Pages

Wednesday, May 28, 2014

சிங்கிஸ் ஐத்மாத்தவின் சிறப்பான சிலிர்ப்பான சோவியத் நாவல்

சோவியத் இலக்கிய ரசிகர்களால் மறக்க முடியாத பெயர் சிங்கிஸ் ஐத்மாத்தவ்..   டால்ஸ்டாய் , தாஸ்தயேவ்ஸ்கி போன்ற ரஷ்ய மேதைகளுக்கு மத்தியில் ரஷ்யாவை சேராத ஐத்மாத்தவ் தனக்கென தனி ரசிகர்களை பெற்று இருந்தார்.. இவரது அன்னை வயல் , ஜமீலா , முதல் ஆசிரியர், குல்சாரி என மறக்க முடியாத படைப்புகளை தந்துள்ளார்.

இயக்குனர் பொன்வண்ணன் இவரது தீவிர ரசிகராவார்.. எனவேதான் தன் படங்களுக்கு அன்னை வயல் , ஜமீலா என்றெல்லாம் பெயர் வைத்தார்..

ஐத்மாத்தாவ் கிர்கிஸ்தான் என்ற குடியரசை சேர்ந்தவர்.. மத்திய ஆசிய பகுதியை இவர் எழுத்து பிரதிபலிப்பதால் நம்மால் கதாபாத்திரங்களுடன் ஒன்றிணைய முடியும்.

ஒரு லாரி டிரைவரின் கதை என்ற நாவலும் இவரது முக்கியப்படைப்புகளில் ஒன்று..

ஒரு லாரி டிரைவர்.. தன் பணியிலும் உச்ச கட்ட ஆர்வம் கொண்டவன்.. காதலிலும் உச்சம் தொடுபவன்.. இந்த அதீத தன்மை அவன் வாழ்க்கையை எப்படி புரட்டிப்போடுகிறது என்பதே நாவல்..

இவனது எதிர்துருவமாக இவன் காதலி / மனைவி.. அழுத்தமானவள்...துணிச்சலானவள்..

பிரிவை அவன் எப்படி எதிர்கொள்கிறான்.. அவள் எப்படி எதிர்கொள்கிறாள் என்பது மிக நேர்த்தியாக சொல்லப்படுகிறது..

இந்த நாவலை வெயில் உச்சத்தில் இருக்கும் ஒரு மதிய வேளையில் படித்தேன்.. குளிர்காற்றும் , பனி பாறைகளும் , புற்களும் , மழையும் என்னை வேறொரு உலகத்துக்கே எடுத்து சென்று விட்டன.. படித்து முடித்த பின்பே வெயிலை உணர்ந்தேன்..

ஒரு பெண்ணை காதலித்து மணக்கிறான்.. லாரி ஓட்டுனராக திறமையாக பணியாற்றுகிறான்.. பழுதாகி நிற்கும் லாரியை அபாயகரமான மலைச்சரிவுக்ளில் தன் லாரி  மூலம் இழுத்து சென்று ஒருவனுக்கு உதவுகிறான்.. இதனால் கிடைக்கும் தன்னம்பிக்கையால் லாரி ஓட்டுவதில் சில தவறுகள் செய்து மேலதிகாரிகளின் அதிருப்தியை சந்திக்கிறான்..

இந்த சோகத்தில் இன்னொரு பெண்ணிடம் உறவு ஏற்பட , மனைவி அவனை வீட்டு குழந்தையை எடுத்துக்கொண்டு பிரிகிறாள்..

சில மாதங்கள் செல்கின்றன... ஒரு விபத்தில் சிக்குகிறான்.. முன்பு உதவினானே. அந்த ஆள் இவனை காப்பாற்றி தன் வீட்டுக்கு அழைத்து செல்கிறான். அங்கு அதிர்ச்சி.. அவன் மனைவி , அந்த ஆளின் மனைவியாக அந்த வீட்டில் இருக்கிறாள்.. ஆனால் இருவரும் ஒருவரை ஒருவர் , தெரிந்தவர்களாக காட்டிகொள்ளவில்லை... தன் மகன் தன்னை மாமா என்று அன்பாக அழைக்கும் அபத்தத்தை சந்திக்கிறான்..

அவள் இவனுடன் மீண்டும் வாழ விரும்பவில்லை என்பதை அறிந்து , அதே காதலுடன் அவள் வாழ்க்கையில் வெளியேறுகிறான் என கதை பொயட்டிக்காக முடிகிறது..

அந்த ஆளுக்கு இவன் முன்னாள் கணவன் என்பது தெரியும் என்பது நமக்கு கடைசியில் தெரிவது கதைக்கு புதிய அழுத்தம் தருகிறது..   அந்த ஆள் அவளையும் அவள் மகனையும் உயிராக நேசிக்கிறான்.. ஆனால் அவள் பிரிய முடிவெடுத்தால் , அதை ஏற்க மனதளவில் ஆயத்தமாக இருக்கிறான்..

இப்படி சம்பதப்பட்ட மூவரும் பெருந்தன்மையில் ஒருவரை ஒருவர் மிஞ்சுகின்றனர். ஆனால் வாழ்க்கை தன் போக்கில் செல்கிறது..


ஓ ஏரியே.. உன் நீல நிற தண்ணீரையும் , அழகிய கரையையும் என்னுடன் எடுத்து செல்ல விரும்புகிறேன்.. ஆனால் என் காதலியை எப்படி எடுத்து செல்ல முடியாதோ அதே போல உன்னையும் எடுத்து செல்ல முடியாது.  அவள் மகிழ்ச்சியாக வாழட்டும் என அவன் சோகத்துடன் வெளியேறுவது , தேசம் மொழி காலம் கடந்து நம்மை உருக்குகிறது..

மொழி பெயர்ப்பு தா பாண்டியன்..  மிக சிறப்பான நடை..

ஒரு லாரி டிரைவரின் கதை- ஒரு உன்னதமான கதை



Tuesday, May 27, 2014

துரோகங்களால் வீழ்ந்த டிராட்ஸ்கி - வைகோவின் அழகான சொற்சித்திரம்

ரஷ்ய புரட்சியின் சிற்பி டிராட்ஸ்கி குறித்து வைகோ சில கருத்துகளை பகிர்ந்துள்ளார்.. அவை உங்கள் பார்வைக்கு..

***********************************************************

இந்த நாட்களில்தான் மனிதகுல வரலாற்றில் மறக்க முடியாத மனிதராக நான் கருதுகிற லியான் டிராட்ஸ்கியின் சுயசரிதையான ‘என் வாழ்க்கை’ எனும் அற்புதமான நூலைத் திரும்பவும் படித்துக் கொண்டு இருந்தேன். முப்பது ஆண்டுகளாக என் இல்ல நூலகத்தை அழகு செய்யும் அற்புதமான உன்னதமான நூல் இது.

“மாகாளி கடைக்கண் வைத்தாள்... ஆகா என்று எழுந்தது யுகப் புரட்சி” என எரிமலைக் கவிஞன் பாரதி பாடிய சோவியத் ருஷ்யப் புரட்சியை முன்னின்று நடத்திய வர்கள் இருவர். ஒருவர் மாமேதை லெனின், இன்னொருவர் புரட்சியின் கதாநாயகன் லியான் டிராட்ஸ்கி. 

கொள்கைப் புரட்டர்களாலும், எதிர்ப்புரட்சியாளர்களாலும் புரட்சியின் அறுவடையை அனுப வித்தபின், உண்மைப் போராளி களுக்குத் துரோகம் செய்து, தலைமைப் பதவியைக் கைப்பற்றிக் கொண்டவர்களாலும் விவரிக்க இயலாத துன்பங்களையும் வேதனைகளையும் தாங்கியவர் டிராட்ஸ்கி. 

பல ஆண்டுகளாக டிராட்ஸ்கியிசம் என்றாலே ‘திரிபுவாதம்’ என்றும், டிராட்ஸ்கியிசம் என்றாலே ‘துரோகத்தனம்’ என்றும் கம்யூனி ஸ்ட்கள் விமர்சித்து வந்தார்கள்.

மாமேதை லெனினின் இறுதி நாள்களில், அவரது மனதில் ஆறாத இரணத்தை ஏற்படுத்தியவர் ஜோசப்ஸ்டாலின். இதை லெனின் துணைவியாரான ‘குரூப்கயா’ ஆதாரத்தோடு குறிப்பிட்டு இருக்கிறார்.

யூத குலத்திலே பிறந்த லியான் டிராட்ஸ்கி எழுதிய ‘என் வாழ்க்கை’ என்ற நூலில் இருந்து, அரசியலைப் போராட்டக் களமாக்கிக் கொண்ட வர்கள் பல படிப்பினைகளைத் தெரிந்து கொள்ளலாம்.

முப்பது நூல்களுக்கு மேல் எழுதிய வித்தகரான டிராட்ஸ்கி இணை யற்ற எழுத்தாளர். புரட்சியின் படைக்கலன்களான ஏடுகள் பல வற்றின் ஆசிரியராகத் திகழ்ந்தவர்.

அகிலத்தின் ‘நிரந்தரப் புரட்சி’ என்ற சித்தாந்தத்தை உருவாக்கி ஆயுதப் புரட்சியில் களத்தில் நின்று ஆயுதம் ஏந்திப் போராடியவர்.

உலகமே திகைக்கும் விதத்தில் 1917 க்குப்பின் பிரமிக்கத்தக்க இராணுவத்தை இரஷ்யாவில் ஒரே ஆண்டில் கட்டி எழுப்பிய இராணுவ மேதை.

எதிரி நாடுகளின் படையெடுப்பை முறியடித்து உள்நாட்டுப் போரில் போல்ஷ்விக்குகளுக்கு வெற்றி தந்தவர். நிகரற்ற சொல்வன்மை மிக்க மேடைப் பேச்சாளர். ‘ஸ்டாலினிஸம்’ என்ற எதேச் சதிகாரத் தன்மையை, கொள்கையற்ற பொய்மையை உலகத்திற்கு அம்பலப்படுத்தியவர். 

மாமேதை லெனின் திடீரெனப் பக்க வாத்தால் நடமாடும் சக்தியையும் பேசும் திறனையும் இழந்த துயரத்தை, டிராட்ஸ்கியின் காது களுக்கு மூன்று நாட்கள் வரை சேர விடாமல் தடுத்தனர். லெனின் உடல் நலம் ஓரளவிற்குத் தேறி பேசவும் நடக்கவும் மீண்டும் திறன் பெற்றதற்குப் பின்னரும் திரை மறைவுத் துரோகச் செயல்கள் தொடர்ந்தன.

லெனின் உயிர் நீத்த நாளில் ரஷ்ய நாட்டின் வேறொரு பகுதியில் இருந்த டிராட்ஸ்கியிடம், ‘உடனடி யாக லெனின் அடக்கம் செய்யப் பட்டு விடுவார் எனறும், அவரது ஈமச் சடங்குகளுக்கு முன்னர் வர ட்ராட்Þகிக்கு வாய்ப்பு இல்லை’ என்றும் தகவல் தரப்பட்டது. 

ஆனால், மூன்று நாட்களுக்குப் பின்னர்தான் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டு, பதனப்படுத்தப் பட்ட பெட்டியில் சடலம் வைக்கப் பட்டது.

உண்மைகளை உரக்கப் பேசிய தால் டிராட்Þகி நாடு கடத்தப் பட்டார். அவரும் அவரது மனைவியும், மகளும் யாருக்கும் தெரியாமல் கைது செய்யப்பட்டு, பனிப் பிரதேசங்கள் வழியாக வெளியேற்றப்பட்ட கொடுமை சொல்லும் தரமன்று.

இக்காலத்தில்தான், டிராட்ஸ்கியின் இளைய மகள் நீனா நோய்வாய்ப் பட்டு இறந்தார். தந்தையிடம் இருந்து பதில் கடிதம் வரும் என மரணப் படுக்கையில் ஏங்கியவாறு உயிர் நீத்த நீனா, தந்தைக்கு எழுதிய கடைசிக் கடிதத்தை டிராட்Þகியிடம் கொடுக்காமலே மறைத்தனர். அவள் இறந்தபிறகே கொடுத்தனர். மரணப்படுக்கையில் இருந்த அவளைப் பார்க்கவும் டிராட்Þகியை அனுமதிக்க வில்லை. 

1928 ஜனவரி 20 ஆம் தேதி, சீனாவை ஒட்டிய ரஷ்யா எல்லைப் பகுதியில் ஒரு பாழடைந்த ‘அல்மா கட்டா’ என்ற சிறிய நகரத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட டிராட்ஸ்கி, அங்கே சிறையில் வைக்கப்பட்டது போல முடக்கப்பட்டார்.

1929 ஜனவரி 20 இல் சோவியத் நாட்டில் இருந்தே டிராட்ஸ்கியை நாடு கடத்தும் உத்திரவு பிறப் பிக்கப்பட்டது. துருக்கி நாட்டின் கான்ஸ்டாண்டிநோபிளுக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

1929 ஜூன் மாதத்தில் பிரிட்டனில் குடியேற விரும்பி விசா கோரி விண்ணப்பித்தார். பிரிட்டிஷ் பிரதமர் மெக்னால்டுக்கும் தந்தி அனுப்பினார். ஆனால், தொழிற் கட்சி அரசு டிராட்ஸ்கியின் வருகையை விரும்பவில்லை.

ஜார்ஜ்பெர்னாட்ஷா, ஹெச்.ஜி.வெல்ஸ், பேராசிரியர் ஹெரால்டுலாஸ்கி, பர்மிங்ஹம் மேற்றி ராணியார் ஆகியோர், அரசாங்கத்தைக் கண்டித்தும், ட்ராட்ஸிக்கு அனுமதி தரக் கோரியும் அறிக்கை விட்டனர்.

பெர்னாட்ஷா தனது கடிதத்தில் குறிப்பிட்டதாவது:- 

“மிகமிகப் பிற்போக்கான எதிரிகளுக்குக்கூட பிரிட்டன் புகலிடம் அளிக்கும்போது, உலகப் புகழ்பெற்ற ஒரு தலை சிறந்த சோசலிÞடுக்குப் புகலிடம் அளிக்க மறுப்பது ஓர் இக்கட்டான நிலையை உருவாக்கியுள்ளது. இந்த அரசாங்கத்தின் மறுப்பால் டிராட்ஸ்கியின் வாயை மூட முடியாது. அவர் உலக நாடு களின் தீவிரவாதிகள் அனைவரும் போற்றிப் புகழும் மாவீரர். அவர்களுக்கு உணர்ச்சி ஊட்டுகிறவர். உந்து சக்தியாக விளங்குகிறவர். கூண்டில் அடைத்த சிங்கத்தைக் கண்டு பயப்படுகிறவர்கள், அந்தக் கூண்டின் சாவி தங்கள் கையில் இருக்க வேண்டும் என்று விரும்பினால் டிராட்ஸ்கியைப் பிரிட்டனுக்கு வர அனுமதிக்க வேண்டும்” 

என்றார்.

ஏனைய ஐரோப்பிய நாடுகளும் இக்கூண்டுச் சிங்கத்திற்கு விசா வழங்க மறுத்தன. ஜெர்மனிக்குச் செல்ல விரும்பிய டிராட்ஸ்கியை ஹிட்லர் வசை பாடினார்.

ஹிட்லரின் பத்திரிகையான ‘பெயோபச்சட்டர்’ 1929 பிப்ரவரி 9 இல் எழுதியதாவது, “சோவியத் யூத வேட்டை நாயான டிராட்ஸ்கி பெர்லினில் குடியேற விரும்பு கிறான். இந்த யூதக் கொலைகாரன் மீது நாம் ஒரு கண் வைத்து இருப்போம்’ என்று எழுதியது.

‘ஜெர்மனியில் நாஜிகள் செல் வாக்குப் பெறுவது சோசலிசத் திற்குப் பேராபத்தாக முடியும்’ என்று ஹிட்லரைக் குறித்து தொடக்கத் திலேயே எச்சரிக்கை தந்தார் டிராட்ஸ்கி.

1932 பிப்ரவரி 20 ஆம் நாள், சோவியத் ரஷ்யாவின் அறிவிக்கப் படாத சர்வாதிகாரி ஸ்டாலின், டிராட்ஸ்கியின் குடி உரிமையைப் பறித்தார்.

டென்மார்க்கின் முற்போக்கு வாதிகள் டிராட்ஸ்கியை அழைத் தனர். ஆனால், டென்மார்க் அரசு அனுமதிக்கவில்லை. சுவீடனும் மறுத்தது. பின்னர் பிரானஸ் நாட்டில் பாரஸ் பட்டணத்தை அடுத்த பார்பிசன் என்ற சிறிய நகரில் குடியேறினார்.

பின்னர் பிரான்சில் இருந்தும் நாடு கடத்தப் பட்டார். நார்வே நாட்டுக்குச் சென்றார். ஸ்டாலினின் ஆதிக்கக் கரங்கள் நார்வேயில் இருந்தும் டிராட்ஸ்கியை விரட் டியது. அங்கிருந்து அட்லாண்டிக் கடல் தாண்டி மெக்சிகோ போய்ச் சேர்ந்தார் டிராட்ஸ்கி.

டிராட்ஸ்கி தனது மரண சாசனத்தை 1940 பிப்ரவரி 27 இல் எழுதினார். அதே ஆண்டு ஆகÞட் 21 ஆம் தேதி அவர் படுகொலை செய்யப் பட்டார்.

நயவஞ்சகமாகத் திட்டமிட்டு நண்பனைப் போலவே நடித்த அக்கொலைகாரன் தந்த கட்டு ரையைச் சரிபார்த்துக் கொண்டு இருக்கும்போதே, கண்ட கோடா லியில் டிராட்ஸ்கியின் தலையைப் பிளந்தான் கொலைகாரன் ஜக்சன்.

தலை வெட்டுண்ட நிலையிலும் கொலைகாரன் மீது பாய்ந்து டிராட்ஸ்கி போராடினார். உயிர் பிரியும் தறுவாயில், வாய் குழற அவர் கூறியது: 

“ஒரு கொலைகாரனின் தாக்கு தலால் நான் மரணத்தை நெருங்கிக் கொண்டு இருக்கிறேன்... எனது அறையில் என்னைத் தாக்கினான்... நான் அவனுடன் போராடினேன்.... தயவு செய்து நமது நண்பர் களிடம் சொல்லுங்கள்... நான்காவது அகிலத்தின் வெற்றி நிச்சயம்..... முன்னோக்கிச் செல்லுங்கள்...” 

தொடர்ந்து பேச முயன்றார். முடியவில்லை.

காலம் மாறியது. 1988 நவம்பர் 7 ஆம் தேதி, மாÞகோவில் டிராட்ஸ் கியின் பிறந்த நாள் கொண்டாடப் பட்டது. 

என் நெஞ்சில் அதிர்வு அலைகளை ஏற்படுத்திய ஒரு மாவீரனின் மறைக்கப்பட்ட வரலாறை நான் உள்வாங்கிக்கொண்டதால் இதை எழுதி இருக்கிறேன்.

Wednesday, May 21, 2014

கில்மா புத்தகம் முதல் மிர்தாத் புத்தகம் வரை


*******தானம்********
ஒரு பெண் ரத்த தானம் கொடுக்க ரத்த வங்கி சென்றாள்... லிஃப்ட்டில் ஓர் இளைஞன் ஹாய் என்றான்.. - ஹாய் என்றாள் இவள்..
 - எங்கே செல்கிறீர்கள்  கேட்டான்..
-ரத்த வங்கி செல்கிறேன்.. ஒரு முறை ரத்தம் கொடுத்தால் , 200 ரூபாய் கிடைக்கும் என்றாள் அவள்..
அவன் கேலியாக சிரித்தான்..- நான் விந்து வங்கி செல்கிறேன்,, ஒரு முறை விந்து கொடுத்தால் 2000 ரூபாய் கிடைக்கும்...
அடுத்த நாள்..
அதே லிஃப்டில் இருவரும் சந்தித்தனர்.
- ஹாய். நான் ஒரு நண்பரை பார்க்க வந்தேன்.. நீங்க? கேட்டான் அவன்..
அவள் சைகையால் விந்து வங்கியை காட்டி, தான் அங்கு போவதாக சொன்னாள். அவளால் வாயை திறக்க முடியவில்லை..
******************************************************
_______குரல் இனிது_______
ஒருவன் டாக்டரிடம் போனான்..
“ டாக்டர்.. எனக்கு குரல் எருமை குரல் மாதிரி இருக்கு.. உங்க குரல் மாதிரி இனிமையா மாத்தணும் “ என எருமை குரலில் பேசினான் ஒரு பேஷண்ட்..
” ஆண் தன்மை அதிகம் இருந்தா இந்த பிரச்சனை வரும்.. உன் ஆணுறுப்பில் இரண்டு இஞ்ச் கட் பண்ணி எடுத்துட்டா சரி ஆகிடும் “  குயில் போன்ற குரலில் டாக்டர் சொன்னார்..
அவன் சம்மதித்தான்.. அவர் ஆப்பரேஷன் செய்து இரண்டு இஞ்ச் கட் பண்ணி எடுத்தார்.. கட் செய்ததை பத்திரப்படுத்தினார்..
அவனுக்கு குரல் இனிமையாகி விட்டது.. ஆனால் அந்த மேட்டர் ஒழுங்காக செய்ய முடியவில்லை.. மீண்டும் டாக்டரிம் போனான்..
“ டாக்டர் .. எனக்கு குரல் வேண்டாம்..கட் செய்ததை மீண்டும் ஒட்ட வையுங்கள் “  குயில் போன்ற குரலில் கேட்டான்..
”சாரி...அதை வேறு ஆளுக்கு பொருத்தியாச்சு.. உனக்கு இனி அது கிடைக்காது” என்றார் டாக்டர் எருமை குரலில்..
****************************************************************
***************ஆத்ம திருப்தி*******
ஒரு கணவன் மரண படுக்கையில் இருந்தான்..
“ செல்லம்.. சாவதற்குள் ஒரே ஒரு உண்மை தெரிஞ்சா போதும்..  சொல்லுவியா” என்றான் கணவன்
“  கேளுங்க “ என்றாள் மனைவி..
“ நம் பத்து மகன்களில் பத்தாவது மகன் மட்டும் வித்தியாசமா இருக்கானே..உண்மையை சொல்லு.. அவனுக்கு மட்டும் வேற அப்பாதானே.”
“ ஆமாங்க”
“ யாரு அது “
“ நீங்கதாங்க”
கணவன் ஆத்மா சாந்தி அடைந்தது

_____________________________________________________________________

1. கில்மா புத்தகம்
 நான் பள்ளிக்காலங்களிலேயே கில்மா புத்தகங்கள் படிக்க ஆரம்பித்து விட்டேன்.. எனக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக என் நண்பன் ஒருவன் கில்மா புத்தகம் ஒன்றை அறிமுகம் செய்தான்.. அப்போதெல்லாம் கில்மா எழுத்த்கள் கிடைப்பது இப்போது போல எளிதல்ல.. ரகசியமாக வகுப்பறைக்குள் எடுத்து வருவது ஹீரோயிசமாக கருதப்படும்... அதன் பிறகு பல புத்தகங்கள் , ஆங்கில புத்தகங்கள், பிட்டு படம் , டிவிடி , நேரடிக்காட்சிகள் என முன்னேறினாலும் , என் பெயர் ரா*** , நான் அழகான 18 வயது இளைஞன்.. என் பக்கத்து வீட்டில் .. என ஆரம்பிக்கும் டெம்ப்ளேட் கதைகளுக்கு நிகர் அவைதான்...
சில புத்தகங்கள் இந்த டெம்ப்ளேட் கதைகளுக்கு அப்பாற்பட்டு தரமான நகைச்சுவைகளை வழங்குவதும் உண்டு.. பிரபல நடிகைகளில் கற்பனை பேட்டிகள், கற்பனை வாழ்க்கை வரலாறுகள் என வாழ்க்கையை வளமாக்கக்கூடியவை அந்த புத்தகங்கள்.
நெட் வருகையால் இவை செல்வாக்கிழந்து விட்டன என்பது வருந்தத்தக்கது..
இப்படி படிக்க ஆரம்பித்து , ராஜேஷ்குமார் , ராஜேந்திர குமார், சுஜாதா, புஷ்பா தங்கதுரை என டிராக் மாதிரி , பலவற்றை மேய ஆரம்பித்தேன்...
அவற்றில் டாப் டென் என்று வரிசைப்படுத்தினால் , அவை பெரும்பாலும் ஏற்கனவே அனைவருக்கும் தெரிந்திருக்கும்.. எனவே நான் திட்டமிடாமல் படிக்க நேர்ந்த சில புத்தகங்களை இங்கு சொல்ல விரும்புகிறேன்
________________________________________________________________

2. வினோத ரஸ மஞ்சரி    ஆசிரியர் : வீராசாமி செட்டியார்.. சாரதா பதிப்பகம்

இது வெகு அபூர்வமான புத்தகம். இதை எனக்கு ஒரு நண்பர் / எதிரி அறிமுகம் செய்தார்..
சென்ற நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சி நடந்தபோது எழுதப்பட்ட புத்தகம்.. பல்வேறு கட்டுரைகளில் தொகுப்பு.. இலக்கியம் , சமுதாயம் , ஆங்கிலேய ஆட்சி , இசை . நாத்திக ஆத்திக அக்கப்போர்  என பல விஷயங்களை தொடுகிறது புத்தகம்...
இந்த கட்டுரைகள் என்றும் மாறா உண்மையை பேசவில்லை.. அந்த கால கட்டத்தின் கண்ணாடியாக ஓர் ஆவணமாக திகழ்கிறது..
ஆங்கிலேய ஆட்சிதான் சிறந்தது என வாதிடுதல் , பெண் என்றால் ஆணிற்கு அடங்கி இருக்க வேண்டும் என்ற அந்த கால கருத்துகள் , சராசரி வாழ்க்கையில் நடக்கும் அதிசய சம்பவங்களை ஆன்மிகமாக கருதும் போக்கு என இருந்தாலும் , இவை யாவும் அந்த காலத்தை புரிந்து கொள்ள பயன்படுகின்றன..
இது தவிர , எப்போதும் ரசிக்க்கக்கூடிய இலக்கியம் , இசை பற்றிய பார்வைகள்  , கதைகள் என பல உண்டு...
ஒரு முறை கம்பருக்கும் சோழ மன்னனுக்கும் சண்டை.. கம்பர் கோபித்துக்கொள்கிறார்.. மன்னா..உன்னை நம்பி நான் இல்லை..இப்போது வெறும் கோவணத்தோடு போகிறேன்.. உனக்கு சமமான செல்வாக்குடன் திரும்பி வருவேன்..உன்னை விட பெரிய மன்னன் எனக்கு வெற்றிலை மடித்து தர காண்பாய் என சவால் விட்டு கிளம்புகிறார்..
சேர நாடு செல்லும் கம்பர் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாமல் சாதாரண வேலையாளாக சேர மன்னனிடம் பணி செய்கிறார்.. ஒரு கட்டத்தில் அவர்தான் கம்பர் என அறிந்த சேரன் , பதறிப்போய் அவரை கவுரவிக்கிறான்.. அரசனுக்குரிய மரியாதையுடன் சோழ அரண்மனைக்கு செல்கிறார்.. சேரன் அவருக்கு வெற்றிலை மடித்து கொடுக்கிறான்.. சோழ மன்னன் கம்பரிடம் மன்னிப்பு கேட்கிறான்.. பிறகு தனியாக கேட்கிறான் “ சேரன் வெற்றிலை மடித்து தருவதை , மறைத்து வைத்து கொள்கிறீர்கள்.. சாப்பிடவில்லை... என்ன விஷயம்?
கம்பர் சொல்கிறார்.
“ அவன் என் மேல் கொண்ட அன்பால் , வெற்றிலை மடித்து தருகிறான்.. அதற்காக நான் அவனை வேலையாளாக கருதிக்கொண்டு அந்த வெற்றிலையை சாப்பிடுவது அவனுக்கு மரியாதை இல்லை.. என்ன இருந்தாலும் அவன் அரசன்” என்கிறார் கம்பர்..சோழன் வியக்கிறான்..
கம்பரின் பெருந்தன்மை, சோழனின் நுண்ணிய அவதானிப்பு , சேரனின் அன்பு என அனைவரும் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார்கள்...

இது போல பல சுவையான நிகழ்ச்சிகள் கொண்ட புத்தகம் இது..ஏராளமான பழமொழிகள் , அந்த கால நடை என ஒரு பொக்கிஷம் இந்த புத்தகம்...
****************************************************************
3.கொற்கை - ஜோ டி க்ருஸ் காலச்சுவடு பதிப்பகம்

ஆழி சூழ் உலகு படித்தாலும் , கொற்கை நான் படிக்கவில்லை.. 1100 பக்கங்கள் என்பதால் படிக்க தயக்கமாக இருந்தது..ஆனால் தற்செயலாக படித்தேன்... இதற்கிடையில் சமீபத்தில் சில ஃபாசிஸ்ட்டுகள் , அவருக்கு எதிராக செயல்பட்டதை தொடர்ந்து , அடக்குமுறைக்கு எதிராக இருக்க வேண்டும் என தார்மீக அடிப்படையில் மீண்டும் படித்தேன்..
தமிழின் முக்கிமான நூல்களில் ஒன்று இந்த நூல்.. எந்த ஒரு தனி நபரின் சாகசமோ , குறிப்பிட்ட பிரச்சார தொனியோ இல்லாமல் , கொற்கையின் பல ஆண்டு வரலாற்றை பதிவு செய்துள்ளார் க்ருஸ்.
ஒரு விதத்தில் இது தமிழ் நாட்டின் வரலாறும் கூட.. அவ்வளவு ஏன் , இலங்கை பிரச்சனையின் வரலாறும்கூட..
இதை வறட்டுத்தனமாக எழுதாமல் , அழகியலுடன் எழுதி இருப்ப்பதே நாவலின் வெற்றி...1100 பக்க நாவல் என்றாலும் , ஒவ்வொரு பக்கமும் தனித்துவ அடையாளத்துடன் படைக்கப்பட்டுள்ளது...  நாவலின் எந்த அத்தியாயத்தையும் தனியாக படித்தால் ஒரு சிறுகதை போல இருக்கும்..
ஓர் அழகான அறிவான பெண்.. தேவையே இன்றி அவள் கணவன் அவளை சந்தேகப்படுகிறான்.. தினமும் சித்தரவதை... கைக்குழ்ந்தையுடன் கஷ்டப்படும் அவள் ஒரு முடிவு எடுக்கிறாள்.. கணவனை கட்டிப்போடுகிறாள்.
அவனிடம் பொறுமையாக பேசுகிறாள்..
Ever has it been that love knows not its own depth until the hour of separation .. என் இன்மையின் போதுதான் என்னை புரிந்து கொள்வீர்கள்.. என் குழ்ந்தைக்கு நல்ல தந்தை வேண்டும் என்பதற்காக என்னை பலியிடுகிறேன்..குழ்ந்தையை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள்.. குழ்ந்தை என்பது எதிர்காலத்தை நோக்கி நாம் விடும் அம்பு ...என பேசியவாறே கத்தியால் குத்தி உயிர் நீக்கிறாள்... கணவன் திகைத்து பார்க்கிறான்..
அந்த மகளின் கதை பிறகு வருகிறது.. இது நாவலின் சிறிய பகுதி மட்டுமே..இப்படி எண்ணற்ற கதாபாத்திரங்கள்..எண்ணற்ற சொற்சித்திரங்கள்.
கடற்கொள்ளையர், துறவு மேற்கொண்ட பின்னும் தன்னையே நினைக்கும் சாமியாருக்கு ஒரு பெண் கொடுக்கும் ஷாக் ட்ரீட் மெண்ட் , லெஸ்பியன் உறவு , கப்பல் தொழில் நுட்பம் , அரண்மனை ஷாப்பிங் காம்பிளக்ஸ் ஆகும் வரலாற்று அபத்தம் , சொந்த அக்காவிடம் தவறாக நடக்க முயலும் தம்பியும் அவனை லாகவாகமாக கையாளும் சகோதரியும் என சொல்லிக்கொண்டே போகலாம்.. ஓர் இயந்திரத்தை மிக திறமையாக திட்டமிட்டு கரைக்கு கொண்டு வரும் காட்சியை சொல்லும்போது அதை கவனிக்கும் பறவையை வர்ணிப்பது போன்ற கடற்புர சொற்சித்திரங்கள் அருமை,,
வலம்புரி சங்கை பார்த்தால் அதிர்ஷ்டம் என மக்கள் ஆர்வமாக பார்க்க வருகிறார்கள்.. அது எங்கே இருக்கிறது என பார்த்தால் , ஒரு சடலத்தின் கையில் இருக்கிறது.. அதை எடுக்கும் முயற்சியில் உயிர் இழந்து இருக்கிறான் ஒருவன்..
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.. கண்டிப்பாக படிக்க வேண்டும்

***********************************************************************

4.  நான்கு கட்டுரைகள் - மா சேதுங்
விடியல் படிப்பகம் ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளது... தேர்ந்தெடுக்கப்பட்ட மாவோ படைப்புகள்.. மிக பயனுள்ள புத்தகம்.. ஆனால் சற்று பெரிதானது.. அதை படிக்க முடியாதவர்கள் , நான்கு கட்டுரைகளை படித்தால் ஓரளவு மாவோவை புரிந்து கொள்ளலாம்.. வெறும் 180 பக்கங்கள்..
ஆயிரம் பூக்கள் மலரட்டும் , ஆயிரம் கருத்துகள் முட்டி மோதட்டும் என எந்த பின்னணியில் சொன்னார். லெனின் மார்க்ஸ் போன்றோரை பற்றி மாவோவின் பார்வை என்ன.. ஏகாதிபத்திய எதிர்ப்பில் அவர் எப்படி வென்றார் என்பது போல பலவற்றை தெரிந்து கொள்ளலாம்

*******************************************************************
5. இஸ்லாமிய ஃபக்கீர்கள் -வ. ரஹ்மத்துல்லா   படையல் வெளியீடு
தவழ்ந்து நடக்கையிலே நான்கு கால்களடா
தனித்து நடக்கையிலே இரண்டு கால்களடா
தளர்ந்து நடக்கையிலே மூன்று கால்களடா
தலைவன் அழைக்கையிலே எத்தனை கால்களடா
இப்படி சித்தர் பாணியில் பாடிக்கொண்டு , இறைத்தேடலில் ஈடுபடுபவர்கள்தான் ஃபக்கீர்கள்.. வழக்கமான இஸ்லாமிய பாணியில் இருந்து சற்று விலகி ,ஞானிகளை போற்றுதல் , அன்பு மார்க்கம் என எளிமையான முறையை பின் பற்றும் இவர்களைப்பற்றி இந்த நூல் பேசுகிறது..இனிய பாடல்கள் , சுவையான சம்பவங்கள் என மிளிர்கிறது புத்தகம்
*****************************************************************************
6 திராட்சைகளின் இதயம் - நாகூர் ரூமி   கிழக்கு பதிப்பகம்..
இந்த நூல் சுஃபிசம் குறித்து பேசுகிறது...படிக்க சுவையான நடை...தனி ஒருவரின் கதையை சொல்வது போன்ற தொனியில் ஆழ்மான விஷயங்களை பேசுகிறது புத்தகம்.. எல்லோரும் திராட்சைகளை பார்த்தாலும் , திராட்சையின் இதயத்தில் இருக்கும் மதுவை பார்க்க ஞானிகளால்தான் முடியும்..  ஞானிகளின் தொடர்பு எப்படியெல்லாம் நம்மை மாற்றும் என இதில் காணலாம்
*******************************************************************************
7.சொல் எனும் தானியம் - சக்தி ஜோதி  சந்தியா பதிப்பகம்
ஒரு நண்பர் ரெஃபர் செய்து இந்த கவிதை நூலை படித்தேன்.தொன்மம் , படிமம் என கஷ்டப்படுத்தாமலும், மேம்போக்காக பேசாமலும் , ஒரு தனித்துவ அழகியலோடு வெளி வந்து இருக்கும் கவிதை நூல் இது.
எல்லா உயிர்களும் தன்னளவில் இன்புற்று
இருக்க நினைப்பதே வாழ்வு என்று சொல்லி
விடுகிறது
நாவினால் தன்னை ஈரமாக்கிக்கொள்ளும்
வெயிலில் உலர்ந்திருக்கும் பசு
****************************
வெயிலை குடித்து நக்ர்கின்ற நதியில்
வெயிலை ஏந்தி விரிகிற நிலத்தில்
பாம்பின் விஷம்போல
காமம் தாங்கியே
கோடையின் பூக்கள் மல்ர்கின்றன
*************************************
நான் எல்லா பெயர்களையும் அனுமதித்துக்
கொண்ட்டிருக்கிறேன்
என் இயல்பை அறிந்தபடி
*********************************
இப்படி ரசித்துக்கொண்டே இருக்கலாம்...
***********************************************************************
8  Mammooth book of dirty , sick , X rated & ploitically incorrect book ( un censored )
தலைவரின் பெண் உதவியாளர் அவசரமாக அவர் அறைக்குள் வந்தாள்.
- தலைவரே... ஒரு கெட்ட செய்தி..
- அட என்னம்மா.. எப்ப பார்த்தாலும் கெட்ட செய்தியா.. நல்ல செய்தி ஏதாச்சும் சொல்லு..
- சரி.. ஒரு நல்ல செய்தி..இந்த வயசுலயும் உங்களால் ஒரு பெண்ணை தாயாக்க முடியும்ங்க்றது தெரிய வந்து இருக்கு
*******************************
மனைவி : யாரோ உங்களை கிஸ் பண்ணி இருக்காங்க
கணவன் : இல்லையே. நான் உனக்கு துரோகம் செய்வேனா
ம : அப்ப, சட்டைல எப்படி லிப்ஸ்டிக் கறை?
க : அதுவா... **ய துடைக்கும்போது பட்டு இருக்கும்
*******************************************
இவற்றைத்தவிர மற்றதெல்லாம் பப்ளிஷ் பண்ண முடியாத தரத்தில் இருக்கும் .. படித்து இன்புறலாம்
**********************************************************************************
9 டாக்டர் கோவூரின் பகுத்தறிவுப் பாடங்கள் திராவிடர் கழக வெளியீடு
மறுபிறவி , ஞான திருஷ்டி , பேய் , பிசாசு , சோதிடம் , போட்டோவில் இருந்து விபூதி கொட்டுதல் போல சில சம்பவங்கள் அன்றாட வாழ்வில் நடப்பதாக அவ்வப்போது பேச்சு கிளம்பும். இந்த சம்பவங்களின் உண்மைத்தன்மை அலசுகிறது புத்தகம்.. போன ஜென்மம் நினைவு இருப்பதாக சிலர் சொல்வார்கள்.. போன ஜென்ம கேள்விகளுக்கு பதிலும் சொல்வார்கள்.. ஆனால் ஆராய்ந்து பார்த்தால் , அதில் இருக்கும் போலித்தன்மை தெரியும்.. இப்படி சில சம்பவங்கள் பொய் என நிரூபிக்கப்பட்டதை ஆதாரபூர்வமாக எழுதி இருக்கிறார் டாக்டர் கோவூர்.. நாத்திகவாதிகள் கண்டிப்பாக படிக்க வேண்டும்..
**********************************************************************************
10 மிர்தாதின் புத்தகம்- கண்ணதாசன் பதிப்பகம்
உலகில் கோடிக்கணக்கான புத்தகங்கள் உள்ளன.ஆனால் இன்றுள்ள எல்லாப் புத்தகங்களை விடவும் மேலோங்கி உயர்ந்து நிற்பது ’மிர்தாதின் புத்தகம்’. இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகமிது... நைமி, இந்த நூற்றாண்டின் மாபெரும் எழுத்தாளர் மட்டுமல்லர், எல்லா நூற்றாண்டுகளிலும் இவரே மாபெரும் எழுத்தாளர்.நான் ஆயிரக்கணக்கான நூல்கள் படித்திருக்கிறேன், எதுவுமே இதற்கு ஈடாகாது   என்கிறார் ஓஷோ.

கலீல் கிப்ரானின் உயிர் தோழனாக விளங்கிய, மிகைல் நைமி எழுதிய நூல்தான் 'மிர்தாதின் புத்தகம்’

இது இரண்டு பாகங்களாக உள்ளது.  புனைவு போன்ற சாயலுடன், ஒருவன் மேற்கொள்ளும் தேடலுடன் கூடிய பயணம் முதல் பாகம் இது அறிமுகம் போன்றது  , அடுத்து வருவதுதான் மெயின்    இரண்டாம் பாகத்தில் ஞான புதையல். ஆனால் நேரடியாக இரண்டாம் பாகத்துக்கு வந்து விட்டால் , முக்கியமான சிலவற்றை இழக்க வேண்டி இருக்கும். இது வெறும் கதை அன்று. ஒவ்வொரு பக்கமும் குறியீடுகளால் ஆனது. எனவே ஒரு வர்யையும் விட்டு விடாமல் படித்தால்தான் முழு பயன் கிட்டும்.


ஒன்பது பேர் மட்டுமே இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் கூடிய மலை உச்சியில் ஒரு மடலாயம். ஒன்பதில் ஒருவர் இறந்து விட்டால் , கடவுள் புதிதாக ஒருவரை அனுப்பி வைப்பார் என்பது கொடுக்கப்பட்ட இன்ஸ்ட்ரகஷன். அந்த ஒன்பதில் ஒருவர் இறக்க , புதிதாக ஒருவன் மடத்துக்கு வருகிறான். ஆனால் அவனை தலைவர் ஏற்கவில்லை. கடைச்யில் வேலையாளாக சேர்கிறான். இதன் தொடர் நிகழ்சிகளால் அந்த தலைவர் சபிக்கப்பட்டு அங்கேயே சுற்றி வருவதாக தெரிந்த ஒருவன், அந்த பாழடைந்த மண்டபத்தை தேடி மலை உச்சியை நோக்கி பயணம் செல்கிறான். பல சோதனைக்கு பிறகு மலை உச்சியை அடைகிறான், அந்த துறவி இவனுக்காகவே காத்து இருக்கிறார். மிர்தாதின் புத்தகத்தை கொடுத்து விட்டு மறைகிறார்.

அடுத்து வருவது மிர்தாதின் புத்தகம் என்ற ஞான களஞ்சியம். ஆர்வ கோளாறின் விளைவாக இந்த இரண்டாம் பாகத்துக்கு நேரடியாக வருவது தவ்று.

அந்த மலை உச்சி பயணமே அபாரமான குறியீடுதான் . அதை இழந்து விடக்கூடாது.


அந்த பயணதின் போது கிடைக்கும் அனுபவங்களும் உரையாடல்களும் முக்கியமானவை.

“ நம்பிக்கை மீது எப்போதும் நம்பிக்கை இழக்காதே “

“ நான் முட்டாளா? “

“ ஏழு பிறவி நீள பயணத்துக்கு , ஏழு ரொட்டி துண்டுகளை கொண்டு வந்தவனல்லவா நீ “
“ ஏன் , 7000 கொண்டு வந்து இருக்க வேண்டுமா ? “

“ ஒன்று கூட கொண்டு வந்து இருக்க கூடாது “

” ஊன்றுகோல் இல்லாதவர்கள் மகிழ்சி கொண்டவர்கள். அவர்கள் தடுமாறுவதில்லை. வீடற்றவர்கள் மகிழ்ச்சி கொண்டவர்கள். அவர்கள் வீட்டில்தான் இருக்கிறார்கள் “:

” வாழ்வதற்காக செத்து போ, சாவதற்காக வாழ்”



இப்படியெல்லாம் அபாரமாக அறிமுகப்பகுதி இருப்பதால் , அடுத்த பகுதியில் என்ன இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுகிறது.. எதிர்பார்ப்பு இருந்தால் ஏமாற்றம் இருக்கும் என்பது இயல்பு. ஆனால் மெயின் பார்ட் நம்மை எங்கோ அழைத்து சென்று விடுகிறது. பாதை அற்ற ஓர் உலகத்துக்கு சென்று விடுகிறோம்.

முக்கியமான வாழ்வியல் விஷ்யங்களை எளிய சுருக்கமாக சொல்கிறார் மிர்தாத். அளவுக்கு அதிக்மாக ஒரு வார்த்தை கூட இல்லை. முழு பிரசங்கம் போல இல்லாமல் , ஒரு நடையை அமைத்து கொண்டது சிறப்பு.

” நியாயத்தீர்ப்பு நாள் என்ன ஆயிற்று ?

“ ஒவ்வொரு நாளும் நியாய தீர்ப்பு நாள்தான்.ஒவ்வொரு கண் சிமிட்டலிலும் , எல்லா உயிர்களும் கணக்கிடப்படுகின்றன “

“ஒரே ஒரு ஆளை நீங்கள் பகையாக நினைக்கும் வரை உங்களுக்கு நண்பர்களே இல்லை “

“ அன்புக்கு பரிசுகள் தேவை இல்லை. அன்பே அன்பின் பரிசு ”


பிரார்த்தனை குறித்து

“ நீங்கள் சொல்லியா கடவுள் சூரியனை உதிக்கவும் , மறைக்கவும் செய்கிறார்? “

வழிபாடு செய்ய ஆலயங்கள் தேவை இல்லை..உங்கள் இதயத்தில் ஆலயத்தை காண முடியவில்லை என்றால், எந்த ஆலயத்திலும் உங்கள் இதயத்தை காண முடியாது “:


:உன் தந்தை இறக்கவில்லை.உருவம் கூட இறக்கவில்லை.மாறி விட்ட அவர் உருவம் குறித்த உன் உணர்வுகள்தான் இறந்தவை”

இப்படி படித்த பின்பும் மனதில் ரீங்காரமிடும் வார்த்தைகள் ஏராளம்.
படிக்க வேண்டிய புத்தகம்