அந்த நாட்டில் திடீரென யுத்த மேகம் சூழ்ந்தது,, அவன் முதல் ஆளாக ராணுவத்தில் சேர்ந்தான் .. எல்லோரும் பாராட்டினார்கள்..
என் எதிரி ஆல்பர்ட்டோவை கொன்றே ஆக வேண்டும்..அதற்காகத்தான் ராணுவத்தில் சேர்கிறேன் என்றான்.
எல்லோருக்கும் ஆச்சர்யம்.. யார் அவன் .. அவன் மேல் ஏன் அவ்வளவு கோபம் என கேட்டனர்..
அவன் மோசமான ஆள்.. எனக்கு ரொம்ப தீமைகள் செய்திருக்கிறான்,. அவனை கொன்றே ஆவேன் என்றான்..
தம்பி ,,,அப்படி எல்லாம் உன் இஷ்டத்துக்கு கொல்ல முடியாது.. நம் எதிரிகளை மட்டும்தான் கொல்ல முடியும் என்றனர்,
அட அது எனக்கு தெரியாதா... ஆல்பர்ட்டோ மிக மோசமான எதிரி.. நேர்மை அற்றவன்.. அவனே கொன்றே தீர்வேன்.. என் ஃபிளாஷ் பேக் கேட்டால் உங்களுக்கு என் கோபம் புரியும் என்றான்..
சரி சரி..கொன்று தொலை என்றனர்..
”அவன் எங்கு இருக்கிறான் ?”
“ அதெல்லாம் எங்களுக்கு தெரியாது “
“ அப்ப சரி.. நானே போய் அவனை தேடிக்கண்டு பிடித்து கொல்கிறேன் “
“ தம்பி..அப்படி எல்லாம் செய்யக்கூடாது... நாங்கள் அனுப்பும் இடத்துக்கு போக வேண்டும் ..அங்கு யாரை வேண்டுமானாலும் கொன்று கொள் “
“ அதெப்படி எனக்கு எந்த தீங்கும் செய்யாதவர்களை கொல்ல முடியும்.. ஆல்பர்ட்டோ எனக்கு தீங்கு செய்தவன்... அவனை மட்டும் கொல்கிறேன்”
இந்த விவாதத்தால் களைப்படைந்து போன ஒருவர் போர் என்பதை விளக்கி சொன்னார்..
“ அப்படி எல்லாம் அப்பாவிகளை கொல்ல முடியாது.. நான் வீட்டுக்கு போகிறேன் .. எனக்கு வேலை வேண்டாம் “ என்றான் அவன்..
“ அதெல்லாம் முடியாது..உன் பெயரை சேர்த்து விட்டோம் ..போரிட்டுதான் ஆக வேண்டும் “ என சொல்லி விட்டனர்..
அவர்களுடன் சேர்ந்து போய் எதிரிகளை கொல்ல ஆரம்பித்தான்.. ஓவ்வொரு கொலைக்கும் ஒவ்வொரு அவார்டு கிடைத்தது..அவார்டுகள் வாங்கி குவித்தான்.. கடைசியில் எதிரி நாடு சரணடை ந்து போர் முடிந்தது..
ச்சே..தேவையே இல்லாமல் அப்பாவிகளை கொன்று விட்டோமே என வருந்தியபடி அந்த ஊரை சுற்றி வந்தான்..எல்லா பதக்கங்களையும் கொல்லப்பட்டோர்கள் குடும்பத்தினருக்கு தேடிப்போய் கொடுத்தான்..
ஒரு நாள் தற்செயலாக அல்பர்ட்டோவை பார்த்து விட்டான்.. தக்காளி , ஒரு வழியா மாட்டினான் என நினைத்தபடி அவனை அங்கேயே கொன்று விட்டான்..
அவனை கைது செய்தார்கள்.. விசாரணையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது..
மனசாட்சியில்லாமல் செய்த கொலைக்கு விருதுகள்..மனசாட்சிப்படி செய்த கொலைக்கு தண்டனையா.. மனசாட்சிப்படி நடப்பது தவறா என மீண்டும் மீண்டும் கேட்டான்.. யாரும் அவன் குரலை பொருட்படுத்தவே இல்லை

நண்பரே,
ReplyDeleteமிக அருமையான கதை அல்லது கவிதை. சிறப்பாக சுருக்கிச் சொல்லியிருக்கிறீர்கள். ரசித்தேன். வாழ்த்துக்கள். போர் என்ற பொய்யை உணர்ந்துகொள்ள மேலை நாட்டினர் சிந்திய ரத்தமும் அனுபவித்த வலிகளும் ஏராளம்.