Wednesday, January 22, 2014

புத்தக கண்காட்சியும் டாப் டென் புத்தகங்களும் ...


புத்தக கண்காட்சி முடிந்து விட்டது... எல்லா ஸ்டால்களிலும் சுற்றி பார்த்ததில் இருந்து ஒன்று தெரிந்தது... இணையத்தில் நாம் விவாதிப்பதற்கும் , நடைமுறைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது... 

நல்ல வாசகர்கள் பலர் இணையத்தில் இயங்குவது இல்லை.. எனவே இணைய கணிப்புகள் பெரும்பாலும் சரியாக இருப்பதில்லை...

சமையல் புத்தகம் , குழந்தைகளுக்கான புத்தகம் , கல்வி சம்பந்தமான புத்தகங்களை விட்டு விட்டு பார்த்தால் , இலக்கியம் சார்ந்த புத்தகங்கள் வாங்குவது குறைவாகவே உள்ளது..

ஆனாலும் சாரு , ஜெயமோகன் , எஸ் ரா போன்றோர் புத்தகங்களை கேட்டு வாங்குபவர்கள் , தேடி வாங்குபவர்கள் ஏராளம்.. அந்த வகையில் அராத்துவின் புத்தகங்களையும் தேடி வாங்கினார்கள் என்பது மகிழ்ச்சிக்கு உரியது...

காரணம் இளைய தலைமுறையில் ஒருவர் புத்தகம் வாங்கும்போது மற்றவர்கள் புத்தகங்களையும் பார்க்கிறார்கள் அல்லவா..

சுஜாதா புத்தகங்களை , இன்ன நாவல் என இல்லாமல் , குறைந்த விலையில் எது கிடைக்கிறதோ எதை வாங்கி செல்லும் போக்கு இருந்தது...ஆக அவர் மினிமம் கியாரண்டி... அதே போல கல்கி .கண்ணதாசன் போன்றோர்..

இடது சாரி புத்தகங்களுக்கு வரவேற்பு இருந்தது..
ஆனால் தமிழ் சார்ந்த நூல்கள் சரிவர சந்தைப்படவில்லை...

ஆன்மீக நூல்கள் என்றால் கண்ணை மூடிக்கொண்டு வாங்கும் நிலை...தேர்ந்தெடுத்தே வாங்கினார்கள்...

விளம்பரத்தால் மட்டுமே எந்த புத்தகமும் கூடுதலாக விற்பனை ஆகவில்லை... ஆனால் விளம்பரம் இன்றி சில நல்ல புத்தகங்கள் விற்பனை ஆகாமல் தடுமாறின...



டாப் டென் என ஒவ்வொரு பதிப்பகமும் சில லிஸ்ட் வெளியிடும்...  ஆனால் ஒட்டுமொத்தமாக எல்லா ஸ்டால்களையும் சுற்றியதில் நான் அவதானித்தன் அடிப்படையில் டாப் டென்..

1. பகவத் கீதை - கீதா பிரஸ் ( குறைவான விலை என்பதால் பலரும் வாங்கினர் ) 

2. சுஜாதா கதைகள் ( தலைப்பை பற்றி கவலையின்றி , காசு குறைவாக இருப்பதை அள்ளி சென்றார்கள்... குறிப்பாக ஸ்ரீரங்கத்து தேவதைகள்,)

3. தற்கொலை குறுங்கதைகள்- அராத்து

4 உடையார் - பாலகுமாரன்

5 . கிமு கிபி - மதன்

6 ராசலீலா-  சாரு நிவேதிதா

7. ப்ளீஸ் , இந்த புத்தகத்தை வாங்காதீங்க- கோபி நாத்

8. கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்

9 . அராஜகம் 1000 - அராத்து

10 வெள்ளை யானை - ஜெயமோகன்

( அடுத்த பத்து இடங்களில் இருக்கும் புத்தக  பட்டியல் அடுத்து வெளியிடப்படும் ) 

3 comments:

  1. கள் ஆய்வு .அருமை நண்பா

    ReplyDelete
  2. எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் ”நிமித்தம்” நாவலும் நன்றாக விற்றிருக்கிறது...

    www.writerkarthikeyan.blogspot.in

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா