புத்தக கண்காட்சி என்பதே இனிமையான ஒன்றுதான் என்றாலும் அதில் அறிவார்ந்த எழுத்தாளுமைகளை சந்திப்பது இன்னும் இனிமையானது...
அந்த வகையில் சாருவை சந்தித்து உரையாடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது ( 17.01.2014 )...
நிகழ்ச்சி ஆறு மணிக்கு என்றால் , ஐந்து மணியிலேயே மக்கள் குழும ஆரம்பித்து விட்டனர்... வாசகர் வட்ட நண்பர்களை விட , பொதுவான வாசகர்களே அதிகம் வந்து இருந்தனர்..
மனுஷ்யபுத்திரன் தனக்கே உரிய வகையில் நிகழ்ச்சியை நடத்தினார்.. அவரே முதல் கேள்வியையும் - சற்று ஆழமான கேள்வியை - கேட்டு கேள்வி பதிலை ஆரம்பித்து வைத்தார்..
தனது ஒரு நாவலுக்காக இன்னொரு நாவலை பலி கொடுக்கும் சம்பவம் உலகில் இதுவே முதல் முறை என கருதுகிறேன்.. அப்படி ஒரு மேட்டர் சொன்னார் சாரு...
எக்சைல்-2 என்பது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் என்றார்..
லக்கி யுவா தனக்கே உரிய பாணியில் அரசியல் கேள்விகளை கேட்டு நிகழ்ச்சியை கலகலப்பாக்கினார்,,, அரசியல் கேள்வியைக்கூட இலக்கியம் சார்ந்தும் மரம் கலந்தும் சந்தித்து தன் முத்திரையை பதித்தார் சாரு.
டாஸ்மால் இல்லாத தமிழகம் சாத்தியமா என்ற கேள்விக்கு அவர் சற்றும் யோசிக்காமல் அளித்த பதில் சரவெடி..
ராஜேஷ் ரஜினியை மட்டம் தட்டி ஒரு பதிவு போட்டிருக்கார். உடனடியாக ஒரு fake id யில் போய் பதிலடி கொடுக்கவும்
ReplyDelete