Saturday, November 15, 2014

போன் அனுபவங்கள் - மிக்சர் போஸ்ட்

முக நூலில் சாட் மூலம் பழக்கமாகிய ஒரு தோழியை ( அவர் சிறியவர் என்பதால் தோ”ழி” என்கிறேன் ) புத்தக கண்காட்சியில் பார்த்தேன்... அவருக்கு சர்ப்ப்ரைஸ் கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் அவரிடம் போய் என்னை தெரிகிறதா என்றேன்...இல்லையே என்றார்... சாட் உரையாடலில் பேசிய ஒரு சினிமா வசனத்தை விஜய்காந்த் வாய்சில் பேசி நினைவூட்ட முய்னறேன்... “ சாரி .. நான் சினிமா அதிகம் பார்ப்பதில்லை.. நீங்க சிரிப்பு நடிகர்தானே “ என்றார்...
சரி.,, நான் கெளம்புறேன் என்றேன் கடுப்பாக...
சாரி சாரி என்றார்,
வருங்கால இலக்கியவாதிய பார்த்து காமெடியன்னு சொல்லிட்டீங்களே என்றேன் எரிச்சலாக..
என்னது,. நீங்க இலக்கியவாதியா என கேட்டு சிரிக்க ஆரம்பித்து விட்டார்...
அதற்கு பேசாமலேயே இருந்து இருக்கலாம் என நினைத்துக்கொண்டவாறு கிளம்பினேன்,,,
_____________________________________________________
நண்பர் வெளங்காவிடம் எப்போது பேசினாலும் சாலிடாக நான்கு மணி நேரம் பேச்சு ஓடும் . நடுவில் அவருக்கு கால் வரும் .  ”நாம பேசிக்கிட்டு இருக்கோம் . எந்த சேண வெண்டையோ இங்கிதம் தெரியாம டிஸ்டர்ப் செய்றான்  . . பாஸ் நீங்க பேசுங்க ” என்பார் . இன்று அவருக்கு கால் செய்தேன் . நம்பர் பிசி . அவர் என்னைப்பற்றி என்ன சொல்லி இருப்பார் என யோசிக்க விரும்பாமல் அமைதியானேன்

_________________________________________________________________
வேலைக்கு சேர்ந்த புதிதில் ஓரியண்டேஷன் முடிந்து கடைசியில் பிரசண்டேஷன் . வழக்கம்போல மொக்கை ஜோக்குடன் ஆரம்பித்தேன் . நன்றாக போய் கொண்டுருந்தது . பயிற்சியானர் திடீரென நிறுத்தினார் . வாயில் இருப்பதை துப்பி விட்டு பேசுங்கள் என்றார் . வாயில் ஒண்ணுமில்ல சார் என தொடர்ந்தேன் . இறுக்கமாக அமர்ந்திருந்தார் . எக்ஸ்கியூஸ்மி ஜெண்டில்மென் என சொல்லி வெளியே போய் துப்பிவிட்டு மொக்கையை தொடர்ந்தேன் . வொண்டர்புல் பிரசண்டேஷன் என கடைசியில் பாராட்டினார் . நான் வெறும் வாயைத்தான் சும்மனாச்சுக்கும் துப்பினேன் என அவருக்கு இன்று வரை தெரியாது
______________________________________________________
ஞானம் பிறந்த கதை
சில நாட்களாக மனம் சரியில்லை . காலையில் எழவே பிடிக்காது . ஆனால் மகிழ்ச்சி திரும்பியதால் காலை சீக்கிரம் எழுந்தேன் . ஆலயம் சென்று பொங்கல் சாப்பிட்டேன் . வரும்போது பார்த்தால் பைக் சாவி காணோம் . மீண்டும் பிரச்னையா ? பாக்கெட்டில் , தரையில் தேடினேன் . தியானம் செய்த இடத்திற்கு தேட போகும்போதே ஞானம் பிறந்தது . நான் பைக்கில் வரவில்லை . நடந்துதான் வந்திருக்கிறேன்

________________________________________________
வெளியூரில் இருப்பதால் சென்னை நண்பர் நினைவு வந்து கால் செய்தேன் . அவர் தம்பி போன் எடுத்தார்
ஹலோ அவர் எங்கே ?
சாரி , அவரோட பேச முடியாது
பதட்டமாக -ஏன்
அவர் போயிட்டாருங்க
போன் கட் ஆனது . பதறி விட்டேன் . மீண்டும் பல முறை டிரை செய்தபின்பே லைன் கிடைத்தது
ஹலோ ஏன் தொந்தரவு பண்றீங்க . அவரு போனை மறந்து வச்சுட்டு போயிட்டாரு . அப்புறம் பேசுங்க
ங்கொய்யால . எதை எப்படி சொல்றதுனு தெரிய வேணாம் . என்னத்த படிச்சு என்னத்த கிழிச்சாங்களோ
______________________________________________________
ஒரு முக நூல் நண்பருடன் போன் பேசினேன்,, நான் பெரிய அப்பாடக்கர் என காட்டுவதற்காக கொஞ்சம் புரிந்தும் புரியாததும் போன்ற பாணியில் , நாக்கை வளைத்து கஷ்டப்பட்டு ஆங்கிலத்தில் பேசினேன்... அவர் கூலாக சொன்னார் ..ஏன் இப்படி கஷ்டப்படுகிறீர்கள்... நீங்கள் சாதாரணமாக பேசினாலே புரிந்தும் புரியாததும்போல கொழகொழ என்றுதானே பேசுகிறீர்கள்,,,,.... ம்ம்ம்... இன்சல்ட்டுடன் ஒரு சண்டே
__________________________________________________________
ஒரு டெக்னிக்கல் டவுட் கேட்க ஒரு நண்பர் கால் செய்திருந்தார் . ஒரு நிமிஷத்தில் பதிலளித்து விட்டு மிச்ச அரைமணி நேரம் மரண மொக்கை போட்டேன் . " நல்லா மொக்கை போடுறீங்க . ஆனா மொக்கை போட ஆசைப்பட்டா உங்க காசுல கால் பண்ணி மொக்கை போடுங்க . நாங்க கால் செஞ்சா கேட்டதற்கு மட்டும் பதில் சொல்லுங்க என சொல்லி விட்டு கட் செய்தார் (லைனை கட் செய்தார் )

_______________________________________________________________

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா