கவிஞர் மேத்தாவுக்கு நடந்த பாராட்டு விழாவில் இளையராஜாவின் பேச்சு ஆழமாக அமைந்திருந்தது.. ஆனால் ஊடகங்கள் உரிய கவனம் கொடுக்கவில்லை..
அவர் பேசியதாவது
நான் தனிமையில் வாழ விரும்புவவன்.. நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. இந்த நிகழ்ச்சிக்குகூட வர வேண்டாம் என நினைத்தேன்.. ஆனால் நான் வராவிட்டால் , விருதே வேண்டாம் என மேத்தா உறுதியாக இருந்ததால் , வந்துள்ளேன்..
படங்கள் பார்ப்பதும் இல்லை.புத்தகங்கள் படிப்பதும் இல்லை. என் கண்ணில் குறைகள் மட்டுமே படும்.. அதை சொன்னால் வருத்தங்கள் ஏற்படும். எனவேதான் இந்த முடிவு.
கற்றதினால் ஆய பயன் என இறைவனை வணங்குவதையே குறள் சொல்கிறது... ஏன் கற்றவனுக்கு சொல்கிறது... கொஞ்சம் படித்து பெரிய ஆள் ஆகி விட்டால் பழசை மறந்து விடுவார்கள்.. கடவுளையும் மறந்து விடுவார்கள்... ஆனால் படிக்காதவன் அவன்பாட்டுக்கு தன் வேலையை செய்தபடி இறைவனை வணங்கிக்கொண்டு இருப்பார்.. படிக்காதவனே மேல் என்பதே இந்த குறள்
அகர முதல எழுத்தெல்லாம் என்பதில் சத்தம் வடிவில் அரூபமாக இருக்கும் இறைவனை குறிக்கிறது.. ஒலிதான் அனைத்துக்கும் ஆதாரம். அதுதான் இசையாக வெளிப்படுகிறது..
சிந்தனை ஒருபோதும் தெளிவுக்கு அழைத்து செல்லாது. குழப்பம் என்பது சிந்தனையின் ஒரு வடிவம். சிந்தனையற்ற நிலைதான் தெளிவு,
இசையிலும் இறைவன் சன்னிதானத்திலும் சிந்தனை நின்று விடுகிறது...
'இசையின் பயனே இறைவன்தான்' என திருநாவுக்கரசர் கூறுகிறார். இறைவன் இசையாகவே இருக்கிறான்