Pages

Thursday, November 20, 2014

மதச்சார்பற்ற மண்ட்டோ படைப்புகள் , திரிக்கும் குறும்படங்கள்- கலவை பதிவு



பல் வலி, பல் பிடுங்க வேண்டும் என நண்பன் ஒருவன் கேட்டான். ஒரு டாக்டரை பரிந்துரை செய்தேன். அவனோ அந்த டாக்டரிடம் வரவில்லை. இன்னொரு டாக்டரிடம் சென்று வந்தான். அதன் பின் சுரத்தில்லாமல் நன்றாக முடிந்ததாக சொன்னான். பிறகுதான் விஷ்யம் தெரிந்தது. லேடி டாக்டர் என்றால் மென்மையாக பிடிங்குவார் என அவனாகவே தப்பு கணக்கு போட்டு , நான் சொன்ன டாக்டரை புறக்கணித்து லேடி டாக்டரிடம் போய் இருக்கிறாம். அந்த டாக்டரோ சில சோதனைகளை மட்டும் செய்து விட்டு , சினிமா அடியாள் போன்ற ஓர் உதவியாளரை வைத்து பல் பிடுங்கினாராம். சும்மா இன்ஸ்டரக்‌ஷன் மட்டும் கொடுத்து கொண்டு இருந்தாராம். ஆனால் நான் சொன்ன டாக்டர் உதவியாளார் அழகான பெண்,, அவர்தான் பல் பிடுங்குவார். அவரை பார்த்து ரசித்து கொண்டு இருந்தால் , வலியே தெரியாது.. அதனால்தான் நண்பருக்கு பரிந்துரைத்தேன், அவன் கேட்கவில்லை.. விதி வலிது # நண்பர்களை நம்புங்கள் நண்பர்களே

______________________________________________________


விதை இயற்கை அங்காடியில் சாமை (ஆமை அல்ல ) வாங்கினேன்
சமைத்து சாப்பிட்ட அனுபவத்தை பிறகு சொல்வேன்


__________________________________________________

குணங்குடி மஸ்தான் rocks கள்ள கருத்துகளை கட்டோடு அறுவத்தவருக்கு உள்ளிருக்கும் மெய்ஞான ஒளியே பராபரமே

_________________________________________


மோடியை எதிர்க்க நியாயமான காரணங்கள் ஆயிரம் உண்டு. அதை வலுவாக எடுத்து சொன்னாலே போதும். சில ஆர்வக்கோளாறு அறிவு ஜீவிகள் அவர் சொல்லாத செய்யாத ஒன்றை பெரிது படுத்தி கண்டித்து பேசி , அதன் பின் அவர் விளக்கம் அளித்ததும் அமைதியாவது மோடிக்கு சாதகமாக முடிகிறது. ப்ரொஃபஷனல் அறிவுஜீவிகளை நம்பாமல் மோடி எதிர்ப்பை தாமாகவே முன் எடுத்து செல்வது பற்றி மதச்சார்பற்ற சக்திகள் யோசிக்க வேண்டிய தருணம் இது.


____________________________________________________________

மண்ட்டோ படைப்புகளை தொகுத்து மொழிபெயர்த்த ராமாநுஜம் அவர்களை எப்படி பாராட்டுவது, எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. மாபெரும் சாதனை,,மாபெரும் பணி

************


மண்ட்டோ கதைகள் சில உங்கள் பார்வைக்கு.. அவர் நினைத்து இருந்தால் , ஏதாவது ஒரு மதத்துக்கு எதிரான தொனியில் எழுதி இருக்கலாம்.. அதற்கான உண்மை தரவுகள் ஏராளம்.. ஆனாலும் அவர் நடு நிலை பார்வையுடன் எழுதியால் அவை காலத்தை விஞ்சி நிற்கின்றன. ஆனால் பலர் அவர்கள் திரித்து , மத துவேஷ குறும்ப்டம் எடுக்கிறார்கள்.. போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்.. நேரடியாக அவர் நூல்களை படியுங்கள்..

************************


தன்னடக்கம் - சாதத் ஹசன் மண்ட்டோ
ஓடிக்கொண்டு இருந்த ரயிலை கட்டாயப்படுத்தி நிறுத்தினார்கள். “அந்த” மதத்தினரை மட்டும் தேர்ந்தெடுத்து துப்பாக்கிகளாலும் கத்திகளாலும் படுகொலை செய்தார்கள்.மற்ற பயணிகளுக்கு பால், அல்வா ,பழங்கள் வழங்கப்பட்டன.
மீண்டும் ரயில் புறப்படும்முன் இந்த விருந்தோம்பலை நடத்திய கூட்டத்தின் தலைவன் ப்யணிக்ள் முன் சொற்பொழிவாற்றினான். “ அன்பார்ந்த சகோதர சகோதரிகளே.இந்த ரயில் வருவது பற்றி தாமதமாகத்தான் தகவல் கிடைத்தது.எனவேதான் உங்களை இன்னும் சிறப்பாக உபசரிக்க முடியாமல் போய் விட்டது “


*****************




நீ பாதி, நான் பாதி - சாதத் ஹசன் மண்டோ

அந்த வீட்டில் இருந்ததிலேயே ஒரு பெரிய பணப்பெட்டியை தனக்காக தேர்ந்தெடுத்து கொண்டான். அந்த பெரிய பணப்பெட்டி மிகவும் கனமாக இருந்தது. ஏராளமாக பணம் இருகிறது போலும் . ஆனால் அவனால் அதை நகர்த்தக்கூட முடியவில்லை. அப்போது இன்னொருவன் உதவிக்கு வந்தான், ஒரே மூச்சில் தூக்கி தன் முதுகில் வைத்து கொண்டான். மிகவும் கஷ்டப்பட்டு அந்த வீட்டில் இருந்து தூக்கி சென்றார்கள். பத்திரமாக ஒரு பாதுகாப்பான இடத்துக்கு சென்ற பின், பங்கு கேட்டான். தூக்கியவன் கால் பங்குக்கு ஒத்து கொள்ளவில்லை. கடைசியில் பாதி பாதியாக பிரித்து கொள்ள முடிவு செய்தார்கள். பெட்டியை திறந்தார்கள். உள்ளே இருந்த்து நீண்ட வாளுடன் ஒரு மனிதன் வெளியே வந்தான். இரு பங்குதாரர்களையும் நான்கு துண்டுகளாக வெட்டி எறிந்தான்.

*********************


என்ன வேறுபாடு?- சாதத் ஹசன் மண்ட்டோ
“ என் கத்தியை அவன் குரல் வளையில் வைத்து , மெதுவாக மிக மெதுவாக ஹலால் முறையில் கொன்றேன்”

“ ஏன் அப்படி செய்தாய்?”


“அதுதான் எனக்கு சந்தோஷம் “

“உன் சந்தோஷம் யாருக்கு வேண்டும். ஜட்கா முறையில் அவள் கழுத்தை ஒரே வெட்டாக வெட்டி இருக்க வேண்டும், இது போல “

ஹலால் முறையில் கொன்றவன், ஜட்கா முறையில் படுகொலை செய்யப்பட்டான்

*****************************


நிரந்தர விடுமுறை - சதத் ஹசன் மண்ட்டோ
” அவனை விட்டு விடாதீர்கள். பிடியுங்கள்”
கொஞ்ச நேர துரத்தலுக்கு பின் அவனை பிடித்தார்கள். கத்தியால் குத்தப்பட்டு இறக்கும்முன் அவன் கடைசி வார்த்தைகள் “ தயவு செய்து என்ன கொன்று விடாதீர்கள். விட்டுவிடுங்கள். நான் விடுமுறைக்கு ஊருக்கு சென்று கொண்டு இருக்கிறேன்”


_______________________________________________________________________




ஒரு பெண் கடைக்கு சென்று சானிட்டரி நாப்கின் வாங்கி வந்தாள், இரு வாலிபர்கள் கிண்டலாக கேட்டார்கள்..மேடம் , பிரட் வாங்கிட்டு போறிங்களா,எங்களுக்கு இல்லையா?
அந்த பெண் சொன்னாள் “...

இது போன்ற ஜோக்குகளை விடலைப்பருவத்தில் சொல்லியதற்கு , ரசித்ததற்கு வெட்க்கபட வைத்தது இன்று பார்த்த ஆவணப்படம் - மாதவிடாய் ,. ஏற்பாடு- தமிழ்ஸ்டுடியோ குறும்பட வட்டம்

------------------------------------------------------------------------------------
ஞானக்கூத்தன் ராக்ஸ்
தமிழும் -ஞான கூத்தன்
எல்லா மொழிகளும் நன்று
கோவிக்காதீர் நண்பரே
தமிழும் அவற்றில் ஒன்று
---------------------------------------------------------------------------------

அவன் சாகவேண்டிய ஆள்
என்று
நினைக்காத நாளே இல்லை
உண்மையாகவே
அவன் செத்த நாளில்
அப்படி தோன்றவே இல்லே
-மனுஷ்யபுத்திரன்

-----------------------------------------------------------------


இது ஒரு பக்தி பாடல்... யார் எழுதி இருப்பார் என கணிக்க முடிகிறதா?

உவமையையும், சுகமான நடையையும் கவனித்தால் கெஸ் செய்து விடலாம்

எள்ளுப் போன்ற மூக்கின் கீழே
துள்ளும் இரண்டு பூச்செண்டு
வெள்ளித் தட்டு கன்னங்களிலே
மேவும் இரு கருவண்டு
கொள்ளை கொள்ளும் தெய்வப் பெண்மை
கோவில் கொண்ட அரசாட்சி
கொள்ளக் கொடுக்க உலகை கூட்டும்
கோமள சக்தி விசாலாட்சி
---------------------------------------------------------------

பழத்தை சாப்பிட்டு விடு
நாளைக்கென்றால் அழுகிவிடும் என்றாள் அம்மா
வாங்கி
விண்டு
உண்டேன்
இன்றை -தேவதச்சன்


----------------------------------------------------


துணி துவைத்து கொண்டிருந்தேன்
காதில் விழுந்தது குருவிகள் போடும் சப்தம்
தொடர்ந்து துவைத்தேன்
காதில் விழுந்தது குருவிகள் போய்விட்ட சப்தம்
அடுத்த துணி எடுத்தேன்
காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள்  சப்தம்
-தேவதச்சன்

------------------------------------------------------------------------


ஒரு காதல் கவிதை -தேவதேவன்


கட்டிப்பிடித்து முத்தமிடவா முடியும்
ஒரு காபி சாப்பிடலாம் , வா

------------------------------------------------------------------------------

நீ இப்போது என்னோடு இல்லை
உன் ப்ரியத்தையும் எடுத்து சென்று விட்டாய்
ஆனால்
அதன் வாசனையை
வீட்டில் எங்கோ ஒளித்து வைத்துள்ளாய்
எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை
எவ்வளவு கழுவியும் போகவில்லை
உன் ப்ரியத்தின் வாசனை - நஞ்சுண்டன்

----------------------------------------------------------------------------


காதலிகயைப் பெற்ற
காதலனுக்கே மட்டுமே தெரியும்...
”யாராவது பார்த்துட போறாங்க”
என்ற சாதாரண வார்த்தை
காமத்தில் சேரும் என்று # பிங்கூ

-----------------------------------------------------------------------


படித்ததில் பிடித்தது
ஓர் இலை உதிர்வ்தால்
மரத்துக்கு ஒன்றும் இல்லை
ஒரு மரம் படுவதால்
பூமிக்கு ஒன்றும் இல்லை
ஒரு பூமி அழிவதால்
பிரபஞ்சத்துக்கு ஒன்றும் இல்லை
ஒரு பிரபஞ்சம் போவதால்
எனக்கு ஒன்றும் இல்லை - ஆனந்த்

--------------------------------------------------------------------------


இனி இரவு திருடர்களை பிடிக்கும்போது
சொல்லியாக வேண்டும்
பகற்கொள்ளையருக்கு பாத்தியப்பட்ட எங்களை
இரவில் வந்து
இம்சிக்காதீர்கள் என்று
-ஜெயபாஸ்கரன்

-------------------------------------------------------------------------


சிறுகிளையில் முட்டையிட்டு
அண்ணாந்து சிரித்தது அந்த பறவை
பதிலுக்கு
வானம் கண்சிமிட்டவே இல்லை
ஆனால்
நட்சத்திரங்கள் எல்லாம்
மின்னிக்கொண்டுதான் இருந்தன
சின்ன சின்ன
முட்டைக்குள் ......

---------------------------------------------------------------


எழுதப்படாத அரசியல் சட்டம் பற்றி பிரிட்டனை பாராட்டுபவர்கள் , எழுதப்படாத விதிகளை கொண்டு விளையாடப்படும் கில்லி , கோலிக்குண்டு பற்றி எதுவும் சொல்வதில்லை

---------------------------------------------------------------------------


பிளம்பர் என குழாய் சம்பந்தப்பட்ட வேலை செய்பர்களை சொல்கிறோமல்லவா . ஏன் ? அந்த காலத்தில் குழாய்களில் காரியம் (plumbum-pb) பயன்பட்டது . ஆனால் இது உடலுக்கு தீங்கு செய்வதால் அதன் பயன்பாடு நிறுத்தப்பட்டது . பெயர் மட்டும் நீடிக்கிறது -உலோகவியல்

-----------------------------------------------------------------------------


அரணை என்றொரு உயிரி தெரியுமா ? பல்லி போல இருக்கும் . அது நக்கினால் மரணம் நிச்சயமாம் . ஆனால் ஒருவரை நக்க அருகில் சென்று விட்டு , போன காரியத்தை மறந்துபோய் திகைத்து போய் ஒன்றும் செய்யாமல் போய்விடுவோம் . இதை ஓர் அறிவியல் உண்மை போல சீரியசாக சொன்னார் சக ஊழியர். மிகவும் படித்த டெக்னிகல் அறிவு கொண்ட பெண் அவர் . உண்மை அல்ல என தெரிந்தாலும் ரசிக்க முடிந்தது .# ignorance is bliss

-------------------------------------------------------------------------


அறியாத நம்பரில் மிஸ்டு காலை பார்த்தால் ஒரு வித நப்பாசையுடன் அட்டெண்ட் செய்வோம்..எதிர் முனை ஆண் குரலாக இருத்தால் , அடச்சே என தோன்றும். சில நேரம் பெண் குரலாக இருக்கும், ஆனால் அது டெலிமார்க்கெட்டிங் !! நீங்க செத்துட்டா என்ன பண்றது.. இன்சூரன்ஸ் வாங்கிக்கோங்க" போன்ற கால்கள்.

இது போன்ற சந்தர்ப்பங்க்ளில் மிகவும் பெருமையான முக பாவத்துடன் “ மேடம் , நான் கொஞ்சம் பிசி ( உண்மையில் ஒரு ஆணியும் பிடிங்கி கொண்டு இருக்கமாட்டோம் ) .. நாளைக்கு பேசுறீங்களா” என நாலு பேர் கேட்கும்படி பேசினால் , நீங்களும் என் தோழனே

-----------------------------------------------------------------


காதலிக்கும்போது "காதல் என்றால் " என்பது போன்ற தத்துவம் சொல்ல நேரம் இல்லை . தத்தவம் சொல்லும்போது அதை கேட்க காதலிகள் இருப்பதில்லை

----------------------------------------------------------------------------


மிஸ்டு கால் எண்ணுக்கு டயல் செய்கையில் , எதிர்முனையில் ஆண் குரல் கேட்டால் , சொல்லொண்ணா ஏமாற்றம் அடைந்தால் நீயும் என் தோழனே


-------------------------------------------------------------------

Good friend is someone who thinks you are a good egg even though he knows you are slightly cracked


----------------------------------------------------------------------------

என் முற்றுப்புள்ளிகள்
உன் கால் பட்டு
காற்புள்ளிகள் ஆகின ‪#‎பிங்கூ‬

------------------------------------------------------------------


அழுகை சத்தம் கேட்டது
அனைவரும் சிரித்தனர்
பிரசவ அறை # பிங்கூ

---------------------------------------------------------------------------


இரும்பு மனிதர் , இரும்பு இதயம் என்றெல்லாம் சொல்கிறோம் . உண்மையில் இரும்பு , வேறு சேர்மங்கள் கலக்காத தூய வடிவில் , மிக மென்மையாக இருக்கும் ‪#‎உலோகவியல்‬

---------------------------------------------------------------------------------


வால்வ் என்ற சொல்லின் வேர் லத்தீன் மொழியில் உள்னது .valvae என்ற லத்தீன் வார்த்தையின் பொருள் மூடும் கதவு


-----------------------------------------------------------------------

திராவிட பூமி என்பதால் தமிழ்நாட்டில் தமிழ்எண்கள் புழக்கத்தில் இல்லை . கர்நாடகாவில் கன்னட எண்கள் புழக்கத்தில் உள்ளன




_____________________________________________________________________________

கண்ணதாசனின் திராவிட இயக்க அனுபவங்கள் -- dont miss it
( முன் குறிப்பு..கண்ணாதாசனின் சுயசரிதையான இதில் தன்னை அவன் ,இவன் என குறிப்பிட்டு கொள்வார் )

அந்நாளில் திராவிட முன்னேற்றக் கழகம் பிரபல இயக்கமாக இல்லை.வாடகைக் கார் டிரைவர்களுக்கும், அந்தக் கழகத்தைப் பற்றியோ, அதன் தலைவர்களைப் பற்றியோ எதுவும் தெரியாது. அவனும் தலைவனும் ஓர் நாள் இரவு, ஒரு பெரிய வாடகைக் காரை வைத்துக்கொண்டு பெண் வேட்டையில் ஈடுப்பட்டார்கள்.


ஒரு நாலைந்து பெண்கள் – கிராமத்துப் பெண்கள் – வேறு பெயரில் சொல்வதானால் நாட்டுக்கட்டைகள், மடமடவென்று வந்து காருக்குள் ஏறிக்கொண்டார்கள். காமுகன் பசிக்கு ருசியா தெரியும்? அத்தனையையும் ஏற்றிக்கொண்ட வாடகைக் கார், நேரே சென்ட்ரல் ஸ்டேஷன் பக்கம் உள்ள ஹோட்டலை நோக்கிப் புறப்பட்டது.

திராவிட விடுதலை வீரர்கள் திராவிட நாடு அந்தப் பெண்களிடம் இருக்கிறதா என்று தேட ஆரம்பித்தார்கள். காமக்கடலில் மூழ்கி எழுந்தார்கள். ஆனால் காரில் போவதற்குக்கூட பணம் கொடுக்காமல், அவர்களை வெளியே அனுப்பிவிட்டார்கள்.

அன்றும் அதற்குப் பிறகும், நடைபெற்ற களியாட்டங்களை, ஒவ்வொன்றாக விவரிக்கத் தேவை இல்லை. அது சுவைக்குறைவாகவும் போய்விடக்கூடும்.

ஆனால் சில பெண்கள், அவ்வப்போது நறுக்குத் தெறித்தாற்போல் கேட்ட கேள்விகளை அவனால் மறக்க முடியவில்லை.

“மேடையில் என்னென்னவோ பேசுகிறீர்கள்! அதெல்லாம் ஊருக்குத்தான் உபதேசமா?”

“நீங்களே இப்படி நடப்பதைப் பார்த்தால், யாரை நம்புவதென்றே தெரியவில்லை.”

“உங்கள் கையில் நாடு கிடைத்தால் – சட்டசபையெல்லாம் பெண்களாகவே இருப்பார்கள்.”

இப்படி ஆணித்தரமான பொன்மொழிகள் பலவற்றை அவர்கள் சந்தித்த பெண்கள் உதிர்த்திருந்தார்கள்.

திராவிட முன்னேற்றக் கழக்கத்தின் தலைவர்கள் பலரும், ஒழுக்கமற்றவர்களென்றும் காமுகர்களென்றும் எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தும்போது அவனுக்குக் கொஞ்சம்கூட கோபம் வருவதில்லை!




********************************




அந்த நேரத்தில் அவன் அவர்களைப்பற்றி அதிகம் ஆராய விரும்பவில்லை. காரணம் அவனும் உடன்பட்டேதான் அந்தக் காரியங்களில் இறங்கினான். பணக்கார மைனர்களைப் போன்று, பகலிரவு பாராமல் அவர்கள் ஆடினார்கள்.


இந்த நேரத்தில் அவனுக்குச் சில செய்திகள் தரப்பட்டன. நாம் மட்டும் தவறு செய்யவில்லை! முக்கியத் தலைவரே அதைத்தான் செய்கிறார் – என்று அந்தச் செய்திகள் கூறின! கலாரசிகரும், இன்றைய எம்.எல்.ஏ. ஒருவரும், அந்த நிகழ்ச்சியினை அவனுக்கு விரிவாகவே கூறினார்கள். அந்த எம்.எல்.ஏ. முக்கியத் தலைவரின் பத்திரிக்கையிலே வேலை பார்த்தவர். ஆதலின், அவர் சொன்னவற்றை அவன் நம்பினான். அது இது:

ஓர் இரவு, முக்கியத் தலைவர் தூக்கம் பிடிக்காமல் முன்னும் பின்னும் நடக்கிறார். வெளியிலே இருவர் போயிருக்கிறார்கள். அவர்களை அவர் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார். மணி பத்தடிக்கிற்அது. பதினொன்று! கோயிலில் அர்த்த ஜாம மணி அடிக்கிறது. மணி பனிரெண்டு! அதற்குள் தலைவர் ஏழெட்டுத் தடவை வெற்றிலை போட்டுத் துப்பிவிட்டார். அதோ அவர்கள் வரும் சத்தம் கேட்கிறது.

கதவு திறக்கப்படுகிறது. மூன்று ஆடவர்கள் உள்ளே நுழைகிறார்கள். “ஆடவர்கள்தானா? அழகு மயில் வரவில்லையா!” ஓர் ஆடவனின் தலைக்கட்டு அவிழ்க்கப்படுகிறது. ஆண் உடைகள் களையப் பெறுகின்றன. என்ன ஆச்சரியம்! அந்த உடைக்குள் ஓர் அழகிய மயிலல்லவா ஒளிந்து கொண்டிருக்கிறது. அழைத்து வந்தோர் குறிப்பறிந்து வெளியேறுகிறார்கள். பகுத்தறிவுத் தலைவரின் அறை பண்டாரச் சன்னியாசியின் மடமாகிறது. பொழுது விடிவதற்குமுன்னே பூவை திரும்புகிறாள்.

இந்த நிகழ்ச்சியைப்பற்றி அறிந்த கட்சிப் பிரமுகர்கள் இதற்குக் கொடுத்த பெயரென்ன தெரியுமா? ‘சுந்தரகோஷ்’ என்பதாகும். ‘வேலைக்காரி’ படத்தில் ஆண்வேடம் தாங்கிய பெண்ணொருத்தி ‘சுந்தரகோஷ்’ என்று அழைக்கப்படுவதையே அவர்கள் அப்படிக் குறிப்பிட்டார்கள்.- கண்ணதாசன்

--------------------------------------------------------------------------


இன்னொரு தேர்தலில் 50:50 என்ற அடிப்படையில் காங் . திமுக கூட்டணி வைத்தார்கள் . யார் அதிகம் வெல்கிறார்களோ அந்த கட்சிக்கு முதல்வர் பதவி என்பது உடன்பாடு . கூட்டணிகட்சியை ஜெயிக்க வைத்து முதல்வர் ஆக்க இருகட்சியும் விரும்பாததால் அந்த கூட்டணி எதிர்பாரா தோல்வியை சந்தித்தது ‪#‎BLUNDER‬

------------------------------------------------------------


ஒரு சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு ஒரு சீட் கூட ஒதுக்காமல் அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்தார் கலைஞர் ‪#‎THUNDER‬


----------------------------------------------------------------------------

எம்ஜிஆர் மறைவுக்கு பின் ஜானகிக்கு பதில் வலுவான அரசியல்வாதியை போட்டி அதிமுகவின் தலைவர் ஆக்கியிருந்தால் , ஜெ. இந்த அளவுக்கு வளர்ந்திருக்க முடியாது‪#‎BLUNDER‬

--------------------------------------------------------------------------


பா ம கவை தடை செய்தால் ஜாதியை ஒழித்து விடலாம் என்பது தவறு..பாமக தோன்றுவதற்கு முன்பிருந்தே ஜாதிப்பிரச்சினை இருக்கிறது.. ஆனால் முன்பு இல்லாத ஒன்று இப்போது புதிதாக முளைத்து இருக்கிறது...அதுதான் டிவி மற்றும் பத்திரிக்கைகளின் ஊடக அராஜங்கள்... முன்பும் காதலைஒட்டி லோக்கல் அளவில் சண்டை சச்சரவுகள் உண்டுதான்,, ஆனால் அப்போதெல்லாம் , ஓடிப்போன காதலர்கள் எங்கு இருக்கிறார்கள் , என்ன செய்கிறார்கள் என எழுதி காட்டிக்கொடுப்பதில்லை.. சரியான காதல் என உணர்ந்து பெற்றோர்கள் சமாதானம் ஆவதும் உண்டு... இனக்கவர்ச்சியால் தவறு செய்து விட்டொம் என பிரிவதும் உண்டு..இதெல்லாம் அவரவர்கள் குடும்ப அளவில் - அதிக பட்சம் கிராம அளவில் முடியும்,.. இதை மானில அளவிலான பிரச்சினை ஆக்கி , அந்த இளம் தம்பதிகளுக்கு மன ரீதியான அழுத்தம் கொடுத்த ஊடக அராஜகம் , ஏற்கனவே இருக்கும் ஜாதி அராஜகத்துக்கு புதிய கூட்டாளியாக சேர்ந்துள்ளது வருந்தத்தக்கது..

--------------------------------------------------------------------


பெண்களை நம்பாதே..அவர்கள் சொல்லை கேட்காதே ..உன்னை ஏமாற்றி விடுவார்கள் என்ற அறிவுரையை அடிக்கடி கேட்டு , ஆச்சர்ப்பட்டு வந்தேன்.. காரணம் இந்த அறிவுரையை எனக்கு சொல்பவர்கள் பெரும்பாலும் பெண்கள்..இந்த அறிவுரையில் இருக்கும் paradox அவர்களுக்கு ஏன் புரியவில்லை என புரியாமல் குழம்பி இருக்கிறேன், பிறகு புரிந்தது... அவர்கள் அவர்களைத்தவிர மற்ற பெண்களை மனதில் வைத்து பேசுகிறார்கள்

----------------------------------------------------------------


வயது முதிர்ந்த சகா . அவர் மனைவி உடல்நிலை சீர்கெட்டு கஷ்டப்பட்டு வருகிறார் . பிள்ளைகள் அனைவரும் வெளிநாட்டில் . அம்மாவை ஹோம் ஒன்றில் சேர்த்து விடுங்கள் . ஒரு வாரத்தில் இன்ஜக்ஷன் எல்லாம் போட்டு கஷடம் இல்லாமல் 'அனுப்பி' விடுவார்கள் . எவ்வளவு காசானாலும் பார்த்து கொள்கிறோம் என்றார்களாம் . தன் குழந்தையை எறும்பு கடித்தால்கூட துடித்துபோகும் தாயின் துன்பத்தை இப்படி தீர்க்கிறார்கள் பிள்ளைகள் . ரெண்டுநாளாக மனதில் இதுதான் ஓடுகிறது

--------------------------------------------------------------------------------


அவளது இனிய பேச்சு அமிழ்தம் போன்றது..
அவள் குணங்களும் இனிமையானவை..
எனவே அவள் மேல் காதலில் விழுந்தேன்,
அந்த காதல் நோயோ என்னை பாடாய்ப்படுத்துகிறது.
அறிவியடையோரே
நீங்களாவது எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்

-ஐயூர் முடவனார் ( குறுந்தொகை )

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]