பேசாமல் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விடலாம் என நினைத்தபோது பலரும் அந்த திருமண புரோக்கரையே சிபாரிசு செய்தனர். அவரை பார்ப்பதற்கு அப்பாயிண்ட்மெண்ட் கிடைப்பதே கஷ்டமாம். எப்படியோ கஷ்டப்பட்டு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி விட்டு அவர் அலுவலகம் சென்றேன். வரவேற்பு அறை முதல் பார்க்கிங் வரை ஏசி செய்யப்பட்ட கல்லூரி போல அம்சமான இருந்தது. “ சார், உள்ளே வரலாங்களா “ என பவ்யமாக கேட்டு விட்டு உள்ளே நுழைந்தேன்.
அட. இவன் நம்ம சுப்புணியாச்சே... பார்த்ததும் திகைத்தேன். என கல்லூரி நண்பன். லேசாக தொப்பை விழுந்து இருந்தது. நெற்றியில் பொட்டு வைத்து இருந்தான். ஆனால் அடையாளம் கண்டுபிடித்து விட்டேன்.
“ எப்படிறா மாப்ளே இருக்கே.. எழுத்தாளன் ஆவப்போவதா சொன்னே.. மேரேஜ் புரோக்கரா எப்படி மாறின? “ கேட்டேன்..
அவன் கொசு வர்த்தி சுருளை எடுத்தான். தக்காளி . ஃபிளாஷ்பேக்கா?
ஆமாண்டா... எனக்கு நாவல் எழுத ரொம்ப ஆசை,, எழுதியும் முடிச்சுட்டேன். ரிலீஸும் பண்ணிட்டேன். அன்று ஞாயிற்று கிழமை . குவார்ட்டர் அடித்து விட்டு குப்புறக்க படுத்து இருந்தேன். அப்ப ஒரு போன் வந்தது . அதுதான் என் வாழ்க்கையை புரட்டி போட்ருச்சு.
போனை அட்டெண்ட் செய்தேன்.
“ ஹலோ , சார் நான் உங்க தீவிர ரசிகன் “
“ ம்ம்.. ரொம்ப சந்தோஷம் “
“ உங்க புக் படிக்க துடிக்கிறேன்.. எங்கே கிடைக்கும் ? “
“ கடைல கிடைக்கும் “
“ அது இல்லை சார்/// லிங்க் கிடைக்குமா? “
“ தெரியலையே.. ஆன்லைன்ல இருக்கானு தெரியல..கடைல கேட்டு பாருங்க “
” வாங்க ஆசைதான் சார்... ஆனா புக் விலை அய்ம்பது ரூபாய்.. அவ்வளவு காசு கொடுத்து வாங்க வசதி இல்லை”
“ சரி. லைப்ரரில போய் படிங்க”
” போனேனே...அங்கே இல்லை “
” எந்த லைப்ரரி? “
“ எங்க தெருவுல இருக்கிற நகராட்சி நூலகம் சார் “
“ சரி.. பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல இருக்கிற நூலகம் போய் பாருங்க”
“ சார்,,, அவ்வளவு தூரம் செலவழிச்சி போக வசதி இல்லை “
“ அப்ப பரவாயில்லை... படிக்காதீங்க...அது அப்படி ஒண்ணும் பெரிய இலக்கியம் இல்லை ... நானே அதை படிக்கல”
“ சார் சார்.. நான் உங்க ரசிகன்.. படிக்கலைனா என் ஆத்மா சாந்தி அடையாது “
” அப்ப படிங்க “
“ சார் ,, அதுக்கு வசதி இல்லை.. “
“ ஏன்? “
“ சம்பளம் இல்லை “
“ ஏன் சம்பளம் இல்லை “
“ ஏனா எனக்கு வேலை இல்லை “
“ அடப்பாவி... சரி நானே வேலை வாங்கி தந்து தொலைக்கிறேன். கொக்ரே மாக்ரேனு ஒரு கம்பெனி உங்க ஏரியால இருக்குல...அங்கே ஆள் எடுக்கிறாங்க..போய் பாருங்க”
“ போனேன் சார்... ஆனா எனக்கு வேலை இல்லையாம் ?”
“ ஏண்டா ராசா ? “
“ ஏனா அங்கே கல்யாணம் ஆனவங்களுக்குத்தான் வேலையாம் “
“ சரிடா..கல்யாணம் பண்ணி தொலைக்க வேண்டியதுதானே”
“ முடியாது சார் “
“ ஏண்டா “
“ வேலை இருந்தால்தான் பொண்ணு தருவாங்களாம் “
“ தக்காளி , நீ ஆணியே பிடுங்க வேணாம்”
“ சார்..சார்..அப்படி சொல்லாதீங்க... நான் உங்க தீவிர ரசிகன் ..உங்க புக்கை படிச்சே ஆகணும் “
“ சரி சரி.. நானே உனக்கு பொண்ணு பார்த்து , கல்யாணம் பண்ணி வைக்கிறேன்”
இப்படித்தான் நான் புரோக்கர் ஆனேன்.. நல்ல காசு...இப்படியே செட்டில் ஆயிட்டேன் என்றான் நண்பன்..

No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]