தனக்கு தியானம் சொல்லிதருமாறு ஒருவன் ஜென்மாஸ்டரை கேட்டான்.. ஜென் மாஸ்ட்டர் ஒரு கதை சொல்ல ஆரம்பித்தார்.. “ ஒரு குளத்தில் ஒருதவளை இருந்தது.. அதற்கு ஒரு காதலியும் ஒரு தோழியும் இருந்தனர் “
சீடன் கதையை நிறுத்தினான்.. “ எப்படி இருந்தாலும் , இந்த கதை எனக்கு புரியாது... ஏதாவது ட்விஸ்ட் இருக்கும்,, ஆனால் கடைசியில் ஞானம் கிடைக்கும்.. ஆகவே நேரடியாக கடைசி ஸ்டெப்புக்கு வாருங்கள்..”
குரு டென்ஷன் ஆனார்... “ தக்காளி... உனக்கு கஷ்டமான கதை சொன்னாத்தான் சரிப்படுவ, ஒரு மெஷின் ஷாப்பில் இருந்து ரெண்டு லேத ஆப்பரேட்டர்கள் வெளி வருகின்றனர்.. ஒருவன் முகம் லேத் கடைசலால் பற்க்கும் உலோக துகள்கள். க்ரீஸ் போன்றவற்றால் அழுக்கா இருக்கு.. இன்னொருவன் முகம் சுத்தமா இருக்கு.. அவர்களில் யார் தன் முகத்தை கழுவிக் கொள்வான்... “ கேட்டார் குரு..
“ என்ன குருவே லுச்சாத்தனமா கேட்குறீங்க.. அழுக்கா இருப்பவனே க்ளீன் செய்வான் “ என்றான் சீடன்..
” இல்லை... சுத்தமா இருப்பவனே முகம் கழுவுவான்,,,,லாஜிக்கலா யோசி.. அழுக்கா இருப்பவன் , க்ளீனா இருப்பவன் முகத்தை பார்ப்பான்.. தன் முகமும் க்ளினா இருக்கு என நினைத்து கொள்வான்.. க்ளினா இருப்பவன் , அழுக்கா இருப்பவன் முகத்தை பார்த்து தன் முகம் அழுக்கா இருப்பதா நினைச்சு சுத்தம் செய்வான் “ என்றார் குரு
” அட!! “ வியந்தான் சீடன்
“ சரி..அதே மெஷின் ஷாப்பில் இருந்து ரெண்டு பேர் வ்றாங்க.. ஒருவன் முகம் அழுக்கா இருக்கு,,,ஒருவன் முகம் சுத்தமா இருக்கு ..இப்ப யார் தன் முகம் கழுவுவான் “
“ க்ளினா இருப்பவனே முகம் கழுவுவான் “ என்றான் சீடன்..
”இல்லை.. அழுக்கா இருப்பவன் , க்ளீனா இருப்பவன் முகம் பார்த்து தன் முகமும் க்ளினா இருப்பதா நினைப்பான்.. ஆனால் அவன் கழுவுவதை பார்த்து , எதுக்கும் நாமும் கழுவுவோம் என இவனும் கழுவுவான்... ஆக, இருவருமே கழுவுவார்கள்”
“ குருவே அருமை.. இன்னொரு கேள்வி கேளுங்க... “
” அதே மெஷின் ஷாப் ... இருவர் வருகிறார்கள்..ஒருவன் முகம் அழுக்கு,,ஒருவன் முகம் சுத்தம்,,யார் முகம் கழுவுவார்கள்”
“ இருவரும் கழுவுவார்கள்”
“ ம்ஹ்ஹும் தப்பு... அழுக்கா இருப்பவன் , நல்ல முகத்தைபார்த்து தன் முகமும் சுத்தமா இருப்பதா நினைப்பான்..எனவே அவன் கழுவ மாட்டான்.. சுத்தமா இருப்பவன் அழுக்கா இருப்பவன் முகம் பார்த்து தன் முகம் அழுக்கா இருப்பதா நினைப்பான். ஆனா , தக்காளி அவனே கழுவாதப்ப நாம மட்டும் ஏன் கழுவனும் நினைப்பான்..ஆக இருவருமே கழுவ மாட்டார்கள்”
”தெய்வமே... எனக்கு ஞானம் கிடைச்சுருச்சு.. கடைசியா ஒரு கேள்வி கேளுங்க”
“ அதே மெஷின் ஷாப்...அதே இருவர்... யார் முகம் கழுவுவார்கள்”
“ இருவருமே கழுவ மாட்டார்கள்”
“ ம்ஹ்ஹும் தப்பு.. ஒரே மெஷின் ஷாப்பில் இருந்து வரும் ஒருவன் முகம் சுத்தமாகவும் , ஒருவன் முகம் அழுக்காவும் எப்படி இருக்கும்... இந்த கேள்வியே தப்பு .... இருவர் முகமுமே அழுக்கா இருக்கும் .. “
சீடன் டென்ஷன் ஆனான்..
” யோவ் குருவே.. தமிழ் நாட்டிலே கரண்ட் எங்கே இருக்கு... அங்கே லேத் ஓடுது... நாள் ஃபுல்லா மெஷின் ஷாப்ல இருந்தாலும் , இருவர் முகமுமே அழுக்கு ஆகாது.. தக்காளி. இது கூட தெரியாத உன் கிட்ட தியானம் பழகுவதை விட , ரெண்டு ஸ்டேட்டஸ் போட்டு போய்றுவேன்.. நான் கிளம்புறேன் என வீட்டுக்கு வந்து கதையை டைப் செய்ய ஆரம்பித்தான்...
செம செம லாஜிக்ஸ் :)
ReplyDeleteSuperr..
ReplyDeletenalla sirikka vachchinga romba nandri surendran
ReplyDeleteசிந்தனையும் சிரிப்பும் கலந்த கதை! நல்லாயிருக்கு(து).
ReplyDeleteகடைசி பத்தி சூப்பர் ட்விஸ்ட்...
ReplyDelete