சென்னை புத்தக கண்காட்சி துவங்கி விட்டது..
நந்தனம் ஒய் எம் சி ஏ கல்லூரியில் ஜனவரி 10 முதல் 22 வரை நடக்கிறது..
முதல் நாளே சென்றேன்... வேடிக்கை பார்க்கும் கூட்டம் இல்லாமல் நல்ல சூழல் ... ஆனால் சில ஸ்டால்கள் செயல்பட ஆரம்பிக்கவில்லை...ஏ டி எம்மும் இல்லை என்பதால் சிலர் புக் வாங்க முடியாமல் திரும்பினர்...
வழக்கம்போல லிச்சி ஜூஸ் சாப்பிட்டுவிட்டு , உள்ளே சுற்றிக்கொண்டு இருந்தேன்...சில ஆளுமைகளை பார்க்க முடிந்தது...
மொத்தம் 700 அரங்கங்கள்.. காட்சி நேரம் பிற்பகல் 2 முதல் இரவு 9 வரை
லீவு நாட்களில் காலை 11 முதல் இரவு 9 வரை
புத்தங்கள் தவிர ஸ்பெஷல் அட்ராக்ஷனாக சிறப்பு உரைகளும் தினசரி உண்டு..
விரிவான விபரங்கள் பபாசி வெப்சைட்டில் உள்ளன..சிறப்புரையை மட்டும் சுருக்கமாக இங்கு தருகிறேன்.. குறித்து வைத்து கொள்ளுங்கள்..( தினமும் மாலை ஆறு மணிக்கு நிகழ்ச்சிகள் தொடங்கும் )
தேதி சிறப்புரை வழங்குபவர்
11.1 இயக்குனர் வசந்த்
12.1 ஆவணப்பட இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார்
13.1 தமிழருவி மணியன்
14.1 மருத்துவர் கு சிவராமம் , பூகோ சரவணன்
15.1 எஸ். ரா , கோ. சுந்தர் ராஜன்
16.1 சு. வெங்கடேசன், ஜோ. மல்லூரி , ஸ்ரீதர்
17.1 நீயா நானா கோபினாத் , கலைமகள் ( சீன வானொலி )
18.1 உதயசந்திரன் ஐ ஏ எஸ் , பிரபஞ்சன் , இளசை சுந்தரம்
19.1 சாலமன் பாப்பையா பட்டி மன்றம்
20.1 சகாயம் ஐ ஏ எஸ் , ம்தன் கார்க்கி , ஹரிஷ் ராகவேந்திரா
21.1 இறையன்பு ஐ ஏ எஸ் , பரசுராமன்
22.2 நிறைவு விழா
லிச்சி ஜூஸ் |
இயக்குனர் அம்ஷன்குமார் |
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]