Friday, November 28, 2014

சங்க இலக்கிய தேன் துளிகள்

புலவர்களுக்கு அனைத்தையும் வழங்கிவிட்டான் பாரி . மூவேந்தர்களே , சீக்கிரம் பாரியை புகழ்ந்து பாடி மிச்சம் இருப்பதையாவது வாங்கி செல்லுங்கள் . மிச்சம் என்ன இருக்கிறதா ? பாரி , நான் மற்றும் மலை # புற நானூறு

___________________________________________________
அமுதமே கிடைத்தாலும் தான் மட்டும் உண்ண நினைக்காதவர்கள்.கோபப்படாதவர்கள். அஞ்சாதவர்கள். ஆனால் பழிக்கு அஞ்சுபவர்கள்.புகழுக்காக உயிரையும் கொடுப்பவர்கள். மனத்தளர்ச்சி இல்லாதவர்கள்.. இவர்களால்தான் உலகம் இன்னும் இயங்கி கொண்டு இருக்கிறது - கடலுள் மாய்ந்த இளம் பெரு வழுதி

_______________________________________
தச்சு வேலை தெரிந்தவனுக்கு காட்டிற்கு போனால் பார்க்கும் இடமெல்லாம் அவன் வேலை செய்ய தேவையான மரம் கிடைக்கும் என்னைபோன்ற புலவர்களுக்கு எந்த திசை போனாலும் சோறு கிடைக்கும்- ஒலவையார்
___________________________________________
அன்பற்ற மனைவியை விட , தேவையான நேரத்தில் கைகொடுக்காத கல்வி கொடுமையானது - நீதி நெறி விளக்கம்
____________________________
மாணிக்கத்தின் தரம் கழுவினால் தெரியும்..  குதிரையின் தரம் சவாரியில் தெரியும். பொன்னின் தரம் சுட்டால் தெரியும்.. நண்பர்களின் தரம் நம் துன்பத்தில் தெரியும் - நான்மணிக்கடிகை
____________________________________________
அந்த காலத்தில் அரசர்கள் , தம்மை புகழும் புலவர்களுக்கு யானையை பரிசளிப்பார்களாம். தனக்கு சாப்பாடு இல்லாமல்தானே அந்த புலவர் வருகிறார். அவர் எப்படி யானைக்கு தீனி போடுவார்? யானையை வைத்து என்ன செய்வார் ? 
இந்த பாடலை பாருங்கள்...
மன்னா...
உன் நாட்டில் மட்டும்
பெண் யானைகள்
ஒரு கர்ப்பத்தில்
பத்து குட்டிகளை பிரசவிக்குமா
உன்னை பாடி வரும்
புலவர்களுக்கு
நீ அளித்த யானைகளின் எண்ணிக்கை
பகைவர்களை விரட்டி அடித்த
வேல்களின் எண்ணிக்கையை விட அதிகம்
- ஆய் அண்டிரன்
___________________________________
பிரிவு என்பதென்ன
அவ்வளவு பெரிய துன்பமா 
என கேலியாக கேட்பவர்கள்
பிரிவு  நோயை அறிந்தவர்கள்தானா..

நான் அவளை பிரிய நேர்ந்தால்
கல் மோதி மறையும் 
நீர் நுரை போல
மெல்ல மெல்ல 
இல்லாமல் போவேன்
-கலல்பொரு சிறுனரையார் ( குறுந்தொகை )
______________________________________________
பாரியைப் பற்றி மட்டுமே பாடுகிறீர்களே , அவனுக்கு நிகரான மாரி(மழை)யை பற்றியும் பாடுங்கள்-கபிலர்#வஞ்சப்புகழ்ச்சி:-)
______________________________________________
லைக் , கமெண்டுகள் இல்லாத அந்த காலத்தில் எப்படி இத்தனை தேன்சுவை பாடல்கள் ? ‪#‎சங்க‬ இலக்கியம்
__________________________________________
வறண்ட ஓலைகள் சலசலவென ஓசை எழுப்பும்..ஈரப்பசையுள்ள ஓலைகள் அமைதியாக இருக்கும் - ( நிறைகுடம் தளும்பாது அளவுக்கு இது ஏன் ஃபேமஸ் ஆகவில்லை ) # நாலடியார்
_____________________________
பசிக்கு சோறுகேட்டால் யானையையே தருவான் அரசன் . நம்தகுதிக்கேற்ப அல்ல , அவன் தகுதிக்கேற்பவே தானம் -அவ்வையார்
____________________________________
போற்றி பாடுவதையே
தொழிலாக கொண்ட
புலவர்கள்கூட 
கண்டறியமுடியாத
அறிவாற்றல் மிகுந்த மன்னா !
என்ன உன் தன்னடக்கம் ! -முதுகண்ணன் சாத்தனார் rocks  # புறநானூறு
__________________________
காக்கையும் குருவியையும்
உருவத்தால் அல்ல
குரலால் அறியலாம்
கற்றவரையும் மற்றவரையும்
அவர்தம் பேச்சால் அறியலாம் ‪#‎நாலடியார்‬
__________________________________
வெந்நீரின் கடும் வெப்பம்
வீட்டை எரிப்பதில்லை
சான்றோரின் கோபம்
கீழோரை அழிக்க நினைப்பதில்லை
‪#‎நாலடியார்‬
___________________________________
பாலால் கழுவினாலும் அடுப்புக்கரி வெண்மையாகாது
பலபல நூல்கள் கற்றாலும் மூடனுக்கு நன்மை கிட்டாது
‪#‎நாலடியார்‬

_____________________________-

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா