஷ்டப்படுறான்.. நேத்துக்கூட இங்கே வந்தோம்... நீங்கதான் இல்ல.

டாக்டர் : அது ஒண்ணும் இல்ல சார்... நேத்து கமல் படம் பார்த்து ஒரே தலைவலி... அதுதான் ஒரு நல்ல டாக்டரா பார்க்க போயி...

அசிஸ்டண்ட் : ( மெதுவான குரலில் )டாக்டர்..உண்மையை உளறாதீங்க
டாக்டர் : ஆமாமா..இல்லைஇல்லை... நேத்து ஒரு மெடிக்கல் கான்ஃபர்ன்ஸ் போனேன்..சரி..அதெல்லாம் இருக்கட்டும்..லெட் மீ கம் டு த பாயிண்ட்... இப்ப என்ன பிரச்சனை

 நிர்மல் : டாக்டர்...ரோட்ல நடந்தா , பொண்ணுங்க மட்டுமே கண்ணுக்கு தெரியுறாங்க.. ஆம்பளைங்க தெரிவதே இல்லை...இது கிட்ட பார்வையா...தூர பார்வையா...

டாக்டர் : இது கிட்ட பார்வை இல்ல ... கெட்ட பார்வ

எப்பூடீ என்பது போல அசிஸ்டண்டை பார்க்கிறார்.. அசிஸ்டெண்ட் டாக்டர் காலை தொட்டு கும்பிடுகிறான்

ஒரு நண்பர் : டாக்டர் எனக்கு ரெண்டு நாளா கண் வலி

டாக்டர்  கூர்ந்து கவனிக்கிறார் :ம்ம்ம்.....  நீங்க கண்ல வலினு நெனக்கிறீங்க...ஆனா கண்ல எந்த பிரச்சினையும் இல்லை... கண்ணுக்கு கீழே கட்டி வந்து இருக்கு... இதை மருத்துவ மொழில கற்கட்டி அதாவது ஸ்டோன்ஹக் அப்படீனு சொல்லுவாங்க

எப்பூடி என அசிஸ்டண்டை பார்க்க , அவன் டாக்டர் காலை தொட்டு கும்பிடுகிறான்

டாக்டர் : இதுக்கு மருந்து இன்னும் கண்டு பிடிக்கப்படல..ஆனா என் ஆராய்ச்சி மூலமா தீர்வு கண்டு பிடிச்சு இருக்கேன்..மழைல நனையணும்... கண்ல மழைத்தண்ணி படணும்... உடனே சரியாகிடும்..இதுதான் மருந்து..ஓகே கன்சல்ட்டிங் ஃபீசை வச்சுட்டு கிளம்புங்க

இருவரும் கிளம்புகிறார்கள்


அசிஸ்டண்ட் : அப்பாடா... ராத்திரி சாப்பிட காசு தேத்தியாச்சு...ஓக்கே டாக்டர்.. நெக்ஸ்ட்?
டாக்டர் : ரெஸ்ட் ( மீண்டும் கண் அயர்கிறார் )




காட்சி 2 மாலை நேரம் 7 மணி ..சாலை

நிர்மல் : நம்ம ஊர்ல எப்பல மல வந்துச்சு... உன் கன்னு நெரந்தரமா நொல்லக்கன் தான் ல

ஒரு நண்பர் : அய்யோ...இப்ப என்னடே பண்றது

 நிர்மல் : யாருக்கும் அடங்காதது பீருக்கு அடங்கும்ணு ஒரு சொலவடை இருக்குல

ஒரு நண்பர் : வடையா..வடையா...எங்கேடே ....   சொல்லவே இல்ல... எங்கேடே வச்சு இருக்க

நிர்மல்: ஓ ஷிட்... அலயாதடே... சொலவடைனா  வேறடே

ஒரு நண்பர்: தெரியலைனா தமிழ் சொல்லித்தாடே

நிர்மல் : தமிழ் நாட்ல இருக்கிற எல்லோருக்கும் தமிழ் கத்து தருவது என் வேலை இல்லடே..முதலில் நான் கத்துக்குறேன்.. சரி வா...பீர் அடிப்போம்... அதுலயே கற்கட்டி கரைஞ்சுடும்




காட்சி 3 காலை 10 மணி நிர்மல் வீடு

போன் அடிக்கிறது... தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு எழுகிறார்

நிர்மல் : ஹலோ

ஒரு நண்பர் ( குரல் மட்டும் ) : நிர்மல்...கண் வலி சரியா போச்சுல

நிர்மல் : வாவ்..எல்லாம் பீர் மகிமை

ஒரு நண்பர் ( குரல் மட்டும் ) : பீர் மகிமையா மழை மகிமையானு தெரியல.. நேத்து ஃபுல்லா வெயிலுடே..ஆனா சொன்னா நம்ப மாட்ட..காலங்காத்தால் பயங்கர மழை.. எல்லாம் கடவுள் அருள் டே... மழைல நனஞ்சுட்டு கண்ணாடில பார்க்குறேன்.. கற்கட்டிய காணோம்

நிர்மல் : மழையா..ஆச்சர்யம்டே...  என்னே கடவுள் மகிமை



காட்சி 4

ஸ்விட்சர்லாந்து , ஸ்வீடன் . அயர்லாந்து போன்ற நாடுகளில் இருவரும் சாமி பாட்டு பாடியபடி வலம் வருகிறார்கள்



காட்சி 5

மாலை .. டாஸ்மாக்

நிர்மல்: வாவ்.. நிஜமாவே கற்கட்டிய காணோமே..என்னால நம்பவே முடியல..எப்படிடே காலங்காத்தால உங்க வீட்ல மட்டும் மழை பெஞ்சுச்சு

ஒரு நண்பர் : (சட்டைய கழட்டுகிறார்) பாருடே...உனக்கே புரியும்.

 நிர்மல் : என்னடே இது..கற்கட்டி சரியா போச்சு..ஆனா உடம்பு ஃபுல்லா கட்டியா இருக்கு?

கொசுவர்த்தி சுருள் சுழல்கிறது.

ஃபிலாஷ் பேக்
காட்சி 6

ஒரு நண்பர் வீடு

ஒரு நண்பர் : பீர் மகிமையா மழை மகிமையானு தெரியல.. நேத்து ஃபுல்லா வெயிலுடே..ஆனா சொன்னா நம்ப மாட்ட..காலங்காத்தால் பயங்கர மழை.. எல்லாம் கடவுள் அருள் டே... மழைல நனஞ்சுட்டு கண்ணாடில பார்க்குறேன்.. கற்கட்டிய காணோம்

நிர்மல் ( குரல் மட்டும் ) : மழையா..ஆச்சர்யம்டே...  என்னே கடவுள் மகிமை
போன் பேசி முடிந்ததும் ஒரு நண்பர் மனைவி வருகிறார்

மனைவி : யோவ்.. மச்சினியை பொண்ணு பார்க்க வறாங்க.. சீக்கிரம் வாயானு சொன்னா , நீ எவனோடயோ சேர்ந்து தண்ணி அடிச்சுட்டு, லேட்டா வந்த...பத்து மணி வரை தூங்குறியேனு தண்ணிய ஊத்தினா. மழை வந்திச்சு பில்ட் அப் கொடுக்கிறீயா... இதெல்லாம் சரிப்படாது....  கீதா. அங்கே துடைப்பம் இருக்கு பாரு..எடுத்திட்டு வா
( நண்பர் அலறல் சத்தம்..  பக்கத்து வீட்டில் கொத்துபுரட்டோ  போட்டு கொண்டு இருக்கிறார்கள்



காட்சி 7
நிர்மல் ( கேமராவை பார்த்து பேசுகிறார் ) : நண்பரோட கண் வலியை எப்படி தீர்த்து வச்சேன் பார்த்தீங்களா... கட்டி, பிட்டி , பீப் பீப் ( சென்சார் ) - இதுல என்ன பிரச்சனைலாம் என்கிட்ட வாங்க...முடிச்சுறேன்.. யாம் இருக்க பயம் ஏன்? நிர்மல் இருக்க பயம் ஏன்?

- A STORY BY NIRMAL-


2 comments:

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா