Pages

Saturday, January 4, 2014

நாவல்களில் எழுத்து பிழைகள் - சீரியஸ் பிரச்சனையா இல்லையா

அன்புள்ள பிச்சைகாரனுக்கு ,.
ஒரு சந்தேகம்..

************

இப்படிக்கு,
ஒரு நண்பர்
அஜர்பைஜான்

__________________________________________________________________________

இப்படி ஒரு டுபாக்கூர் கடிதத்தை எனக்கு நானே எழுதிக்கொண்டு பதில் அளிப்பது போல பம்மாத்து செய்ய விரும்பவில்லை... யாரும் என்னிடம் கேட்கவில்லை.. நானாகவே சிலவற்றை சொல்ல விரும்புகிறேன்..



சில மாதங்களுக்கு முன் ஒரு நண்பரின் புத்தகம் வெளி வந்தது...  நல்ல நாவல் என்றாலும் எழுத்துப்பிழைகளுக்காக கடும் விமர்சனத்துக்கு உள்ளானது...  அவர் கல்லூரி மாணவர்...இந்த அளவுக்கு கடுமையாக விமர்சிக்க தேவை இல்லை என நினைத்தேன்..

ஆயினும் அவர் அந்த விமர்சனங்களை பாசிடிவாக எடுத்துக்கொண்டார்.. தன் தமிழை வளர்த்துக்கொள்ள முயற்சிகளை ஆரம்பித்தார்.

புலி கொன்ற யானை , புலிக் கொன்ற யானை- இந்த இரண்டின் அர்த்தம் “க்” என்ற ஓர் எழுத்தால் மாறும்  நுட்பத்தை கற்கலானார்.

இளமை என்பது வயது அல்ல...கற்கும் மன நிலையே இளமை ஆகும்.. இவரை பொறுத்தவரை வயது ரீதியாக மட்டும் அல்லாமல் மன ரீதியாகவும் இளமையாவர் என்பதால் கற்பதில் ஆர்வம் செலுத்தி இன்று நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறார்.

ஆனால் வயது ரீதியான முதுமையை மன ரீதியான முதுமையாக மாற்றும் சிலர் இந்த மனோபாவத்தில் இருப்பதில்லை..

 எழுத்துபிழை பார்ப்பது என் வேலை அல்ல.... ப்ரூஃப்  ரீடர் பிழையை என் பிழையாக சொல்லாதீர்கள் என சொல்லி விட்டு தொடர்ந்து தவறு செய்கிறார்கள்.. இது அவர்களுக்கு எந்த விதத்திலும் பயன்படாது..

இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் , பழைய தமிழில் ஃபுல் ஸ்டாப் ,ஆச்சர்யகுறி , கமா இதெல்லாம் இல்லை...இதெல்லாம் வெளி நாட்டினர் கண்டுபிடிப்பு...  எனவே ஃபுல் ஸ்டாப் இல்லை என்பதை எல்லாம் குறையாக சொல்லக்கூடாது என்கிறார்கள்..

ஒருவர் டீவி விவாதத்தில் பேசுகிறார்..  அவர் கருத்தைத்தானே பார்க்க வேண்டும்...பேச்சு வழக்கில் செய்யும் சிறு தவறுகளை பெரிதாக பேசலாமா என்பது அடுத்த கேள்வி..

1940ல் வந்த நாவலின் தமிழில் இன்று எழுத முடியாது அல்லவா.. ஆக இதுதான் சரி என எந்த விதியும் இல்லை என்பது அடுத்த அதிரடி..


இதெல்லாம் அறிவுபூர்வமான சால்ஜாப்புகள்... ஆனால் ஏற்கத்தக்கவை அல்ல...

ஒருவர் நேர்பேச்சில் , டீவி பேச்சில் இலக்கணப்பிழையுடன் பேசுவது வேறு விஷ்யம்.. அவர் சொல்லும் தொனியால் , சந்தர்ப்பசூழ் நிலையால் , அவர் பற்றிய நம் அனுமானத்தால் அவர் தவறாகவே பேசினாலும்  நம்மால் சரியாக புரிந்து கொள்ள முடியும்... உதாரணமாக ஆழ்ந்த இரங்கல் என்பதற்கு பதில் வாய் தவறி ஆழ்ந்த நன்றி என விஜயகாந்த் சொன்னார் என்றாலும் அவர் சொல்ல வந்தது நமக்கு புரிந்து விடுகிறது...  நாம் அதை ரிப்போர்ட் செய்யும்போது அவர் இரங்கல் தெரிவித்தார் என்றுதான் எழுதுவோம்..

ஆனால் எழுதும்போது நிலை வேறு...

சாரு ஒரு நாவலின் ஒரு பக்கம் முழுதும் ஃபுல் ஸ்டாப் இல்லாமலேயே எழுதி இருப்பார்.. சாருவை யார் என்று தெரியாத ஒருவர் படித்தாலும் , அவர் ஏன் அப்படி எழுதி இருக்கிறார் என்பது புரிந்து விடும்...  எழுத்தாளர் விரும்பிய இம்பேக்ட் வாசகனுக்கு கிடைத்து விடும்..

ஆனால் அவர் எல்லா எழுத்தையுமே ஃபுல் ஸ்டாப் இல்லாமல் எழுதி இருந்தால் , இந்த குறிப்பிட்ட பக்கத்தில் எந்த இம்பேக்ட்டும் கிடைத்து இருக்காது..எனவெதான் ஃபுல் ஸ்டாப் , கமா போன்றவை எல்லாம் முக்கியம் என்கிறேன்...கமா மாறினால் அர்த்தமே மாறி விடும் சந்தர்ப்பங்களும் உண்டு..

இது பழைய தமிழில் இருந்ததா என்பது கேள்வியே இல்லை..இன்றைய தமிழுக்கு கன்சிஸ்டண்டாக இருக்கிறதா என்பதே முக்கியம்..

உதாரணமாக பழைய தமிழில் “ர் “ என்பது மரியாதையை சொல்லும் எழுத்தாக இல்லை... வேந்தனாக இருந்தாலும் கடவுளாக இருந்தாலும் அவன் இவன் அல்லது அவள் இவள்தான்..

ஆனால் இன்றைய தமிழில் ர் என்பது மரியாதையை சொல்லும் எழுத்தாக ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது... இப்போதுபோய் யாராவது பெரிய தலைவர்களை அவன் இவன் என எழுதினால் விட்டு விடுவார்களா..

ஒரு நாவல் பேசும் அரசியலைப்பற்றி மட்டும்தானே விவாதிக்க வேண்டும் ..எழுத்துபிழைகளை பேசுவது பொருத்தம் அற்றது அல்லவா என்பதும் தவறான வாதமாகும்..

அவன் நாளை கொல்லப்பட்டான்.

இது இலக்கண ரீதியாக தவறு என்றாலும் இது அறிவியல் கதையில் வந்தால் அர்த்தமே வேறு... காதல் பித்தேறிய பெண் இப்படி நினைப்பதாக வந்தால் , அதன் அர்த்தம் வேறு... பின் நவீனத்துவ பிரதியில் வந்தால் அதன் அர்த்தம் வேறு , கவிதையில் வந்தால் வேறு... இந்த டுபாக்கூர் பிளாக்கில் வந்தால் எந்த அர்த்தமும் இல்லை....  தூக்க கலக்கத்தில் செய்த எழுத்து பிழை என்பதெல்லாம் சுலபமாக புரிந்து விடும்.. நேர் பேச்சில் சொன்னால் , தொனியை வைத்தும் சந்தர்ப்பத்தை வைத்தும் புரிந்து கொள்ளலாம்...

ஆகவே இலக்கண ரீதியாக மிகவும் கவனமாக இருப்பது நாவல்களை பொறுத்தவரை மிகவும் முக்கியமாகும்...

வேண்டுமென்றே இலக்கணத்தை மீறுவது வேறு விஷ்யம்..

இரும்பு குதிரைகள் என பால குமாரன் பெயர் வைத்து இருப்பார்... க் என்ற எழுத்தை தவிர்த்து விட்டு வேண்டுமென்றே இப்படி எழுதுவதற்கு லாஜிக்கலாக காரணம் சொல்லி இருப்பார்.

வாளை உருவினான் என எழுதாமால் வாள் உருவினான் என எழுதுகிறார் என்றால் தெரியாமல் எழுதவில்லை... குறிப்பிட்ட விளைவை உத்தேசித்து எழுதி இருப்பார்...அதெல்லாம் வேறு.

ஆனால் விஷ்யம் தெரியாமல் எழுதுவது முட்டாள்தனம்..அதை ஒப்புக்கொள்ளாமல் சால்ஜாப்பு சொல்வது அயோக்கியத்தனம்..

நாளை உண்மையிலேயே எழுதக்கற்று கொண்டு விட்டு எழுதும்போது , இது போன்றா யுக்திகளை கையாள நினைத்தால் , அவ்ற்றையும் பிழைகளாகவே நினைக்கும் சூழ் நிலையும் உருவாகி விடும்...




4 comments:

  1. கற்ற கல்வி அப்படி... கற்றுக் கொடுத்த ஆசிரியர் எப்படியோ...! ம்...

    ReplyDelete
  2. சிந்திக்கத்தூண்டும் பகிர்வு.

    ReplyDelete
  3. யார் யாரோ புத்தகம் போடுகிறார்களே.. ஈஸியா..

    ReplyDelete
  4. அன்றிலிருந்து இன்றுவரை திரைப்படங்களுக்குத் தலைப்பிடும்போது, வல்லொற்றுக்கள், புணர்த்துதல் கவனிக்கப்படுவதேயில்லை.
    உதாரணம்: கல்யாண பரிசு, பால் குடம், காவல் தெய்வம்
    அன்று சிறீதரின் "அவளுகென்று ஓர் மனம்" எனும் திரைப்படம் வெளி வந்த போது, பத்திரிகைகள், சஞ்சிகைகளில்
    "ஒர் மனம்" தவறு "ஒரு மனம்" என்பதே , விதி எனப் பெரிய விவாதக் கட்டுரைகள் வெளியாகியதைப் படித்துள்ளேன். அப்படி தவறுகளைச் சுட்டி விவாதப் பொருளாக்கிச் சரியானதை வாசக, ரசிகருக்குக் கொண்டு செல்லும் பெரும் பணிகளைப் பத்திரிகைகள் செய்தன.
    இன்று தவறாக எழுதுவதும், தங்கிலீசில் எழுதுவதுமே தொண்டென அவை கருதுகின்றன.
    தமிழகத்தில் காவற்றுறை எனக் குறிப்பிடவில்லை.
    இணையத்தில் எழுதுவோர் அதிகமானோர் சரியான, தூய சொற்களுடன் எழுத முயல்வதுடன், தவறைச் சுட்டிக்காட்டும் போது, ஏற்று மாற்றிக் கொள்வதிலும் பெரும் கவனமெடுக்கிறார்கள் என்பதை
    குறிப்பிட்டே ஆகவேண்டும்.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]