Saturday, November 29, 2014

உளுந்த வடையும் உலக ஞானமும்- மொக்கைகளும் சில முத்துகளும்

ஒரு வீட்டில்
சாவு மேளம்..
இன்னொரு வீட்டில்
திருமண இனிய மேள ஓசை..
கணவனுடன் வாழும் பெண்கள்
வாசமிகு மலர்களை சூடிக்கொள்கின்றனர்.
கணவனை பிரிந்தவர்களோ
கண்ணீரில் மூழ்குகின்றனர்.
உலகைப்படத்தைவன்
பண்பில்லாதவன் போல..
இவ்வுலகம் கொடியது.
இதன் இயல்பு உணர்ந்தவர்கள்
இனியவற்றையே காண முயலுக---
-புற நானூறு பக்குடுக்கை நன்கணியார்
அழகிய குவளைகளில்
பூக்களை அடுக்கி வைப்போம்...
அரிசிதான் இல்லையே
என்ற ஜப்பானிய ஹைக்கூவை நினைவு படுத்தியது அந்த புறனானூறு.. பசியை மலர்களின் நறுமணம் போக்க முடிந்தால் , துரோகங்களை ஒரு குழந்தையின் புன்னைகை மறக்க செய்ய முடிந்தால் , வாழ்க்கை எவ்வளவு இனிமையானது...
------------------------------------
கெடுத்தப்படு நன் கலம் எடுத்துக்கொண்டாங்கு - செம உவமை # நற்றிணை
-----------------
துகில் விரித்தன்ன வெயில் - இன்னொரு உவமை # நற்றிணை
-----------------------
ஜாதி கொடுமையில் இருந்து தப்பிக்க , புத்த மதத்தை தழுவுமாறு அம்பேத்கர் சொன்னார் என பரலாக நினைக்கிறார்கள் .ஆனால் புத்தமதத்தின் சிறப்புகளுக்காகத்தான் அந்த மதத்தில் சேர சொன்னார் என தோன்றியது , அவர் புத்தகம் படித்தபோது
---------------------------------------
கருணை என்பது மனிதர்பால் கொள்ளும் அன்பு. புத்தர் அதற்கும் அப்பால் சென்று மைத்ரியை* போதித்தார் .-அம்பேத்கர்
----------------------------------------------------------
********புணர்ச்சி*******
பாம்புகள் 
புணர்ச்சி
பழகுதல்
உண்டு
“புரை தீர்த்த
நன்மை
பயக்க வேண்டும்”
என்ற வேகம்
அவைகளுக்கு இல்லை
- நகுலன்
--------------------------------------------
படித்ததில் பிடித்தது...
இன்றென்ன
கிழித்து விட்டோம்..
நாளை மீது 
நம்பிக்கை வைக்க.
--------------------------------------------------

** வாய்மையே வெல்லும்*****
கடவுள் அருளால் ....
பணக்காரனாகி விட்ட..
நேர்மையான விறகு வெட்டியை பார்க்க...
கடவுள் பூமிக்கு வந்தார்..
அவன் வழக்கம்போல...
விறகு வெட்டினான்..
அருகில் மனைவி...
திடீரென ஆற்றில் விழுந்திவிட்டாள்...
அவன் அலற
ஆண்டவன் பிரசன்னமானான்..
இலியானாவை ஆற்றில் இருந்து
ஆற்றில் இருந்து எடுத்தான்.
“ இவளா உன் மனைவி ? “
கேட்டான் ஆண்டவன்..
“ ஆமாம் ஆமாம்” ஆமோதித்தான் வி.வெ.
ஆண்டவன் கடுப்பானான்.
“ அடே துரோகி ஏன் இந்த பொய்...
ஏன் இப்படி மாறினாய் “
வி வெ சொன்னான்..
” நான் மாறவில்லை...
நீயும் மாறியிருக்க மாட்டாய்.
இலியானா இல்லை என்றால்
காஜலை காட்டுவாய்.
அவளும் இல்லைஎன்றதும்
தமன்னாவை காட்டுவாய்..
அனைத்தையும் மறுத்து
கடைசியில் என் மனைவியை மட்டும் ஏற்பேன்,
என் நேர்மையை பாராட்டி
நால்வரையும் என்னுடன் அனுப்புவாய்..
தக்காளி. அவனவன் ஒருவளை வைத்தே
காலத்தை ஓட்ட முடியவில்லை
நால்வருடன் வாழ்வதை விட
நாண்டுகொண்டு சாகலாம்..
எனவேதான் முதலிலேயே பொய் சொன்னேன்”
ஆண்டவன் மறைந்தான்
---------------------------------------------
**** அச்சமில்லை , அச்சமில்லை **********
பேருந்தில் டிக்கட் பரிசோதகர் !!!
என்னிடம் டிக்கட் இல்லை !!!!!!
கொஞ்சமும் அஞ்சவில்லை !!!!!
நான் தான் டிரைவர் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
‪#‎பிங்கூ‬
-------------------------------------------------
ஃஃஃ பலவிதம் ஃஃஃ
இளங்கவிஞன்! 
காப்பி அடித்தான் !!
காமெடி என்றார்கள!!
அப்பாவி கவிஞன் !
காப்பி அடித்தான் ! !
திருட்டு என்றார்கள் !!
சீனியர் கவிஞன் !
காப்பி அடித்தான் !!
ஆராய்ச்சி என்றார்கள்!
‪#‎பிங்கூ‬
-------------------------------------------------
**** உளுந்த வடையும் உலக ஞானமும் ******
உளுந்த வடை நடுவே !!!!!
ஓட்டையாக இருந்தது!!!!!!
உளுந்த வடையில் !!!
ஒன்றும் இல்லாத அந்த பகுதி !!!!!
உள்பிரஞ்ஞையை !!
உலுப்பி விட்டது !!!
உளுந்த வடையின் மையத்தில் !!!!!
ஒன்றும் இல்லை !!!!!!!!!
ஒன்றும் இல்லாத அந்த பகுதி இல்லையென்றால் !!!!!!
உளுந்த வடையே இல்லை !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
‪#‎பிங்கூ‬
-------------------------------
*சட்டை செய்யாதீர்கள்*****
என்னவள்!!!!
மாடியில் இருந்து!!!!!!
என் சட்டையை !!!!!
கீழே தூக்கிப் போட்டாள் !!!!!
எனக்கு!!!!
கைகால் உடைந்தது !!!!!
சட்டைக்குள் இருந்தது !!!
நான் தான் !!!!!
# பிங்கூ
----------------------------
மதர்ஸ் டே!!!!!
ஃபாதர்ஸ் டே !!!!!
அங்கிள்ஸ் டே !!!!
ஆண்டீஸ் டே !!!!
லவர்ஸ் டே !!!!!!!!!!
இதையெல்லாம் விட !!!!!
எனக்கு பிடிதத்து !!!!!!!!!!!!!
நீ !!!!!!
செல்லமாக !!!!!
என்னை கூப்பிடும் !!
டேய் !!!!!!!
--------------------------------------------------
வெயிலில் !!!!!!!
ரஜினிக்கும் வியர்த்தது !!!!!!!!!!!!!
சுற்றிலும் !!!!!!!!!!!!!!!!!
லட்சக்கணக்கான !!!!!!!
விசிறிகள் இருந்த போதிலும் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
-----------------------------
****பூவும் பூமகளும் ******
என்னவளிடம்!!!!!
காதலை சொல்லி!!!!!
ரோஜா கொடுத்தேன் !!!!!!!
அவளோ !!!!!!!
பூவை செல்லமாக
என் மேல் எறிந்தாள் !!!!
என் முகமெல்லாம் ரத்த களறி !!!!!!!
பூவை
பூத்தொட்டியுடன் சேர்த்து
எறிந்து தொலைத்து விட்டாள் !!!!!!!!!!!!!!!
‪#‎பிங்கூ‬
--------------------------------------------------------
கொடுமை கொடுமை என !!!!
எண்டர் கீ !!!
கோயிலுக்கு போனது !!!!!
ஆனால் ,
அதற்கு முன் !!!!!
ஏற்கனவே போய் இருந்த !!!!!
ஆச்சர்யக்குறி கீ !!!!!!
அங்கே அழுது கொண்டு இருந்தது !!!!!!
------------------------------------------------------------------
இரவு !
"ஹஸ்பண்ட் வந்துட்டாரு" !
கனவு கண்டு மனைவி உளறல் ! 
தூக்க கலக்க
கணவன் ஜன்னல் வழியை குதிக்கிறான்!
பழக்கதோஷம் !!!
‪#‎பிங்கூ‬
--------------------
எப்படி தேடுவேன் ! 
தொலைந்துபோன எருமையை!
அமாவாசை இருட்டு !!
‪#‎பிங்கூ‬
----------------------
கடும் கோடைக்காலம்!
ஆற்றில் முழ்கி எழுந்தாள்!!!
குளிர்ந்தது ஆறு !!!!!!!!!!
- கவிஞர் பிச்சைக்காரன்
------------------------
*எல்லா உயிர்களின்மீது காட்டப்படும் அன்பு மைத்ரி. சக மனிதர்கள் காட்டப்படுவது கருணை . நம் மீது அன்பு காட்டுபவர்கள்மேல் பதிலன்பு காட்டுவது வியாபாரம்

Friday, November 28, 2014

சங்க இலக்கிய தேன் துளிகள்

புலவர்களுக்கு அனைத்தையும் வழங்கிவிட்டான் பாரி . மூவேந்தர்களே , சீக்கிரம் பாரியை புகழ்ந்து பாடி மிச்சம் இருப்பதையாவது வாங்கி செல்லுங்கள் . மிச்சம் என்ன இருக்கிறதா ? பாரி , நான் மற்றும் மலை # புற நானூறு

___________________________________________________
அமுதமே கிடைத்தாலும் தான் மட்டும் உண்ண நினைக்காதவர்கள்.கோபப்படாதவர்கள். அஞ்சாதவர்கள். ஆனால் பழிக்கு அஞ்சுபவர்கள்.புகழுக்காக உயிரையும் கொடுப்பவர்கள். மனத்தளர்ச்சி இல்லாதவர்கள்.. இவர்களால்தான் உலகம் இன்னும் இயங்கி கொண்டு இருக்கிறது - கடலுள் மாய்ந்த இளம் பெரு வழுதி

_______________________________________
தச்சு வேலை தெரிந்தவனுக்கு காட்டிற்கு போனால் பார்க்கும் இடமெல்லாம் அவன் வேலை செய்ய தேவையான மரம் கிடைக்கும் என்னைபோன்ற புலவர்களுக்கு எந்த திசை போனாலும் சோறு கிடைக்கும்- ஒலவையார்
___________________________________________
அன்பற்ற மனைவியை விட , தேவையான நேரத்தில் கைகொடுக்காத கல்வி கொடுமையானது - நீதி நெறி விளக்கம்
____________________________
மாணிக்கத்தின் தரம் கழுவினால் தெரியும்..  குதிரையின் தரம் சவாரியில் தெரியும். பொன்னின் தரம் சுட்டால் தெரியும்.. நண்பர்களின் தரம் நம் துன்பத்தில் தெரியும் - நான்மணிக்கடிகை
____________________________________________
அந்த காலத்தில் அரசர்கள் , தம்மை புகழும் புலவர்களுக்கு யானையை பரிசளிப்பார்களாம். தனக்கு சாப்பாடு இல்லாமல்தானே அந்த புலவர் வருகிறார். அவர் எப்படி யானைக்கு தீனி போடுவார்? யானையை வைத்து என்ன செய்வார் ? 
இந்த பாடலை பாருங்கள்...
மன்னா...
உன் நாட்டில் மட்டும்
பெண் யானைகள்
ஒரு கர்ப்பத்தில்
பத்து குட்டிகளை பிரசவிக்குமா
உன்னை பாடி வரும்
புலவர்களுக்கு
நீ அளித்த யானைகளின் எண்ணிக்கை
பகைவர்களை விரட்டி அடித்த
வேல்களின் எண்ணிக்கையை விட அதிகம்
- ஆய் அண்டிரன்
___________________________________
பிரிவு என்பதென்ன
அவ்வளவு பெரிய துன்பமா 
என கேலியாக கேட்பவர்கள்
பிரிவு  நோயை அறிந்தவர்கள்தானா..

நான் அவளை பிரிய நேர்ந்தால்
கல் மோதி மறையும் 
நீர் நுரை போல
மெல்ல மெல்ல 
இல்லாமல் போவேன்
-கலல்பொரு சிறுனரையார் ( குறுந்தொகை )
______________________________________________
பாரியைப் பற்றி மட்டுமே பாடுகிறீர்களே , அவனுக்கு நிகரான மாரி(மழை)யை பற்றியும் பாடுங்கள்-கபிலர்#வஞ்சப்புகழ்ச்சி:-)
______________________________________________
லைக் , கமெண்டுகள் இல்லாத அந்த காலத்தில் எப்படி இத்தனை தேன்சுவை பாடல்கள் ? ‪#‎சங்க‬ இலக்கியம்
__________________________________________
வறண்ட ஓலைகள் சலசலவென ஓசை எழுப்பும்..ஈரப்பசையுள்ள ஓலைகள் அமைதியாக இருக்கும் - ( நிறைகுடம் தளும்பாது அளவுக்கு இது ஏன் ஃபேமஸ் ஆகவில்லை ) # நாலடியார்
_____________________________
பசிக்கு சோறுகேட்டால் யானையையே தருவான் அரசன் . நம்தகுதிக்கேற்ப அல்ல , அவன் தகுதிக்கேற்பவே தானம் -அவ்வையார்
____________________________________
போற்றி பாடுவதையே
தொழிலாக கொண்ட
புலவர்கள்கூட 
கண்டறியமுடியாத
அறிவாற்றல் மிகுந்த மன்னா !
என்ன உன் தன்னடக்கம் ! -முதுகண்ணன் சாத்தனார் rocks  # புறநானூறு
__________________________
காக்கையும் குருவியையும்
உருவத்தால் அல்ல
குரலால் அறியலாம்
கற்றவரையும் மற்றவரையும்
அவர்தம் பேச்சால் அறியலாம் ‪#‎நாலடியார்‬
__________________________________
வெந்நீரின் கடும் வெப்பம்
வீட்டை எரிப்பதில்லை
சான்றோரின் கோபம்
கீழோரை அழிக்க நினைப்பதில்லை
‪#‎நாலடியார்‬
___________________________________
பாலால் கழுவினாலும் அடுப்புக்கரி வெண்மையாகாது
பலபல நூல்கள் கற்றாலும் மூடனுக்கு நன்மை கிட்டாது
‪#‎நாலடியார்‬

_____________________________-

Tuesday, November 25, 2014

மிஷ்கின் பேச்சும் , தமிழ் ஹிந்துவின் சின்ன புத்தியும்

தமிழ் ஸ்டுடியோ ஏழாம் ஆண்டு துவக்க விழா நடந்ததல்லவா...

அதில் பேசிய ராம் தான் மனம் விட்டு பேசப்போவதாகவும் தயவு செய்து யாரும் வீடீயோ எடுத்து , யூ ட்யூபில் போட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். அதை ஏற்று யாரும் வீடியோ எடுக்கவில்லை.

இந்த ஜெண்ட்டில்மேன் அக்ரீமெண்டை நம்பிய மிஷ்கின் அவரும் கேஷுவலாக பேசினார். ஆனால் அந்த ஜெண்டில்மேன் அக்ரீமெண்ட்டை மதிக்காமல் , தமிழ் ஹிந்து அவர் பேச்சை தன் வலைத்தளத்தில் வெளியிட்டு ஊடக அறத்தை மீறியுள்ளது. வேண்டுமென்றே சர்ச்சைக்குரிய பகுதிகளை மட்டும் வெட்டி ஒட்டி சின்ன புத்தியை காட்டியுள்ளது தமிழ் ஹிந்து. தமிழ் ஸ்டுடியோ விழா என்பதை குறிப்பிடவில்லை..  அவர் பேசும் மேடை , தமிழ் ஸ்டுடியோ மேடை என்பதை காட்டும் மேடை பின்புலம் எடிட் செய்யப்பட்டுள்ளது..

அண்ணா எழுதிய ஆரிய மாயை புத்தகத்தின் இன்றைய தேவை நன்கு புரிகிறது.

மிஷ்கின் மனம் விட்டு பேசினார், சில கருத்துகள் சொன்னார். அவர் அப்படி என்ன பேசிவிட்டார் ?

பாரதியார் படத்தில் வட இந்தியரை நடிக்க வைத்ததை சார்லி குறை சொன்னது தவறு , கலையை மொழிக்குள் அடைக்க முடியாது.  நான் இண்டர்னெட் பக்கம் போவதில்லை. அங்கு போனால் கெட்ட வார்த்தை மட்டும்தான் கற்க முடியும்.
அதிக பட்ச கெட்ட வார்த்தை எனக்கு எதிராகவே பயன்படுத்தப்படுகிறது. காப்பி அடிக்கிறேன் என்கிறார்கள். நல்ல கலைஞன் காப்பி அடிக்க மாட்டான். கலை ஒருவனை தூங்க விடாது.   பாரல்லல் தாட்ஸ் வருவது சகஜம்தான். அந்த கால மாபெரும் காப்பியங்களில்கூட சில ஒத்த விஷ்யங்கள் உண்டு. அதற்காக காப்பி என சொல்ல முடியுமா.

என்னைப்போன்றவர்கள்  நல்ல சினிமாவுக்காக போராடிக்கொண்டு  இருக்கிறோம். அதை திட்டாதீர்கள்.  என் பாக்கெட்டில் நூறு ரூபாய்கூட இல்லை. பணக்கார வறுமை என்பது மிக கொடிது.

இந்த அரங்கில் குடித்து வந்து திட்டினானே.. அவனுக்கும் சேர்த்துதான் நான் படம் எடுக்க வேண்டும். அவனுக்கும் படம் புரிய வேண்டும். வாளை மீனுக்கும் பாடல்வெற்றி பெற காரணமாக  இருந்தது அகிரா குரசோவாவிடம்  நான் கற்ற பாடம்தான். படிமத்தின் ஆற்றலை அவரிடம் கற்றேன். அதனால்தான் அந்த விரல் அசைப்பில் தமிழகத்தை ஆடவைக்க முடிந்தது.

மணிரத்னம் தொடர்ந்து ஃபிலாப் படங்களை கொடுக்கிறார். அவரை யாரேனும் விமர்சிக்கிறார்களா.. கலைஞானி என்கிறீர்களே அவர் என்ன பெரிதாக செய்து விட்டார்.

கமல் மேடையில் அவர் மட்டுமே பேச வேண்டும். நான் ஏதோ பேசி விட்டேன் என்பதற்காக லெனின் சார் எனக்கு எஸ் எம் எஸ் செய்தார். முதலில் உன் படத்தை ஒழுங்காக எடுக்கவும் என முகமூடி படம் வந்தபோது சொன்னார். என் தவறுகளை திருத்திக்கொண்டு ஓனாயும் ஆட்டுக்குட்டியும் எடுத்தேன். அவர் பாராட்டி மெசேஜ் அனுப்புவார் என நினைத்தேன். ஆனால் அவர் கண்டுகொள்ளவில்லை. நான் பெரிதும் மதித்த லெனினே இப்படித்தான் இருக்கிறார்.
விமர்சியுங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் ஆரோக்கியமாக விமர்சியுங்கள். அருண் என்னை விமர்சித்தபோது , உன் தகுதி என்னவென்று கேட்டேன், சொன்னார். எனக்கு மகிழ்ச்சி . அவருக்கு விமர்சிக்கும் தகுதி இருக்கிறது.
பாடல் இல்லாமல் இன்னும் சினிமா எடுக்க முடியவில்லை.அதை விமர்சித்து மாற்ற முடிகிறதா. ஐந்து பாடல்கள் , பாடலை உருவாக்க சில காட்சிகள் என பாதி நேரம் அதற்கே போய் விடுகிறது. மிச்சம் இருக்கும் கொஞ்ச நேரத்தில் என்ன படம் எடுப்பது.

ஓர் ஆணும் பெண்ணும் பார்க்கிறார்கள் , உடனே பாடல்.. பாடல் எதற்கு ,, பார்த்த பின் என்ன செய்கிறார்கள் என கேளுங்கள்.. பாடலின்போது வாக் அவுட் செய்யுங்கள்.. நிலை சரியாகி விடும்.

ஒரு குழ்ந்தை பிறந்தா ரசியுங்கள்.. குழந்தை ஏன் கறுப்பா இருக்கு இன்னும் கொஞ்சம் சிவப்பா இருந்திருக்கலாமே.. ஏன் முடி இல்லை என்றெல்லாம் கூறாதீர்கள்.

மற்றபடி கெட்ட வார்த்தையால் திட்டுவதற்கெல்லாம் பயப்பட மாட்டேன். திட்டுங்கள். ஆனால் புதிதாக திட்டுங்கள்.. அப்போதுதான் ரசிக்க முடியும்..

இப்படி உணர்வுபூர்வமாக பேசினார்..

கடைசியில் பேசிய அருண் , சினிமாவுக்கு வசனம் முக்கியம் என்ற ராமின் கருத்தை மறுத்தார். அழகாக சிரித்தாள். அன்பாக சிரித்தாள் என்ற சொற்களைவிட நம் மனதில் நிற்பது மோனலிசாவின் பிம்பம்தான்.  நாம் என்னதான் பேசினாலும் நம மனதில் பிம்பமாகவே பதிகிறது.  கூடங்குளம் பிரச்சினையில் நான் என்ன செய்தேன் என ராம் கேட்டார். நான் கேட்க விரும்புவது ஒன்றுதான். தமிழ் சினிமா என செய்தது ‘

இப்படி பரபரப்பாக விவாதம் நடந்தது 

Monday, November 24, 2014

தமிழ் நாட்டில் தமிழ் படங்களுக்கு இடம் இல்லை- இயக்குனர் ராம் ஆவேச பேச்சு




அம்ஷன் குமார் எப்போதுமே ஆழமாக பேசக்கூடியவர். அடுத்து அவர் பேசினார்.

இங்கு பேசிய அனைவரும் லெனினை எடிட்டர் லெனின் என அழைத்தனர். அவர் சிறந்த இயக்குனர் . விருது பெற்றவர். தமிழ் குறும்படங்களின் தந்தை என்றுகூட சொல்லலாம். 2003ல் ஒரே நாளில் ( மே31 ) என் படமும் அவர் படமும் தணிக்கைக்கு சென்றது. இது ஒரு முக்கிய நிகழ்வாகும்.  மாற்றுப்படம் ஒன்று வந்தால் , இன்னொரு படம் வர வெகு நாட்கள் ஆகும்.  அன்றைய தினம் ஒரே நாளில் இருபடங்கள் தணிக்கைக்கு சென்றன. ஃபில்ம் சொசைட்டிகள் , திரை விழாக்களில் அந்த படங்கள் பெரும் வரவேற்பு பெற்றன. சுனாமி நிதி திரட்ட என் பட திரையிடல்களை பயன்படுத்தினேன். இப்படி நிதி திரட்டிய ஒரே தமிழ் படம் என் சினிமாதான்.  விருதுக்காக எங்கள் படங்களை அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. குறைந்த பட்சம் 2 மணி நேரம் ஓடினால்தான் அதை ஃப்யூச்சர் ஃபில்ம் என அங்கீகரிப்போம் என்றார்கள். குறைந்தது 8 முதல் 25 பிரிண்டுகள் போடப்பட வேண்டும் என்றார்கள்.  இவற்றை எல்லாம் போராடி கடைசியில் வென்றோம்.
நமது ரசனை மேம்பட வேண்டும். படம் ஃபர்ஸ்ட் ஆஃப் சூப்பர் , செகண்ட் ஆஃப் சொதப்பல் என விமர்சிக்கிறார்கள். படத்தில் ஃபர்ஸ்ட் ஆஃப் , செகண்ட் ஆஃப் என்றெல்லாம் எதுவும் இல்லை.  நம் ஊரில்தான் இப்படியெல்லாம் பேசுகிறான். ரசிகன் மேல் நம்பிக்கை வைத்துதான் இயக்குனர் படம் எடுக்கிறார். சார்லி சாப்ளின் ஒரே ஷாட்டில் அந்த காட்சியை வைக்கிறார் என்றால் மக்களுக்கு புரியும் என நம்புகிறார்.

சத்யஜித்ரே படம் ஒன்று. ஒருவனுக்கு பொருளாதார ரீதியாக கஷ்டம். மனைவி வேலை செய்யும் நிறுவனத்தின் தலைவரை பார்க்க செல்கிறான். அந்த தலைவர் இவனை அமரச்சொல்லி சிகரட் கொடுக்கிறார். இவன் அதை உடனே புகைக்காமல் சற்று உற்று பார்த்த பின் புகைக்கிறான். இங்கு க்ளோஸ் அப் ஷாட் எதுவும் வராது. அது அவன் அதுவரை புகைக்காத விலை உயர்ந்த சிகரட் என்பதால் சற்று தயங்குகிறான் என்பதை ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள் என இயக்குனர் நம்புகிறார்.

இப்படி நல்ல ரசனையை வளர்க்க தமிழ் ஸ்டுடியோ அமைப்பு உழைக்கிறது. வாழ்த்துகள். என்றார்

அடுத்து பேசிய ராம்  , தனக்கே உரிய அழகு தமிழில் பேசினார்.

இன்று சென்னை சிட்டி முதல் , குக்கிராமங்கள் வரை , திருப்பூர் , கோவை , மதுரை என பல்வேறு சூழல்களில் மக்கள் உலக சினிமா பார்த்து வருகிறார்கள். இதற்கு இரண்டு  காரணங்கள். ஒன்று பர்மா பஜார். இன்னொன்று தமிழ் ஸ்டுடியோ . நல்ல படங்களை பார்க்கும் ஆவலை ஏற்படுத்தியதில் தமிழ் ஸ்டுடியோவுக்கு முக்கிய பங்கு உண்டு.


அன்றைய ஃபிரான்ஸ் , இத்தாலி போன்ற நாடுகளில் ஹாலிவுட் படங்கள் வர முடியாது. ஒரு வித தேக்க நிலை நிலவியது. அதன் பின் உலகப்போர் ., அது சார்ந்த பிரச்சனைகள். வறுமை. வேலைகிடைக்காத பிரச்சனை. அன்றாடம் சாவு என ஃபிரான்ஸ் தடுமாறியது. ஹாலிவுட் படங்கள் நுழைந்தன.  ஃபிரான்ஸ் சினிமா முடங்கி போனது. சார்த்தர் போன்றவர்கள் உருவானார்கள். இருத்தலியல் சார்ந்த படைப்புகள் தோன்றின. இப்படிப்பட்ட சமூக சூழலில்தான் நியூ வேவ் சினிமாக்கள் உருவாக ஆரம்பித்தன. மக்களோடு சேர்ந்து அவர்கள் கதைகளை சொல்லும் படங்கள் வெளி வர ஆரம்பித்தன.

இதே சூழலில்தான் இத்தாலியில் நியோரியாலிஸ்ட்டிக் வகை படங்கள் வர ஆரம்பித்தன. பை சைக்கிள் தீவ்ஸ் போன்ற படங்கள் வந்தன.

அதாவது ஓர் இயக்கம் நிக்ழ வேண்டும் என்றால் அதற்கான சமூக சூழல் தேவை. தமிழ் ஸ்டுடியோ அமைப்பு 2007ல் ஆரம்பிக்கப்பட்டது. அப்போதைய சூழல் எப்படி இருந்தது?
ஐ டி நிறுவனங்கள் வந்தன. ப்லர் வெளி நாடு சென்று அங்குள்ள படங்கள் பார்க்கும் வாய்ப்பு பெற்றனர். இண்டர்னெட் போன்ற டிஜிட்டல் புரட்சியால் , வெளினாட்டு படங்கள் பற்றிய பார்வை நமக்கு கிடைத்தது. டிவிடி நிறைய வர ஆரம்பித்தன. ஆனால் இந்த வசதி ரசனையை வளர்க்க பயன்படவில்லை. இந்த சூழலிதான் தமிழ் ஸ்டுடியோ அமைப்பு உருவானது. நல்ல பணிகளை செய்து வருகிறது.

ஆனால் அது பெரிய இயக்கமாக வளர வேண்டும் என்றால் சமூக பிரச்சனைகளை கையாள வேண்டும். தனது அரசியலை தெளிவாக முன் வைக்க வேண்டும். கூடங்குளம் , ஈழம் போன்ற பிரச்சனைகளில் மவுனம் காப்பது கூடாது. தான் யார் என்பதை சொல்ல வேண்டும்.

சிங்கள இயக்குனரின் படம் வந்தபோது ஒரு கும்பல் ரகளை செய்வதாக சொன்னார்கள். தமிழ் அமைப்புகள் எந்த இடைஞ்சலும் செய்யவில்லை. கருத்து மட்டும்தான் சொன்னார்கள். ஆனாலும் இப்படி பழியை போட்டார்கள்.

அருண் தன் அரசியலை முன் வைக்காவிட்டாலும் , அவர் செயல்மூலம் அவரது இடதுசாரி பார்வை தெரிகிறது. லீனா மணிமேகலை , லெனின் , ஆனந்த் பட்வர்த்தன் போன்றோருக்கு விருது கொடுத்ததன் மூலம் அவர் மனதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும் அவர் தன் அரசியலை தெளிவாக முன் வைக்க வேண்டும். கலையை வெறுமனே ரசிக்கும் வலது சாரியாக இருக்கக்கூடாது.

மற்ற நாடுகளில் நிகழ்ந்த மாறுதலைப்போல தமிழில் ஏற்பட்ட மாற்றத்தை கொண்டு வந்த இயக்கம் திராவிட இயக்கம்தான். 1952ல் வந்த பராசக்தி ஒருவகையில் நியூவேவ் சினிமா எனலாம். அதுவரை இருந்த புராண வகை படங்களின் அடித்தளத்தை அசைத்து பார்த்தது அந்த படம். இன்று வரை தமிழ் சினிமா தனித்துவத்துடன் செயல்பட அந்த இயக்கம்தான் காரணம்.

மல்ட்டிப்லெக்ஸ் திரை அரங்குகள் வந்தபோது , இதேபோல இன்னொரு மாற்றம் வரும் என எதிர்பார்த்தோம். குறும்படங்கள் , லோ பட்ஜெட் படங்கள் திரையிட முடியும் என நினைத்தோம். ஆனால் நடந்தது வேறு.

அந்த அரங்குகளில் முதலில் , ஆங்கில படங்கள்..பிறகு ஹிந்தி. மூன்றாவது தெலுங்கு. அதன் பின்புதான் தமிழ் படங்களுக்கு , அதுவும் பெரிய நடிகர்கள் நடித்த படங்களுக்கு இடம் கிடைக்கிறது. அதன் பின்புதான் மற்ற படங்கள். அதுவும் தலைப்பு அவர்களுக்கு பிடித்தால் மட்டுமே இடம் கிடைக்கும்.  ,மதுபானக்கடை படத்துக்கு இடம் தர மறுத்தது ஒரு தியேட்டர்.

அருண் நல்ல பணிகளை செய்கிறார். ஆனால் பேசா மொழி என்ற பெயர் எனக்கு பிடிக்கவில்லை. மரண தண்டனையை எதிர்த்து பேசாத கலை எனக்கு தேவை இல்லை. படங்கள் என்றால் பேச வேண்டும்.  ஈரான் படத்தின் மவுனம் வேறு. என் மவுனம் வேறு. அவர்களைப்போலவே நானும் எடுக்க வேண்டும் என்பது இல்லை. அதேபோல தமிழ் ஸ்டுடியோ என்ற பெயரும் பிடிக்கவில்லை.


இவ்வாறு ராம் பேசினார்.


( அடுத்து மிஷ்கின் பேச்சு தனி பதிவாக ) 

Sunday, November 23, 2014

பவா செல்லத்துரை சொன்ன நெகிழ்ச்சியான கதை, சார்லி சிலாகித்த திரைப்பட ஷாட்



தான் இணையத்தை பார்த்து கெட்டுப்போக விரும்பவில்லை என இயக்குனர் மிஷ்கின் பேசினார். அதிக கெட்டவார்த்தைகள் நெட்டில் புழங்குவதாகவும் , தனக்கு எதிராகத்தான் அதிக வசைகள் பாய்வதாகவும் தெரிவித்த அவர் , தன்னை திட்டும் இணைய மொண்ணைகள் , சற்று வித்தியாசமாக யோசித்து திட்டினால் ரசிக்கத்தயார் என்றும் தெரிவித்தார்...




தமிழ் ஸ்டுடியோ அமைப்பின் ஏழாவது ஆண்டு துவக்க விழா சென்னையில் நடந்தது. ஊடக மொண்ணைகள் ஆதரவு இல்லாமல் இந்த அளவு தொடரந்து இயங்குவது உண்மையிலேயே பாராட்ட வேண்டிய ஒன்று. ஒரு நிகழ்ச்சிக்காக ஆனந்த பட்வர்த்தன் சென்னை வந்தார் , ஒரு அமைப்பின் சார்பாக சிங்கள் இயக்குனர் படம் திரையிடப்பட்டது என செய்தி வெளியிட்டு தமிழ் ஸ்டுடியோவை இருட்டடிப்பு செய்வதில் ஊடகங்களுக்கு ஏனோ அதீத ஆர்வம்.




இதனால் எல்லாம் பாதிப்பின்றி , ஆறு மணி நிகழ்ச்சிக்கு ஐந்தரைக்கே மக்கள் குவிந்து விட்டனர். அரங்கு நிறைந்து பலர் ஸ்டாண்டிங்..

அருண் எழுதிய நாடு கடந்த கலை என்ற அருமையான புத்தகம் வெளியிடப்பட்டது... மேற்கண்ட வி ஐ பிகள் வெளியிட அருணின் ஆசிரியர் திருமதி. புஷ்பராணி பெற்றுகொண்டார்.. சமர்ப்பணம் என்பதில் என்னுடைய ஆசிரியர் திருமதி புஷ்பராணி அவர்களுக்கு என குறிப்பிட்டுள்ளார்.. அவர் குருபக்தி நெகிழ்வூட்டியது.. ஆசிரியை என மரியாதைக்குறைவாக சொல்லாமல் ஆசிரியர் என சொன்ன அவர் மொழி ஆளுமை ரசிக்க வைத்தது ,



பேச்சாளர் பட்டியலில் இல்லாத அறந்தை மணியனை முதலில் பேச செய்தார் அருண். அவரும் மிகச்சிறப்பாக பேசினார். திரைப்பட சங்கங்கள் , பணிகள் குறித்து பேசினார்.


முன்னதாக சாரு உள்ளிட்ட பிரபலங்கள் தமிழ் ஸ்டுடியோ குறித்தும் சினிமா குறித்தும் பேசிய காணொளி திரையிடப்பட்டது. வணிகப்படங்களைவிட மாற்று சினிமா என்ற பெயரில் வரும் படங்கள் குப்பையாக இருப்பதாக சாரு பேசியது பலர் கவனத்தையும் கவர்ந்தது.


அதன் பின் ஜெர்மனியை சேர்ந்த திரைப்பட ஆய்வாளர் ஸ்டீபன் பார்சஸ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். வெளிநாட்டு திரைப்பட ஆய்வாளர்கள் / விமர்சகர்கள் பார்வையில் தமிழ் சினிமா என்கிற தலைப்பில் ஆங்கிலத்தில் பேசினார்.

இவர் ஜெர்மனியில் இருந்து வெளியாகும் திரைப்பட இதழான சினி ஏசியாவின் ஆசிரியர் வெளியீட்டாளர். தவிர சர்வதேச திரைப்பட விழாவில், ஜப்பான் மற்றும் தென் இந்திய திரைப்படங்கள் சார்ந்த ஆலோசகராகவும் இருக்கிறார்.




பிறகு லெனின் பேசினார். தனக்கே உரிய இயல்பான பக்குவமாக அனுபவத்துடன் கூடிய எள்ளல் நடை பேச்சு.




படங்களை எப்படி ரசிப்பது என சொல்லித்தருவது இன்று முக்கியபணியாக இருக்கிறது. இதை எந்த அமைப்பும் செய்யாத நிலையில் தமிழ் ஸ்டுடியோ செய்கிறது. இந்தியன் பனோரமா ரஜினிக்கு விருது கொடுத்து கமர்ஷியல் பாதையில் செல்கிறது. நாம் சரியான பாதையில் செல்கிறோம். பத்திரிக்கையாளர்களுக்கு அறிவு என்பதே இல்லை. ஒளிப்பதிவு பளிச் என இருந்தது , கதை சூப்பர் என எழுதுகிறார்கள் . இதுவா விமர்சனம். ..குற்றம் கண்டுபிடிப்பதை விமர்சனம் என நினக்கிறார்கள். உள்ளேபோகும்போது இருந்த வெள்ளை சட்டை வெளியே வரும்போது பச்சை சட்டையாக எப்படிமாறியது என சின்ன விஷ்யங்களை கண்டுபிடிப்பதை சாதனையாக நினைக்கிறார்கள். இயக்குனர் என்ன சொல்கிறார் என்பதே முக்கியம் என்பார் இயக்குனர் பீம்சிங். சினிமாவை கற்ற பின் எழுத வேண்டும் என்றார்.




பிறகு பவா செல்லத்துரை பேசினார்.




சமீபத்தில் ஒரு கதை படித்தேன். அது என்னை கலங்க வைத்து விட்டது என சொல்லி பேசினார். உண்மையிலேயே அது அனைவரையும் கலங்க வைத்து விட்டது. அவர் சொன்ன விதம் , காட்சியை நேரில் பார்ப்பது போல இருந்தது.




பத்திரிக்கையில் வேலை செய்யும் ஒருவன். அவன் மனைவி.. சற்று அப் நார்மலான / உடல் நலக்குறைவுடன் ஒரு குழந்தை.. பேச முடியாத குழந்தை. ட்ரீட்மெண்ட் செய்யக்கூட காசு இல்லை.. பத்திரிக்கை அதிபரோ உதவவில்லை.. அவனுக்கு அவசரமாக நூறு ரூபாயவது தேவைப்படுகிறது.. அவர்50 ரூபாய் கொடுக்கிறார். காரணம் ஏற்கனவே நிறைய வாங்கி விட்டான்.

அடுத்த நாள் .. “ குழந்தையிடம் காசு ஏதாச்சும் கொடுத்தீங்க்ளா.. “ என்கிறாள் மனைவி.. என்னிடம் ஏது காசு.. நான் கொடுக்கவில்லையே என்கிறான்.. குழந்தை கையில் நூறு ரூபாய் இருந்ததாக சொல்லி கொடுக்கிறாள்.. எப்படி அந்த காசு வந்தது என புரியவில்லை... ஆனாலும் , எப்படியோ காசு வந்தால் சரி என நினைத்துக்கொண்டு அதை பயன்படுத்திக்கொள்கிறார்கள்.


இன்னொரு முறை 500 ரூபாய் தேவைப்படுவதாக புலம்புகிறான்.. அடுத்த நாள் பார்த்தால் , குழந்தை கையில் 500 ரூபாய் இருக்கிறது.

இதெல்லாம் எப்படி வருகிறது என புரியவில்லை.. தேவைப்படும்போதெல்லாம் காசு வருகிறது.. குழந்தை கையில் யாராவது வைக்கிறார்களா என செக் செய்கிறார்கள்.. கண்டு ப்டிக்க முடியவில்லை.. ஒரு நாள் முழுக்க விழிப்பாக கவனிக்கிறார்கள். கண்டு பிடிக்க முடியவில்லை

இதற்கிடையில் , குழந்தைக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்க கண்வன் தாமதம் செய்வதை மனைவி கண்டிக்கிறாள்.. குழந்தை சரியாகி , பேச ஆரம்பித்தால் , காசு எப்படி வருகிறது என சொல்லி விடுமோ என பயப்படுவதாக குற்றம் சாட்டுகிறாள்.. க்அதில் இருக்கும் உண்மை கணவனை அதிர்ச்சி அடைய வைக்கிறது.

இத்துடன் முடித்து இருந்தாலும்கூட சூப்பர் கதைதான்.. ஆனால் இதைவிட மரண அடி கிளைமேக்ஸ் இனிமேல்தான்..

பழைய டீவியை மாற்றி எல் சி டி வாங்கினால் நன்றாக இருக்குமே என புலம்புகிறான். அடுத்த நாள் குழந்தை கையில் அதற்கு தேவையான பணக்கட்டு இருக்கிறது. ஒரு கட்டத்தில் அந்த பத்திரிக்கை அதிபர் பத்திரிக்கை நடத்த முடியாமல் , இவனை நடத்த சொல்கிறார். அவனிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட நிபந்தனை விதிக்கிறான். அது ஏற்கப்படுகிறது.




அந்த குழந்தை நோய்க்கு சிகிச்சை செய்ய அந்த ஊரில் டாக்டர்கள் இல்லை.. கல்கத்தா போயாக வேண்டும்.. விமானத்தில் கிளம்ப அவனும் , குழந்தையும் தயார் ஆகிறார்கள்... வேண்டுமென்றே விமானத்தை தவற விடுகிறான்.. மனைவி திட்டுகிறாள்.. கடைசியில் ஒரு வழியாக கல்கத்தா செல்கிறான்..




டாக்டர் குழந்தையை ஸ்கேன் செய்து பார்த்து விட்டு , வெகு நேரம் கழித்து வெளியே வருகிறார் பேயறைந்த முகபாவத்துடன்.




இத்தனை நாள் என்ன செஞ்சுக்கிட்டு இருந்தாய்.. ஏன் முன்பே வரல என கடுமையாக திட்டுகிறார்.




என்ன ஆச்சு பதறுகிறான் அவன்.




குழந்தை இறந்து வெகு நாட்கள் ஆகின்றன என்கிறார் டாக்டர்.




அவ்வளவுதான் கதை..




அந்த குழந்தை இற்ந்து ஒரு பண மெஷினாக மாறிவிட்டது. நாமும் அப்படித்தான் மாறி விடுகிறோம். வெகு சிலர்தான் , சுய நலம் மறந்து பண மெஷினாக மாறாமல் மற்றவர்களுக்காக உழைக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் அருண். அவரை பாராட்டுகிறேன். களப்பணிக்கு நடுவில் அவர் புத்தகம் எழுதியது நல்ல விஷய்ம்.




இப்படி அவர் பேசினார்.




விக்ரம் சுகுமாரன் பேசுகையில் லெனின் அவர்களிம் நாக் அவுட் படம் பார்த்தது தனக்கு வெகு உதவியாக இருந்ததாகவும் , பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக சேர அது ஒரு தகுதியாக இருந்ததாகவும் சொன்னார். தன் படத்தை ஜாதி வெறி படம் என அருண் எழுதியது வருத்தம் அளித்ததாகவும் , இன்னொரு முறை பார்த்த பின் , தான் எழுதியது தவறு என ஒப்புக்கொண்ட நேர்மை பிடித்திருப்பதாகவும் பேசினார்.




ஓவியர் டிராட்ஸ்கி மருது பேசுகையில் காட்சி ரூபமாக சினிமாவை ரசிக்கும் ரசனை வளர வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார். இயக்குனர் என்ன சொல்கிறார் என்பதைவிட எப்படி சொல்கிறார் என்பதே முக்கியம் என்றார். படத்துக்கான சினாப்சிஸ் எழுதுவதல்ல விமர்சனம் .. ஃபில்ம் சொசைட்டி குறித்து சாரு ( சற்று முன் திரையிடலில்) பேசியது  முக்கியமான ஒன்று என்றார்.




தொடந்து பேச வந்தவர் சார்லி. இவரை நகைச்சுவை நடிகராக அறிவோம். இவர் நல்ல படிப்பாளி. பெரிய ஸ்காலர் என்பது பலருக்கு தெரியாது.

அவர் பேசுகையில்,

லெனின் மூலம்தான் எனக்கு அருணை தெரியும் . புள்ளைங்களுக்காக ஒரு படம் ஸ்க்ரீன் பண்றான் . போய் பாரு என வற்புறுத்தினார். என்னவென்றே புரியாமல் போனேன். அங்கு போனபின்புதான் தெரிந்தது. குழந்தைகளுக்கான திரையிடல்.

ஒரே ஷாட்டில் ஒரு கதையை சொல்ல முடியும் என நிரூபித்த கிட் என்ற படம். அதில் வரும் அந்த ஷாட்டை , நம்மை விட அதிகமாக குழந்தைகள் புரிந்து கொண்டு ரசித்து கைதட்டியது ஆச்சர்யம் அளித்தது.

சார்லி சாப்ளின் ஒரு குறுகலான தெரு வழியே செல்கிறார். மக்கள் மாடி வீடுகளில் இருந்து குப்பைகளை கீழே வீசுகிறார்கள். அதில் சமாளித்து எப்படியோ நடந்து வருகிறார். சாலை ஓரத்தில் ஒரு குப்பைத்தொட்டியில் சத்தம். என்னவென்று பார்த்தால் ஒரு குழந்தை . சட் என ஒரு கணம் மாடி வீடுகளை பார்க்கிறார். ஒரே ஷாட்தான். என்ன ஆழமான காட்சி , குப்பையோடு குப்பையாக குழந்தையையும் எறிந்து விட்டீர்களா என்பது போன்ற ஒரு பார்வை. குழந்தைகள் புரிந்து கொண்டு ரசித்தனர்.




ஆக்ட்டிங் என்பது சவாலான ஒன்று. நான் பல பயிற்சி வகுப்புகளில் இதை விளக்கும்போது பலர் இவ்வளவு கஷ்டமாக என பயந்து விடுவார்கள். இதற்கெல்லாம் பயந்தால் எப்படி.. நான் நடித்த படங்களில் 80 சதவிகித படங்களில் என் காட்சிகளை வெட்டி எறிந்தாலும் படத்துக்கு எந்த பாதிப்பும் வராது. பயப்படாமல் நடி. ஒன்றும் ஆகாது. ஆனால் இப்படி எல்லாம் நடிப்பு இருக்கிறது என தெரிந்து கொண்டால்தான் பயப்படாமல் இருக்க முடியும் என சொன்னபின்புதான் சமாதானம் ஆவார்கள்.




ஓர் இயக்குனர் காட்சியை விவரித்தார். காரின் பின் சீட்டில் பிணம் இருக்கிறது. யாரும் கவனிக்கவில்லை .. இதுதான் காட்சி.




அது எப்படி சார் யாரும் பார்க்காமல் இருப்பார்கள். லாஜிக் இல்லையே என்றார் ஓர் உதவி இயக்குனர்.




ஸ்மெல் வந்து விடுமே சார் என்றார் இன்னொருவர்.

இப்படி காட்சி வைத்தால் நம்ப மாட்டார்கள் என்றார் இன்னொரு உ இ.




இயக்குனர் சொன்னார் “ இப்படி ஒரு காட்சியை எடுக்க முடிவதுதான் நம் திறமை. இதை எப்படி எடுப்பது என்பதை மட்டும் யோசியுங்கள் “ என்றார்.




அப்படி எடுக்கப்பட்டு படம் மாபெரும் புகழ்பெற்றது. அந்த படம் சாது மிரண்டால். அந்த இயக்குனர் பீம் சிங்.

அந்த காலத்தில் எங்கள் ஊரில் ஃபில்ம் சொசைட்டி வந்தபோது ஏன் இந்த சொசைட்டி என எங்களுக்கு புரியவில்லை. பால் சொசைட்டி , கோ ஆப்பரேட்டிவ் சொசைட்டி ஓகே.. இது என்ன ஃபில்ம் சொசைட்டி. என நினைத்தோம்..




பிறகுதான் அது மாற்று சினிமாவுக்கான அமைப்பு என தெரிய வந்தது. அந்த வகையில் முதலில் திரையிடப்பட்ட மாற்று சினிமா பாலச்சந்தரின் “ புன்னகை “. அப்போது அதுதான் மாற்று சினிமா.




அடுத்த நாள் வேற்று மொழி படம். டேய். செக்ஸ் படம்டா என ஆசை ஆசையாக காலையிலேயே போய் விட்டோம். பயங்கர கூட்டம்.

படம் ஆரம்பித்தது.. பேச்சு பேச்சு பெச்சு...ஞஞாம்ம்ம் ஞஷ்ம்ம்ம் ங்க்ஜன்ஞ்ஞ்ஞ் என புரியாத மொழியில் பேசிக்கொண்டே இருந்தார்கள். படம் முடிய ஒரு நிமிடம் இருந்தபோது பனியனை கழட்டுவதுபோல ஒரு காட்சி. வந்ததுக்கு இதுவாச்சும் பார்த்தோமே என நினைத்தபடி வந்தோம். இந்த ரசனை எல்லாம் மாற வேண்டும்.

கலைஞனுக்கு தன்னம்பிக்கை வேண்டும் .

ஓர் இளைஞன் நாடக கம்பெனியில் சேர்ந்தான். வழக்கமான புது முகங்களைபோல அவனை அரண்மனை காவல்காரன் வேடத்தில் நடிக்க வைத்தார்கள். ஒரு வாளை பிடித்தபிடி நின்றுகொண்டே இருக்க வேண்டும்.




இப்படி ஒரு நாள் , ரெண்டு நாள் என நூறு நாட்கள் நடித்தான். அதற்குமேல் தாங்க முடியவில்லை. வேறு வேடம் கொடுங்கள் என்றான். கொஞ்ச காலம் போகட்டும் என்றார்கள். முடியாது. இப்பவே வேண்டும் என்றார்கள். என்ன வேடம் என கேட்டார்கள். கதானாயகன் வேடம் என்றான். அதிர்ந்துபோனார்கள். அதெல்லாம் உன்னால் நடிக்க முடியாது என்றார்கள். ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்க்ள் என்றான். கொடுத்தார்கள். ராஜாவாக அவன் நடித்த்து பெரும் வரவேற்பு பெற்று அன்று முதல் ஹீரோ ஆனான். அவர்தான் லட்சிய நடிகர் எஸ் எஸ் ஆர்.

மொழி தெரியாத நடிகரை நடிக்க வைத்தால் அவர் தரும் தொல்லைகளை தாங்க தயாராக இருக்க வேண்டும். தமிழ் கவிஞர் பாரதியாரைப் பற்றிய படம் எடுக்க , தமிழ் தெரியாத ஒருவரை தேர்வு செய்யும் கொடுமை இங்கு மட்டுமே நடக்க முடியும்.


இப்போதைய சினிமாவை பொருத்தவரை சம்பந்தம் இல்லாமல் பயன்படுத்தப்பட்டு அர்த்தம் இழந்த வார்த்தைகள் சில உண்டு.

டிராவல் பண்ணுதல்.. இதை எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்துகிறார்கள். கதை இப்படி டிராவல் பண்ணுது , கதை அவர் மூலம்தான் டிராவல் பண்ணுது என்கிறார்கள்.




அதுபோல கெமிஸ்ட்ரி , பாடி லாங்குவேஜ் போன்றவையும் அர்த்தம் இல்லாமல் பயன்படுத்தப்படுகின்றன.




ஒரு முறை ஜெயகாந்தன் என்னிடம் பேசினார். அவர் கதைகளை படித்தால் , வேறு எதுவும் தேவையில்லை, அவர் எழுத்துகள்தான் வேதம் என அவரிடம் சொன்னேன்.

அதேபோல தமிழ் ஸ்டுடியோ பணிகள் ஒரு யாகம்..




இப்படி அவர் பேசினார்..




(இணைய மொண்ணைகளை கலாய்த்த மிஷ்கின், தமிழ் ஸ்டுடியோவை விமர்சித்த இயக்குனர் ராம், அம்ஷன் குமாரின் ஆழமான பேச்சு அடுத்த பதிவில்)

( இலக்கிய விவாதத்துடன் இறைவனை தேடி - சிலிர்ப்பூட்டும் திருவண்ணாமலை அனுபவ பகிர்வு அதற்கு அடுத்த பதிவில்)







Friday, November 21, 2014

தனுஷ் யார் மாதிரியும் இல்லாத தனித்துவ நடிகர்- ஹிந்தி இயக்குனர் புகழாரம்

பா , சீனி கம் போன்ற ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் பால்கி இப்போது அமிதாப் , தனுஷ் நடிப்பில் ஷமிதாப் எனும் படத்தை இயக்கி வருகிறார். அவருடன் பேட்டி

__________________________________

இந்த படம் எப்படி நிகழ்ந்தது?

 அமிதாப் பச்சனின் 69ஆவது பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்ல காரில் பயணித்துக்கொண்டு இருந்தேன் . பயங்கர டிராபிக்.. கார் நகரவில்லை. அவருக்கு என்ன பரிசு அளிப்பது என யோசிக்கலானேன். வைன் அளிக்கலாமா என்றால் அவர் மது அருந்த மாட்டார். பூங்கொத்து சரிப்படாது.. என்ன செய்வது என யோசிக்கும்முன் அவர் வீடு வந்து விட்டது. அப்போதுதான் இந்த படத்தின் கதையை அவருக்கு சொன்னேன். அவருக்கும் பிடித்துப்போய் நடிக்க ஒத்துக்கொண்டார். அந்த கதையே அவர் பிறந்த நாள் பரிசாக அமைந்து விட்டது. அப்போது வேறு யாரெல்லாம் நடிப்பது என தீர்மானித்து இருக்கவில்லை

இந்த படத்தில் தனுஷ் வாய் பேச முடியாத , காது கேளாத கேரக்டரில் நடிக்கிறாராமே?

நான் சொல்லும்வரை இது போன்ற செய்திகளை நம்பாதீர்கள். நான் தனுஷின் பெரிய ரசிகன் என்பதை மட்டும் இப்போதைக்கு சொல்லிகொள்கிறேன். காதல் கொண்டேன் படத்தில் இருந்தே அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். யார் மாதிரியும் இல்லாத , தனித்துவமான நடிகர் அவர். படம் பார்த்தபின் , அவரை ஏன் தேர்ந்தெடுத்தேன் என உங்களுக்கு புரியும். படம் எடுப்பது என்பது கடினமான வேலை. சுவையான கருவோ , கதாபாத்திரமோ அமையாமல் படத்தை ஆரம்பிக்க மாட்டேன்.

படத்தை பற்றி ஏதாவது பேசி விளம்பரப்படுத்துவதுதானே பாலிவுட் ஸ்டைல்? நீங்களோ எதுவும் சொல்ல மறுக்கிறீர்களே?

தியேட்டர் செல்லும் ரசிகனுக்கு படம் ஆச்சர்யம் அளிக்க வேண்டும். இப்போதே எல்லாம் சொல்லிவிட்டால் ஆச்சர்யம் என்ன இருக்கப்போகிறது? படத்தின் சுவாரஸ்யத்தன்மைதான் ரசிகனை ஈர்க்க வேண்டும் , விளம்பரம் அன்று. யாரையும் வற்புறுத்தி படம் பார்க்க வைக்கக்கூடாது.

கமலின் மகள் என்பதால் அவர் பெயரை காப்பாற்ற வேண்டுமே என அக்‌ஷரா பதட்டமாக இருந்தாரா?

 நான் பார்த்தவர்களிலேயே அமைதியான நடிகர் என்றால் அவர் அக்‌ஷராதான். 150 படம் நடித்து முடித்தவர் போல அமைதியாக காணப்பட்டார். துளியும் பதட்டம் இல்லை. அவர் அம்மா சரிகா சில நாட்கள் துணைக்கு வந்தார். அக்‌ஷராவின் துணிச்சலைப்பார்த்து இனி தான் வர வேண்டியதில்லை என தீர்மானித்து விட்டார்.  இந்த படத்தில் மூன்று கதாநாயகன்கள். அவர்களில் அக்‌ஷராவும் ஒருவர்

இளையராஜாவுடன் உங்கள் உறவு குறித்து ?

அவருடன் பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கும் விஷயம். அவர் விரும்பும்வரை , அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். என் படங்களில் பின்னணி இசைக்கு முக்கிய இடம் இருக்கும்.  அந்த வகையில் என் படத்துக்கு ஒரு அர்த்தத்தை அளிக்கிறது அவர் இசை..

தனுஷ் , இளையராஜா, பிசி ஸ்ரீராம் , அபினயா என ஏராளமான தமிழர்கள் இந்த படத்தில் இருக்கிறார்கள்.. இது தமிழர்கள் பற்றிய படமா?

இல்லை.. இது ஹிந்தி படம். தமிழர்கள் பணியாற்றுகிறார்கள்.. அவ்வளவுதான்..

Thursday, November 20, 2014

மதச்சார்பற்ற மண்ட்டோ படைப்புகள் , திரிக்கும் குறும்படங்கள்- கலவை பதிவு



பல் வலி, பல் பிடுங்க வேண்டும் என நண்பன் ஒருவன் கேட்டான். ஒரு டாக்டரை பரிந்துரை செய்தேன். அவனோ அந்த டாக்டரிடம் வரவில்லை. இன்னொரு டாக்டரிடம் சென்று வந்தான். அதன் பின் சுரத்தில்லாமல் நன்றாக முடிந்ததாக சொன்னான். பிறகுதான் விஷ்யம் தெரிந்தது. லேடி டாக்டர் என்றால் மென்மையாக பிடிங்குவார் என அவனாகவே தப்பு கணக்கு போட்டு , நான் சொன்ன டாக்டரை புறக்கணித்து லேடி டாக்டரிடம் போய் இருக்கிறாம். அந்த டாக்டரோ சில சோதனைகளை மட்டும் செய்து விட்டு , சினிமா அடியாள் போன்ற ஓர் உதவியாளரை வைத்து பல் பிடுங்கினாராம். சும்மா இன்ஸ்டரக்‌ஷன் மட்டும் கொடுத்து கொண்டு இருந்தாராம். ஆனால் நான் சொன்ன டாக்டர் உதவியாளார் அழகான பெண்,, அவர்தான் பல் பிடுங்குவார். அவரை பார்த்து ரசித்து கொண்டு இருந்தால் , வலியே தெரியாது.. அதனால்தான் நண்பருக்கு பரிந்துரைத்தேன், அவன் கேட்கவில்லை.. விதி வலிது # நண்பர்களை நம்புங்கள் நண்பர்களே

______________________________________________________


விதை இயற்கை அங்காடியில் சாமை (ஆமை அல்ல ) வாங்கினேன்
சமைத்து சாப்பிட்ட அனுபவத்தை பிறகு சொல்வேன்


__________________________________________________

குணங்குடி மஸ்தான் rocks கள்ள கருத்துகளை கட்டோடு அறுவத்தவருக்கு உள்ளிருக்கும் மெய்ஞான ஒளியே பராபரமே

_________________________________________


மோடியை எதிர்க்க நியாயமான காரணங்கள் ஆயிரம் உண்டு. அதை வலுவாக எடுத்து சொன்னாலே போதும். சில ஆர்வக்கோளாறு அறிவு ஜீவிகள் அவர் சொல்லாத செய்யாத ஒன்றை பெரிது படுத்தி கண்டித்து பேசி , அதன் பின் அவர் விளக்கம் அளித்ததும் அமைதியாவது மோடிக்கு சாதகமாக முடிகிறது. ப்ரொஃபஷனல் அறிவுஜீவிகளை நம்பாமல் மோடி எதிர்ப்பை தாமாகவே முன் எடுத்து செல்வது பற்றி மதச்சார்பற்ற சக்திகள் யோசிக்க வேண்டிய தருணம் இது.


____________________________________________________________

மண்ட்டோ படைப்புகளை தொகுத்து மொழிபெயர்த்த ராமாநுஜம் அவர்களை எப்படி பாராட்டுவது, எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. மாபெரும் சாதனை,,மாபெரும் பணி

************


மண்ட்டோ கதைகள் சில உங்கள் பார்வைக்கு.. அவர் நினைத்து இருந்தால் , ஏதாவது ஒரு மதத்துக்கு எதிரான தொனியில் எழுதி இருக்கலாம்.. அதற்கான உண்மை தரவுகள் ஏராளம்.. ஆனாலும் அவர் நடு நிலை பார்வையுடன் எழுதியால் அவை காலத்தை விஞ்சி நிற்கின்றன. ஆனால் பலர் அவர்கள் திரித்து , மத துவேஷ குறும்ப்டம் எடுக்கிறார்கள்.. போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்.. நேரடியாக அவர் நூல்களை படியுங்கள்..

************************


தன்னடக்கம் - சாதத் ஹசன் மண்ட்டோ
ஓடிக்கொண்டு இருந்த ரயிலை கட்டாயப்படுத்தி நிறுத்தினார்கள். “அந்த” மதத்தினரை மட்டும் தேர்ந்தெடுத்து துப்பாக்கிகளாலும் கத்திகளாலும் படுகொலை செய்தார்கள்.மற்ற பயணிகளுக்கு பால், அல்வா ,பழங்கள் வழங்கப்பட்டன.
மீண்டும் ரயில் புறப்படும்முன் இந்த விருந்தோம்பலை நடத்திய கூட்டத்தின் தலைவன் ப்யணிக்ள் முன் சொற்பொழிவாற்றினான். “ அன்பார்ந்த சகோதர சகோதரிகளே.இந்த ரயில் வருவது பற்றி தாமதமாகத்தான் தகவல் கிடைத்தது.எனவேதான் உங்களை இன்னும் சிறப்பாக உபசரிக்க முடியாமல் போய் விட்டது “


*****************




நீ பாதி, நான் பாதி - சாதத் ஹசன் மண்டோ

அந்த வீட்டில் இருந்ததிலேயே ஒரு பெரிய பணப்பெட்டியை தனக்காக தேர்ந்தெடுத்து கொண்டான். அந்த பெரிய பணப்பெட்டி மிகவும் கனமாக இருந்தது. ஏராளமாக பணம் இருகிறது போலும் . ஆனால் அவனால் அதை நகர்த்தக்கூட முடியவில்லை. அப்போது இன்னொருவன் உதவிக்கு வந்தான், ஒரே மூச்சில் தூக்கி தன் முதுகில் வைத்து கொண்டான். மிகவும் கஷ்டப்பட்டு அந்த வீட்டில் இருந்து தூக்கி சென்றார்கள். பத்திரமாக ஒரு பாதுகாப்பான இடத்துக்கு சென்ற பின், பங்கு கேட்டான். தூக்கியவன் கால் பங்குக்கு ஒத்து கொள்ளவில்லை. கடைசியில் பாதி பாதியாக பிரித்து கொள்ள முடிவு செய்தார்கள். பெட்டியை திறந்தார்கள். உள்ளே இருந்த்து நீண்ட வாளுடன் ஒரு மனிதன் வெளியே வந்தான். இரு பங்குதாரர்களையும் நான்கு துண்டுகளாக வெட்டி எறிந்தான்.

*********************


என்ன வேறுபாடு?- சாதத் ஹசன் மண்ட்டோ
“ என் கத்தியை அவன் குரல் வளையில் வைத்து , மெதுவாக மிக மெதுவாக ஹலால் முறையில் கொன்றேன்”

“ ஏன் அப்படி செய்தாய்?”


“அதுதான் எனக்கு சந்தோஷம் “

“உன் சந்தோஷம் யாருக்கு வேண்டும். ஜட்கா முறையில் அவள் கழுத்தை ஒரே வெட்டாக வெட்டி இருக்க வேண்டும், இது போல “

ஹலால் முறையில் கொன்றவன், ஜட்கா முறையில் படுகொலை செய்யப்பட்டான்

*****************************


நிரந்தர விடுமுறை - சதத் ஹசன் மண்ட்டோ
” அவனை விட்டு விடாதீர்கள். பிடியுங்கள்”
கொஞ்ச நேர துரத்தலுக்கு பின் அவனை பிடித்தார்கள். கத்தியால் குத்தப்பட்டு இறக்கும்முன் அவன் கடைசி வார்த்தைகள் “ தயவு செய்து என்ன கொன்று விடாதீர்கள். விட்டுவிடுங்கள். நான் விடுமுறைக்கு ஊருக்கு சென்று கொண்டு இருக்கிறேன்”


_______________________________________________________________________




ஒரு பெண் கடைக்கு சென்று சானிட்டரி நாப்கின் வாங்கி வந்தாள், இரு வாலிபர்கள் கிண்டலாக கேட்டார்கள்..மேடம் , பிரட் வாங்கிட்டு போறிங்களா,எங்களுக்கு இல்லையா?
அந்த பெண் சொன்னாள் “...

இது போன்ற ஜோக்குகளை விடலைப்பருவத்தில் சொல்லியதற்கு , ரசித்ததற்கு வெட்க்கபட வைத்தது இன்று பார்த்த ஆவணப்படம் - மாதவிடாய் ,. ஏற்பாடு- தமிழ்ஸ்டுடியோ குறும்பட வட்டம்

------------------------------------------------------------------------------------
ஞானக்கூத்தன் ராக்ஸ்
தமிழும் -ஞான கூத்தன்
எல்லா மொழிகளும் நன்று
கோவிக்காதீர் நண்பரே
தமிழும் அவற்றில் ஒன்று
---------------------------------------------------------------------------------

அவன் சாகவேண்டிய ஆள்
என்று
நினைக்காத நாளே இல்லை
உண்மையாகவே
அவன் செத்த நாளில்
அப்படி தோன்றவே இல்லே
-மனுஷ்யபுத்திரன்

-----------------------------------------------------------------


இது ஒரு பக்தி பாடல்... யார் எழுதி இருப்பார் என கணிக்க முடிகிறதா?

உவமையையும், சுகமான நடையையும் கவனித்தால் கெஸ் செய்து விடலாம்

எள்ளுப் போன்ற மூக்கின் கீழே
துள்ளும் இரண்டு பூச்செண்டு
வெள்ளித் தட்டு கன்னங்களிலே
மேவும் இரு கருவண்டு
கொள்ளை கொள்ளும் தெய்வப் பெண்மை
கோவில் கொண்ட அரசாட்சி
கொள்ளக் கொடுக்க உலகை கூட்டும்
கோமள சக்தி விசாலாட்சி
---------------------------------------------------------------

பழத்தை சாப்பிட்டு விடு
நாளைக்கென்றால் அழுகிவிடும் என்றாள் அம்மா
வாங்கி
விண்டு
உண்டேன்
இன்றை -தேவதச்சன்


----------------------------------------------------


துணி துவைத்து கொண்டிருந்தேன்
காதில் விழுந்தது குருவிகள் போடும் சப்தம்
தொடர்ந்து துவைத்தேன்
காதில் விழுந்தது குருவிகள் போய்விட்ட சப்தம்
அடுத்த துணி எடுத்தேன்
காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள்  சப்தம்
-தேவதச்சன்

------------------------------------------------------------------------


ஒரு காதல் கவிதை -தேவதேவன்


கட்டிப்பிடித்து முத்தமிடவா முடியும்
ஒரு காபி சாப்பிடலாம் , வா

------------------------------------------------------------------------------

நீ இப்போது என்னோடு இல்லை
உன் ப்ரியத்தையும் எடுத்து சென்று விட்டாய்
ஆனால்
அதன் வாசனையை
வீட்டில் எங்கோ ஒளித்து வைத்துள்ளாய்
எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை
எவ்வளவு கழுவியும் போகவில்லை
உன் ப்ரியத்தின் வாசனை - நஞ்சுண்டன்

----------------------------------------------------------------------------


காதலிகயைப் பெற்ற
காதலனுக்கே மட்டுமே தெரியும்...
”யாராவது பார்த்துட போறாங்க”
என்ற சாதாரண வார்த்தை
காமத்தில் சேரும் என்று # பிங்கூ

-----------------------------------------------------------------------


படித்ததில் பிடித்தது
ஓர் இலை உதிர்வ்தால்
மரத்துக்கு ஒன்றும் இல்லை
ஒரு மரம் படுவதால்
பூமிக்கு ஒன்றும் இல்லை
ஒரு பூமி அழிவதால்
பிரபஞ்சத்துக்கு ஒன்றும் இல்லை
ஒரு பிரபஞ்சம் போவதால்
எனக்கு ஒன்றும் இல்லை - ஆனந்த்

--------------------------------------------------------------------------


இனி இரவு திருடர்களை பிடிக்கும்போது
சொல்லியாக வேண்டும்
பகற்கொள்ளையருக்கு பாத்தியப்பட்ட எங்களை
இரவில் வந்து
இம்சிக்காதீர்கள் என்று
-ஜெயபாஸ்கரன்

-------------------------------------------------------------------------


சிறுகிளையில் முட்டையிட்டு
அண்ணாந்து சிரித்தது அந்த பறவை
பதிலுக்கு
வானம் கண்சிமிட்டவே இல்லை
ஆனால்
நட்சத்திரங்கள் எல்லாம்
மின்னிக்கொண்டுதான் இருந்தன
சின்ன சின்ன
முட்டைக்குள் ......

---------------------------------------------------------------


எழுதப்படாத அரசியல் சட்டம் பற்றி பிரிட்டனை பாராட்டுபவர்கள் , எழுதப்படாத விதிகளை கொண்டு விளையாடப்படும் கில்லி , கோலிக்குண்டு பற்றி எதுவும் சொல்வதில்லை

---------------------------------------------------------------------------


பிளம்பர் என குழாய் சம்பந்தப்பட்ட வேலை செய்பர்களை சொல்கிறோமல்லவா . ஏன் ? அந்த காலத்தில் குழாய்களில் காரியம் (plumbum-pb) பயன்பட்டது . ஆனால் இது உடலுக்கு தீங்கு செய்வதால் அதன் பயன்பாடு நிறுத்தப்பட்டது . பெயர் மட்டும் நீடிக்கிறது -உலோகவியல்

-----------------------------------------------------------------------------


அரணை என்றொரு உயிரி தெரியுமா ? பல்லி போல இருக்கும் . அது நக்கினால் மரணம் நிச்சயமாம் . ஆனால் ஒருவரை நக்க அருகில் சென்று விட்டு , போன காரியத்தை மறந்துபோய் திகைத்து போய் ஒன்றும் செய்யாமல் போய்விடுவோம் . இதை ஓர் அறிவியல் உண்மை போல சீரியசாக சொன்னார் சக ஊழியர். மிகவும் படித்த டெக்னிகல் அறிவு கொண்ட பெண் அவர் . உண்மை அல்ல என தெரிந்தாலும் ரசிக்க முடிந்தது .# ignorance is bliss

-------------------------------------------------------------------------


அறியாத நம்பரில் மிஸ்டு காலை பார்த்தால் ஒரு வித நப்பாசையுடன் அட்டெண்ட் செய்வோம்..எதிர் முனை ஆண் குரலாக இருத்தால் , அடச்சே என தோன்றும். சில நேரம் பெண் குரலாக இருக்கும், ஆனால் அது டெலிமார்க்கெட்டிங் !! நீங்க செத்துட்டா என்ன பண்றது.. இன்சூரன்ஸ் வாங்கிக்கோங்க" போன்ற கால்கள்.

இது போன்ற சந்தர்ப்பங்க்ளில் மிகவும் பெருமையான முக பாவத்துடன் “ மேடம் , நான் கொஞ்சம் பிசி ( உண்மையில் ஒரு ஆணியும் பிடிங்கி கொண்டு இருக்கமாட்டோம் ) .. நாளைக்கு பேசுறீங்களா” என நாலு பேர் கேட்கும்படி பேசினால் , நீங்களும் என் தோழனே

-----------------------------------------------------------------


காதலிக்கும்போது "காதல் என்றால் " என்பது போன்ற தத்துவம் சொல்ல நேரம் இல்லை . தத்தவம் சொல்லும்போது அதை கேட்க காதலிகள் இருப்பதில்லை

----------------------------------------------------------------------------


மிஸ்டு கால் எண்ணுக்கு டயல் செய்கையில் , எதிர்முனையில் ஆண் குரல் கேட்டால் , சொல்லொண்ணா ஏமாற்றம் அடைந்தால் நீயும் என் தோழனே


-------------------------------------------------------------------

Good friend is someone who thinks you are a good egg even though he knows you are slightly cracked


----------------------------------------------------------------------------

என் முற்றுப்புள்ளிகள்
உன் கால் பட்டு
காற்புள்ளிகள் ஆகின ‪#‎பிங்கூ‬

------------------------------------------------------------------


அழுகை சத்தம் கேட்டது
அனைவரும் சிரித்தனர்
பிரசவ அறை # பிங்கூ

---------------------------------------------------------------------------


இரும்பு மனிதர் , இரும்பு இதயம் என்றெல்லாம் சொல்கிறோம் . உண்மையில் இரும்பு , வேறு சேர்மங்கள் கலக்காத தூய வடிவில் , மிக மென்மையாக இருக்கும் ‪#‎உலோகவியல்‬

---------------------------------------------------------------------------------


வால்வ் என்ற சொல்லின் வேர் லத்தீன் மொழியில் உள்னது .valvae என்ற லத்தீன் வார்த்தையின் பொருள் மூடும் கதவு


-----------------------------------------------------------------------

திராவிட பூமி என்பதால் தமிழ்நாட்டில் தமிழ்எண்கள் புழக்கத்தில் இல்லை . கர்நாடகாவில் கன்னட எண்கள் புழக்கத்தில் உள்ளன




_____________________________________________________________________________

கண்ணதாசனின் திராவிட இயக்க அனுபவங்கள் -- dont miss it
( முன் குறிப்பு..கண்ணாதாசனின் சுயசரிதையான இதில் தன்னை அவன் ,இவன் என குறிப்பிட்டு கொள்வார் )

அந்நாளில் திராவிட முன்னேற்றக் கழகம் பிரபல இயக்கமாக இல்லை.வாடகைக் கார் டிரைவர்களுக்கும், அந்தக் கழகத்தைப் பற்றியோ, அதன் தலைவர்களைப் பற்றியோ எதுவும் தெரியாது. அவனும் தலைவனும் ஓர் நாள் இரவு, ஒரு பெரிய வாடகைக் காரை வைத்துக்கொண்டு பெண் வேட்டையில் ஈடுப்பட்டார்கள்.


ஒரு நாலைந்து பெண்கள் – கிராமத்துப் பெண்கள் – வேறு பெயரில் சொல்வதானால் நாட்டுக்கட்டைகள், மடமடவென்று வந்து காருக்குள் ஏறிக்கொண்டார்கள். காமுகன் பசிக்கு ருசியா தெரியும்? அத்தனையையும் ஏற்றிக்கொண்ட வாடகைக் கார், நேரே சென்ட்ரல் ஸ்டேஷன் பக்கம் உள்ள ஹோட்டலை நோக்கிப் புறப்பட்டது.

திராவிட விடுதலை வீரர்கள் திராவிட நாடு அந்தப் பெண்களிடம் இருக்கிறதா என்று தேட ஆரம்பித்தார்கள். காமக்கடலில் மூழ்கி எழுந்தார்கள். ஆனால் காரில் போவதற்குக்கூட பணம் கொடுக்காமல், அவர்களை வெளியே அனுப்பிவிட்டார்கள்.

அன்றும் அதற்குப் பிறகும், நடைபெற்ற களியாட்டங்களை, ஒவ்வொன்றாக விவரிக்கத் தேவை இல்லை. அது சுவைக்குறைவாகவும் போய்விடக்கூடும்.

ஆனால் சில பெண்கள், அவ்வப்போது நறுக்குத் தெறித்தாற்போல் கேட்ட கேள்விகளை அவனால் மறக்க முடியவில்லை.

“மேடையில் என்னென்னவோ பேசுகிறீர்கள்! அதெல்லாம் ஊருக்குத்தான் உபதேசமா?”

“நீங்களே இப்படி நடப்பதைப் பார்த்தால், யாரை நம்புவதென்றே தெரியவில்லை.”

“உங்கள் கையில் நாடு கிடைத்தால் – சட்டசபையெல்லாம் பெண்களாகவே இருப்பார்கள்.”

இப்படி ஆணித்தரமான பொன்மொழிகள் பலவற்றை அவர்கள் சந்தித்த பெண்கள் உதிர்த்திருந்தார்கள்.

திராவிட முன்னேற்றக் கழக்கத்தின் தலைவர்கள் பலரும், ஒழுக்கமற்றவர்களென்றும் காமுகர்களென்றும் எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தும்போது அவனுக்குக் கொஞ்சம்கூட கோபம் வருவதில்லை!




********************************




அந்த நேரத்தில் அவன் அவர்களைப்பற்றி அதிகம் ஆராய விரும்பவில்லை. காரணம் அவனும் உடன்பட்டேதான் அந்தக் காரியங்களில் இறங்கினான். பணக்கார மைனர்களைப் போன்று, பகலிரவு பாராமல் அவர்கள் ஆடினார்கள்.


இந்த நேரத்தில் அவனுக்குச் சில செய்திகள் தரப்பட்டன. நாம் மட்டும் தவறு செய்யவில்லை! முக்கியத் தலைவரே அதைத்தான் செய்கிறார் – என்று அந்தச் செய்திகள் கூறின! கலாரசிகரும், இன்றைய எம்.எல்.ஏ. ஒருவரும், அந்த நிகழ்ச்சியினை அவனுக்கு விரிவாகவே கூறினார்கள். அந்த எம்.எல்.ஏ. முக்கியத் தலைவரின் பத்திரிக்கையிலே வேலை பார்த்தவர். ஆதலின், அவர் சொன்னவற்றை அவன் நம்பினான். அது இது:

ஓர் இரவு, முக்கியத் தலைவர் தூக்கம் பிடிக்காமல் முன்னும் பின்னும் நடக்கிறார். வெளியிலே இருவர் போயிருக்கிறார்கள். அவர்களை அவர் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார். மணி பத்தடிக்கிற்அது. பதினொன்று! கோயிலில் அர்த்த ஜாம மணி அடிக்கிறது. மணி பனிரெண்டு! அதற்குள் தலைவர் ஏழெட்டுத் தடவை வெற்றிலை போட்டுத் துப்பிவிட்டார். அதோ அவர்கள் வரும் சத்தம் கேட்கிறது.

கதவு திறக்கப்படுகிறது. மூன்று ஆடவர்கள் உள்ளே நுழைகிறார்கள். “ஆடவர்கள்தானா? அழகு மயில் வரவில்லையா!” ஓர் ஆடவனின் தலைக்கட்டு அவிழ்க்கப்படுகிறது. ஆண் உடைகள் களையப் பெறுகின்றன. என்ன ஆச்சரியம்! அந்த உடைக்குள் ஓர் அழகிய மயிலல்லவா ஒளிந்து கொண்டிருக்கிறது. அழைத்து வந்தோர் குறிப்பறிந்து வெளியேறுகிறார்கள். பகுத்தறிவுத் தலைவரின் அறை பண்டாரச் சன்னியாசியின் மடமாகிறது. பொழுது விடிவதற்குமுன்னே பூவை திரும்புகிறாள்.

இந்த நிகழ்ச்சியைப்பற்றி அறிந்த கட்சிப் பிரமுகர்கள் இதற்குக் கொடுத்த பெயரென்ன தெரியுமா? ‘சுந்தரகோஷ்’ என்பதாகும். ‘வேலைக்காரி’ படத்தில் ஆண்வேடம் தாங்கிய பெண்ணொருத்தி ‘சுந்தரகோஷ்’ என்று அழைக்கப்படுவதையே அவர்கள் அப்படிக் குறிப்பிட்டார்கள்.- கண்ணதாசன்

--------------------------------------------------------------------------


இன்னொரு தேர்தலில் 50:50 என்ற அடிப்படையில் காங் . திமுக கூட்டணி வைத்தார்கள் . யார் அதிகம் வெல்கிறார்களோ அந்த கட்சிக்கு முதல்வர் பதவி என்பது உடன்பாடு . கூட்டணிகட்சியை ஜெயிக்க வைத்து முதல்வர் ஆக்க இருகட்சியும் விரும்பாததால் அந்த கூட்டணி எதிர்பாரா தோல்வியை சந்தித்தது ‪#‎BLUNDER‬

------------------------------------------------------------


ஒரு சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு ஒரு சீட் கூட ஒதுக்காமல் அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்தார் கலைஞர் ‪#‎THUNDER‬


----------------------------------------------------------------------------

எம்ஜிஆர் மறைவுக்கு பின் ஜானகிக்கு பதில் வலுவான அரசியல்வாதியை போட்டி அதிமுகவின் தலைவர் ஆக்கியிருந்தால் , ஜெ. இந்த அளவுக்கு வளர்ந்திருக்க முடியாது‪#‎BLUNDER‬

--------------------------------------------------------------------------


பா ம கவை தடை செய்தால் ஜாதியை ஒழித்து விடலாம் என்பது தவறு..பாமக தோன்றுவதற்கு முன்பிருந்தே ஜாதிப்பிரச்சினை இருக்கிறது.. ஆனால் முன்பு இல்லாத ஒன்று இப்போது புதிதாக முளைத்து இருக்கிறது...அதுதான் டிவி மற்றும் பத்திரிக்கைகளின் ஊடக அராஜங்கள்... முன்பும் காதலைஒட்டி லோக்கல் அளவில் சண்டை சச்சரவுகள் உண்டுதான்,, ஆனால் அப்போதெல்லாம் , ஓடிப்போன காதலர்கள் எங்கு இருக்கிறார்கள் , என்ன செய்கிறார்கள் என எழுதி காட்டிக்கொடுப்பதில்லை.. சரியான காதல் என உணர்ந்து பெற்றோர்கள் சமாதானம் ஆவதும் உண்டு... இனக்கவர்ச்சியால் தவறு செய்து விட்டொம் என பிரிவதும் உண்டு..இதெல்லாம் அவரவர்கள் குடும்ப அளவில் - அதிக பட்சம் கிராம அளவில் முடியும்,.. இதை மானில அளவிலான பிரச்சினை ஆக்கி , அந்த இளம் தம்பதிகளுக்கு மன ரீதியான அழுத்தம் கொடுத்த ஊடக அராஜகம் , ஏற்கனவே இருக்கும் ஜாதி அராஜகத்துக்கு புதிய கூட்டாளியாக சேர்ந்துள்ளது வருந்தத்தக்கது..

--------------------------------------------------------------------


பெண்களை நம்பாதே..அவர்கள் சொல்லை கேட்காதே ..உன்னை ஏமாற்றி விடுவார்கள் என்ற அறிவுரையை அடிக்கடி கேட்டு , ஆச்சர்ப்பட்டு வந்தேன்.. காரணம் இந்த அறிவுரையை எனக்கு சொல்பவர்கள் பெரும்பாலும் பெண்கள்..இந்த அறிவுரையில் இருக்கும் paradox அவர்களுக்கு ஏன் புரியவில்லை என புரியாமல் குழம்பி இருக்கிறேன், பிறகு புரிந்தது... அவர்கள் அவர்களைத்தவிர மற்ற பெண்களை மனதில் வைத்து பேசுகிறார்கள்

----------------------------------------------------------------


வயது முதிர்ந்த சகா . அவர் மனைவி உடல்நிலை சீர்கெட்டு கஷ்டப்பட்டு வருகிறார் . பிள்ளைகள் அனைவரும் வெளிநாட்டில் . அம்மாவை ஹோம் ஒன்றில் சேர்த்து விடுங்கள் . ஒரு வாரத்தில் இன்ஜக்ஷன் எல்லாம் போட்டு கஷடம் இல்லாமல் 'அனுப்பி' விடுவார்கள் . எவ்வளவு காசானாலும் பார்த்து கொள்கிறோம் என்றார்களாம் . தன் குழந்தையை எறும்பு கடித்தால்கூட துடித்துபோகும் தாயின் துன்பத்தை இப்படி தீர்க்கிறார்கள் பிள்ளைகள் . ரெண்டுநாளாக மனதில் இதுதான் ஓடுகிறது

--------------------------------------------------------------------------------


அவளது இனிய பேச்சு அமிழ்தம் போன்றது..
அவள் குணங்களும் இனிமையானவை..
எனவே அவள் மேல் காதலில் விழுந்தேன்,
அந்த காதல் நோயோ என்னை பாடாய்ப்படுத்துகிறது.
அறிவியடையோரே
நீங்களாவது எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்

-ஐயூர் முடவனார் ( குறுந்தொகை )

Wednesday, November 19, 2014

எம் ஜி ஆரை கோபப்படுத்திய வாலி - கலவை பதிவுகள்


நான் என்பது என் மூளைதான் .மற்ற அவயங்கள் எல்லாம் அதற்கான உபகரணங்கள் மட்டுமே _ ஷெர்லக் ஹோம்ஸ்

_________________________________


கொஞ்சம் கூட பிசிறு தட்டாத , ஒரு எழுத்து கூட அதிகமாக போய்விடாத , கச்சிதமான மறக்க முடியாத நாவல் எ.பெ.ராமசேஷன்

_________________________________

ராம்சேஷன் . கர்நாடகமான ஒரு பெயர் . என் அப்பா மேல கோபம் ஏற்படுத்திய பலகாரணங்கில் இதுவும் ஒன்று - wat a start !

_________________________________________

பெரியவன் ஆன பின் யாருக்கு என்னவாங்கி கொடுப்பேன் என மாமிகளிடம் சொன்னேன் . அம்மாவுக்கு கட்டில் என்றேன் . கட்டில்தான் உங்காத்துல இருக்கேடா என்றார்கள் . அதில் அப்பாவும் படுக்கிறாரே என்றேன் . ஒரே சிரிப்பு

________________________________

வகுப்பு நீண்டு கொண்டே இருந்தது. இரண்டாவது வகுப்பு , மத்யானம் நிழலைபோல இன்னும் சற்று நீண்டிருப்பது போல இருந்தது - தி.ஜா வர்ணனை , மலர் மஞ்சம் நாவலில்

________________________________

புத்தகம் ஒன்றை தலை முழுக நினைத்தேன்..வீட்டு வாசலில் தூக்கி எறிந்தேன். “ தம்பி, உங்க புக் வெளில கிடந்துச்சு “ பக்கத்து வீட்டு பெரியவர் கொண்டு வந்து கொடுத்தார். குப்பை தொட்டியில் போட்டேன் “ சார் , மறதியா புத்தகத்தை குப்பைல போட்டுட்டீங்க” கொண்டு வந்து கொடுத்தார் மா நகராட்சி ஊழியர் . பூங்காவில் விட்டு வந்தேன். அடுத்த நாள் பொறுப்பாக என்னிடம் சேர்க்கப்பட்டது. நண்பர் ஒருவருக்கு இரவல் கொடுத்தேன். அதன் பின் அந்த புத்தகத்தையோ நண்பரையோ கண்ணிலேயே பார்க்க முடியவில்லை

_______________________________________________

வேலையில் தோல்வி, காதலில் தோல்வி. தற்கொலைக்கு முயன்றான். அதிலும் தோல்வி

_______________________________________


A Day To Remember - நிர்மல்


ஐந்து வருடம் இணையம் வழியாக தொடர்பில் இருந்தும் நேற்றுதான் சந்திக்க முடிந்தது. வெகு எளிமையான தோற்றம், ஆனால் ஒரு பரபரப்பு கலந்த பேச்சும், பேசும் முன்னும் மற்றவர்கள் பேசும் பொழுதும் மிக உண்ணிப்பாக கவனிப்பும் சிந்தனையையும் கொண்ட நண்பர் பிச்சைக்காரன்.


சாருவின் வாசகர்களிடம் பழகுவதில் எனக்கு இதுவரை எந்த தடங்கலும் இருந்ததில்லை பார்த்தவுடன் அனேக நாட்க்கள் பழகியது போல நேசத்தோடு கலந்துகொள்ள் முடியும். இதன் முன்பும் இப்படியான அனுபவங்கள்தான். அதே உணர்வு பிச்சையை பார்க்கும் பொழுதும். அவரும் என்னை உடுருவி சோதிக்கவில்லை நானும் அப்படியே. இது நான் சாருவிடம் கண்ட ஒரு குணம். He never study you , he will realise you. அது அவரது வாசகர்கள் எல்லோரிடமும் இருப்பது அசர வைக்கும் உண்மை. நம்மை ஸ்டடி செய்வது உடனே தெரிந்துவிடும், அது இதுவரை சாரு வாசக வட்ட நன்பர்களிடம் ஏற்ப்பட்டதுடில்லை. ஆனந்தின் சந்திப்பிலும் அப்படியே. எந்த வித ஐஸ் ப்ரேகிங்கும் தேவையில்லை எடுத்தவுடன் டிஸ்கவரி புக் பேலஸ். புத்தகங்களை அறிமுகபடுத்தி கொண்டே இருந்தார் அதே சமையம் எனது வெளியை எடுத்துக்கொள்ளாது ஒரு பெர்பெக்ட் கான்வர்சேசன் ஆரம்பித்தது. இதுவே வாசக பண்பு என கருதுகிறேன்


டிஸ்கவரி புக் பேலஸ் வெடியப்ப்னை சந்தித்து உரையாடினோம். எதார்த்தமாக பேசினார், உற்ச்சாகமாகவும் கூட. அங்கு ஒரு தனி தமிழ் தேசிய இயக்க எழுத்தாளரை சந்தித்து உரையாடினோம். ஈழத்தை பற்றிய எனது மாற்று கருத்தை அவரோடு சிறிது பகிர்ந்து கொண்டேன். வெடியப்பனின் புதிய முயற்ச்சிக்களுக்கு பாராட்டை தெரிவித்துக்கொண்டு பிச்சையின் பைக்கில் சென்னையின் முரட்டுத்தனமான வாகன நெரிசலை சமாளித்து ஒரு அட்டகாசமான மதிய உணவை அளித்தார். அதை பற்றிய பதிவு தனியாக எழுத வேண்டியது. ராஜ சாப்பாடு.


அடுத்து ஸ்பென்சர் அங்கு லேண்ட் மார்க்கில் அற்ப்புத சூழல், ஆள்கள் மிக குறைவாக மிக அருமையான சூழலில் புத்தகங்களை மேய்ந்தோம், அங்கு எதிர்பாரா விதமாக இரு நபர்களை சந்தித்தோம் ஒருவர் இத்தாலியில் கிறுஸ்துவ பாதிரியாராக இருப்பவர் மற்றவர் ஒரு சட்டமன்ற உறுப்பினர். இரு ரும் வாசிக்கும் பழக்கம் உடையவர்கள் அவர்களிடம் மிக சிறப்பான உரையாடலை நடத்தினோம் . ஒரு உரையாடல் இனிமையாக அமைவதில் இரு தரப்பினருக்கும் சம பங்கு உண்டு அதை அங்கு கண்டு . நாங்கள் சந்தித்த இரு நபர்களும் அவர்களது துறையில் சிறந்தவர்கள், ஆனாலும் மிக மரியாதையாகவும்அதே சமையம் இனிமையாகவும் அர்த்தமுள்ளதாகவும் அமைந்தது அந்த சந்திப்புகள். முன்று வித்தியாசமான நபர்களின் சந்திப்பு, பிச்சையின் ஆழமான வாசிப்பு அனுபவங்களின் பகிர்வு மற்றும் சுவையான தேனிரோடு சந்திப்பு நிறைவு பெற்றது. சிலர் சொல்லுவர் பிரிவு சோகம் என, இன்னும் சிறிது நேரம் இருந்தால் நேரம் இருந்தால் நன்றாக இருக்குமென ஒரு புறம் நினைத்தாலும் பிரிவின் போது மிகவும் உற்ச்சாகமாக இருந்தது. ஏதோ சாதித்தது போல ஒரு கொண்டாட்ட மனநிலையோடு விடைபெற்றோம்.

________________________________________________________________

குழந்தை பருவத்தில் தந்தை ஹீரோ . இருபது முதல் ஐம்பது வரை வில்லன் . அவரை மீண்டும் ஹீரோவாக நினைக்க ஆரம்பிக்கிறோம் என்றால் நம்மை வில்லனாக கருதும் அடுத்ததலைமுறை வளர்ந்துவிட்டது என்று அறிக

___________________________________

உன் தந்தை என்னவாக இருந்தார் என்பதைவிட உன் மனதில் என்னவாக இருக்கிறார் என்பதே முக்கியம்

_______________________________________

எத்தனையோ மரணங்களை பார்த்தாலும் ஒவ்வொரு மரணமும் கண்ணீர் சிந்த வைப்பது போலவே உறவு முறிதலிலும் நிகழ்கிறது


________________________________________________


ஆரம்ப கால எழுத்துசித்தர்


ஃஃஃவிடலைகள்ஃஃஃ




துள்ளித் துவண்டு

தென்றல் கடக்க

விசில் அடித்தன
மூங்கில் மரங்கள்
-பாலகுமாரன்

_______________________________________________________


உன் பிரிவில் நிகழ்வது

துயரமல்ல

எதிர்பாராத

ஒரு வெளி





சற்று முன்

காலி செய்யப்பட்ட

ஒரு வீடு போல


-மனுஷ்ய புத்திரன்


__________________________________________

தமிழுக்கு விடியல் பதிப்பகம் அளித்த கொடை என மால்கம் எக்ஸ் வாழ்க்கை வரலாற்றை சொல்லலாம் .


உன் கொள்கைகளுக்காக உயிரையும் கொடுக்கும் மன உறுதி உன்னிடம் இல்லையா? அப்படி என்றால் உன் அகராதியில் விடுதலை என்ற சொல்லை எடுத்து விடு ‪#‎மால்கம்எக்ஸ்‬




சில நேரங்களில் துப்பாக்கியை மவுனவிக்க செய்வதற்காக துப்பாக்கியை எடுக்க வேண்டியிருக்கிறது#மால்கம்எக்ஸ்


அடிமைத்தளையில் இருந்து விடுபட ஒரே வழி , உலகெங்கும் இருக்கும் ஒடுக்கப்பட்டவர்களுடன் நம்மை அடையாளப்படுத்திக்கொள்வதே#மால்கம்எக்ஸ்


சோகம் அழுகையை உருவாக்குகிறது . கோபம் மாற்றத்தை உருவாக்குகிறது ‪#‎மால்கம்எக்ஸ்‬




சுதந்திரம் , சமத்துவம் , சமநீதியை உனக்கு எந்த நாயும் கொடுக்காது . மனிதனாக இருப்பின் நீயேதான் அவற்றை எடுத்து கொள்ள வேண்டும் - மால்கம் எக்ஸ்

உன் மேல் ஒருவன் கை வைத்தால் , இனி யார் மேலும் அவன் கைவைக்க முடியாதபடி செய்வது உன் கடமை ‪#‎மால்கம்எக்ஸ்‬ராக்ஸ்


அன்பானவனாக , அக்கறையுள்ளவனாக , சட்டத்தை மதிப்பவனாக இரு . ஆனால் உன் இனத்தின்மேல் கைவைப்பவனை கல்லறைக்கு அனுப்ப தயங்காதே -மால்கம் எக்ஸ்

____________________________________

மதியம் நன்றாக ஃபுல் மீல்ஸ் சாப்பிட்டதும் லேசாக தூக்கம் வருவது போல இருக்கும். அதை இயல்பு என நினைக்கிறோம்.. ஆனால் இயற்கை உணவை உட்கொண்டால் இப்படி தூக்கம் வருவதில்லை. மாறாக சாப்பிட்டு முடித்ததுமே எனர்ஜடிக்காக ஃபீல் செய்ய முடிகிறது

________________________________________

அசோகமித்திரனின் சார் சார் சிறுகதையை படிக்க ஒரு நிமிடம்கூட ஆகவில்லை . மறக்க எவ்வளவு நேரம் ஆகும் என தெரியவில்லை . இனிய காலை

___________________________________________

நாட்டில் இருக்கும் முக்கியமானவர்கள் அனைவருக்கும் எங்கள் பத்திரிக்கை போகிறது என்றேன்

என்ன சர்குலேஷன்

சொன்னேன்

நாட்டில் முக்கியமானவர்கள் எண்ணிக்கை சிறுது குறைவாத்தான் இருந்தது

‪#‎அசோகமித்திரன்‬ ராக்ஸ்

____________________________________________


உன் பேரு என்னய்யா ?

அடைக்கல சாமி

கடன அடைச்சுட்டியா ?

அடைக்கல சாமி


உன் பேரு என்னய்யா ?

மாட சாமி

என்னய்யா தேடிக்கிட்டி இருக்க ?

மாட சாமி


_________________________________________


ஜின்னா பிரிவினையை ஒருபோதும் விரும்பவில்லை -ஆயிஷா ஜலால் , சதத் ஹசன் மண்டோவின் பேத்தி

______________________________________________




ஓர் உலோகத்தை இன்னொரு உலோகத்துடன் இணைப்பது கஷ்டம் . ஆனால் நம் ஆட்கள் மரத்தையும் இரும்பையுமேகூட வலுவாக இணைக்க வல்லவர்கள் . சாதாரணமாக தீ மூட்டி சூடாக்கி பின் குளிரச்செய்வதால் ஏற்படும் விரிதல் சுருங்கல் எஃபக்ட்டை சாமர்த்தியமாக பயன்படுத்தும் கிராமத்து விஞ்ஞானிகள் ஆச்சர்யத்துக்கு உரியவர்கள் .ஹீட் ட்ரீட்மெண்ட் , வார்ப்பு , கோட்டிங் என தொழில் நுட்ப மற்றும் கணித அறிவில் தமிழன் ஒரு காலத்தில் கலக்கியிருக்கிறான்

_____________________________________________________________________


எம் ஜி ஆர் அரசனின் ஆணையை மீறுவதாக காட்சி . வாலி பாடல் எழுதினார் . ஆண்டவன் கட்டளைக்கு முன் , உன் அரச கட்டளை என்னாகும் ? பாடலை கேட்டு எம்ஜிஆர் வாலியை கோபமாக கூப்பிட்டனுப்பினார் . காரணம் ? ஆண்டவன் கட்டளை சிவாஜி படம் , அரச கட்டளை எம்ஜிஆர் படம் அதன் பின் நடந்ததை வாலி புத்தகம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்


****************************


எம் ஜி ஆருக்கு வாலி ஒரு பாடல் எழுதினார்...


நான் அரசன் என்றால் , என் ஆட்சி என்றால் இங்கு ஏழைகள் வேதனைப்பட மாட்டார்.


கேட்ட எம் ஜி ஆரே திகைத்து விட்டாராம்... அப்போது அவர் நடிகர் மட்டுமே... கடைசியில் நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் என மாற்றினார்களாம்


********************************


குரங்கின் வாலில்

தீ வைத்தானே..

அது எரித்தது

அவன் தீவைத்தானே


வாலி வாலி வாலி.....


*****************************************


நிஜம் சொன்னால் ரஜினியைவிட நீயொரு வசீகரமான ஃபிகர். நாவினிக்க உன்னைப் பாடியே என் உடம்பில் ஏறிப்போனது ஷுகர்

-கருணாநிதி பற்றி வாலி


அன்று உயர்ந்த மனிதனாக சிவாஜி...இன்று சிவாஜியாக உயர்ந்த மனிதன் - ரஜினி குறித்து வாலி


*******************************


காலையில் தினமும்

கண் விழித்தால் நான்

கைதொழும் தெய்வம் அம்மா!’

- ‘நியூ’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை யில் நான் எழுதிய பாட்டு. ஒலிப்பதிவு எல்லாம் முடிந்துவிட்ட நிலையில் -

“வாலி சார்! எங்க மதத்துல, தெய்வத்தையும் தாயையும் ஒண்ணா சொல்லக் கூடாதும்பாங்க… ‘தெய்வம்’கிற வார்த்தைக்குப் பதிலா ஏதாவது சொல்லுங்க சார்!” என்று ரஹ்மானிடமிருந்து ஃபோன் வந்தது.
“ய்யோவ்! என்னய்யா நீ… இதெல்லாம் ஒரு தவறா எடுத்துண்டு… சரி… சரி… தெய்வம்கிறதுக்குப் பதிலா ‘தேவதை’ன்னு வெச்சுக்கோ!” என்று மாற்றிக் கொடுத்தேன்.- வாலி


************************


எம் ஜி ஆர் உடல் நலமின்றி இருந்தபோது , வாலி ஒளிவிளக்கு படத்தில் எழுதிய ஒரு பாடலைத்தான் பலரும் ஒலிக்கச்செய்து பிரார்த்தித்து வந்தனர்... அந்த பாடல்


இறைவா உன் மாளிகையில்

எத்தனையோ மணி விளக்கு

தலைவா உன் காலடியில்
என் நம்பிக்கையின் ஒளி விளக்கு


அதன் பின் எம் ஜி ஆர் குணமானார்.. ஜானகி அம்மையார் இந்த பாடலால்தான் எம் ஜி ஆர் பிழைத்தார் என சற்று உணர்ச்சிவசப்பட்டு உயர்வு நவிற்சியாக சொன்னாராம்..


அதற்கு வலி சொன்னாராம் , “ அம்மா..இது வாலி பாக்கியம் அல்ல...உங்கள் தாலி பாக்கியம் “










__________________________________________________

Tuesday, November 18, 2014

இளையராஜாவின் அற்புத கவிதைகள் சில- கலவை பதிவு

பயங்கரமான குளிர் ..குளிர் தாங்க முடியாமல் ஒரு குருவி பறக்க முடியாமல் தரையில் கிடந்தது,,..குளிரில் நடுங்கி கொண்டு இருந்தது,,, இந்த சோதனை போதாது என்று, அந்த பக்கமாக வந்த ஒரு மாடு அதன் மேல் சாணி போட்டு சென்று விட்டது... குருவிக்கு மூச்சு முட்டியது.. ஆனாலும் கொஞ்ச நேரத்தில் சாணியின் இளம் சூடு குளிருக்கு இதமாக இருக்கவே , சந்தோஷமாக பாட்டு பாட ஆரம்பித்தது,,,ஆனாலும் மூச்சு விட முடியாமல் கஷ்டப்பட்டது... யாராவது காப்பாற்ற மாட்டார்களா என தவித்தது.. பாட்டு சத்தம் கேட்டு அந்த பக்கம் வந்த பூனை , குருவியை சாணியில் இருந்து விடுவித்தது.. குருவி நிம்மதி பெருமூச்சு விட்டு முடிப்பதற்குள் குருவியை சாப்பிட்டு விட்டு நடையை கட்டியது பூனை.


நீதி

1. உன் மேல் சாணி அடிப்பதன் மூலம் சிலர் உனக்கு மறைமுகமாக நன்மை செய்து விடுகிறார்கள்.

2. உனஓர் இயக்குனர் ஒரு சிறந்த திரைக்கதையை வைத்து ஒரு சிறந்த திரைப்படத்தை உருவாக்கமுடியும் . அல்லது சிறந்த திரைக்கதையை வைத்து மோசமான படத்தையும் உருவாக்க கூடும் . ஆனால் ஒரு மோசமான திரைக்கதையை வைத்து , ஒரு சிறந்த படத்தை உருவாக்க வாய்ப்பே இல்லை . முடியவே முடியாது - syd fieldக்கு உதவுபவர்கள் எல்லோரும் , நல்லெண்ணத்தில் உதவுகிறார்கள் என சொல்லி விட முடியாது.

3. அதிர்ஷ்டம் ஏற்பட்டால் அதை வாயை மூடிக்கொண்டுஅனுபவி..தேவை இல்லாமல் வாயை திறக்காதே

-------------------------------------------------------------------


பசித்தவன் முன்பு
வெந்த முட்டை உடையும் சத்தம்
மிகக்கொடிது - ழாக் ப்ரெவர்

-----------------------------------------------------------------


ஒரு புத்தக கடையில் அபூர்வமான புத்தகம் ஒன்றை எடுத்து பில் போட கொடுத்தேன் . ஐம்பது ரூபாய் இருக்கும் என நினைத்தால் , பில் தொகை இரண்டு ரூபாய் மட்டுமே . ஆச்சர்யமாக வருடத்தை பார்த்தேன் . 1970ல் பிரசுரமான அந்த புத்தகத்தின் கடைசி பிரதி எனக்காக காத்திருந்து இருந்திருக்கிறது

-------------------------------------------------------------------


”எம் ஜி ஆர் ஆட்சியில் இருந்த சமயம் அறக்கட்டளை மூலம் பல நல்ல காரியங்கள் செய்வதற்கு நிதியுதவிகள் பெறவேண்டிய நல்ல எண்ணத்தில், கொல்லூர் மூகாம்பிகை பக்தராய் எம் ஜி ஆர் அவர்கள் இருந்ததைப் பெருந்தன்மையுடன் பெரிதுபடுத்தாமல், வீரியமல்ல காரியமே முக்கியம் என எம்ஜிஆருடன் அன்னியோன்னியமாக இருந்தவர் திரு. வீரமணி அய்யா அவர்கள். ” - ஓர் அறிவு ஜீவி

ஆமாம்... புரட்சித்தலைவி ஆட்சியின்போது அவர் மீதான ஊழல் புகார்களை பெருந்தன்மையுடன் பெரிதுபடுத்தாமல், வீரியமல்ல காரியமே முக்கியம் என புரட்சிதலைவி ஆட்சியுடன் அன்னியோன்னியமாக இருந்தவர் திரு. வீரமணி அய்யா அவர்கள்


அதன் பின் கலைஞர் ஆட்சிக்கு வந்ததும் அவர் தவறுகளை பெருந்தன்மையுடன் பெரிதுபடுத்தாமல், வீரியமல்ல காரியமே முக்கியம் என கலைஞருடன் அன்னியோன்னியமாக இருந்தவர் திரு. வீரமணி அய்யா அவர்கள்

மீண்டும் புரட்சித்தலைவி ஆட்சி அமைந்ததும் அவர் மீதான ஊழல் புகார்களை பெருந்தன்மையுடன் பெரிதுபடுத்தாமல், வீரியமல்ல காரியமே முக்கியம் என புரட்சிதலைவி ஆட்சியுடன் அன்னியோன்னியமாக இருந்தவர் திரு. வீரமணி அய்யா அவர்கள்
-------------------------------------------------------------------------------------------

இதெல்லாம் தமிழ் வார்த்தைகள் கிடையாது என அவ்வப்போது சிலர் ஷாக் கொடுப்பார்கள் . எந்த மொழியிலும் புதிது புதிதாக வார்த்தைகள் சேர்வது இயல்புதானே . 1910க்கு பிறகு புதிதாக சேர்ந்தவை தமிழ் அல்ல என்பது போல காலக்கெடு ஏதும் இல்லை


------------------------------------------------------

அலுவலகத்திலும் வேலை இல்லாமல் வேறு வேலைகளும் இல்லாமல் எதையும் அவதானிக்கும் நேரமும் இல்லாதவர்கள்தான் அவதானிப்பு என கற்பனை ஸ்டேட்டஸ் போடுகிறார்கள் ‪#‎அவதானிப்பு‬


------------------------------------------------------------

அண்ணா என்ற மூன்றெழுத்தை , 
காதலுக்கு முற்றுப்புள்ளியாக , 
சில நேரம் காதலுக்கு ஆரம்ப புள்ளியாக ,
பயன்படுத்தும் வித்தையை எங்கிருந்து கற்றாய் ! ! ‪#‎பிங்கூ‬


---------------------

விபத்தை ஆர்வமாக பார்ப்பதன் உளவியல் என்ன ? நல்லவேளை , நமக்கு இது நிகழவில்லை என்ற சாடிஸ்ட்டிக் மகிழ்ச்சியா ?
-----------------------------------------------------
ஊரில் திருட்டு பயம் அதிகம்... பைக்கை லாக் செய்து விட்டீர்களா என ஒன்றுக்கு இரண்டு முறை செக் செய்து கொள்ளுங்கள் என ஒருவரிடம் சொன்னேன்.. லாக் செய்யாததுதான் திருடர்களை உருவாக்குகிறது என நான் சொல்வதாக அரை மணி நேரம் குமுறி விட்டு போனார்... நம் ஊர் அறிவு ஜீவிகளுக்கு போட்டியாக இன்னொருவர்

------------------------------------------


மிடில் சாங்க் என்று எந்த பாடல்களை சொல்கிறீர்கள் என சொல்லுங்கள். நீங்கள் யார் என சொல்கிறேன்


பழைய பாடல் பிடிக்கும் என்றால் வயதானவன் என நினைப்பார்கள் என அஞ்சுபவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட வார்த்தைதான் மிடில் சாங்க் ‪#‎அவதானிப்பு‬


என் தாத்தாவை மகிழ்விக்க பழைய பாடல்கள் வாங்கி கொடுத்தேன் . பு.யூ. சின்னப்பா தியாகராஜபாகவதர் போன்ற பாடல்கள் அவருக்கு ருசிக்கவில்லை . பழைய பாடல் வேண்டாம் . எம்ஜிஆர் சிவாஜி போன்ற இடைக்கால பாட்டு வாங்கிட்டு வா என்றார்#மிடில்சாங்க்



மிடில் சாங்க் ரசிகர்களை அந்த காலத்தில் இருந்து பார்த்து வருகிறேன் . ரகுமான் பாடல்களை மிடில் சாங்க்கில் சேர்த்து விட்டார்கள் என்பது அதிர்ச்சியளித்தது

-------------------------------------------------

பிளாட்பாரங்களில் வைத்து புத்த கடையை சுற்றி சில நேரங்களில் பயங்கர கூட்டமாக இருக்கும். நமக்கு அந்த கடைக்கு போக மனம் வராது. இத்தனை பேர் இருக்கிறார்கள். நல்ல புத்தகங்களை காலையில் இருந்து செலக்ட் செய்து எடுத்து போய் இருப்பார்கள். பல்ப் புத்தகங்கள்தான் இருக்கும் என நினைப்போம். சரி, எதற்கும் போய் பார்க்கலாமே என போனால்....ம்ம்ம்ம்ம்..... கிடைக்கவே கிடைக்காத அச்சில் இல்லாத அரிய பொக்கிஷம் ஒன்று நம்மை பார்த்து கண்ணடிக்கும்.. நம்மால் நம் கண்களையே நம்ப முடியாது..எப்படி இதை விட்டு வைத்தார்கள் என புரியவே புரியாது... புத்தகம்தான் வாசகனை தேர்ந்தெடுக்கிறதா
---------------------------------------------------------------
பழைய புத்தக கடையில் ஓர் அரிய புத்தகம் வாங்கினேன் . அதில் ஒரு பெயரும் 1980 என அதை வாங்கிய ஆண்டும் இருந்தது . அதை படித்தேன் .ஆங்காங்கு சில பக்கங்கள் ஒட்டியது பிரிக்கப்படாமல் இருந்தன் . முப்பது ஆண்டுகள் அந்த புத்தகம் திறக்கவே படாமல் இருந்திருக்கிறது என்பது ஆச்சர்யமாக இருந்தது

Mrinzo Nirmal சில பக்கங்கள் வாசிப்பதற்க்காக காத்திகிடக்கின்றன், மொட்டுக்கள் சூரியனினுக்காக காத்திருப்பதுஇ போல. வார்த்தைகள் வாசிப்பவனை தேர்ந்தெடுக்கத்தான் செய்கிறது. வாசகன் வார்த்தைகளை தேர்ந்தடுக்கிறானா, இல்லை வார்த்தைகளா? இப்படி வந்துகினே இருக்கு இந்த சூச்வேஷன்.

--------------------------------------------------------------------------------

அலுவலகங்கில் சில பிரச்சினைகளை தீர்க்க பல மீட்டிங்குகள் தேவைப்படும் . அந்த அளவுக்கு அவை சிக்கலான பிரச்சினைகள் . ஆனால் காலப்போக்கில் அந்த பிரச்சனைகளை விட மீட்டிங்குகள் அதிக சிக்கலாகி விடுவதும் உண்டு
-------------------------------------------
ஓர் இயக்குனர் ஒரு சிறந்த திரைக்கதையை வைத்து ஒரு சிறந்த திரைப்படத்தை உருவாக்கமுடியும் . அல்லது சிறந்த திரைக்கதையை வைத்து மோசமான படத்தையும் உருவாக்க கூடும் . ஆனால் ஒரு மோசமான திரைக்கதையை வைத்து , ஒரு சிறந்த படத்தை உருவாக்க வாய்ப்பே இல்லை . முடியவே முடியாது - syd field

-----------------------------------------------
எல்லோரும் எல்லாமும் எப்படி எப்படி இருக்கிறதோ , அப்படியே காட்சி தருவதுதான் சினிமாக் கலையின் அடிப்படையும் சாத்தியப்பாடும் ஆகும் - பேல பெலாஸ்
-------------------------------------------------
ஒரு நிமிடம் எவ்வளவு நீளமானது என்பது டாய்லெட் கதவின் எந்தப் பக்கத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை பொருத்தது, உள்ளேயா வெளியேயா ‪#‎தியரி‬ ஆஃப் ரிலேட்டிவிட்டி
-----------------------------------------------------------
வெயில் கொளுத்தும் காலங்களில் மா நகராட்சி நூலகங்களில் கூட்டமே இருப்பதில்லை.
மழை அடித்து கொட்டும் காலங்களிலும் கூட்டமே இருப்பதில்லை.
ஆனால் மழை கொட்டும்போது , அருகில் டீக்கடைகள் இல்லாத பட்சத்தில், நூலகங்களில் கூட்டம் குவிகிறது ‪#‎அவதானிப்பு‬
-----------------------------------------------------
ஒரு படத்தை ஓட விடாமல் தடுக்க அந்த பட கதாநாயகனின் எதிரிகள் முயல்வது இயல்பு . ஆனால் எம் ஜி ஆர் தான் கதாநாயகனாக நடித்த ஒரு படத்தை ஓட விடாமல் தன் ரசிகர் மன்றம் மூலம் தடுக்க முயன்ற வினோதம் நடந்தது உங்களுக்கு தெரியுமா ? 
--------------------------------------------
கங்கை அமரன் முதன்முதலாக வாலி வீட்டுக்கு சென்றார்
க .         : சார் , என் இயற்பெயர் அமர்சிங்
வாலி :  முதலில் அமர் (sit ) சிங் . பேசலாம்
------------------------------------------------
ஒவ்வொரு கலையும் விசேஷ குணத்தை பெற்றுள்ளது. சங்கீதம் அரூபத்தை கிளர்ந்தெழ வைக்கிறது. இலக்கியம் புரிய வைக்கிறது. நாடகம் உய்த்துணர வைக்கிறது. சினிமா சலன உலகின் மெய்மையை காட்டுகிறது ‪#‎அம்ஷன்‬ குமார்
----------------------------
திரைப்படத்தில் மரணத்தை காட்டுவது கடினம் . காரணம் அங்கே சாவின் தடயங்கள் இருக்கின்றனவா என்பதை ரசிகர்கள் கவனிப்பார்கள் - சத்யஜித் ராய்... ஒரு மரணத்தை காட்ட எப்படியெல்லாம் யோசித்து காட்சி வைக்க வேண்டி இருந்தது என்பதை விளக்க இபப்டி சொல்கிறார்.
----------------------------------------
சினிமா மொழி , மொழிபெயர்க்க முடியாத ஒன்று. அது மனித குலத்துக்கே பொதுவானது.அதுதான் சினிமாவின் சக்தியும் கூட. இந்த விழுப்புணர்வு ஏற்படாதவரை சினிமாவை புலன் அளவில் மட்டுமே அணுகுவோம் ‪#‎தியடோர்பாஸ்கரன்‬
-----------------------------------------
நாங்கள் எடுப்பது மாற்று சினிமா இல்லை. நாங்கள்தான் உண்மையான சினிமா எடுக்கிறோம்.. கமர்ஷியல் குப்பைகள் எடுப்பவர்கள் மாற்று சினிமா எடுக்கிறார்கள்- லெனின்
----------------------------------------------

ஒருவர் சுதந்திர தின கொண்டாட்டம் ,கேவலமானது என்றார். இன்னொருவர் புனிதமானது என்றார். கடைசியில் இருவரும் ஒன்றாக அமர்ந்து டீவியில் சுறா படம் பார்த்தனர் .
------------------------------------------------------------------
இஞ்சினியரிங் டிப்ஸ் .
எந்த ஸ்டேஜிலும் தரம் சார்ந்த பிரச்னை வராமல் , தவறுகள் ஏதேனும் கண்டிபிடிக்கப்படாமல் பாஸ் ஆகிக் கொண்டே சென்றால் கண்ணுக்கு தெரியாத தவறு கடைசி நேரத்தில் பிடிபட்டு ஆப்படிக்கப் போகிறது என்று அர்த்தம்
இஞ்சினிரியங் டிப்ஸ்
நீங்கள் வடிவமைக்கும் இயந்திரத்துக்கு உத்தரவாதம் 12 மாதங்கள் என்றால் , அது சரியாக 13 ஆம் மாதத்தில் தன்னைத்தானே அழித்துக்கொள்ளுமாறு வடிவமைத்தால் , பொலிவான பொறியியல் வாழ்க்கை அமையும்
எஞ்சினிரியங் டிப்ஸ் .ஒன்று , அந்த இயந்திரத்தை மேனேஜ் செய்ய நம்மால் முடியாது என்பதை புரிந்து கொள்ள கற்றுகொள்ளுங்கள் . அல்லது அந்த இயந்தரம் குறித்து நமக்கு ஒன்றும் புரியவில்லை என்பது யாருக்கும் தெரியாமல் மேனேஜ் செய்ய கற்று கொள்ளுங்கள் . உங்கள் இஞ்சினிரிங் பயணம் இனிமையாக இருக்கும்
------------------------------------------------------------------
மனிதப் பிறவியில் 
உன்னை முதன்முதல்
கண்டு கொண்டவன் யார்?
இறைவன் என உனக்கு
முதன்முதல் பெயரிட்டவன் யார் 
‪#‎இளையராஜா‬
***************
நம் தவறுகள் நம் குருவாக முடியும்
ஆனால் நம் குரு ஒருபோதும் தவறாக முடியாது
*******************
கோயில் கொண்ட குரு நாதா
வெளியே இருக்கும் எனக்கு நீ காவல்
உள்ளே இருக்கும் உனக்கு
வெளியே இருக்கும் நான் காவல்
**********************
வணக்கத்துடன் குருவை தேடினேன் . 
வணக்கமே குருவாக வந்தது .
**************************
கொடுப்பதல்ல தனித்ததல்ல
எடுக்க எடுக்க தீர்வதல்ல
கண்டு கொண்டேன்
தடுப்பதல்ல 
தனித்ததல்ல
அடுத்து அடுத்து உள்ளத்து உறைவது
உணர்ந்து கொண்டேன்
***************
நாட்டத்தால்
நாட்டம் அறு ‪#‎இளையராஜா‬
***************
நீ வேண்டுவது கெட்டவையாக இருந்தாலும்
அதை உனக்கு தருபவனே இறைவன் !
இல்லையெனில் அதனால் வரும்
துன்பத்தையும் துன்பம் தரும் 
நல்ல பாடத்தையும் 
நீ உணராமலேயே போய் விடக்கூடும்!
‪#‎இளையராஜா‬
************************
எப்படியோ பிறந்தாய்..
எப்படியும் இறப்பாய், 
வீணாகாதே‪#‎இளையராஜா‬ பாறைகள்
*********************
• எண்ணமே தீயதெனில்,
எண்ண என்ன உள்ளது?
• பிறப்பே கொடியதெனில்
தெய்வமாய்ப் பிறப்பதிலும்
என்ன பயனுள்ளது?
• சித்திரம் எழுதிய சுவரைவிட
சித்திரம் எழுதா சுவரை
பத்திரமாய் பார்த்து வா
‪#‎இளையராஜா‬ பாறைகள்
*******************
விரிவதெல்லாம் 
வானும் இல்லை. 
கற்பிப்பதெல்லாம் 
கல்வியும் இல்லை ‪#‎இளையராஜா‬
*******************
பாட்டெழுதி 
பொருள் தேடும் கவிஞனே !
நீ எழுதும் பாட்டிலும்
பொருளைத்தான் 
தேடுகிறார்கள் ‪#‎இளையராஜா‬
******************
சொல்லிலெல்லாம் சொல்லி வைத்தும்
சொல்லிடாத பொருளின்மீது
இச்சை கொண்டேன்
சொல்லும் பொருளும் சுமைகள் என்று
சொல்லிவைத்தது உணர்ந்துஇன்று
இச்சை விட்டேன்
‪#‎இளையராஜா‬
****************************
நடந்து போகையில் , 
நிற்க நினைத்தால் உடல் நிற்கிறது,
 மனம் நிற்குமோ? 
மனதை நிறுத்த மனதை விடு#இளையராஜா
******************
புத்தகம் திறந்து கிடக்கிறது 
எழுதப்படா வெற்றுத்தாள்கள் #இளையராஜா
***********************
அலையோ? குமிழோ?
 நுரையோ? துளியோ? 
கடல் கடலே‪#‎இளையராஜா‬
________________________________________________________________________
சிலரால் என்னதான் முயன்றும் புத்திசாலித்தனமாக பேச முடியாது..அது போல சிலரால் விளையாட்டுக்குக்கூட பயனற்ற பேச்சு பேச முடியாது..தியடோர் பாஸ்கரன் அவர்களின் புத்தகம் ஒன்றை படித்து கொண்டு இருக்கிறேன். பயனற்ற வரி ஒன்று கூட இல்லை...எத்தனை தகவல்கள், எத்தனை விளக்கங்கள்... அவர் பாதம் தொட்டு வணங்குகிறேன்
_________________________________________
1931 வாக்கில் சினிமா மொழி வளரும் சாதகான நிலை தோன்றியது. ஆனால் திரைமொழி முதிர்ச்சி அடையும் முன்பே ஒலி வந்து விட்டதால், ஒலிக்கு தேவைக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தனர். புதிதாக கிடைத்த பொம்மையை வைத்து ஓயாமல் விளையாடும் குழந்தை போல இந்த தொழில் நுட்ப வளர்ச்சியை பயன்படுத்த ஆரம்பித்ததால் , தமிழ் சினிமாவில் திரை மொழி வளராமலேயே போய் விட்டது - தியடோர் பாஸ்கரன்
_____________________________________
முதல் உலகப்போருக்கு முன் , அமெரிக்க படங்களுடன், பிரஞ்சு , டேனிஷ் , ஜெர்மன் படங்களும் சென்னையில் திரையிடப்பட்டன, இந்த நிலை நீடித்து இருந்தால் , நம் சினிமாவும் நம் ரசனையும் வேகமாக வளர்ந்திருக்கும். ஆனால் போருக்கு பின் , நம்மை பொருத்தவரை சினிமா என்றால் அமெரிக்க சினிமா என்றாகி விட்டது. - தியடோர் பாஸ்கரன்
____________________________________________
அந்த காலத்தில் , அபூர்வ சந்திப்பு என்ற தலைப்பில் , வெவ்வேறு துறைகளை சேர்ந்த இரு பிரபலங்களை சந்தித்து உரையாடவைத்து , குமுதத்தில் வெளியிட்டு வந்தார்கள் . அந்தவகையில் அப்போது நடிகராக இருந்த ஜெயலலிதா மற்றும் தமிழறிஞர் கிவாஜாவை சந்திக்க வைத்தார்கள் . உன் படம் எதுவும் நான் பார்த்ததில்லைமா என்றாராம் கிவாஜா . ஜெ அலட்டிக்கொள்ளாமல் சொன்னாராம் , நானும் உங்க புக்ஸ் எதுவும் படிச்சதில்லை .
அந்த பொண்ணு ஒரு தமிழறிஞரிடம் இப்படி பேசிச்சிருச்சே என கண்ணதாசன் இன்னொரு உரையாடலில் அங்கலாய்த்ததை படித்து சிரித்து கொண்டேன் . அம்மா அன்றே அப்படி .
__________________________________
காட்சிப் படிமங்கள் மூலம் சொல்ல வேண்டியதை வார்த்தைகள் மூலம் சொல்ல முயன்றால் அங்கே சினிமா சீரழ்கிறது- ஹிட்ச்காக் ( தியோடர் பாஸ்கரன் நூல் ஒன்றில் இருந்து )
__________________________________
உள்ளே நீலவண்ண பிந்து பிரபஞ்ச நுண் தளத்தில் ஆழ்ந்த காளா பூவின் ஆரும்புகளில் உதிர்வுகொள்ளும். நகிலம் ஒளிப்பளிங்கில் ஆறு அடுக்கிய வெற்றிடத்தில் வெற்றிடமே பூத்த சூன்ய இதழ்தான் நீலம்
மேற்கண்ட வரிகளை தமிழில் மொழிபெயர்ப்பவர்களுக்கு இந்த வரிகள் இடம்பெற்ற புத்தகம் , பரிசாக தள்ளிவிடப்படும்
______________________________
ராங் நம்பரை தவறுவதாக அழைக்கும் போது பிசி டோன் கேட்டிருக்கவே மாட்டோம் ‪#‎விந்தைஉண்மைகள்‬
________________________________
முடிந்தவன் சாதிக்கிறான். முடியாதவன் போதிக்கிறான்...அதுவும் முடியாதவன் விமர்சகன் ஆகிறான்
_________________________________________
காலத்தை மனதால் புரிந்து கொள்ளமுடியவில்லை . நேற்று நண்பர் ஒருவரிடம் இரண்டு மணி நேரம் பேசினேன் . ஒருத்தி படம் பார்க்க இரண்டு மணி நேரம் பயணப்பட்டேன் . இரண்டு மணி நேரம் படம் பார்த்தேன் . அனைத்தையும் எஞ்சாயினேன் .ஆனால் இந்த ஒவ்வொரு இரண்டுமணி நேரமும் ஒவ்வொரு விதமாக மனதில் பதிவாகியிருக்கிறது . எல்லாமே ஒரே அளவிலானா இரண்டு மணி நேரம் என்பதை மனம் புரிந்து கொள்ள மறுக்கிறது
_____________________________________________
நேற்று பைக்கில் போய் கொண்டிருந்தபோது போன் அடிக்கவே எடுத்து பேசினேன் . ஓவர்டேக் செய்து , வேண்டுமென்றே அருகில் வந்த அய்ம்பது வயது நபர் என்னவோ கத்தினார் . அட்வைஸா என எரிச்சலாக ஸ்பீட் எடுத்தேன் . விடாப்பிடியாக பக்கத்திலேயே வந்து சார் உங்க பாக்கெட்டில் இருந்து கேஷ் விழுந்த மாதிரி இருந்துச்சு , கவனிங்க என சொல்லி விட்டு போய் விட்டார் . எதிர்பார்ப்பில்லாமல் சக மனிதர் மேல் காட்டும் அக்கறைதான் மனிதனுக்கே உரிய தனி அடையாளம் போல
_______________________________________________
மின்னாமல் முழங்காமல் வருகின்ற மழை போல , சொல்லாமல் கொள்ளாமல் வந்தது ஏன் சிலையே . . கண்மூடும் வேளையிலும் என தொடங்கும் பாடலில் மேற்கண்ட வரிகளில் ல ள ழ என துல்லியமாக பாடி இருப்பார் சுசீலா . இப்போதைய பாடகர்களுக்கு எல்லாம் ல மட்டுமே
_________________________________________
எந்த கேள்விக்கும் பதில் சொல்லத்தயார்- ராகுல் ஆவேசம்..
இதோ கேள்விகள்...
தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார்?
பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை என்றால் என்ன ??
_______________________________________
சில மாதங்கள் முன்பு வழக்கம்போல வெட்டியாக சாலையில் நடந்து கொண்டு இருந்தேன். யாரோ ஒரு பெண் , மஞ்சள் ஆடை அணிந்து குங்குமம் எல்லாம் பெரிதாக வைத்து , கையில் ஒரு தட்டுடன் என்னை அணுகினார் “ குழந்தைக்கு அம்மை போட்டு இருக்கு... மடிப்பிச்சை வாங்கி காணிக்கை கொடுக்கணும், ஏதாச்சும் கொடுங்க” என்றார். சும்மா பிச்சை கேட்டால் கொடுப்ப்போமே..ஏன் சாமி பெயரைசொல்லி கேட்கிறார்கள் என்ற எரிச்சலில் காசு எல்லாம் இல்லை என எரிச்சலுடன் சொன்னேன். அவர் முகத்தில் அதிர்ச்சி. அப்படி சொல்லக்கூடாது. சாமி காரியம்என தயங்கி தயங்கி கேட்டார்..அதுதான் இல்லைனு சொல்றேன்ல என கோபமாக சொல்லி விட்டு போய் விட்டேன்.
கொஞ்ச நாள் கழித்துதான் அவர் பக்கத்தில் தெருவில் குடி இருப்பவர் என்றும் , நல்ல நிலையில் இருப்பவர் என்றும், உண்மையிலேயே குழந்தைக்காக , ஒரு ஃபார்மாலிட்டிக்கிற்காக மடிப்பிச்சை வாங்கினார் என்றும் தெரிய வந்தது. அவருக்கு என்னை ஏற்கனவே தெரிந்து இருக்க கூடும், அதனால் என்னிடம் கேட்டு இருக்கிறார். அவரைப்போய் அவமானப்படுத்தி விட்டோமே என இன்றும் வருத்தமாகவே இருக்கிறது.
அதன் பின் வேறு ஏரியாவுக்கு மாறிவிட்டேன். இன்று அதே போல ஒரு பெண் கேட்டார். எதையும் யோசிக்காமல் சட் என ஒரு நோட்டை பாக்கெட்டில் இருந்து எடுத்து கொடுத்தேன். அவர் யார் என்பது தெரியவில்லை.
வரும் காலத்தில் அவர் ஒரு ஃபிராடு, ஏமாற்றி காசு வாங்கி இருக்கிறார் என தெரியவந்தால் , எனக்கு நிம்மதியாக இருக்கும். முன்பு செய்த தவறுக்கு ஜஸ்டிஸ் வழங்கப்பட்டு விட்டதாக நினைத்து ஆறுதல் அடைந்து கொள்வேன்
____________________________________
இரண்டு பிச்சைக்காரர்கள் , ஒரு குரங்கு , ஒரு மாங்காய்தலை விநோத உயிரி , இதை வைத்து செம சிறுகதை படைத்திருக்கிறார் ந.பிச்சைமூர்த்தி
____________________________
_
பேசும் மணி வார்த்தை தமிழ்ச் சுவையோ
புதிர் போடும் விழி ஜாடை விடுகதையோ
நெஞ்சில் ஆசை அலை பாயும் புதுப்புனலோ
ஒரு ஆடை சுமந்தாடும் மதுக்குடமோ
பஞ்சணையில் கை அணைக்க
பையப் பைய மெய் அணைக்க
தாவி தாவி வரும் கலைமானோ#வாலி
_________________________________________________
மது விடுதியின் மரக்கிளையிலிருந்து
சின்னஞ்சிறு இலை
மதுக்கோப்பையினுள் விழுகிறது .
மதுவோடு 
இலையை குடிப்பவன்
பிறகு
கிளையை
மரத்தை குடிக்கிறான்
இறுதியாக ஒரு வனத்தை
-சேலம் வே.பாபு
______________________________________________________________
இதழ் மலரும் சிரிப்பொலியை கேட்டேன் .அவன் சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன். கண்ணாதசன் போட்டியாளராக இருந்த போது வாலி .
உரலு ஒண்ணு இங்கிருங்கு . உலக்கை ஒண்ணு அங்கிருங்கு . இது வைரமுத்துவுக்கு போட்டியாக . எதிரிதான் நம் ஆயுத்தை தீர்மானிக்கிறான் என்ற கூற்று நினைவுக்கு வருகிறது 
___________________________________
பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
‪#‎கண்ணதாசன்‬ பாறைகள்
நாணம் ஒரு வகை கலையின் சுகம் 
மௌனம் ஒருவகை மொழியின் பதம் 
‪#‎கண்ணதாசன்‬ பாறைகள்
_____________________________________________
பழைய புத்தக கடையில் புத்தகம் வாங்கினேன் . அபிநயா ,பி எஸ் சி 1980 என எழுதப்பட்டிருந்தது . அந்த அபிநயா இப்போது என்னவாக இருக்கிறார் , இத்தகைய நல்ல புக்கை ஏன் விற்றார் , எப்படி வாங்கினார் , படித்துவிட்டாரா என பல கேள்விகள் எழவே புக்கை ஓரம் கட்டிவிட்டு டீவியை ஆன் செய்தேன்

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா