ரயில் பயணத்தில் அந்த பெரியவர் அனைவருடனும் இயல்பாக பேசினார்.
வழக்கமாக பெரியவர்கள் அட்வைஸ் கொடுப்பார்கள்... இவர் அப்படி இல்லை.. ஒவ்வொருவரிடம் இருந்தும் ஏதேனும் தெரிந்து கொள்ள முயன்றார்... முக நூல் என்றால் என்ன , வாட்சப் , இன்டர்னெட் , ரயில்வே ஆன்லைன் புக்கிங்க் என என்ன பேசினாலும் ஆர்வமாக கேட்டார்.
பின் நவீனத்துவம் , இலக்கியம் என மொக்கை போட்டாலும் கேட்டார்.. அனேகன் பற்றி பேசினாலும் கேட்டார்...
ஒரு வேளை , எல்லாம் தெரிந்து கொண்டு சும்மா கின்டலுக்காக கேட்கிறாரோ என தோன்றினாலும் அவர் அலட்டிக்கொள்ளாமல் , மெல்லிய புன்னகையுடன் சிரித்த முகத்துடன் நிதானத்துடன் பேசி வந்தார்..
நானும் அவரும் ஆளுக்கொரு கடலை பாக்கெட்ட் வாங்கி கொறித்தபடி பேசிக்கொண்டு இருந்தோம்...
அப்போது டி டி ஆர் செக்கிங்க் வந்தார்,,.. அதிர்ச்சி..
அவரிடம் ஐடி ப்ரூஃப் இல்லை... அபராதம் கட்ட பணமும் இல்லை..தனது கடலை பாக்கெட்டை என்னிடம் கொடுத்து விட்டு தேடிப்பார்த்தார்,,பயன் இல்லை..
நான் உதவ எத்தனித்தேன்... நான் பார்த்துக்கொள்கிறேன் என அவருக்கே உரிய புன்னகையுடன் சொன்னார்...
அபராதம் கட்டாதவர்கள் கீழே இறங்குங்க்கள் என சொல்லி , டிடி ஆர் அனைவரையும் அழைத்தார்.
தம்பி,,,,அந்த கடலையை கொடுங்க்க என அலட்டிக்கொள்ளாமல் என்னிடம் கேட்டு வாங்கிக்கொண்டு டிடி ஆரை பின் தொடர்ந்தார்,..
தக்காளி...இவ்வளவு பிரச்சனையில் மிக்சர் தேவையா என நினைத்துக்கொண்டேன்..
கொஞ்ச நேரத்தில் தன் சீட்டுக்கு வந்தார்... கூட போனவர்கள் சிலர் அபராதம் கட்டினார்களாம்... சிலர் இறங்க்கி விட்டனர்,,,, இவரோ அபராதம் கட்டாமல் எப்படியோ சமாளித்து விட்டார்...
செம கேரக்டர் என நினைத்துக்கொன்டேன்..
இந்த பிரச்சனைகளுக்கு இடையே ஊர் வந்து விட்டது...
கடைசி நிமிடத்தில் ஃபாமிலி ஃப்ளாஷ் பேக் சொன்னார்..
அடச்சே,,,இவ்வளவு நேரம் கேட்காமல் போனேனே என நினைக்கும் அளவுக்கு செம..
ஆனால் நேரம் போதவில்லை...
போன் நம்பர் வாங்கிக்கொண்டு , அடுத்த நாள் பேசினேன்..
சில ரயில் நட்புகள் , ரயிலுடன் முடிவதில்லை
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]