Tuesday, July 14, 2015

பிரபாகரன் வலதுசாரியா - ஷோபா சக்தி பரபரப்பு பேச்சு

பிரபாகரன் வலதுசாரி சிந்தனை கொண்டவர்  என எழுத்தாளர் ஷோபா சக்தி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது...

12. 07.2014ல் , ஞாநி அவர்களால் நடத்தப்படும் கேணிக்கூட்டம் வழக்கம் போல சிறப்பாக நடந்தது... எழுத்தாளர் ஷோபா சக்தி கலந்து கொண்டார்.. தனது அழகான ஈழ தமிழில் அவர் பேசியது வெகு அருமையாக இருந்தது....

ஞாநி பேசுகையில் , ஈழ எழுத்தாளர்களை கவனித்த வரை , பெரிய அளவில் கவரும் வகையில் யாரும் உருவாகவில்லை.. சில விமர்சகர்கள் உருவாகி இருக்கிறார்கள்.. ஆனால் மற்றவற்றில் பெரிதாக யாரும் சோபிக்கவில்லை..

ஈழ எழுத்தாளர்களில் என்னை கவர்ந்தவர்கள் இருவர்.. ஒருவர் ஷோபா சக்தி... இன்னொருவர் அவரை விமர்சித்து வரும் அ முத்துலிங்கம் ( கூட்டத்தில் பலத்த சிரிப்பு ) .... இருவர் எழுத்தும் மிக இனிமையான வாசிப்பு அனுபவம் தரக்கூடியவை..ஆனாலும் இருவருக்கும் இடையே ஒரு முக்கிய வித்தியாசம் உண்டு... முத்துலிங்கம் மரபு சார்ந்த எழுத்துக்கு சொந்தக்காரர்.. ஷோபா சக்தியோ கலகக்காரர்.. அவர் எழுத்து எப்போதுமே எனக்கு மிக நெருக்கமானது...

இப்போது அவர் பேசுவார்...பிறகு நாம் கேள்வி கேட்கலாம்..


___________________________________


ஷோபா சக்தி

எனக்கு உரையாடலில் எப்போதுமே விருப்பம் அதிகம்.. எது பற்றி வேண்டுமானாலும் உரையாடுவேன்.. ஆனால் சொற்பொழிவு என்பது சற்று வித்தியாசமானது.. உங்களில் பலரை நான் அறியேன்..உங்கள் சிந்தனை என்ன ,,உங்க எதிர்பார்ப்பு என்ன என எனக்கு தெரியாது.. எனவே நான் எனக்கு தோன்றிய விதத்தில் பேசி , என் கருத்தை உங்கள் மேல் திணிப்பதை ஒரு வன்முறை என்றே நினைக்கிறேன்,,,,,

 நான் எஸ் ரா போல இலக்கியத்தரமாகவோ , வண்ணதாசன் போல மென்மையாகவோ பேசக்கூடியவன் அல்ல.. என் பாணி வேறு விதம்.. வேற வேற ( பலத்தை கைதட்டல் )

ஆனாலும் ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.. கருத்து சுதந்திரம் படும் பாடு என்பது இன்றைய தேதியில் பாடாய் படும் ஒன்று , கருத்து சுதந்திரம் என்பது என்ன,..அதன் வரம்புகள் என்ன என்பதெல்லாம் விவாதிக்கப்பட வேண்டியவை.. இன்றைய சூழலில் கருத்து சுதந்திரம் என்பது தமிழகத்தில் மட்டும் அல்ல  இந்தியாவில் மட்டும் அல்ல...உலக அளவிலேயேகூட மோசமாகத்தான் உள்ளது...இலங்கையில் கேட்கவே வேண்டாம்...எப்போதுமே மோசமாகத்தான் உள்ளது..அந்த காலத்தில் நான் ஒரு இடது சாரி இயக்கத்தில் இருந்தேன்.. அது நான்கு பேர் மட்டுமே உறுப்பினராக கொண்ட இயக்கமாகும் ( பலத்த சிரிப்பு , கைதட்டல் ) .  ஏதாவது பிரச்சனை என்றால் எங்களைத்தான் தூக்கி போட்டு மிதிப்பார்கள்>. அப்படி அடியும் உதையும் வாங்கியபடியேதான் கருத்துரிமை குறித்து யோசித்தேன்,..

ஈழப்போராட்டம் தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் ஜன நாயகமும் கருத்து சுதந்திரமும் இல்லாமைதான்..  எதிர் கருத்து சொல்வோரை துரோகிகள் என முத்திரை குத்தும் போக்கு எல்லா இயக்கங்களிடமும் இருந்தது...

அவர்கள் யூதனை அடித்தபோது நான் உதவவில்லை..காரணம் நான் யூதன் இல்லை

அவர்கள் கம்யூனிஸ்ட்டை அடித்தபோது நான் உதவவில்லை..காரணம் நான் கம்யூனிஸ்ட் இல்லை..
கடைசியில் அவர்கள் என்னை அடித்தபோது எனக்கு உதவ யாரும் இல்லை..

எனவே உலகில் எங்கோ நடக்கும் பிரச்சனை என நினைக்காமல் கருத்துரிமைக்காக எல்லோரும் குரல் கொடுக்க வேண்டும்.

இத்துடன் முடிக்கிறேன்..கேள்விகள் கேட்கலாம்

-________________________________________________


 ஞாநி  - முதல் கேள்வியை நானே கேட்கிறேன்... எழுத்தாளர் , இயக்கவாதி,  திரை கலைஞர் என பன்முக ஆளுமை கொண்டவர் ஷோபா.. ஆனால் அவர் அரசியல் பேசியதால் ,  நானும் அரசியல் கேள்வி ஒன்றே கேட்கிறேன்...

உங்கள் மீது ஒரு குற்றச்சாட்டு அடிக்கடி சொல்லப்படுவது உண்டு... ஷோபா ராஜபக்சேவின் கைக்கூலி , , வலதுசாரி இயக்கங்களின் பிரதி நிதி...அதனால்தான் அவர் உலகம் சுற்றும் வாலிபனாக இருக்க முடிகிறது என சொல்கிறார்கள்>.இதற்கு பல முறை நீங்கள் பதில் அளித்து விட்டாலும் இங்கும் சொல்வீர்கள் என எதிர்பார்க்கிறோம்


ஷோபா

இந்த கேள்விகள் பத்திரிக்கைகள் வந்தவை அல்ல... அறிக்கையாக வந்தவைகளும் அல்ல... பொழுது போகாத சிலர் சமூக வலைத்தளங்களில் கேட்கும் கேள்வி இவை... எனக்கு பரம்பரை ஆண்டிகளிடம் பிரச்சனை இல்லை... பஞ்சத்து ஆண்டிகளிடம்தான் பிரச்சனை ( பலத்த கைதட்டல் )

இவற்றுக்கு பல முறை பதில் அளித்து விட்டேன்..மீண்டும் சொல்வதில் எனக்கு பிரச்சனை இல்லை.. உங்க நேரம்தான் வீணாகிறது...

11 மாதம் வேலை . ஒரு மாதம் லீவு என்ற குறுகிய வட்டத்தில் அடைந்து விடக்கூடாது என முன்பே முடிவு செய்திருந்தேன்..உங்களில் பலருக்கும் அப்படி ஒரு அடிமை வாழ்வு பிடிக்காது..ஆனாலும் குடும்பத்துக்காக அப்படி இருக்க வேண்டி இருக்கும்.. எனவேதான் நான் குடும்பமே வேண்டாம் என முடிவு செய்து வாழந்து வருகிறேன்...  நான் சம்பாதிப்பது எனக்கு மட்டுமே.. வேறு செலவுகள் இல்லை... இன்னொன்று , பயணம் என்பது ஒரு கலை... பயணத்துக்கு காசு தேவை இல்லை..கால்கள் போதும்... கிடைத்ததை சாப்பிட்டு , கிடைத்தை இடத்தில் தூங்கி என் பயணம் அமைகிறது..

 வலது சாரி என்ற குற்றச்சாட்டு கேலிக்குரியது..இலங்கையில் கிட்டத்தட்ட எல்லா இயக்கங்களுமே வலதுசாரிதான்... பிரபாகரன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது ஒவ்வொரு பதிலையும் நன்கு யோசித்து சொன்னார்..கலந்து ஆலோசித்தார்.. ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் உடனடியாக பதில் சொன்னார்..
அந்த கேள்வி...  நீங்கள் விரும்பும் ஈழம் அமைத்தால் அதன் பொருளாதார கொள்கை என்னவாக இருக்கும்... அவர் பதில் - தாரளமயமான பொருளாதாரம்..


இப்படி எல்லோருமே அங்கு வலதுசாரி சிந்தனை உள்ளவர்கள்தான்,.. என்னை இப்படி குற்றம் சாட்டுவது தவறு


 ஞா நி ...அடுத்த கேள்வி...

ஷோபா - இங்கு நீங்க மட்டும்தான் கேள்வி கேட்பீர்களா

( பலத்த சிரிப்பு )

 ஞா நி ( சிரித்தபடி )  என்னை விட அவர்கள் நன்றாக கேட்பார்கள் .. அதற்கு ஆயத்தம்தான் இது


( சர்ச்சைக்குரிய பிரெஞ்சு திரைப்படம் , மணிரத்னம் குறித்த பார்வை , தமிழக தமிழ் இலங்கை தமிழ் ஒப்பீடு , ஃபேக் படைப்புகள் , ஜேஜே சில குறிப்புகள் - இருவர் இன்னும் பல சுவையான விவாதம் அடுத்த பகுதியில் )


- தொடரும்


3 comments:

  1. தொடரட்டும் பகிர்வு!

    ReplyDelete
  2. அரிய உரை, மிகுதி எப்போ? நன்றி!

    ReplyDelete
  3. நன்று... மிகுதி எப்போ? சீக்கிரம் வரட்டும்.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா