அமெரிக்க அதிபர் முதல் லோக்கல் எழுத்தாளர்கள்வரை அனைவருக்கும் அட்வைஸ் கொடுத்தவாறு உலகை கலக்கி வருபவர்கள் இணைய மொண்ணைகள். 2016ல் ஆட்சியை பிடிக்கும் சூழலும் இருக்கிறது.. இப்படிப்பட்ட மொண்ணைகள் குறித்து , பின் நவீன பின்லேடன் என அழைக்கபடும் நிர்மலுடன் ஒரு பேட்டி..
பின் நவீன பின்கோட் அவர்களே.. மொண்ணைகள் உருவாகிறார்களா , உருவாக்கப்படுகிறார்களா?
பெரும்பாலும் உருவாக்க படுகிறார்கள் அல்லது கஷ்டப்பட்டு உருவாகி கொள்கிறோம். சிலர் இதற்க்காக பயிற்சிக்கெல்லாம் செல்வதாக கேள்வி.
ஒரு மொண்ணை தன்னை மொண்ணை என உணரும்போது என்ன நிகழ்கிறது ?
அக்ட்சுவலா இந்த கேள்வியே தவறு, இதில் இருப்பது பாராடாக்ஸ். உணருதல் முடியாமைதான் ஒரு மொண்ணையின் முதல் குணம். சரி அப்படியே உணர்ந்தாலும் ஃபேக்காகவே இருக்கும். அது ஃபேக்கான உணர்வுதான் என உணர்ந்தால் அன்று முதல் அவன் உலகின் மொன்னைகளின் எண்ணிக்கைகளில் ஒன்றை குறைத்துக் கொள்ளலாம். ஆனால் இன்னும் 100 பேர் வரிசையில் நிற்பதால் கணக்கு சரியா வராது.
நடிகருடன் பேட்டி என்றால் , நடிக்க வந்திராவிட்டால் என்ன செய்து இருப்பீர்கள் என கேட்பார்கள்.. அந்த பாணியில், ஒரு மொண்ணை மொண்ணையாக ஆகாதிருந்தால் , என்ன ஆகி இருப்பார்?
இது செம கேள்வி, இதற்கு ஒரு கதை சொல்ல ஆசைப்படுகிறேன். எங்க் ஊர்ல பூச்சின்னு ஒருத்தன் இருந்தான் மாடு மேய்ப்பான், அவனுக்கு வாழ்கையில் ஒரே ஆசைதான் - அது நீயூஸிலாந்தில் சென்று மாடு மேய்ப்பதுதான்.
ஹா ஹா... செம.. ஜென் கதை போல சுருக்கமாக ஆழமாக சொல்லி விட்டீர்கள்..
ஜென் பற்றி சமிபத்தில் ஒரு சொற்பொழிவு கேட்டேன், சரியான மழை, பெரும்பாலோனரிடம் கேட்டேன் உங்களுக்கு ஜென் பிடிக்குமா என, அவர்கள் சொன்னார்கள், நாங்கள் மழைக்கு பயந்துல்லா இந்த பக்கம் வந்தோம் என
ஹா ஹா.. இணைய மொண்ணைகளை விஞ்சி விட்டார்களே... இண்டர்னெட் மொண்ணை , நான் - இண்டர்னெட் மொண்ணை .. ஒப்பிடுக
இண்டர் நெட் மொண்ணைகள் - ரேஸ் குதிரைகள், நான் இண்டர் நெட் மொண்ணைகள் - செக்கு மாடுகள்.
அனைவர் மனதிலும் இருக்கும் ஒரு கேள்வி.. தென்னையால் ஊருக்கு பலன்.. சென்னையால் ஒரு மானிலத்துக்கே பலன். ஒரு மொண்ணையால் யாருக்கு என்ன பலன்?
மொண்ணையால் எல்லோருக்குமே பலன். எப்படியென்றால் மொண்ணைகள் இல்லையென்றால் இந்த உலகம் இதை விட போரிங்கா போயிடும். ஏதோ ஒரு ஹேப்பனிங் ப்ளேஸ் போல ஆக்கிவிடுவதன் பெறும் பொறுப்பு அவர்களை சாரும்.
ஹா ஹா... சரி. ஒபாமா, ஜெயமோகன் , ரஜினிகாந்த் என எல்லோர்க்குமே நம் மொண்ணைகள் அட்வைஸ் வழங்குகிறார்கள்.. இந்த மொண்ணைகளுக்கு அட்வைஸ் வழங்க யாரும் இல்லையே என என்றாவது வருந்தி இருக்கிறீர்களா?
மங்கி சீ, மங்கி டூ என்பது போல சக மொண்ணைகளை பார்த்தே கற்றுக் கொள்கிறார்கள். இணையம் வந்ததால் இந்த மொண்ணைதன்ம் மிகச் சரியாக ஆவனப்படுத்தப்பட்டு வருகிறது என நினைக்கிறேன். வருங்காலத்தில் இன்றைய மொண்ணைகளின் செயலும் சீற்றமுமே அட்வைஸாக இருக்கும். என்பது எனது கணிப்பு
my life is my message என்பது போலவா?
ஆமாம், ஆனால் அது இந்த காலத்தில் மட்டும்தான், அடுத்து வரும் தலைமுறைகளுக்கு சரியான ஆவனம் இருக்கும்
monnai does not exist என சில அமைப்பியல்வாதிகள் சொல்வது குறித்து?
மொண்ணைதனம் என்பதே ஒரு அப்ஸ்ட்ராட் தாட் தானே, அதை குறித்து சிலர் அப்படி கூற காரணம், நான் சொல்லி தெரிய போவதில்லை. ஊழல் அரசியல்வாதி என்னிக்காவது ஊழலைப் பற்றி சாதாரனமாக , இயல்பாக பேசிருக்கிறானா. அது போலதான் இதுவும்.
மொண்ணைகளின் அடுத்த வெர்ஷன் எப்படி இருக்கும்?
இன்னும் மொண்ணைதனமாக இருக்கும். உதாரணம் eப்படி மொண்ணைதனமாக இருப்பது பற்றி வகுப்பு எடுக்கப்படும், பாடம் நடத்தப்படும், பயிற்சி ஏடுகள் வெளியிடப்படும், எனென்றால் இன்றைய மொண்ணைகளின் பலமே இதுதான்.
இணைய மொண்ணைகள் அளவுக்கு மற்ற துறை மொண்ணைகள் ஏன் ஃபேமஸ் ஆக முடியவில்லை?
இணைய மொண்ணைகளின் வெற்றிக்கு இணையத்தில் இருக்கும் மொண்ணைதனம்தான் காரணம். அது ஒரு ஃபெர்கட் மேட்ச். மொண்னைதனத்தை யாருக்கும் தெரியாமல் தைரியமாக வேறு வேறு பெயர்களில் செய்ய முடிகிறதே. எனக்கே சில நேரம் ஆசையாக இருக்குமென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இணையம் இஸ் சோ டெம்டிங் , யூ நோ டூ பிகம் எ மொண்ணை.
யாரும் உருவாக்காமல் சொந்தாமாக உருவானவர்கள் மொண்ணைகள்.. வைரஸ்தான் இப்படி உருவாகும்.. எனவே இணைய மொண்ணைகளும் வைரஸ்தான் என கூறப்படுவது குறித்து ?
வைரஸ் அல்ல அவர்கள் , வைரஸுக்கு தான் வைரஸ் என தெரிய்ம்தானே
ஹா ஹா...
monnai is dead என்ற நிலை என்றாவது வருமா ?
வராது. என்றே தோன்றுகிறது. ஜன நாயக அரசியல் அமைப்புதான் வருங்காலத்தில் இருக்குமென்றுதானே எல்லோரும் சொல்லிக் கொள்கிறோம்.
கைக்கு கிடைத்த ஏதோ ஒரு புத்தகத்தை படித்து விட்டு , இலக்கியம் முழுக்க அறிந்ததை போல சில ஃபில்ம் காட்டினாலும் , மற்ற மொண்ணைகள் கோபிப்பது இல்லை... அவருக்கான உரிமையை அங்கீகரிக்கிறார்கள்.. இந்த ஜன நாயக மாண்பு ஏன் மற்ற துறையில் இல்லை

No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]