நூறு ரஞ்சிக்கோப்பை
போட்டிகளில் ஆடிய பெருமையை பெற்றுள்ளார் எல் பாலாஜி.. இவர் சர்வதேச போட்டிகளிலும்
கலக்கியவர்.( 8 டெஸ்ட் , 30 ஒரு நாள் ) காயம் காரணமாக அதில் தொடர முடியவில்லை. ஐ
பி எல் போட்டிகளிலும் அசத்தினார் அவர். ஹாட் ட்ரிக் எடுத்தவர்.
அவரது நூறாவது போட்டியை
முன்னிட்டு அவர் பேட்டி.
-______________________________________________________________________
2001ல் கிரிக்கெட் ஆட
ஆரம்பித்தபோது உங்கள் இலக்கு என்னவாக இருந்தது /?
அனைவருக்குமே இந்திய அணியில்
ஆட வேண்டும் என்பதே கனவாக இருக்கும். உள்ளூர் போட்டிகளில் சாதிக்கும் கனவும்
இருக்கும். இரண்டையும் சாதித்ததில் மகிழ்கிறேன்.
ரஞ்சி போட்டிக்கு முன் கொழும்பு அணிக்கு எதிரான போட்டி ஒன்றில் ஆடினேன். தில்ஷான் , முபாரக் ஆகியோருடன் ஆடியது நல்ல அனுபவம்.
அப்போது வலுவாக இருந்த தமிழக அணியில் இடம்பெறுவது ரொம்ப கஷ்டம். ஆனாலும் இடம் பிடித்தேன். முதலில் ஆடும்போது நெர்வசாக இருந்தது. கேப்டன் ராபின்சிங் ஆதரவாக இருந்தார்
உள்ளூர் போட்டிகளில் கலக்கிய
நீங்கள் , உங்கள் முதல் சர்வதேச போட்டியில் ரன்களை விட்டுக்கொடுத்தீர்களே. அப்போது
உங்கள் உணர்வுகள் எப்படி இருந்தன/?
உள்ளூர் போட்டியில் ஜொலிக்க
காரணமாக இருந்த திறமைகள் மட்டும் போதாது என உணர்ந்தேன்.. மன ரீதியாகவும் பேட்ஸ்
மேனை திணறடிக்க வேண்டும். இதற்காக மன ரீதியாக என்னை தயார் படுத்திக்கொண்டேன். ஒரு
வருடம் கழித்து மீண்டும் வந்தபோது மன ரீதியாக வலுவாக இருந்தேன். சாதித்தேன்
காயம் இல்லாவிட்டால் இன்னும்
அதிகம் ஆடி இருப்பீர்கள் அல்லவா
கண்டிப்பாக. 2005ல் காயம்
காரணமாக பல போட்டிகளில் ஆட முடியவில்லை. இனி ஆட முடியாது என்றே நினைத்தேன். ஆனால்
கடின உழைப்பால் மீண்டு வந்தேன்
அந்த கால கட்டத்தில் யாராவது
பேசினார்களா.
ஆமாம்.. ஜாகிர் கான் , ஆசிஷ்
நெஹ்ரா போன்றோர் அடிக்கடி பேசுவார்கள். டபுள்யூ வீ ராமன் , ராபின் சிங் கிரிக்கெட்
வாரிய தலைவர்கள் உட்பட பலர் என்னை ஊக்கிவித்தபடி இருந்தனர். அவர்கள் இன்றி என்னால்
மீண்டு வந்திருக்க முடியாது
இப்போது உங்கள் இலக்கு என்ன
தமிழகத்துக்கு ரஞ்சிக்கோப்பை
வாங்கித்தர வேண்டும் என்பதே என் இலக்கு. பலமுறை இறுதிக்கு வந்தாலும் எங்களால்
ஜெயிக்க முடியவில்லை. அனைத்து தகுதிகளும் எங்களுக்கு உண்டு. கண்டிப்பாக வெல்வோம்
நீங்கள் ஆடியதில் உங்களுக்கு பிடித்த மேட்ச், பிடிக்காத மேட்ச் /?
2002- 2003, செமிஃபைனலில் பெற்ற வெற்றி வெகு இனிதான மேட்ச். கடந்த முறை என் தலைமையிலான தமிழக அணி வெல்லும் நிலையில் இருந்தபோதிலும் பெங்காலிடம் தோற்று விட்டது. கண்ணீர் விட வைத்த மேட்ச் அது
நீங்கள் ரஜினி ஃபேன் என்பது
தெரியும். அவரிடம் என்ன பிடிக்கும்
அவரிடம் எல்லாமே பிடிக்கும்.
அவரது ஒவ்வொரு செய்கையுமே ரசிக்கத்தக்க ஒன்றுதான். அவர் படங்கள் எல்லாவற்றையுமே
முதல் நாளே பார்த்து விடுவேன். லிங்கா ரிலீசின்போது திண்டுக்கல்லில் இருந்தேன்.
ஒட்டு மொத்த கிரிக்கெட் அணியும் , கோச் உட்பட , முதல் நாளே லிங்கா பார்த்தோம்.
( அதனால் கிடைத்த ஊக்கத்தினால்தான் , ஜம்மு காஷ்மீருக்கு எதிரான மேட்ச்சில் கலக்குதா..சூப்பர்.. நல் வாழ்த்துகள் )
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]