Pages

Tuesday, December 29, 2015

பொறுப்பற்ற ஜர்னலிசம்- ஜெயகாந்தனின் சிறு நூல்- ஒரு பார்வை

ஜெயகாந்தனின் சற்று பெரிய சிறுகதையான கரிக்கோடுகள் தனி நூலாக வந்துள்ளது..இபப்டி சிறு நூல்கள் வருவது ஆரோக்கியமானது...

மூன்று பிரதான பாத்திரங்கள்.. இரு வேலைக்காரர்கள்.. இவர்களை வைத்து பின்னப்பட்ட ஒரு ஃபீல் குட் சிறுகதை இது. படித்து முடித்ததும் மனதில் ஒரு நிறைவு ஏற்படும்.

இந்த கதையில் ஒரு காட்சி... இலக்கியவாதியின் கணவனுக்கு , குடும்ப நண்பர் ஒரு கடிதம் எழுதுகிறார்.. ”அவள் எழுத்து தேவையில்லாமல் சர்ச்சையை ஏற்படுத்துகிறது..அவளை நிறுத்தினால் நல்லது என்பது என் கருத்து... என் கருத்தையும் நீங்களும் அறியும்பொருட்டு உங்களுக்கு எழுதுகிறேன் ”
இதை படித்த கணவன் , அவள் எழுதவேண்டாம் என தான் நினைப்பதாக சொல்கிறார்.. அவள் கோபித்துக்கொண்டு கடிதம் எழுதி வைத்து விட்டு போய் விடுகிறாள்
அவள் தன்னை தப்பாக நினைத்தாலும் பரவாயில்லை.. நண்பன் சொன்னதாக சொல்லி அவன் பெயரை கெடுக்க கூடாது என நினைக்கிறான் கணவன்.. தான் சொன்னதாகவே சொல்லி இருக்கலாமே என நினைக்கிறார் நண்பர்...
நல்லவருக்கும் கெட்டவருக்கும் இடையேயான பிரச்சனை ஒரு சுவை என்றால் , நல்லவர்களுக்கு இடையேயான பிரச்சனை இன்னும் சிக்கலானது..
இதை கையாள்வதில் வல்லுனர் ஜெயகாந்தன்

இதில் வரும் பாத்திரங்கள் அனைத்துக்கும் வயது ஐம்பது பிளஸ்.. ஆனாலும் கதை முழுதும் இளமை கொண்ட்டாட்டம்...

ஓய் மாதவராவ்.. நீர் காதலித்திருக்கிறீரா என கேட்டேன்
இல்லை .. நீங்கள் கேட்கிற அர்த்த்ததில் காதலித்தது இல்லை என்றான்
அவன் சொன்ன தோரணை நான் என்ன பொருளில் கேட்கிறேன் என்பதை பிசிறில்லாமல் புரிந்து கொண்ட தெளிவுடன் ஒலித்தது

சில வெள்ளைக்கோடுகளும் கறுப்புக்கோடுகளும் மனிதனை இளமையாகவும் காட்டும் , முதுமையாகவும் காட்டும். கோடுகளை எங்கே வரைகிறோம் என்பதை பொருத்தது அது

காலம் வரைகிற கரிக்கோடுகளை மாற்ற முடியாது. மனிதன் வரைகிற கோடுகளை மாற்றலாம்

ஓர் போட்டோகிராஃபர். அவரது மனைவி இலக்கியவாதி. அவளது இலக்கிய தீவிரத்தை ஏற்கும் அளவுக்கு ஆரோக்கியமான சூழல் இல்லை என்பதால் அவள் எழுதுவதை சற்று நிறுத்த வேண்டும் என அவரது நண்பர் ஆலோசனை சொல்கிறார்..இதன் விளைவாக மனைவி பிரிந்து போய் விடுகிறாள்.. கடைசியில் மனம் மாறி தான் கோபமாக எழுதிய கடிதத்தின் கோபமான வரிகளை கரிக்கோடுகளால் அழித்து விடுகிறாள்..

கரிக்கோடு கதையின் ஒவ்வொருஇடத்திலும் ஒவ்வொரு பாத்திரம் எடுப்பது இந்த கதையின் சிறப்பம்சம்,

ஆழமான கரு , அதிர்ச்சியூட்டும் கிளைமேக்ஸ் என்றில்லாமல் ஒருவர் கோணத்தில் எழுதப்பட்ட சுகமான நடையில் எளிமையான கதை.

ஆரம்பத்தில் நல்ல நோக்கத்துடன் எழுத வந்தவர்கள் , ஜர்னலிசம் எனும் கிருமியால் அழிந்து விடுகின்றனர் என முன்னுரையில் சொல்லும் ஜெகே , அந்த கோபத்தை கதை முழுதும் பரவ விட்டுள்ளார்.. நிருபர்கள் அடிக்கடி வாங்கி கட்டிக்கொள்ளும் சம கால சூழலில் இந்த கதை பொருத்தமாக இருக்கிறது..

கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல்..

வெளியீடு - மீனாட்சி புத்தக நிலையம்

விலை  ரூ 30

1 comment:

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]