Wednesday, May 13, 2015

காமெடியாக போன கணக்கு விவகாரம் - உண்மை என்ன


தீர்ப்பு வந்தாலும் வந்தது, ஆதரித்தும் எதிர்த்தும் பலர் இதை கொண்டாடி வருகின்றனர்... இதில் உச்ச கட்ட காமெடி என்னவென்றால் கணக்கில் பிழை என்பதுதான்..
உண்மையில் பிழை எல்லாம் எதுவும் இல்லை...ஒரே ஒரு பக்கத்தை பார்த்தால் பிழை போல தெரியும்..   அதை வைத்து சிலர் இணையத்தில் எழுத , கலைஞரும் அதை நம்பி அறிக்கை வெளியிட்டு விட்டார்.. நாளை கோர்ட் அவமதிப்பு என்றால் அவர்தான் பதில் சொல்ல வேண்டும்... இணைய மொண்ணைகள் அல்ல...

சரி..என்னதான் குழப்பம்..

கடன் மூலம் 24 கோடி வந்திருப்பதாக சொல்லி இருக்கிறார் நீதிபதி..ஆனால் கூட்டிப்பார்த்தால் 24 கோடி வரவில்லை...10 கோடிதான் வருகிறது...இதுதான் குற்றச்சாட்டு..

852ஆம் பக்கத்தில் இருப்பதை மட்டும் கூட்டினால் 10 கோடிதான் வரும் என்பது உண்மை..ஆனால் அவர் 851ஆம் பக்கத்திலும் சில விபரங்களை கொடுத்துள்ளார்

851ம் பக்கத்தில் இருக்கும் வரவு ---
73546000
8407172
5866500
2998500
600000
200000
200000
4135000
15700000
10000000
15000000
15000000
3400000
மொத்தம்...155053172 


அதேபோல 852ல் வரவு 10,67,31,274

மொத்தம் 26,17,84,446....

 இதில் Rs.24,17,31,274.00 மட்டுமே கன்சிடர் செய்யப்பட்டுள்ளது... ஏன் என்றால் தனியார் கடனை கன்சிடர் செய்யவில்லை.என்கிறார் அவர்.. அதையும் கன்சிடர் செய்தால் 26,17,84,44 வரும்...8 % என்பது இன்னும் குறையும்..


இன்னும் சில கடன்களை பட்டியலுக்கே கொண்டு வரவில்லை எனவும் சொல்லி இருக்கிறார் அவர்..

அதை எல்லாம் கொண்டு வந்தால் , ஜெயலலிதா தரப்புக்குதான் நல்லது...

இந்த பட்டியலில் இருப்பதை தவிர , மற்ற தனியார் கடன்களை தான் கன்சிடர் செய்யவில்லை என்பதை, பட்டியல் உட்பட எந்த தனியார் கடன்களையும் தான் கன்சிடர் செய்யவில்லை என நம் மேதாவிகள் புரிந்து கொண்டதே இந்த குழப்பத்துக்கு காரணம்..

இதை நம்பி கலைஞரும் அறிக்கை வெளியிட்டது உச்சகட்ட காமெடி

18 comments:

  1. கடன் வாங்கினால் அது எப்படி வருமானமாகும்? அதை முழுமையாக திருப்பி செலுத்தின பிறகு தானே அது அவர்கள் சொத்து! அப்படியே திருப்பி செலுத்தினாலும் அதற்கும் மூல வருமானம் என்ன என்பது அறிவிக்கவேண்டுமல்லவா ??

    ReplyDelete
  2. தப்பு தப்பா விளக்கம் சொல்லாதீங்க பாஸ். அந்த ₹41,35,000 ஜெ. கொடுத்த கடன். அதை எப்படி வருமானமா கணக்கு வைப்பீங்க. மேலும் வங்கி கணக்கு மட்டும் தான் வரவு வெச்சிருக்கேனு தெளிவா சொல்லிருக்காரு. பிரச்சனை இந்தியன் வங்கியின் ₹1.5 கோடியை ₹15 கோடியா கணக்கு பண்ணியதால் தான் வித்தியாச தொகை ரவுண்டா ₹13.5 கோடி. தீர்ப்பு மாறும். நீதி வெல்லும். நம்பிக்கையா இருங்க

    ReplyDelete
  3. திருடியதை திருப்பி கொடுத்தால் அது டான்சி...8% வரை வைத்து கொண்டால் அது சொத்து குவிப்பு. வெளியே வருவது என்பது முடிவான பின் எதற்கு கணக்கு காட்டி முழிக்க வேண்டும். முதலிலேயே கணக்கெல்லாம் கிடையாது. விடுதலை மட்டுமே என்று சொல்லி போய் இருக்கலாம். குப்பையை கிளறினால் நிச்சயம் பாதகமே குமாரசாமிக்கு.. பிறகு ஒவ்வொன்றுக்கும் விளக்கம் அளிக்க நேரிடும். அது யார் யாரை எல்லாம் இழுக்குமோ?

    ReplyDelete
  4. u r wrong.. he categorically says that he had considered loans from nationalised banks only and given a list which is Rs 10 cr. but he goes on saying out of 24.17 cr (his consideration)...hence contradiction...it is rightly pointed out...

    ReplyDelete
  5. PW.259 has positively stated in his evidence that
    accused Nos.1 to 4 and firms and companies have
    851
    PW.259 has positively stated in his evidence that
    accused Nos.1 to 4 and firms and companies have

    borrowed huge loans.
    However, I have considered the loan only borrowed 852
    by the Nationalized Banks.

    ReplyDelete
  6. he also mentioned that, "However I have considered only the loan borrowed from Nationalised banks"..which means that those loans only will be taken as income and not the ones from private. The table lists down the loans from Indian bank and the total is inflated with loans from private also...that is where the confusion starts. As per his statement, only bank loan to be counted and that results in less income. If he consider all the loans, then his statement mentioned before the table is wrong.

    ReplyDelete
  7. 851ம் பக்கத்தில் மேலிருந்து மூன்றாம் வரியை பாருங்கள்>.. இதைத்தவிர தனியாரிடம் இருந்து வாங்கிய லோன்களை நான் சேர்க்கவில்லை..பிசைட்ஸ் என்ற வார்த்தை,,, ஆச்சா... அடுத்து கடைசி வரி..பி 176 இந்தியன் வங்கி கடன் பற்றி சொல்கிறார்..பி 182ம்கூட ஒரு கடன் பற்றி சொல்கிறார்,.. நான்இதில் தேசிய வங்கி கடனை மட்டும் எடுத்துக்கொள்கிறேன் என சொல்கிறார்...அதாவது அந்த ஒரு கேசில் மட்டும் தேசிய வங்கியை மட்டும் கணக்கில் கொள்வதாகவும் , மற்றவற்றில் தனியார் கடன்களும் செல்லும் எனவும் சொல்கிறார்..

    ReplyDelete
    Replies
    1. உச்சகட்ட காமிடியா இல்லை உச்சு கொட்டும் காமிடியா

      Delete
  8. Sothapitiey Kumaru, Kumarasamy eppovo KURUMA SAMYa aitatru.. Tamil Nadu getting ready for another crap drama of ADMK adi podies.

    ReplyDelete
  9. Dear Pichaikaran:

    You are prevaricating.

    Can you with the help of a table bring out that the total borrowings equalled INR 24,17,31,274/.
    Please note that pointing out inaccuracy in a document like judgement copy without attributing motives does NOT attract contempt of court. Your concern on this count for Kalingar is out of place.

    ReplyDelete
  10. திரு பிச்சைக்காரன்,
    ஒரு கருத்தை சொல்வது என்றால் அதற்கான ஆதாரம் இணைப்பு தர வேண்டும். ஏன் தீர்ப்பின் 852ன் ஸ்கான் ஐ பதிவில் இணைக்க கூடாது.

    முதலில் அப்பக்கம் இணைத்து உங்கள் வாதத்தை வைக்கவும்.
    ***
    தேசியமயமாக்கப் பட்ட வங்கி கடன்கள் என்றுதான் தீர்ப்பிப் குறிப்பிடுகின்றார்கள் ஆனால் 851 ம் பக்கத்தில் சில தனியார் நிறுவனங்களும் வருகின்றன.

    ஆகவே எப்படிப் பார்த்தாலும் கூட்டலில் தவறு உள்ளது.
    ***
    மேலதிக தகவல்கள் இங்கே உள்ளது
    http://www.thenewsminute.com/article/are-there-glaring-mathematical-errors-jayalalithaa-case-judgement-opponents-think-so

    ReplyDelete
  11. பாஸ், வெறுமே நம்பர் மட்டும் கூட்டி காமெடி பண்ண வேணாம். அருணாச்சலம் சொன்ன 7.3 கோடி அடுத்த பக்கத்துல இருக்கிற டேபிள்ல சேந்துருக்கு. குன்ஹா தீர்ப்பு: 134ம் பக்கத்துலேர்ந்து ஸ்டார்ட் பண்ணுங்க. எத பண்ணுனாலும் முழுசா பண்ணுங்க பாஸ்.

    ReplyDelete
  12. Regarding the valuation of the gold as in
    1992, we have the reliable material in the assessment
    order Ex.P.2206, wherein, the assessing officer has
    adopted the rate of gold as on 1991-92 at Rs.4,334/-per
    10 grams. The learned counsel for A-1 has produced the
    copy of Circular No.646 dt. 15.03.1993 issued under Rule
    19 of Sch. III of Wealth Tax Act,wherein, the same rate is
    published by the concerned authorities. Thus, the value of
    20548 grams of gold found in possession of A-1 during the
    559
    check period is calculated as below:
    20548 x Rs.433/- = Rs.8,90,55,032/-
    It has come in the evidence of PW.125 that, while
    valuing the gold, he did not add the making charges and
    wastages and took into consideration only the value of the
    gold and to fix the value of the diamonds he took into
    consideration the cutting, colour carat weight. He has
    further stated that, first he weighed the ornaments and
    then deducted the approximate weight of the stones and
    accordingly determined the weight of the gold and its
    values

    ReplyDelete
  13. பிச்சைகாரன், நீங்கள் நேற்றிலிருந்து இதையே தான் திரும்ப திரும்ப உங்களுடைய எல்ல சமுக தளங்களிலும் பதிவிட்டுளீர்கள். உண்மையில் நீங்கள் அந்த தீர்ப்பை படிக்காமல் 'மம்மி'க்கு வக்காலத்து வாங்கிகொண்டிருக்கிரீர்கள்.

    ReplyDelete
  14. அனந்தன்May 14, 2015 at 10:18 PM

    நல்ல பதிவு பிச்சை. ஆணித்தரமாக ஆதாரங்களை கூறி வாதித்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    skurwysynem, Skurwysyn

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா