Pages

Sunday, December 14, 2014

ஐந்து ஆண்டுகளில் , மொண்ணைத்தனத்தில் இருந்து தமிழகம் விடுபடும் - சாரு ருசிகரப்பேச்சு

சாருவின் சொற்பொழிவு  பொதுவாக மூன்று வகைப்படும்.

வாசகர் வட்ட சொற்பொழிவு,, இது சொந்த ஊரில் பேட் செய்யும் க்ரிக்கெட் மேட்ச் போன்றது... சென்சார் இல்லாமல் உள்ளத்தில் இருப்பதை அள்ளிக்கொட்டுவார்..  பொக்கிஷத்தில் இருந்து வேண்டியதை பொறுக்கிக்கொள்ளலாம்.

இலக்கிய கூட்டங்கள் .  ..இது இந்திய வீரர் , இந்தியாவில் இருக்கும் இன்னொரு ஊரில் பேட் செய்வது போன்றது,,, என்ன இருந்தாலும் அதுவும் ஹோம் பிட்ச்தான்... அதிலும் அருமையாக பேசுவார்..

இவை இரண்டும் இல்லாத பொதுவான கூட்டங்கள் என்பது , இந்திய அணி அயல் நாடு போய் விளையாடுவது போன்றது... அப்படி ஃபாரின் பிட்ச்சில் அவர் ஆட்டம் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்... எனவே தமிழ் ஹிந்து விழாவில் அவர் உரை ஆர்வத்தை ஏற்படுத்தியது..

 நடிகர் கார்த்தி , பொன்னம்பல அடிகளார் , நீதிபதி சந்துரு , மயில்சாமி அண்ணாதுரை ஆகிய வெவ்வேறு துறை ஜாம்பவான்கள் மத்தியில் அவர் பேச்சு எந்த அளவு வரவேற்பு வரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

இந்த எதிர்பார்ப்பை மிஞ்சும் வண்ணம் அவர் அன்னிய நாட்டு பிட்ச்சில் அற்புதமாக சதம் அடித்தார்..

 நடிகர் கார்த்தி பேசியபின் அவர் பேச வந்தார்..  ஜெட் வேகத்தில்  அவர் பேச்சு அமைந்தது ... நீதிபதி சந்துரு உட்பட பலர் அவர் பேச்சை கைதட்டி ரசித்தனர்.

அவர் உரை

‘இலக்கிய கூட்டங்களில் பேசித்தான் எனக்கு பழக்கம். இப்போது பத்திரிக்கை கூட்டத்தில் பேசுகிறேன். டெங்கு காய்ச்சலுக்கு நில வேம்பு கொடுப்பார்கள். அது கொஞ்சம் கசப்பு என்றாலும் , உடல் நலத்துக்காக ஏற்கிறோம். அது போல , என் பேச்சில் சில கசப்பு இருந்தாலும் , அதன் நன்மை கருதி ஏற்குமாறு கேட்டு கொள்கிறேன் ( கைதட்டல்) .

 நான் பன்றிகளுக்கு மத்தியில் ஒரு சேரியில் வளர்ந்தவன். அந்த இடம் நாகூரில் இன்றும் அப்படியேத்தான் இருக்கிறது.  அந்த வாழ்க்கை இன்னும் ஒரு கொடும்கனவாக என்னுள் இருக்கிறது. அதில் இருந்து விடுபட வேண்டும் என்றால் , படிப்பு முக்கியம் என தீர்மானித்தேன். ஆனால் பள்ளி படிப்பு மட்டும் போதாது என்பதிலும் தீர்மானமாக இருந்தேன்.

பள்ளிக்கு அப்பாற்பட்ட கல்வியை இருவர் எனக்கு அளித்தனர். அதில் ஒருவர் ஏ என் சிவராமன் , தினமணி ஆசிரியர் ( கைதட்டல் ).. ஏராளமான உலக ஞானம் அளித்து என்னை உலக மனிதன் ஆக்கியவர் அவர்தான்.

அடுத்த ஆசிரியர் ஹிந்து நாளிதழ்.  ஆங்கிலம் கற்க ஹிந்து படி என்பார்கள். ஹிந்து படித்துதான் என் ஆங்கிலத்தை வளர்த்தேன்.

இன்றைய சூழலில் உலக அறிவு கிடைப்பது நெட் வரவால் சுல்பம் ஆகி விட்டது. எனவே உலக செய்திகளை கொண்டு வந்து சேர்க்க ஏரளாமானோர் இருக்கின்றானர்.  கலாச்சார விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இன்றைய தேவையாக இருக்கிறது..அதற்கான தேவைதான் இருக்கிறது.

அப்படி ஒரு விழிப்பற்ற சமூகமாக இருப்பதால்தான் தமிழ் சமுகத்தை பிளிஸ்டைன் சொசைட்டி என சொல்லி வருகிறேன் ( கைதட்டல் ) .. இப்படியெல்லாம் பேச வேண்டாம் என என் மனைவி சொல்லி அனுப்பினார்.. ஆனால் நான் உண்மையை சொல்ல வேண்டும்

ஞானபீட பரிசு ஹிந்திக்கு 9 கன்னடாவுக்கு 8 மலையாளத்துக்கு 7 கிடைத்துள்ளது. எழுத்தாளார் அனந்த மூர்த்தி மறைவுக்கு கர்னாடக அரசு விடுமுறை அளிக்கிறது. துக்கன் அனுஷ்டிக்கிறது. அந்த சூழல் இங்கு இல்லை.

ஒரு பேராசியருக்கு கடிதம் அனுப்பினேன்.. அவர் பதில் அனுப்பினார்.. டியர் மேடம் என ஆரம்பிக்கிறார்.. சாரு என்றால் பெண் என நினைக்கிறார் ( அரங்கில் சிரிப்பலை )>.சாரு , ஜெயமோகன் , எஸ் ரா என யாரையும் இவர்களூக்கு தெரியாது..எப்படி இவர்களால் , எழுத்தாளர்களை மற்றவர்களூக்கு கொண்டு போய் சேர்க்க முடியும்..இந்திரா பார்த்த சாரதிக்கும் டியர் மேடம் என்றுதான் கடிதம் எழுதுவார்கள்>.( பலத்த கைதட்டல் , சிரிப்பு )

ஒரு துணை வேந்தர் , என்னை பார்த்து உங்களை தெரியுமே ,, டீவியில் பார்த்து இருக்கிறேன் என்றார் ( அரங்கில் சிரிப்பலை )>. இந்த பிரச்சனைக்காத்தான் நான் டீவியில் இப்போது பங்கேற்பதில்லை.

இந்த நிலையை மாற்ற ஹிந்து எடுக்கும் முயற்சிகளைத்தான் அதன் முக்கிய பஙகளிப்பு என்பேன்.  நான் வாங்கும் ஹிந்து இதழ்களை , ப்ழைய பேப்பர் கடைக்கு போடுவதில்லை..காரண்ம் ஒவ்வொரு இதழும் பாதுகாக்க வேண்டிய ஒன்று.  நடுப்பக்க கட்டுரைகள் சிறப்பாக இருக்கும்..ஹிந்து இதழ் , இந்த கலாச்சார விழிப்புணர்வை ஏற்படுத்தினால் ,  நம் சமூகத்தை ஃப்ளிஸ்டைன் சமூகம் என நான் சொல்ல வேண்டிய தேவை இருக்காது..  கே ஃபெஸ்டிவல் திருவனந்தபுரத்தில் பிரமாண்டமாக நடக்கும், சென்னையில் நடத்த அழைப்பு விடுத்தேன்.. அதற்கான இண்டல்கச்சுவல் கிளைமேட் இங்கு இல்லை என மறுத்து விட்டனர்.

ஒரு மொழியை கற்க , பயிற்சியில் சேர்ந்தால் , சில மாதங்களில் கற்று கொடுத்து விடுகின்றனர். ஆனால் பதினைந்து ஆண்டு பள்ளி கல்வி , தமிழை சரியாக சொல்லி தருவதில்லை.. அரைகுறை தமிழை வைத்துக்கொண்டு கதை எழுத புறப்பட்டு விடுகிறார்கள்>  ஒரு சிறுகதை போட்டிக்கு நடுவராக போனேன்.. ரஜ வந்தன் என எழுதுகிறார்கள்>.  நல்ல தமிழில் எழுதிய கதைகள் சில மட்டுமே தேறின. அந்த காலத்தில் ஹிந்து படித்து ஆங்கிலம் கற்றதைப்போல , இப்போது தமிழ் கற்க ஹிந்துவை நம்புகிறேன். பலருக்கு பரிந்துரைக்கிறேன்.

ஒருவர் காரில் வந்து இறங்கினார். அவர் யார் என ஒரு சிறுவன் கேட்டான். தமிழ் பத்திரிக்கை ஆசிரியர் என்றேன்.. அவன் நம்பவில்லை.. தமிழ் பத்திரிக்கை ஆசிரியர் எப்படி காரில் வர முடியும் என்றான். தமிழை இழிவாக நினைக்கும் சூழல் இருக்கிறது... ஹோட்டலில் தமிழில் ஆர்டர் சொல்ல கூச்சமாக உள்ளது.. இதையெல்லாம் மாற்ற வேண்டும்.. தமிழ் படித்தால் உயர்வு என்ற நிலையை கொண்டு வர வேண்டும் ( பலத்த கைதட்டல் )

தமிழை விட் ஃப்ரெஞ்ச் படித்தால் நல்ல மார்க் என்பதால் ,, தமிழ் வேண்டாம் , ஃபிரெஞ்ச் படி என சொல்லும் சூழல் இருக்கிறது.. ஃபிரெஞ்ச் வேண்டாம் என ஃபிரான்சில் சொன்னால் கொன்று விடுவார்கள்>. ஆனால் இங்கு தமிழ் இல்லாமலேயே டிகிரி வரை படிக்கலாம்.. ஏன் இப்படி விடுகிறீர்கள்..தமிழை கட்டாயப்படுத்துங்கள்

ஹிந்துவுக்கு மூன்று வேண்டுகோள்>

மலையாளத்தில் வரும் மாத்ருபூமிபோல தரமான வார இதழை கொண்டு வாருங்கள்

ஜெய்ப்பூர் இலக்கிய நிகழ்ச்சிபோல ஒரு சர்வதேச இலக்கிய விழா நடத்துங்கள்

அயர்லாந்தில் டப்ளீன்  என்ற ஊரில் இருக்கும் ஒரு நூலகம் டப்ளின் இம்பாக் விருது என்ற அவார்ட் வழங்குகிறது.. பெரிய பரிசு தொகையும் மதிப்பும் கொண்ட விருது. அந்த விருது பெறுவதே கவுரவம். நம் ஊர் கலைமாமணி போல இல்லை . அது போல ஒரு விருதை ஏற்படுத்துங்கள்

இப்படி அவர் பேசினார்.

சாருவைப்பற்றி தெரியாத பலருக்கும் சாரு மீது ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தியது அந்த உரை






No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]