ஆகம விதிகளை பைபாஸ் செய்து விட்டு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என சட்டம் கொண்டு வந்தபோதே இது கோர்ட்டில் நிற்காது என்பது பலருக்கும் - குறிப்பாக அரசியல்வாதிகளுக்கு - புரிந்துதான் இருந்தது.. காரணம் ஆகம விதிகளில் கை வைக்க நீதிமன்றம் விரும்பாது.. அது மத நம்பிக்கையில் குறுக்கிடுவதாகி விடும். ஆக , இது கோர்ட்டில் நிற்காது என தெரிந்து கொண்டு சும்மா புரட்சியாளர் அடையாளம் பெறும் பொருட்டு கொண்டு வரப்பட்ட சட்டம் இது..
உண்மையிலேயே ஒடுக்கப்ப்ட்டோர் மீது அக்கறை இருந்தால் , இன்னும் எத்தனையோ கிராமங்களில் கஷ்டப்பட்டு வரும் அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற ஏதேனும் செய்திருக்கலாமே...
சில ஆண்டுகள் முன்பு , அரசு பேருந்துக்கு ஒருக்கப்ப்ட்ட மக்களுக்கு போராடிய ஒரு தலைவர் பெயர் வைக்கப்பட்டது.. அந்த பேருந்தில் பயணம் செய்ய மாட்டோம் என அழிச்சாட்டியம் செய்த ஆதிக்கசாதியினருக்கு பயந்து , இனிமேல் தலைவர்கள் பெயரே வைக்கப்படாது என பம்மியது அரசு..
அப்படிப்பட்ட அரசியல்வாதிகள் கொண்டு வந்த இந்த சட்டம் ஆழமான சிந்தனை ஏதும் இல்லாத ஒன்று என்பது தெளிவு... நலிந்த மக்களுக்கு ஆதரவாக செய்வதுபோல பம்மாத்து காட்டும் வேலைதான் இது..
இது ஒரு புறம்,
பிராமணர்கள் மட்டும்தான் அர்ச்ச்கர் ஆகலாம்போல என சிலர் நம்ப வைக்கப்பட்டு இருக்கிறார்கள்..
இது தவறு..
பிராமணர்கள் யாரும் அர்ச்சகர் ஆக முடியாது .. அது ஆகம விதிப்படி தவறு..
சிவாச்சாரியர் என்ற பிரிவினர்தான் சிவன் ஆலயங்களில் அர்ச்சகர் ஆக முடியும்.. ஆனால் இவர்களுமேகூட விஷ்ணு கோயில்களில் அர்ச்சகர் ஆக முடியாது.. அங்கு பட்டாச்சார்களுக்கு அந்த உரிமை உண்டு,..சிதம்பரம் நடராஜன் கோயிலிலில் தீட்சிதர்களுக்கு அந்த உரிமையும் மேல்மலையனூர் ஆலயத்தில் பர்வத ராஜ குலத்தினர் அர்ச்சகர் ஆகலாம். வேறு யாரும் ஆக முடியாது.. பிராமணர்களுக்கு என சிறப்பு சலுகை ஏதும் இல்லை.
அப்படி என்றால் சிவாச்சார்யர்கள்தான் பிராமணர்களை விட உயர்ந்தவர்களா என்றால் இல்லை... பிராமணர்கள் யாரும் இவர்களுக்கு பெண் கொடுப்பதும் இல்லை. பெண் எடுப்பதும் இல்லை.. எந்த சம்பந்தமும் வைத்துக்கொள்வதில்லை...
ஆகம விதிகளில் கை வைக்க முடியாது. சரி.. வேறு என்ன செய்யலாம்...
அந்த ஆலயங்களை விட பிரமாண்டமாக அரசு பெரிய ஆலய்ங்கள் கட்டலாம்... அதில் அர்ச்சகர்கள் நுழைவுத்தேர்வு மூலம் , மதிப்பெண் அடிப்படையில் நியமிக்க்கப்படுவார்கள் என அறிவிக்கலாம்... சாதி என்பது இதில் கணக்கில் கொள்ளப்படாது .
அருமையான கருத்துக்கள்
ReplyDeleteஆகமம் ஓர் புளுகு என்று உணர்ந்து மக்களே மாற்றம் கொண்டு வர வேண்டும். குறிப்பிட்ட சில கோயில்களில் தட்சணை கூடாது என்று சொல்லி விட்டால் போதும். விட்டால் போதும் என்று ஓடி விடுவார்கள் பார்பனர்கள். எங்காவது ஒரு பார்பான் உடல் உழைப்பு தேவைப்படும் எளிய வேலை என்றாவது செய்து உள்ளனா? தொப்பை வளர்க்கும் அதே நேரம் பணம் கொட்டும் இந்த தொழிலை மற்றவருக்கு எளிதில் விடுவானா? பணம் எங்கெல்லாம் உண்டோ அதன் ஏக போக உரிமை அவன் கொண்டாடுவான். அதற்கு தகுதி திறமை ஆகமம் என்று புளுகுவான். கணினி துறையும் இன்று அதில் சேர்ந்து விட்டது. அடுத்தவர் அதில் மேல் மட்டத்தில் இருப்பது இயலாத ஒன்று. நீடிக்க விட மாட்டார்கள். பார்பனியம் என்றால் அநீதி. படிக்ககூடாது, பதவி கூடாது , சமமாக இருக்க கூடாது என்ற மனித சமுகத்திற்கு எதிரான கொள்கைகளை எந்த வழியிலாவது நிறைவேற்ற பார்ப்பார்கள். இதை சொன்ன கல்புர்கி போன்றவர்களுக்கு என்ன நடந்தது.
ReplyDeleteஇது என்ன கொடுமை சார் !!! என் முப்பாட்ட்டன் கட்டிய கோவிலை யாரோ ஒருவர் வந்து உட்கார்ந்து கொண்டு நீ உள்ளே வராதே வரக்கூடாது. வேண்டுமென்றால் நீ வேறே கோவில்கட்டி கும்பிட்டுக்கோ என்று சொல்லுவது எந்தவிதத்தில் சரி ???
ReplyDeleteநல்லாஇருக்கிரது உங்கள் ஞாயம். சூப்பர் அப்பு !!!
மகாராஜா
உள்ளே வரக்கூடாது என யாரும் சொல்ல மாட்டார்கள்...அப்படி சொன்னால் சட்டப்படி தப்பு
Delete