ஒரு பிரச்சனையின்போதுதான் மனிதனின் இயல்புத்தன்மையை தெரிந்து கொள்ள முடியும். சென்னையில் பெய்த பெருமழை , வெள்ளத்தின் போது பலர் ஹீரோக்களாக உருவெடுத்தனர். சிலர் ஜீரோவானார்கள்..
------------------------------------------------------------
ஹீரோக்கள்
1 பெரு மழையன்று மின்சாரம் இல்லை, செல்போன்கள் இயங்கவில்லை. ஆனாலும் நெட் வேலை செய்தது. முக நூல் , ட்விட்டர் , வாட்சப் போன்றவற்றை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி சேதங்களை வெளி உலகுக்கு தெரியப்படுத்தி , உதவிகளை ஒருங்கிணைத்தவவர்களின் பணி என்றென்றும் நி னைவுகூரப்படும்
2 இலவச ஆட்டோக்கள் ஓட்டினர் சிலர். சிலர் அந்த வெள்ளத்திலும் ஷேர் ஆட்டோ சேவை வழங்கினர்.. ஹேட்ஸ் ஆஃப்
3 பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் இணைய வசதி இல்லாதோர். இவர்கள் வெளிஉலகை தொடர்பு கொண்டு உதவி பெற வானொலி நிலையங்கள் உதவின. சில வானொலிகள் நிவாரணப்பணிகளில் நேரடியாக பங்கேற்றன..
4 இணையம் , வானொலி என எதையும் பயன்படுத்தாமல் , வெளியே தெரியாமல் பெரும் உதவிகளை வழங்கினர் பலர்
5அவ்வளவு மழையிலும் மார்க்கெட் சென்று காய்கறி வாங்கி வந்து , நியாயமான விலைக்கு விற்ற கடைக்காரர்கள் மக்கள் மனதில் இடம்பிடித்தனர்
6 அயராது பணியாற்றிய பேருந்து ஓட்டுனர்கள் , நடத்துனர்களை மறக்க முடியாது
7 பால் , காய்கறிகள் வாங்க செல்பவர்கள் தமக்கு மட்டும் வாங்காமல் அண்டை வீட்டினருக்கும் வாங்கி வந்தனர்
8 வந்து சேரும் நிவாரண பொருட்களை வினியோகிக்க உதவிய தன்னார்வலர்கள் சேவை குறிப்பிடத்தக்கது
9 சாலைகளில் பள்ளங்கள் இருப்பதை எச்சரித்து வாகனங்களை வழி நடத்துவதை அந்தந்த பகுதி இளைஞர்கள் முனைப்புடன் செய்தனர்
10 சாஅலைகளில் எச்சரிக்கை அறிவிப்புகளை அந்த பகுது மக்களே செய்தனர்.... அதிகாரபூர்வமற்ற இந்த எச்சரிக்கை பலகைகள் பேருதவியாக இருந்தன
-----------------------------------------
ஜீரோக்கள்
1 . சின்னசின்ன உதவிகள் கூட பெரும் பலனை விளைவிக்கும் சூழலிலும் ஒரு சிலர் ஃபேஸ்புக்கில் எழுதுவதில் மட்டுமே ஆர்வமாக இருந்தனர்.. எரிச்சலூட்டிய போக்கு
2 ஏரி உடைவதை செல்ஃபீ எடுக்க திரண்ட கூட்டம் மிகப்பெரிய இடைஞ்சலாக இருந்தது
3 இந்த அவலத்தையும் அரசியலாக்க முயன்ற சில ஊடகங்கள்
"க்ளிக்" செய்து >>> நான்கு நடிகர்கள் குப்பை அள்ள 40 போலீஸ் பாதுகாவல்.40 கேமராக்கள். நெஞ்சை நெகிழ வைத்த காணொளிகள். விடியோக்கள் காண்க.
ReplyDelete