நான் ரசித்துப்பார்த்த முதல் சில படங்களில் ஒன்று பாலம். வித்தியாசமான படம். தமது கோரிக்கைக்காக பாலம் ஒன்றை சில இளைஞர்கள் கைப்பற்றி வைத்துக்கொள்வார்கள். அதன் பின் அரசு பேச்சு நடத்தும் , கோரிக்கையில் வெல்வார்கள் என கதை செல்லும்.. இதில் சுவையான விஷ்யம் என்றால் இந்த பால கைப்பற்றல் குறித்து அரசியல் பிரமுகர்களின் பேட்டி டீவியில் வரும். உண்மையான அரசியல் பிரமுகர்களே பேசி இருப்பார்கள் . கலைஞர் , ராமதாஸ் போன்றோர் புரட்சிக்கு , அதாவது நாயகனுக்கு ஆதரவாக பேசி இருப்பார்கள். சோ மட்டும் சற்று வித்தியாசமாக , தீவிரவாதம் தப்பு என பேசி இருப்பார். நாயகனுக்கு எதிராக இருந்தாலும் அந்த காட்சி அப்படியே படத்தில் இருக்கும்.
இந்த காட்சி அப்போது பரவலாக பரபரப்பாக பேசப்பட்டது. படமும் செமையாக இருக்கும். அதன் இயக்குனர் கார்வண்ணன் கவனிக்கப்படும் இயக்குனர் ஆனார்.
இவர் நந்தனம் கலைக்கல்லூரியில் எம் ஏ படித்தவர். படிக்கும்போதே எம் ஜி ஆர் கையால் மெடல் வாங்கியவர். படித்து முடித்த பின் , வேலையின்றி ஒரு நாள் சாலையில் சென்ற இவரை அப்போதைய முதல்வர் எம் ஜி ஆர் கவனித்து விட்டார். தன் காரில் ஏறச்ச்சொல்லி பேசியபடி வந்து இருக்கிறார்.
சில நாட்கள் கழித்து அவர் வீட்டுக்கு புதிய ஆட்டோ ஒன்று வாங்கி அனுப்பினார் எம் ஜி ஆர். எப்போதோ பார்த்த மாணவன்மேல் அன்பு காட்டி , அவன் வாழ்வுக்கு வழிகாட்டும் வகையில் ஆட்டோ வாங்கி கொடுத்தார் எம் ஜி ஆர். அந்த ஆட்டோவை எம்ஜி ஆர் வாங்கி தந்த ஆட்டோ என பெருமையாக தன் இல்லம் முன்பு நிறுத்தி இருந்தார் கார்வண்ணன்.
பாலம் படத்துக்கு பின் மீண்டும் முரளியை வைத்து புதிய காற்று என்ற படம் எடுத்தார், லஞ்சம் வாங்குபவர்களை தேடி தேடி நாயகன் கொல்வதால் அனைவரும் லஞ்சம் வாங்க பயப்படுவதாக கதை... இதுதான் பிற்காலத்தில் இந்தியன் படம் ஆனது .
மூன்றாம் படி , தொண்டன் , ரிமோட் , பாய்ச்சல் என நீண்ட இடைவெளிக்கிடையே நல்ல படங்கள் கொடுத்து வந்தார்.
இனி அப்படிப்பட்ட நல்ல படங்கள் கொடுக்க அவர் இல்லை... அவரது இறுதிச்சடங்கு இன்று 13.02.2015ல் நடக்கிறது
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]